மேலாவளவு படுகொலை-
1996 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் மேலாவளவு ஊராட்சி பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டது.
அதுவரை பொதுத் தொகுதியாக இருந்த இந்த ஊராட்சியில் ஆதிக்க சாதியினரான கள்ளர் சமூகத்தினர் தலைமை வகித்து வந்தனர். ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் தலித் மக்கள் ஊராட்சித் தலைவராக வரக்கூடாது என்று மிரட்டினர். தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
வீடுகள் எரிக்கப்பட்டன, வாக்குப்பெட்டிகள் கிணற்றில் வீசப்பட்டன, போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதும் வன்முறை தொடர்ந்தது.
இறுதியில் டிசம்பர் 31, 1996 அன்று நடந்த தேர்தலில் திமுக செயல்பாட்டாளரான முருகேசன் ஊராட்சித் தலைவராகவும், மூக்கன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆதிக்க சாதியினர் தேர்தலைப் புறக்கணித்ததால் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகின. வெற்றி பெற்ற பிறகும் முருகேசனால் அலுவலகத்திற்குச் சென்று பணியாற்ற முடியவில்லை.
அச்சுறுத்தல் கடிதங்கள் வந்தன. அவர் மாவட்ட ஆட்சியரிடமும், அப்போதைய முதல்வர் கருணாநிதியிடமும் பாதுகாப்பு கோரினார் ஆனால் பாதுகாப்பு வழங்கவில்லை.
ஜூன் 30, 1997 அன்று முருகேசன் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று வீடுகள் எரிக்கப்பட்டதற்கான இழப்பீடு மற்றும் பாதுகாப்பு கோரிவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் கும்பல் பேருந்தை நிறுத்தி ஏழு தலித் மக்களை வெட்டிக் கொன்றது.
முருகேசனின் தலை வெட்டப்பட்டு அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிணற்றில் வீசப்பட்டது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர் தொல். திருமாவளவனும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர். அப்போது விசிக முழு அரசியல் கட்சியாக மாறாமல் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமாக இயங்கி வந்தது.
தலைவர் திருமாவளவன் முருகேசனை சந்தித்திருந்தார். உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கேட்டபோது முருகேசன் “தலையை வெட்டினாலும் போட்டியிடுவேன்” என்று உறுதியாகப் பதிலளித்தார் என்று திருமாவளவன் பிறகு நினைவு கூர்ந்தார்.
படுகொலைக்குப் பிறகு உடல்களை அடக்கம் செய்ய போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போதைய டிஐஜி எஸ். கணேசன் திருமாவளவனைக் கைது செய்யாமல் “தலித்துகளுக்கு நீங்கள் தவிர வேறு யாரும் இல்லை” என்று கூறி கடைசி மரியாதை செலுத்த அனுமதித்தார்.
திருமாவளவன் சாலையிலேயே அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுதான் விசிக தேர்தல் அரசியலுக்குள் நுழையக் காரணமாக அமைந்தது என்று திருமாவளவன் பலமுறை கூறியுள்ளார்.
விசிக மேலாவளவில் ‘விடுதலைக் களம்’ என்ற நினைவிடத்தை அமைத்து ஆண்டுதோறும் ஜூன் 30 அன்று பெரும் எண்ணிக்கையில் அஞ்சலி செலுத்தி வருகிறது.
இந்த நிகழ்வு தலித் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இல்லாமல் சட்டப்பூர்வ உரிமைகளும் பாதுகாக்கப்படாது என்பதை உணர்த்தியது. அதனால் 1999 தேர்தலில் விசிக முதல் முறையாக போட்டியிட்டது.
திமுகவின் காட்டிக்கொடுப்பு என்ற குற்றச்சாட்டு இந்த வழக்கில் முக்கியமானது. முருகேசன் திமுக செயல்பாட்டாளர். அவர் நேரடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து உயிருக்கு ஆபத்து இருப்பதைத் தெரிவித்தார்.
புலனாய்வுத் துறைக்குத் தகவல் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் இருந்தபோதும் போதிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.
படுகொலைக்குப் பிறகு கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். ஆனால் பின்னர் 2008 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலேயே அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு மூன்று குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
இது தலித் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆதிக்க சாதியினரின் அரசியல் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு நீதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
திமுக சமூக நீதி பேசும் கட்சியாக இருந்தபோதும், தலித் தலைவரைப் பாதுகாக்கத் தவறியது மற்றும் பின்னர் குற்றவாளிகளை விடுவித்தது ஆகியவை காட்டிக்கொடுப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு தலித் அரசியல் இயக்கங்கள் திராவிடக் கட்சிகளை நம்பாமல் தனியாக அதிகாரத்தை நோக்கி நகரத் தூண்டியது.
இந்தப் படுகொலைக்குப் பிறகு 17 பேர் ஆயுள் தண்டனை பெற்றனர். உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மேலும் 13 பேர் விடுவிக்கப்பட்டனர்.
குடும்பத்தினர் இதை அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினர். மேலாவளவு இன்றும் சாதிப் பதற்றம் நீடிக்கும் ஊராகவே உள்ளது.
திருமாவளவன் ஆண்டுதோறும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி, இந்த நிகழ்வு தலித் அரசியல் விழிப்புணர்வுக்குக் காரணமாக அமைந்தது என்பதை வலியுறுத்தி வருகிறார்.
#VCK #DPI
@thirumaofficial@WriterRavikumar@VanniTamizhVCK@sinthanaivck@VckBalaji@PaavalanVCK@Elansezhian3@mohan_selvaraj@Rajstee3@E_quality_5ter_@Periambed15@burnitwithblue

ஒருவரே தொடங்கி,ஒருவரே தொடர்ந்து,ஒருவரே முடிக்கும் ஒரு செயலும் உலகில் இல்லை எனலாம்.
ஒரே பொழுதில்,ஒரே இடத்தில்,ஒரே வேகத்தில் ,
ஒரே முறையில்,ஒரே வழிவகை அல்லது உத்தியில்,
ஒரே செலவில் மதிப்பீட்டில்
எந்த ஒன்றையும் செய்துவிட முடியாது என்பது இயல்பானதேயாகும்.
அதாவது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களோடு
ஒன்றுக்கும் மேற்பட்ட செயற்பாட்டுக் கூறுகளோடு இணைந்தும் தொடர்ந்தும் செயலாற்ற வேண்டியது தவிர்க்க இயலாததாகும்.
இவ்வாறு ஒன்றோடு ஒன்று இணைந்தும் ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து ஓடையில்லாது ஆற்றும் செயல்முறையே தொடர்ச்சி என்பதாகும்..
அமைப்பாய்த் திரள்வோம்
தொல்காப்பியன் திருமாவளவன்
💙💖
@thirumaofficial
தமிழ்நாட்டு அரசியலில் விடுதலைச் சிறுத்தைகளின் பாய்ச்சல்-
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) 1980களில் தலித் பேந்தர்ஸ் இயக்கமாகத் தொடங்கி, 1999-ல் தேர்தல் அரசியலில் நுழைந்த பிறகு தமிழ்நாட்டில் தலித் மக்களிடையே பெரும் சமூக விழிப்புணர்வையும் அரசியல் உணர்வையும் உருவாக்கியது.
முன்பு சாதி வன்முறைகள், தீண்டாமை, நிலமற்ற நிலை ஆகியவற்றை மௌனமாக சகித்துக்கொண்ட தலித் சமூகம், திருமாவளவன் தலைமையில் “அடங்க மாறு, அத்து மீறு, திமிரி எழு, திருப்பி அடி” என்ற முழக்கத்துடன் அமைப்புரீதியாக எழுந்தது.
கட்சி சாதி அட்டூழியங்களை பதிவுசெய்து பிரசுரங்களாக வெளியிட்டு, சென்னகரம்பாட்டி, நரசிங்கம்பட்டி போன்ற இடங்களில் நடந்த கொலைகள் மற்றும் வன்முறைகளை பொதுவெளியில் கொண்டுவந்தது.
இதனால் தலித் மக்கள் தங்கள் உரிமைகளைக் கேட்கத் தொடங்கினர்.இது ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பைத் தூண்டினாலும், தலித் இளைஞர்களிடம் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் விதைத்தது.
அரசியல் ரீதியாக விசிக தலித் குரலை சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் எழுப்பியது. முன்பு திராவிடக் கட்சிகள் தலித் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு அவர்களை ஒதுக்கிய நிலையை மாற்றி, கூட்டணி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது.
இதனால் தலித் பிரதிநிதித்துவம் அதிகரித்தது, அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்தல், எஸ்சி/எஸ்டி வளர்ச்சித் திட்டச் சட்டம் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கட்சி சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, நில உரிமை (பஞ்சமி நிலங்கள் மீட்பு), கைகளால் மலம் அள்ளும் தொழிலை ஒழித்தல் ஆகியவற்றை முக்கியமாக வலியுறுத்தியது.சாதி திருமணங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆணவ கொலைகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்தது, இப்போதும் அதற்கான சிறப்புச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
தலித் மக்கள் மட்டுமல்லாமல், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரிடையேயும் சமூக நீதிக் கருத்துகளைப் பரப்பியது.
அதே நேரத்தில் சாதி வன்முறைகள் முழுமையாக நின்றுவிடவில்லை என்பதும், உள்சாதி பிளவுகள் (பறையர், பள்ளர், அருந்ததியர்) தொடர்வதும் உண்மை. ஆனால் விசிக வந்த பிறகு தலித் சமூகம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டு, தங்கள் உரிமைகளைப் பேசும் தைரியத்தைப் பெற்றது என்பதே முக்கிய சமூக மாற்றமாகும்.
இன்று கட்சி ஆட்சிப் பங்கில் இருக்கும் நிலையில் இந்த மாற்றங்கள் மேலும் வலுப்பட வாய்ப்புள்ளது.
#vck #dpi
@thirumaofficial@Vannikural_@VckBalaji@WriterRavikumar@sangathamizhanM@vckitwingoffi@Elansezhian3@mohan_selvaraj@AthiOfficial@Periambed15@Danieljoshua_15@E_quality_5ter_@Rajstee3@rajmohaneee50@burnitwithblue@poomaa_Official@Sivaa_Comrade@Nakkeeranj93771@Stalin78723@sengaivinothR
கள்ள சாராய அழிப்பு மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் சர்க்கரை தொழிற்சாலையை எதிர்த்து போராடி உயிர்நீத்த தலித் பேந்தர்களுக்கு (Dalit Panthers) வீரவணக்கம்
90களில் திட்டக்குடி பகுதியில் கள்ளசாராயத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை தலைவர் திருமாவின் உத்தரவில் தலித் பேந்தர்ஸ் நடத்தினர். இதனையொட்டி தலித் பேந்தர்ஸ் மகளிர் அமைப்பின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை திட்டக்குடி சண்முகம் மற்றும் DPI ரமேஷ் அவர்கள் நடத்தினர். இதனால் ஆத்திரம் கொண்ட சாராய வியாபாரிகள் தோழர்களை பழிதீர்க்க காத்துகொண்டு இருந்தனர்.
இந்த சூழலில் பெண்ணாடம் அருகில் உள்ள அருணா சர்க்கரை ஆலை சுற்றுசூழல் விதிகளை மதிக்காமல் தொழிற்சாலை கழிவுகளை மக்கள் வாழும் பகுதியில் வெளியற்றியது. இந்த கழிவுகளினால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கபட்டனர். இதனை எதிர்த்து மாபெரும் போராட்டத்தை தோழர்கள் திட்டக்குடி சண்முகம் மற்றும் DPI ரமேஷ் நடத்தினர். இதனால் ஆத்திரம் கொண்ட சாதி இந்துக்கள் இவர்களை பழி தீர்க்க சமயம் பார்த்து கொண்டு இருந்தனர்.
ஜனவரி 17, 1995அம் ஆண்டு அண்ணல் அம்பேத்கார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு , DPI கொடியை ஏற்ற திட்டக்குடி அருகில் உள்ள நாவலூர் பகுதியில் தோழர்கள் கூடியிருந்த போது அங்கு ஆயுதத்துடன் வந்த சாதிவெறி குண்டர்கள் தோழர்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை கும்பல் வதிட்டபுரம் சேரிக்குள் புகுந்து தலித் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. சுமார் அறு மணி நேரம் நடந்த தாக்குதலில் திட்டக்குடி சண்முகம் மற்றும் தோழர் ரமேஷ் அவர்கள் வீரமரணம் அடைந்தனர்.
#VCK #DPI
@thirumaofficial@Vannikural_@VckBalaji@WriterRavikumar@sangathamizhanM@vckitwingoffi@Elansezhian3@mohan_selvaraj@AthiOfficial@Periambed15@Danieljoshua_15@E_quality_5ter_@Rajstee3@rajmohaneee50@burnitwithblue@poomaa_Official@Sivaa_Comrade@Nakkeeranj93771@Stalin78723@sengaivinothR
என்ன @imrajmohan இன்று நீங்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆனது முதல்வர் விஜய் ஆக இருக்கலாம்,
ஆனா அதற்க்கு விதை போட்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அவர் இல்லையேல் நீங்க இல்ல,
மற்ற கட்சிகள் தான் இருட்டடிப்பு செய்றானுங்க பார்த்தா நீங்களும் அதே தான் பண்றீங்க,
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிலாது நபி : அனைத்துலக சகோதரத்துவ நாள்!
______________________
நபிகள் நாயகம் பிறந்த நாளான இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமுவந்த 'மிலாது நபி நாள்' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனிதகுலத்தை நல்வழிப்படுத்தி மனித நேயத்தைச் செழிக்கச் செய்த மகத்தான பேராளுமை மிக்கவர் நபிகள் நாயகம்.
மனிதகுலத்தில் நிலவிய பாகுபாடுகள், வன்முறைகள், உழைப்புச் சுரண்டல் போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இறைநம்பிக்கையும் அதனடிப்படையிலான இறையச்சமும் தனி மனித நல்லொழுக்க மேம்பாட்டுக்கு அடிப்படைகளாக அமையும் என்கிற நம்பிக்கையோடு போதனைகளை அருளியவர். பேரன்பும் பெருங்கருணையும் தாம் மக்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் வளர்க்குமென்கிற உயரிய மாண்புகளைப் பரப்பியவர்.
அத்தகைய மாமனிதர் நபிகள் பெருமானின் நன்னெறிகளைப் பரப்பவும் அதன் சகோதரத்துவத்தை உலக மாந்தரிடையே நிலைபெற செய்யவும் இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் 'சகோதரத்துவ நாள்' வாழ்த்துகள்!
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
புரட்சியாளர் அம்பேத்கரும் 💙 தமிழ் தேசியமும்
தமிழ் தேசியத்திற்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் மிக நெருக்கமான கருத்தியல் மற்றும் அரசியல் தொடர்புகள் உள்ளன. அம்பேத்கர் நேரடியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், தமிழ் தேசியத்தின் சமூக, அரசியல் மற்றும் கருத்தியல் தளங்களில் அவருடைய சிந்தனைகள் ஆழமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளன.
தமிழ் தேசியத்தின் தத்துவார்த்தத் தொடக்கமாகக் கருதப்படும் சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பெரியார், அம்பேத்கருடன் நெருங்கிய நட்பும் கருத்தியல் உடன்பாடும் கொண்டிருந்தார். சாதி ஒழிப்பு, சமூக நீதி, மற்றும் ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகிய தளங்களில் இருவரும் ஒரே புள்ளியில் இயங்கினர். அம்பேத்கரின் Annihilation of Caste (சாதி ஒழிப்பு) நூலைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் பெரியார்.
நவீனத் தமிழ்த் தேசியக் கோட்பாட்டாளர்கள் பலரும் "சாதி ஒழிப்பே தமிழினத்தின் விடுதலை" என்ற நிலையை முன்வைக்கின்றனர். சாதியை ஒழிக்காமல் தமிழ் தேசியத்தை வெல்ல முடியாது என்ற கருத்தாக்கத்திற்கு அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு" கொள்கைகளே பிரதான வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
1990-களில் தமிழ்நாட்டில் உருவெடுத்த தலித் அரசியல் கட்சிகள் (உதாரணமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) அம்பேத்கரியத்தையும் தமிழ்த் தேசியத்தையும் இணைத்து "தலித் தமிழ்த் தேசியம்" அல்லது "சாதி எதிர்ப்புக் களமாகத் தமிழ்த் தேசியம்" என்ற அரசியலை முன்வைத்தன. தமிழ் தேசிய அடையாளத்திற்குள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்ட அம்பேத்கரின் சட்டப் போராட்டங்களும் கோரிக்கைகளும் அடித்தளமாக அமைந்தன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், அதிகாரப் பரவலாக்கல் மற்றும் மாநிலங்களின் சுயாட்சி குறித்து முக்கியமான கருத்துகளைப் பதிவுசெய்துள்ளார். இது தமிழ் தேசியம் வலியுறுத்தும் மாநில சுயஆட்சி உரிமைகளுக்கு ஒரு சட்டரீதியான சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்த் தேசியம் என்பது வெறும் மொழி சார்ந்த தேசியம் மட்டுமல்ல; அது சமூக நீதியையும் உள்ளடக்கியது என்பதை உணர்த்துவதில் அம்பேத்கரின் பங்களிப்பும் கோட்பாடுகளும் தவிர்க்க முடியாதவை.
90-களில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் களப்போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகக் குரல் இன்றைய தமிழக அரசியல் சூழலிலும் மிக முக்கியமான வழிகாட்டியாக விளங்குகிறது.
அன்று விடுதலைச் சிறுத்தைகள் "பதவி, அதிகாரம், சட்டமன்றம் என எதற்கும் ஆசைப்படாமல், மக்களின் உரிமைக்காக சிறை செல்லவும் உயிரைத் தியாகம் செய்யவும் தயார்" என்று முழங்கிய அதே கொள்கைப் பிடிப்புதான், இன்றைக்கும் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களைத் தனித்துவமான தலைவராகத் தளராமல் நிற்க வைக்கிறது.
அன்று தெருவில் நின்று போராடிய அதே வீரியமும், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக எதிரொலித்த அதே நேர்மையும் இன்றைக்கும் தமிழ்நாட்டின் சமூக நீதி அரசியலுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
காலம் மாறினாலும் தியாகமும் கொள்கை உறுதியும் மாறாத தலைவனுக்கு என்றும் மரியாதை! 🔥✊
-நன்றி @E_quality_5ter_ தோழர்
@thirumaofficial@Vannikural_@VckBalaji@WriterRavikumar@sangathamizhanM@vckitwingoffi@Elansezhian3@mohan_selvaraj@AthiOfficial@Periambed15@Danieljoshua_15@E_quality_5ter_@Rajstee3@rajmohaneee50@burnitwithblue@poomaa_Official@Sivaa_Comrade@Nakkeeranj93771@Stalin78723@sengaivinothR
இன்றைய அரசியல் களம் பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் தலைவர்களின் அதிரடியான செயல்பாடுகளை மட்டுமே பார்த்த மக்களுக்கு, இன்றைக்கு அவர்களின் கருத்தியல் சார்ந்த உரையாடல்களே முக்கியமாகப் படுகின்றன.
நாங்களும் தனிப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி, கருத்தியல் ரீதியான விவாதங்களை முதன்மைப்படுத்தத் தொடங்கியிருக்கிறோம்.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இரட்டை வாக்குரிமைக்குப் பதிலாகத் தனித்தொகுதிகளைப் பெற்றுத் தந்ததன் நோக்கம் மிகத் தெளிவானது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றங்களிலும் ஒலிக்க வேண்டும் என்பதே அது.
ஆனால், அந்த தனித்தொகுதிகள் மூலம் பயன் பெற்று எம்.எல்.ஏ, எம்.பி, மற்றும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற பல தலித் பிரதிநிதிகள், தங்களின் சொந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காக நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குகளுக்காகச் சேரிக்குள் நுழைவதும், வெற்றி பெற்ற பிறகு அந்த மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் இருப்பதும் வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.
“நாங்கள் தலித் மக்களுக்கு அதைச் செய்துவிட்டோம், இதைச் செய்துவிட்டோம்" என்ற பொய்யான வாக்குறுதிகளையும், புராணச் கதைகளைப் போன்ற உருட்டுகளையும் பேசி ஏமாற்றுவது தொடர்கிறது.
குறிப்பாக, தங்களைச் சமூக நீதி காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் தி.மு.க உடன்பிறப்புகளும், அக்கட்சியினரும் தலித் மக்களின் உண்மையான முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதாகத் தெரியவில்லை. வெளிப்படையாக எதிர்க்கும் அமைப்புகளை விட, முற்போக்கு வேடமிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறிக்கும் இத்தகைய போக்குகள் மிகவும் ஆபத்தானவை. ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான விடுதலை என்பது வெறும் வாக்கு வங்கி அரசியலில் இல்லை; அது அதிகாரப் பகிர்விலும், சமூக நீதியைச் சரியாக நடைமுறைப்படுத்துவதிலும் மட்டுமே உள்ளது.
#VCK #DPI
@thirumaofficial@Vannikural_@VckBalaji@WriterRavikumar@sangathamizhanM@vckitwingoffi@Elansezhian3@mohan_selvaraj@AthiOfficial@Periambed15@Danieljoshua_15@E_quality_5ter_@Rajstee3@rajmohaneee50@burnitwithblue@poomaa_Official@Sivaa_Comrade@Nakkeeranj93771@Stalin78723@sengaivinothR
எத்தனையோ ரத்த வரிகளை
எங்கள் முதுகினில் தந்தவரே
அத்தனையும் வட்டி முதலுடன்
உங்கள் கரங்களில் தந்திடுவோம்
நந்தன் இனமே
பெறும் அரியாசனமே
அந்த தினமே வருமே
எட்டுத்திக்கும் வெற்றி எழுமே
மண்ணில் ஒளி வெள்ளம் வரும்வரை
வேர்வை குலம் வீறு கொண்டே
போரிடும் போரிடும்
வெல்லும் வரை
அலைகளும் ஓய்ந்து போகுமோ
போராடடா ஒரு வாளேந்தடா
வேங்கைகளோ இனி தூங்காதடா
விழியோ கனலாய் இனி மாறிடுமோ
வழியோ புதிதாய் உருவாகிடுமோ
🔥🔥🔥
💙💖
தலித் பேந்தர்கள் என்பது 1972-இல் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட இயக்கத்தின் தமிழ்நாட்டுக் கிளையாகும். தமிழ்நாட்டில் தலித் பேந்தர் இயக்கம்(Dalit Panther Iyakkam – DPI) என 1982-இல் மதுரையில் வழக்கறிஞர் ஏ. மலைச்சாமி தலைமையில் உருவானது.
இது அமெரிக்காவின் பிளாக் பேந்தர் கட்சியினால் ஈர்க்கப்பட்டு, அம்பேத்கர் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்நாட்டில் ‘தலித்’ என்ற சொல்லைப் பெயரில் பயன்படுத்திய முதல் அமைப்பு இதுவே. பின்னர் இது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக (VCK) வளர்ந்தது.
தலித் பேந்தர்கள் தமிழ் சமூகத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நவீன விழிப்புணர்வு இயக்கமாக செயல்பட்டது.
மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சாதி வன்முறை, கொலைகள் (எ.கா. 1982 மணிக்காப்பட்டி காட்டுராஜா, 1987 கந்தன், 1988 பாக்கியம் கொலைகள்) ஆகியவற்றைப் பகிரங்கப்படுத்தி பெரிய பேரணிகள், மறியல்கள் நடத்தியது.
இடைநிலை சாதி ஆதிக்கத்திற்கு எதிராக “அடிக்கு அடி” என்ற அணுகுமுறையைக் கொண்டு வந்தது. இது தலித் மக்களுக்கு தன்னம்பிக்கையையும் எதிர்ப்பு உணர்வையும் ஏற்படுத்தியது. ‘சேரி’ போன்ற அவமானகரமான பெயர்களை மாற்றி அம்பேத்கர் நகர், பெரியார் நகர், விடுதலை நகர் என மறுபெயரிட்டது. தலித் குடியிருப்புகளில் கொடி ஏற்றுதல், பொது இடங்களில் நடமாடும் உரிமை போன்ற அன்றாட உரிமைகளுக்காக போராடியது.
அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உரிமைகள், சட்டத்தின் நடுநிலை, சமூக-பொருளாதார வாய்ப்புகளைக் கோரியது. எஸ்சி/எஸ்டி மாணவர் உதவித்தொகை நிபந்தனைகளை எதிர்த்து போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றது.
தலித் விடுதலை இதழ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
வெவ்வேறு தலித் சமூகங்களை (பறையர், பள்ளர், அருந்ததியர்) ஒன்றிணைத்து நிர்வாக அமைப்பை உருவாக்கியது. அம்பேத்கரியத்தைத் தென் தமிழகத்தில் பரப்பிய முதல் இயக்கமாக அமைந்தது. பெண் விடுதலை, பாட்டாளி வர்க்க உரிமைகள் ஆகியவற்றையும் இணைத்தது.
இதன் மூலம் தலித் மக்கள் “ஜனநாயகக் குடிமக்கள்” என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தி, சமூகத்தில் மறைந்திருந்த ஒடுக்குமுறையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
தலித் பேந்தர்கள் திராவிட அரசியலின் ஆதிக்கத்திற்கு எதிரான தலித் அரசியலின் தொடக்கமாக அமைந்தது.
திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பிற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கிக்கு முன்னுரிமை கொடுப்பதாகக் கருதி, தனித் தலித் முன்னணியை உருவாக்க முயன்றது.
1980களில் அமைதியான மனு முறை, 1990களில் தெரு அரசியல் (ரயில் ரோகோ, சாலை மறியல்) என மாறியது. 1990 ஏப்ரல் 14 அன்று மதுரையில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
1990களில் தேர்தலைப் புறக்கணித்தது. ஆனால் காவல்துறை அடக்குமுறை காரணமாக 1999-இல் தேர்தலில் நுழைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக மாறியது.
இது தலித் கட்சிகளை பெரிய கட்சிகள் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்கியது. தலித் வாக்குகளைப் பிரித்து, கூட்டணி அரசியலில் இடம் பிடித்தது.
திராவிடக் கட்சிகளை தலித் பிரச்சினைகளை கவனிக்கவும், தலித் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் கட்டாயப்படுத்தியது. இடைநிலை சாதி ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியலை வலுப்படுத்தியது.
திருமாவளவன் தலைமையில் வடக்கு தமிழகத்திலும் பரவியது.
தலித் பேந்தர்கள் தமிழ்நாட்டில் தலித் அரசியலை “தெருவில் இருந்து பாராளுமன்றத்திற்கு” கொண்டு வந்த அடித்தள இயக்கமாகும். சமூகத்தில் சாதி ஒழிப்பு உணர்வை விதைத்து, அரசியலில் தலித் குரலை உறுதிப்படுத்தியது.
அதன் தொடர்ச்சியே இன்றைய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இது தமிழ் சமூகத்தின் சமூக நீதி போராட்டத்தில் முக்கியமான மைல்கல்லாக நிலைத்துள்ளது.