இந்த விளக்கத்தை ஏத்துக்கலாம் .. ஆனா கேள்வியெல்லாம் ..
சொந்த மகள் உடம்பு சரியில்லாத போது அவ்வளவு கூட்டத்துக்கு யாராவது கூட்டிட்டு போவாங்களா ? .. சரி அங்க போய் மாத்திரை கொடுக்க வேண்டிய அவசரம் .. அம்மா கையிலும் தண்ணியும் இல்ல ஸ்பூனும் இல்ல .. அதுவும் சரி .. ஆனா மாத்திரையை பொடி பண்ணி கிரெடிட் கார்டுல ஸ்கோரிங் பண்ணி மிக்ஸ் பண்றது இது தான் முதல் தடவை .. அது கூட ஓகு ஏதோ அவசரத்துக்கு மாத்திரை கலக்க யூஸ் பண்ணிட்டாரு .. முக்கியமான கேள்வி எதுக்கு 500 ரூ நோட்டை எடுத்து வச்சி அதை ஸ்கோர் பண்ணனும் ?? .. கடைசியா ஒரு கேள்வி .. அவரு மாத்திரை நொறுக்கும் போது எதுக்கு அந்தக்கா பேக் வச்சு மறைச்சிருக்காங்க .. எந்த போலீஸ் வந்தா என்ன @sarath0828 அமைச்சரே
எல்லாத்துக்கும் மேல விளக்க வீடியோவுல எதுக்கு குழந்தையோட வரணும் ..
வேற ஒரு மாநிலத்தில் பிறந்த, ஓட்டுரிமை உள்ள ஒரு நபரை இன்னொரு மாநிலத்தின் டெல்லி பிரதிநிதியாக நியமிப்பது இது தான் முதல் முறை..
வெங்கட நாராயணா யார்? அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்மந்தம்? இந்த டெல்லி பிரதிநிதி என்பது ஒரு கேபினட் அமைச்சருக்கு இணையான பொறுப்பு. தமிழர் நலன்?
நாட்டிலுள்ள அனைவரும் தவெகவினர் போல் தற்குறிகள் என்று நினைத்து விளக்கம் கொடுத்துள்ள அமைச்சர் கில்லி சரத் அவர்களே...
அந்த வீடியோவில் நீங்கள் பயன்படுத்துவது 'குழந்தைக்கு மாத்திரையைப் பொடியாக்கிக் கொடுத்தேன்' என்று கூச்சமில்லாமல் பொய் சொல்கிறீர்கள்.
அந்த வீடியோவில் எந்த இடத்திலும் குழந்தை இல்லவே இல்லை.
அது குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் வீடியோ என்றால் எதற்காக அந்த வீடியோவுக்கு 'Thug Life' என்று caption கொடுக்க வேண்டும்? எதற்காக அந்த வீடியோவை உங்கள் நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் ‘close friends' மோடில் வைக்க வேண்டும்?
ஒரு அமைச்சராக இருந்துகொண்டு, இப்படி கேவலமாகப் பொய் சொல்வதற்கு அசிங்கமாக இல்லையா?
முட்டை என்பது குறைவான விலையில் கிடைக்கும் ஒரு புரதம். எந்த பொருளாதார நிலையில் உள்ளவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அதை afford செய்ய முடியும்.
முட்டை கொடுக்கும் புரதத்தின் அளவிற்கு ஏற்ப இஸ்கான் அமைப்பினர் குழந்தைகளுக்கு கொடுத்தால் அதை யாரும் குறை சொல்லப்போவதில்லை.
இஸ்கான் அமைப்பினர் பொதுவாக வெங்காயம் வெள்ளைப்பூண்டு போன்றவற்றை சேர்ப்பதில்லை. வளரும் வயதில் குழந்தைகளுக்கு அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல
ஒருவேளை தானே இங்கே கொடுக்கிறார்கள் மற்ற வேலைகளில் வீட்டில் கொடுக்க வேண்டியதுதானே என்ற கேள்வியும் கேட்கப்படும்.
ஆனால் இங்கே வெற்றி பெற்றவர்களின் பழக்க வழக்கங்களை பின்பற்றும் மரபு இருக்கிறது. நன்றாக சாமி கும்பிட்டால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று தான் எல்லோரும் சாமி கும்பிடுகிறார்கள்.
சைவம் சாப்பிடுவது தான் நல்லது வெங்காயம் பூண்டு சேர்ப்பது நல்லதில்லை அப்படி இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் பெரிதும் வெற்றி பெறுகிறார்கள் என்கிற கருத்துருவாக்கம் சிறிய வயதிலேயே குழந்தைகளின் மனதில் பதிய வைக்கப்படுவது அவர்களுக்கு அசைவ உணவு மற்றும் பெருங்காயம் வெள்ளைப் பூண்டு அவற்றின் மீது அசூசையை உருவாக்கி விடும்.
அதன் பின்னர் அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள்.
எங்க வீட்டில் எப்போதும் ரேசன் சீனிதான். சுத்தமா நல்லா இருக்கும். எங்கம்மா ரேசன் அரிசியில் சாப்பாடு வடிக்கிறாங்க. எங்க அத்தை இட்லிக்கு அரைக்க பயன்படுத்துவாங்க. மிருதுவா நல்லா வரும். ரேசன் பச்சரிசியும் தரமா இருக்கும். பலர் இப்பதான் முதல்முறை பார்க்கிறாங்க போல.
கண்ட இடத்துல கைய வெச்சிட்டு நாம தொடுற, டாய்லட் மொதக்கொண்டு நாம கொண்டு போற மொபைல்ல வெச்சு மாத்திரையை தூளாக்கி குழந்தைகளுக்கு கொடுக்குறது தான் thug life momentன்னு தெரிந்து கொண்ட நாள் இது.
டேய் பரதேசி, நீயெல்லாம் ரேஷன் கடை அரிசி பார்த்திருக்கியா? உங்க நொண்ணன் வந்த 40 நாள்ல பயிர் பண்ணி அறுவடை செஞ்சு பாலிஷ் பண்ணி எடுத்து வந்து போட்டாங்களா? இது போன ஆட்சில கொள்முதல் பண்ணதுடா முண்டக் கலப்பே!
அப்படின்னு இந்த பல்லுவாயன என்ன நீங்க திட்டினாலும், நாளைக்கு திரும்ப ஒரு டகால்ட்டி மேட்டர தூக்கிட்டு வருவான்!
ஒரு திருத்தவே முடியாத குடிநோயாளி கூட தன் மனைவிய வீட்டுக்கு கூட்டி வர குழந்தைங்க தலைல அடிச்சு இனிமேல் குடிக்கவே மாட்டேன்னு பொய் சத்தியமாவது செய்வான்.ஆனா இவன் அந்த மாதிரி உங்களுக்கு எந்த பொய் வாக்குறுதி கூட குடுக்கலை,அத்தனை வருச தாம்பத்தியத்தை அதெல்லாம் ஒர்த்தே இல்லைனு கேவளமா மட்டம் தட்டி பேசுனான்.அதுக்கு கைதட்டி விசிலடிச்சு ஆர்பரிச்சுட்டு இப்ப எந்த முகத்தோட அவனை கேள்வி கேட்க வர்றீங்க.உன்னைய நீ திருத்திட்டு மக்கள் பணிக்கு தகுதியாகிட்டு வா தலைவா, அப்புறம் பாக்கலாம்னு சொல்றவங்க தானே நல்ல குடிமக்கள். அவன் ஒரு கின்டர்கார்டன் குழந்தை மாதிரி செய்ற அபத்தமான சேட்டையேல்லாம் ஹார்டீன் விட்டு ரசிச்சுட்டு இப்ப வந்து முட்டுகுடுக்க சங்கடமா இருக்குனு முதலை கண்ணீர் வடிச்சுட்டு இருக்கீங்க.அவன் வாக்காளர்களை என்னைக்கும் மதிச்சது இல்லை இனிமேலும் மதிக்கவும் மாட்டான்.
போலீஸ் ஒழுங்கா வேலை பார்த்தேன் ஏன் சார் இதெல்லாம் நடக்க போகுது?
நாங்க கேட்கல கொஞ்ச நாள் முன்னாடி நீங்க கேட்டது விஜய் அவர்களே?
உங்க ஆட்சி ஒழுங்கா இருந்தா இப்படி எல்லாம் ஏன் நடக்க போகுதுன்னு இப்ப நாங்க கேட்கலாமா?
ஒரு பப்ளிசிட்டி பைத்தியம் இந்தியாவை படுத்தும் பாடை கண்டும், இங்க ஒரு ரீல் CM தேர்வு செய்துட்டு இப்ப குத்துது குடையுது என புலம்பி என்ன பிரயோஜனம்?
கரண்ட் இல்லைனா மெரினாவில் போய் அடுத்து தூங்கச் சொல்லுவானுக
அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளான..
புத்தக வெளியீடு
அதை சார்ந்த விவாத கூட்டம்
இலக்கிய கூட்டங்கள்
இதுக்கெல்லாம் ஊக்கப்படுத்த கம்மி விலையில் அரங்குகளை வாடகைக்கு கொடுத்து வந்த அண்ணா நூலக கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது விஜய் மாமா அரசு!
இனி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட தான் அனுமதிப்பாங்க போல?
சிறுமிக்கு தொல்லை - த.வெ.க நிர்வாகி மீது போக்சோ!
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 17 வயது சிறுமியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்த, த.வெ.க பேரூராட்சி இணைச் செயலாளர் ஜோசப் என்பவர் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்குப்பதிவு. தலைமறைவாக உள்ள த.வெ.க நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
#Viruthunagar #Srivilliputhur #SexualHarassment #PocsoAct #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal