"இன்றைய காலகட்டத்தில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், மக்கள் நல்லவர்களை நேசிப்பதில்லை, அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள்."
- பாப் மார்லி
இன்று, இயக்குனர் தோழர் SP ஜனநாதன் பிறந்தநாள்!! 🖤❤️💙
//
* எங்க மக்களுக்கு நான் இங்கிலிஷ் பேசினா புரியாது.. உங்களுக்கு நான் இங்கிலிஷ் பேசினா புடிக்காது..
* எத படிச்சாலும் பொதுவுடைமை அரசியல கண்டிப்பா படிங்க.. அதை விட சிறந்தது எதுவுமே இல்ல..
* ரிசர்வேஷன்ல படிச்சு வந்தவனுக்கு என்ன தெரியும்னு தப்பா நெனச்சிட்டோம் சார்.. உங்களுக்கு மார்க் போட வாத்தியாரே இல்ல..
*மக்கள் வரிப்பணத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு, ஜனங்களுக்கு எதிரான மொதலாளிக்கும், அரசியல் வியாபாரிக்கும் வேலை செய்ற யூனிபார்ம் போட்ட ரவுடி மாதிரி தெரியுது..
*எங்களுக்கு எதுக்கு சார் அரசியல்?
வெறும் துப்பாக்கியும், போர் தந்திரங்களையும் மட்டும் வெச்சு எந்த நாட்டையும் காப்பாத்திட முடியாது..
//
கடைசி மூச்சு உள்ளவரை ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நின்னு, அவங்களுக்கான அரசியல எளிமையா, அதே சமயம் படு வீரியமா பேசின பெரும் கலைஞர் தோழர் SP. ஜனநாதன்!! 🥹🙏
தான் எடுத்துகிட்ட கதைக்களங்கள்ல சாதிய கொடுமை, ஆதிக்க மனநிலை, பொதுவுடைமை அரசியல் பற்றி இவ்ளோ Vocal ஆ பேசி வெற்றி அடைஞ்சு, ஓடுக்குமுறைக்கு எதிரான அரசியல ஒரு கமர்சியல் படத்துல பேசி, அதை வணிக ரீதியா வ���ற்றியும் ஆக்கலாம்னு முதல்ல நிரூபிச்சது ஜனா சார் தான்..
S.P. Jananathan, The Man is a Movement by Himself..!
Cinema தாண்டி Off Screen லயுமே ஜனா சார் பயங்கரமான Inspiration! அதே நேரம் Complicated ஆன அரசியல் விஷயங்களை கூட ரொம்ப எளிமையா புரிய வெச்சிருவாப்ல..
ஒருமுறை ஒரு பத்திரிக்கையாளர்,
"தலித் இயக்குனர்கள் சக தலித் கலைஞர்களுக்கு வாய்ப���பு கொடுத்துக்கிட்டு, தலித் Technicians அ கூட சேர்த்துட்டு பயணிக்கறது சரியா? இது ஒற்றுமையை நோக்கி போகுமா" னு கேட்டப்ப ஜனா சார்,
"சாதி பார்த்து ஒரு கலைஞன, Technician அ கூட சேர்த்துக்காம ஒதுக்கி வைக்கற ஒரு Industry ல, அப்டி வாய்ப்பு மறுக்கப்பட்டவங்கள தன்னோட இணைச்சுட்டு ஒருத்தர் வேலை செய்றது எப்டி தப்பாகும்? அது சரிதான்" னு உறுதியா சொன்னாரு..
விஜய் சேதுபதியும் அட்டக்கத்தி தினேஷும் Junior Artist ஆ இருக்கறப்ப ஒருமுறை ஜனா சார் கிட்ட வாய்ப்பு கேட்க போயிருக்காங்க.. அப்ப நான் எதுவும் படம் பண்ணல இப்பனு சொல்லி, அதோட நிக்காம அவங்கள கூப்பிட்டு சாப்பாடு போட்டு, அவங்க கூட சினிமா பற்றியெல்லாம் விவாதம் பண்ணிட்டு, அப்புறம் நம்பிக்கை கொடுத்து அனுப்பி வெச்சாராம்.. இதைப்போல பல அசிஸ்டண்ட் டைரக்டர்கள் சொல்லி கேட்ருக்கேன் வாய்ப்பு கேட்க போறவங்களை கூட ரொம்ப மரியாதையா நடத்துவாப்லனு..
பேராண்மைக்கு பிறகு பூலோகம் கதைய நான் பண்றேன்னு ஜெயம் ரவி சொன்னப்ப, நாந்தான் உன் கூட படம் பண்ணிட்டேனே.. என் AD ய டைரக்டர் ஆக்குன்னு refer பண்ணி தன் Script அ கொடுத்து தன் உதவி இயக்குனர டைரக்டர் ஆக்கினாரு..
vijay sethupathi , அமீர்னு தன் கூடசேர்ந்த எல்லாரையும் அரசியல்படுத்தின MASTER ஜனா சார்!
உங்களுக்கு நா எதனா செய்யனும்னு வி.சே கேட்டப்ப கூட தனக்காக எதுவும் கேக்காம டெக்னீசியன்ஸ்க்கு தங்கம் கொடுக்கறயானு கேட்ட மனுஷன் ஜனா சார்..😍 அப்டி தங்கம் கொடுத்த மேடை��� வற்புறுத்தி ஒரே ஒரு தங்கக்காசு நீங்களும் வாங்கிக்கங்கனு கொடுத்தாரு விஜய் சேதுபதி.. அதையும் மேடைலருந்து இறங்கறதுக்குள்ள இன்னொருத்தருக்கு கொடுத்துட்டாரு..
தான் இயக்குனர் ஆகறதுக்கு முன்னாடி, AD யா வேலை செய்யும்போதே பக்தி படங்கள், அறிவியலுக்கு எதிரான படங்கள், சாதி Propaganda படங்கள், பிற்போக்கான கருத்து சொல்ற படங்கள்ள வேலை செய்யமாட்டேன்னு இருந்தவர் ஜனா சார்.. ஒரு Assistant Director என் கொள்கைக்கு எதிரான படத்துல வேலை செய்ய மாட்டேன்னு கொள்கை பிடிப்போட இருக்கறது சாதாரண விஷயமில்ல.. அது வெற்றுத்தி��ிர் இல்ல.. ஒரு கொள்கைவாதியின் உறுதி.. இந்த மண்ணின் மீதும், மக்களின் மீதும் அவருக்கு இருந்த அக்கறை 🥹🙏
இப்டி தன் படங்கள் தாண்டி Off Screen Interviews, speech, சினிமால கஷ்டப்படற உழைப்பாளர்களுக்கு செய்த உதவிகள், வீட்டுக்கு வாய்ப்பு கேட்டு சந்திக்க வர்றவங்கள நடத்தின முறை, தன் கிட்ட உதவி இயக்குனரா இருந்தவங்களுக்கு அவர் செய்த உதவிகள்னு தன் வாழ்க்கை மொத்தமும் சிந்தாந்ததுக்கு உண்மையா வாழ்ந்த மிகச்சிறந்த மனுஷன் ஜனா சார்..
ஈ படத்துல ஒரு வசனம் வரும்..
"மக்கள படி.. அத விட பெரிய படிப்பு ஒண்ணுமே கிடையாது..
ஜங்களுக்காக வாழு.. அவங்ககிட்ட இருக்கற கூழயோ கஞ்சியோ குடுத்து அவங்க உன்ன வாழ வெப்பாங்க"னு..
அப்டி தான் வாழ்ந்த காலம் முழுக்கவும்,
He Loved the Society..
He Lived for The Society..
உங்களால் உந்தப்பட்டு, மக்களுக்கான அரசியல் பேச வரும் ஒவ்வொரு கலைஞர் மூலமாகவும் நீங்கள் வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள்..
Happy Birthday, MASTER..! 💔🙏
We Miss You.. 😭
We Love You So So So Much ❤️
You'll live in our memories Forever.. 💙
#HBDSPJananathan
உங்கள் கிராமத் தெரு விளக்கில் ஏதேனும் சிக்கலா?
உங்கள் பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
🌐 ஆன்லைனில் புகார் பதிவு செய்ய: https://t.co/FHgTpcADt5
பொறுமையாக ஒரு 9 நிமிடம் செலவு செய்து இந்த விடியோவை பாருங்க...
⭕ அரசியல் என்றால் என்ன என்று உங்களுக்கு புரியும்...
⭕ ஆளும் வர்கம் என்றால் என்ன என்று புரியும்...
⭕ சமூக நீதி என்றால் என்ன என்று புரியும்...
⭕ மக்கள் என்றால் என்ன என்று புரியும், மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்று புரியம் ....
⭕ கடைசியாக நாம ஏன் கம்யூனிஸ்ட்களிடம் இருக்க வேண்டும��� என்று புரியும்...
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்
#vaachathi
#AILU
#AIDWA
#DYFI
#CPIM
#TNTA
#SFI
ஒரு நிமிடத்துக்குள் X Spaces நடக்கும் அரசியல் உரையாடல்களை தொகுத்து சொல்கிறது இந்த வீடியோ. வோட்டு அரசியலே எல்லாமும், அது ஒன்று தான் தீர்வு தரும் என எண்ணுவோர் இந்த 40 mins ஆவணபடத்தை பார்க்கவும்.
Any day இயக்க அரசியலே வோட்டு அரசியலை விட அடித்தட்டு விளிம்பு நிலை ஒடுக்கப்பட்ட மக்களின் துணை நிற்கும்.
Full Video: https://t.co/8diV655ula
#TNTA
#CPIMTN
#களத்தில்கம்யூனிஸ்டிகள்
One of the best video i have seen...
What clarity in speaking, simply awesome explanation of this social Media conditions...
அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ https://t.co/FGqtETZlCv
Keep inspiring us comrade @samseer_ahamed.
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்.
ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் ஏன் அவசியம் என்று தோழர் ப. பா. மோகன் கூறுகிறார்...
ஆணவ படுகொலையில் ஒரு முக்கியமான விடயம் என்பது குற்றம் சாட்ட பட்டவர்கள் தாங்கள் குற்றாவாளி அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும், இது சாட்சி பிழர் சாட்சி ஆவதை தடுக்க உதவும்...
#ஆணவகொலை#HonourKilling.
ஒரு பழைய பெரியாறிஸ்டின் #பெரியார்147 மீதான பார்வை :
பெரியாரை இங்கு யார் ஏற்கவில்லை என்று சொன்னா, ஒரு சீர்திருத்த வாதியாக அவர�� கடுமையாக உழைத்தார் என்பதில் சந்தேகம் இல்லை.
பெரியாரிடம் தீர்வு இல்லை என்று தான் சொல்கிறோம்.
பெரியார் தன் கடைசி நாட்களில் அதை சொல்லி விட்டு தான் செல்லுவார் "உங்களை எல்லாம் அப்படியே விட்டு செல்கின்றேன்" என்று
பெரியார் சேலம் University la பேசும் போது சித்தாந்தங்கள் பற்றி மாணவரிடம் பேச சொல்லும் போது அவர் சொன்னது அது எல்லாம் academician சமூகத்தை பகுத்து ஆராய்ந்து சொல்ல வேண்டியது, நான் கண்ணி���் பார்ப்பதை பேசுபவன் என்று சொன்னார்.
அவர் கண்ணில் பட்ட தவறுகளை அவர் எதிர்த்தார் தீர்வு சொல்லவில்லை.
Abolition of private property என்று மாக்ஸிஸ்டகள் சொல்கிறோம்,இங்கு நடக்கும் அனைத்து விதமான ஏற்ற தாழ்வுக்கு முக்கிய காரணமாக தனி சொத்து இருக்கிறது என்கிறோம்.
அதை சரி செய்ய பாட்டாளி வர்க சர்வாதிகாரம் தான் செரி என்கிறோம்.
பெரியாரை விமர்சனத்தோடு ஏற்கிறோம் இப்போதும் எப்போதும்.
#Periyar
#periyarbirthday
✍️ & CC by : @kuthoosi1988.