10 ஆண்டுகளில் 4வது நிரந்தர முதல்வரை இன்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.,
1. ஜெயலலிதா
2. சசிகலா
3. எடப்பாடி பழனிசாமி
4. விஜய்
"நிரந்தரம்" என்பதே எத்தனை பெரிய தற்காலிகமான தேற்றல்!
கோவில்களை யார் நிர்வகிப்பது என்பது பிரச்சனையா அல்லது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள கோவில்களை யார் நிர்வகிப்பது என்பதில் பிரச்சினையா? பல்லாயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரம கோட்பாட்டில் ஒட்டிக்கொண்டு ஊரை கெடுக்கும் "நிபுணர்களை" கொண்டு நம் கோவில்களை நிர்வகிக்க இந்த விஷமிகள் யார்?
அம்பேத்கர்: இந்தியாவில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தான் இருக்கின்றன. ஒன்று ஆரியர். மற்றொன்று நாகர். திராவிடர் என்பதும் நாகர் என்பதும் ஒன்றுதான்.
https://t.co/BfYh7F7hO1
யோவ் ரம்மி ரவி! கொஞ்சமாச்சும் படிச்சாத்தான் இப்படியெல்லாம் இருக்குன்னு தெரியும்!
லெட்டர்ல நடந்த சாதாரண மிஸ்டேக்க ஏத்துக்காம மீடியா மேல பழி போடுற,
உன்னால போன 50 உயிர்க்கு கவர்மென்ட் மேல பழி போடுற,
உன்னோட குடும்பப்பிரச்சினை க்கு கூட திமுக மேல பழி போடுற,
தேர்தல் பிரச்சாரத்துக்கு பெர்மிஷன் கேட்க தெரியாம ECI மேல பழி போடுற,
எந்த தப்புக்கும் "பொறுப்பு" ஏத்துக்க முடியாத உன்னால எப்பிடி பொறுப்பான தலைவனா இருக்க முடியும்,
உன்னை நம்பி நாட்டை எப்பிடி குடுக்க முடியும்?!
Tweet போட்டோனே spaceல பேசி போய் வீடியோ எடுத்து போடுனு சொல்லி அடிக்கிறாங்கப்பா திமுக காரனுங்க
ஒழுங்க Permission வாங்கக்கூட வக்கு இல்லாத கட்சி தமிழ்நாட்ட ஆள கேட்குறானுங்க, தோல்வி பயத்துல எனக்கு தெரிஞ்சு நாமினேஷன் தப்பா fill பண்ணி என்ன electionல நிக்கவிடாம பண்ணிட்டாங்கனு ஓட போறான்.
அவ்வளவு பெரிய ரோட்டுல அந்த drainage மேல போட்டிருக்க concrete slabதான் reject பண்ண காரணனும்னு அதுவும் 5 மாசமா நடக்குற வேலைனு அங்க இருக்க மக்களே சொல்றாங்க, அதையும் Election commission மேல போடாம திமுக மேல பழிய போடுறானுங்க
@citizen_saran Video credits
இந்த மாதிரி 4 வீடியோ நச்சுனு போதும்…
2 நிமிட வீடியோ… திமுக அணியின் 200 தொகுதிகளின் வெற்றிக்கான முன்னோட்டம்.. @mkstalin@Anbil_Mahesh வாழ்த்தி மகிழ்கிறோம்…
கேள்வி: உங்களுக்கு பிடிச்ச தலைவர் யார் ?
டாப்ஸி: மோடி, நான் இன்னும் இந்த நாட்டுல வாழனும்னு(உயிரோட) நினைக்கிறேன்…
ஒரு மீடியால sarcasticஆ ஒரு கட்சியோட வெறுப்ப அரசியல சொல்றது இருக்குல இதான்டா Courage…🔥🔥🔥
Not all actors are spineless like Vijay 🤡🤡🤡
///// கேப்டன் பிரபாகரன் விஜயகாந்துக்கு நூறாவது படம். அந்தப்படம் வந்தபோது விஜயகாந்துக்கு வயது 39.
ரஜினிகாந்த் நடித்த ஸ்ரீ ராகவேந்திரா படம் வந்தபோது அவருக்கு வயது 35. நூறாவது படம்.
கமலுக்கு நூறாவது படம் ராஜபார்வை. அந்தப்படம் வந்தபோது வயது கமலுக்கு வயது 27. தவிர நாற்பது வயதுக்குள் நாயகன், மகாநதி போன்ற மிக ஹெவியான பாத்திரங்களை ஏற்று நடித்துவிட்டார்.
ரஜினிகாந்த் கமர்சியல் ஹீரோவாக இருந்தாலும் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வயது வரை என்று பல கிளாசிக் பாத்திரங்கள் அவருக்கு நாற்பது வயதுக்குள் கிடைத்துவிட்டன.
எம்ஜியார், சிவாஜிக்கும் இப்படியே. எல்லாரும் நாற்பது ஐம்பது வயதுக்குள் நூறு படங்கள் முடித்துவிட்டார்கள். குடும்பபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள்.
சத்யராஜ் கூட 33 வயதில் வேதம் புதிது போன்ற படம் நடித்து நாற்பது வயதுக்குள் நூறு படங்கள் நடித்து முடித்துவிட்டார்.
எனக்கொரு விஷயம் புரியவில்லை. விஜய்க்கு நடனம் தவிர நடிப்பு என்று பெரிதாக எதுவும் வந்ததில்லை.
அவர் நூறு படங்களை கூட தொட்டதில்லை.
திரைப்பட விருதுகளும் வாங்கியதில்லை. ஆனால் எப்ப பார்த்தாலும் கேரியர் உச்சத்தில் இருந்து வர்றேன் என்று சொல்றார். குழப்பமா இருக்கு.
ஒருவர் ஒரு துறையில் இருக்கார் என்று அங்கு அவர் வாங்கும் சம்பளம் மட்டுமே கேரியர் உச்சமா?
பகிர்வு 🙏////
சம்பளம் மட்டுமே கேரியரின் உச்சம் என்றால் அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அவர் எவ்வளவு வருமான வரி கட்டுகிறார், ஜி எஸ் டி கட்டுகிறார் என்றும் காட்டலாம் (வேட்புமனுவில் காட்டுவார், ஆனால் அதற்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் 🤣)
எதையும் காட்டியதில்லை, தொகை சொன்னதுமில்லை.
எல்லாம் வாயில் சுடும் வடைகள் மட்டுமே.
300 கோடி வாங்குகிறார், 500 கோடி வாங்குகிறார், ஆயிரம் கோடி வருவாய் என்பதெல்லாம் புனைச்சுருட்டுக்கள் மட்டுமே !
'சங்கி' என்றால் 'நண்பன்' என்றவர் சீமான்.
சீமானின் ரசிகர்களிடத்தில் மேம்போக்கான டயலாக்குகளை தவிர வேறெதுவும் எதிர்பார்க்க இயலாதென்பது அறிந்த விடயம்தான். ஆனால், அவர்களது இரசிகத்தனமும் தற்குறித்தனமும் வெகுமக்களுக்கு அரசியல்விளக்கத்தை கொடுப்பதற்குரிய வாய்ப்பை நமக்கு கொடுக்கின்றன.
எமது கையில் வேல் கொடுத்த 'திருவடிக்குடில் அடிகளார்', ஆரிய பார்ப்பனர் கோட்டையாக விளங்கும் காஞ்சி சங்கரமடத்தை பெயர்த்தெடுக்க, முருகனின் வேல் கையளிக்கிறார். ஆனால், சீமான் முருகனின் வேல் எடுத்து ஆரிய பார்ப்பனர்களுக்காக வேலை செய்வேன் என மண்டியிடுகிறார். சீமான் 'வேல்' தூக்கியதற்கும், தமிழ்த்தேசியக்கூட்டணியின் கையில் கொடுக்கப்பட்ட 'வேல்'க்கும் வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமானது.
அதாவது, இராவணனுக்காக எங்கள் கையில் வேல் கொடுக்கப்பட்டது. ஆனால் பார்ப்பனர்களின் நலனுக்காக சீமான் கையில் வேல் கொடுக்கப்பட்டது. இரண்டும் எப்படி ஒன்றாகும்?
சைவ சமய மரபு என்பது,
தமிழர் மரபு பக்திமரபும், ஆரிய பக்தி மரபும் எதிரெதிராக மோதுவதை வரலாறாக கொண்டது. இதை ஆய்வாளர் பேரா.நெடுஞ்செழியன் குறிப்பிடுவார். இதை அகத்திணை மரபுகளில் கண்டறிய இயலுமென்று ஆதாரத்தை எடுத்துரைப்பார். உதாரணமாக அப்பருக்கும், சம்பந்தருக்கும் இடையேயான சைவ சமய முரண்களை ஆதாரப்பூர்வமாக நிறுவுவார். அப்பர் தமிழ் மரபான கபாலிக சைவத்தை முன்னெடுப்பவர். சம்பந்தர் எனும் பார்ப்பனர் காளாமுக சைவமான ஆரிய-வைதீகத்தை முன்னெடுப்பவர் என்பார், தன்மகனை விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஒப்படைத்த பெரியாரிய சிந்தனையாளர் பேரா.நெடுஞ்செழியன் அவர்கள்.
இந்த மரபுகளின் வேறுபாடு அடிப்படையில், குன்றக்குடி அடிகளார் முதல் இன்றய திருவடிக்குடில் அடிகளார் வரை 'தமிழ் மரபு' பக்தியை உயர்த்திப் பிடிப்பவர்கள். இதனாலேயே குன்றக்குடி அடிகளார் தந்தை பெரியாரோடு இணைந்து இயங்கினார். குன்றக்குடி மடமும் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பெரும் உதவிகளைச் செய்தது. இந்த மடங்களோடும், தமிழ் பக்தி இயக்கத்தவரோடும் சீமான் இயங்கியதுமில்லை. சீமான் முதலில் இருந்து நெருங்கி இயங்கியது தமிழ்மரபு ஆன்மீகத்திற்கு எதிராக இயங்கும் ஆரிய-வைதீக மரபு கொண்ட பார்ப்பனர்களோடு. சமஸ்கிருத மந்திரம் முழங்க குடும்பத்தோடு சாமிகும்பிடுவதை, வீடியோவாக ஒளிபரப்பி தனது சமஸ்கிருத-வைதீக பாசத்தை வெளிப்படுத்தியவர் சீமான்.
இதனாலேயே
திருப்பரங்குன்ற முருகனை ஆக்கிரமிக்க சங்கிகள் முயன்ற பொழுது சீமான், மணியரசன் ஆகியோர் மெளனம் காத்தனர். எச்.ராஜா, அமித்ஷா ஆகியோர் முருகனை தமது ஆரிய சார்பாக மாற்ற முயல்வதைக் கண்டித்து இதுநாள் வரை போராடாத சனாதன அடிமையாக, சங்கியாக செயல்படுபவர் சீமான்.
தமிழர் கடவுளை இந்துத்துவ சங்கிகள் ஆக்கிரமிக்க முயன்றதை சீமானின் 'வீரத்தமிழர் முன்னனி' அமைதி காத்து வரவேற்றது. ஆனால் இதேநாளில் தந்தை பெரியாருக்கு எதிராக பொய் தலைப்புடன் புத்தகம் வெளியிட்டு புளகாங்கிதம் அடைந்தது. சங்கி என்றால் நண்பன் என்று விளக்கம் கொடுத்த நபர் சீமான். அதனால் சீமான் சங்கியாக மாறுவதற்கு வெட்கப்படாதவர். அவரது ரசிகர்களும் சங்கிகளாக இருப்பதற்கு கவலைப்படாதவர்கள். இவர்களது அபத்தமான வாதங்களை முன்வைத்து வரலாறை நாம் தெரிந்து தெளிவோம்.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
#LanguageMartyrsDay #StopHindiImposition
அந்த குறிப்பிட்ட கட்சியோட தலைவரே வந்து ' ஆமா நாங்க தான் சர்டிபிகேட் கொடுக்க விடாமல் தடுத்து இருக்கிறோம் இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்னு நினைக்கிற' அப்படின்னு சொன்னா கூட இவுங்களோட ரியாக்சன்
அங்கிள் தள்ளிப்போங்க என்பதாகவே இருக்கும்
🤐🤐🤐
நீண்ட காலத்துக்குப் பிறகு, நமது தாய்மொழியைப் போற்றியும் உயர்த்தியும் பேசும் ஒரு திரைப்படம்…
தமிழ் மீது கொண்ட பேரன்புடன், உங்களுக்காக பராசக்தி — என் 100வது திரைப்படம். ❤️ #GV100