TN youngsters are heavily influenced by movies. They work in IT companies, yet many still fall for the 80s-era rhetoric that “agriculture is the backbone of the country” and that “we must save agriculture.”
They ask, “Without agriculture, where will we get food?” 😳 But they miss the bigger economic reality: manufacturing and services are the real backbone of Tamil Nadu’s modern economy.
தமிழ்நாடு அரசுக்கு எனது முக்கிய யோசனை
ராமநாதபுரத்தில் புதிய ஒலிம்பிக் கிராமங்களை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது
குப்பிச்சி ஊரணி என்ற குளம் இருக்கிறது.
அதில் திறந்தவெளி Swimming Pool அமைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் யாராவது ஆமோதிப்பதாக இருந்தால் கூறவும்
Today Malaysia celebrates it's independence day. Happy to quote the poem of Rabindranath Tagore during my Merdeka special Toastmasters club meeting at KL. Happy Independence day! Happy Merdeka! Long live love Malaysia! #Merdeka69 🇲🇾
cc: @GargaC
தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு தொடரவேண்டும்:
முன்னாள் முதல்வர் மதிப்பிற்குரிய திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த Z பிரிவு பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டு விட்டது என்று தகவல் கிடைக்கப்பெற்றேன். மத்திய அரசின் VIP செக்யூரிட்டி விதிகளின் படி நாட்டில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல் கூடுதலாக உள்ள ஒரு சில முதல்வர்களுக்கு Z+ பிரிவுக்கும் கூடுதலாக சிறப்பு பாதுகாப்பும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதே சமயம், இந்த முதல்வர்களில் சிலர் தங்களது முதல்வர் பதவியை இழக்க நேரிடும் போதோ அல்லது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் போதோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பான security review செய்யப்பட்டு அதன் படி அவர்களுடைய Z+ பிரிவு குறைக்கப்பட்டு அந்தந்த மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு வழங்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
ஆனால், திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்ட Z+ பிரிவு பாதுகாப்பு அவர் 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி ஏற்றபிறகு வழங்கப்படவில்லை. மாறாக, அவருக்கு 2006 ஆம் ஆண்டு முதல் Z பிரிவு பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணி என்னவென்றால், 13.6.2006 அன்று மதுரை ரயில் நிலையத்தில் அவர் மீது ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது, அங்கே பணியில் இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் காவலர் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டதின் விளைவாக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இறைவன் அருளால் உயிர் தப்பினார். இந்த தகவல் அறிந்த உடனேயே, அப்பொழுது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த திரு. ஆ. ராஜா அவர்கள் மூலம் அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், அப்போதைய உள்துறை அமைச்சர் திரு. சிவராஜ் பாட்டில் அவர்களுக்கும் கடிதம் எழுதப்பட்டு, திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கடிதங்களை draft செய்தவன் நான் என்ற முறையில் இந்த தகவலை இங்கு பதிவிடுகிறேன்.
டாக்டர் கலைஞர் அவர்களின் உத்தரவுப்படி, சம்பவம் நடந்த நாளுக்கு அடுத்த நாளே அமைச்சர் ஆ. ராஜா அவர்கள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் திரு. சிவராஜ் பாட்டீல் அவர்களையும் நேரில் சந்தித்து கடிதங்களை அளித்து, திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் அவர்கள் இரண்டொரு நாட்களில் அதற்கான ஆணையை மத்திய உள்துறை அமைச்சர் மூலம் வெளியிட ஆவண செய்தார். அதன் படி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு 2006 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இருந்து மத்திய அரசால் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, முதல்வர் பதவிக்கும் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்படும் Z பிரிவு பாதுகாப்புக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வழங்கப்பட்டு வந்த அதே Z பிரிவு பாதுகாப்பை இன்றும் தொடருவதற்கு தி.மு.க. தலைமை மத்திய உள்துறை அமைச்சர் அவர்களை வலியுறுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
அமைச்சர் திரு. ஆ. ராஜா அவர்களால் எழுதப்பட்ட இந்த கடிதங்களின் நகல்கள் மற்றும் உள்துறையின் ஆணை அடங்கிய கோப்பினை, 31.10.2008 ஆம் தேதி நான் திரு. ஆ. ராஜா அவர்களை விட்டு பிரிந்து எனது துறைக்கு திரும்ப சென்ற போது, அவரிடம் பத்திரமாக கொடுத்து விட்டே வந்தேன். இந்தக் கடிதங்களின் நகல்கள் அவரிடம் இன்று வரை பத்திரமாக இருக்கும் என்றே நம்புகிறேன்.
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழகத்திற்கும், கழகத்திற்கும் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன என்ற அடிப்படையில் அவர் நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்பதே எனது அவா.
நன்றி,
~ஆசீர்.
cc: @mkstalin@Udhaystalin@dmk_raja@arivalayam
முத்தமிழ் கலைஞர் diaries
ரொம்ப நாளாக இந்த பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது...
மதிமுக வை.கோபால்சாமி இந்த Press meet முடிந்தவுடன் பயங்கர கோபமாக.. கலைஞர் அய்யாவை பார்க்க சென்றேன்...( Evening medical consultation)
அவர் as usual மிகவும் cool ஆக இருந்தார்
நான் " - அய்யா அந்த பிரஸ் மீட் பார்த்தீர்களா...
கலைஞர்: பார்தேன்...
நான் : உங்களுக்கு கோவம் வரவில்லையா..
கலைஞர்: சிரித்து கொண்டே...இது இன்ன புதுசா டாக்டர் ...எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு...
He was very calm and composed ..
தொடர்ந்து சொன்னார்...
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்.. தலித் ..
Discrimination on one major condition based on birth... பிறப்பின் அடிப்படையில் மட்டுமே அவன் கீழ் சாதி...
ஆனால் நான் இந்த சமூகத்தில் double discrimination எதிராக சண்ணட செய்து வந்தவன்
பிறப்பு அடிப்படையில் மட்டுமே இல்லை...
But also on the basis of morality ...
Ignore and move on
டாக்டர்...
கண்டிப்பா சட்டமன்றத்தில் அடிதடி நடக்கும்.. காரணம் கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்காமல் திமிராக எதையாவது பேசி திரியும் அமைச்சர்கள் ஒரு பக்கம் - மற்றொருபுறம் சட்டமன்றம் என்றால் என்னவென்று உணராமல் பிதற்றிக் கொண்டிருக்கும் தவெக உறுப்பினர்கள் தரங்கெட்ட நடவடிக்கைகளால்…
எந்த MLA வாது நாளைக்கு போயி உங்க கல்லூரியில் சேருவதற்கு இவ்வளவு capitation fees இந்த இடத்தில் வாங்குறீங்களே அது லஞ்சமா இல்லையா? கருப்பு பணமா இல்லையா என்று சட்டசபையிலே கேக்கணும். ரவுசா இருக்கும். வெளியும் இந்த விஷயத்தை கேக்கலாம்
வெறும் அரசியல் உறவென்று கடந்து போக முடியவில்லை.
சாதிய இறுக்கமான சமூக சூழலிலும் எழுச்சித்தமிழர் நம் தலைவரின் வெற்றிக்காக மூன்று முறையும் அரும்பாடு பட்டு வெற்றி பெறச்செய்த அன்பை மறக்க முடியுமா?
தலைவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கத்திற்கு சிதம்பரம் புறவழிச்சாலையில் அற்புதமான இடத்தை அடையாளம் காட்டினீர்கள். அது சமூக நல்லிணக்கத்தின் இலக்கணம் அல்லவா !
நான் காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட போது கொரானாவால் பாதித்த நிலையிலும் தனது தொகுதி பணிகளை புறந்தள்ளி எனக்காக தேர்தல் பணியாற்றியதை இப்போது நினைத்தாலும் மனம் நனைகிறதே !
இன்று பிறந்த நாள் உங்களுக்கு!
முட்டமே திருவிழா கோலத்தில் இருக்கும்.
அண்ணா எனது வாழ்த்துகள்.
எல்லாவளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.
@MRKPanneer நீங்க நல்லா இருக்கனும். 🙏