@EPSTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அய்யா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் நாளது தேதி வரை தமிழக மக்களுக்கு செய்த நன்மைகளை மக்கள் புரிந்துகொள்ள வில்லை. சட்டமன்றத்தில் தங்களின் கேள்விகளால் அவர்களுக்கு புரிய வையுங்கள் அய்யா. மேலும் இளைஞர்களின் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் செயல்பட்ட விதம் அருமை.💪
ஆமா @RameshOffcl இந்த ப்ளூ சட்டைக்காரன் யார்...?
கோவில்கள் என்ன @TVKVijayHQ யின் அந்தப்புரமா..?
விஜய் அவர்களின் சேவகர்களுக்கு எல்லாம் முக்கியத்துவம் முன்னுரிமை கொடுக்க..?
காலையில இருந்து ஒரு அமைச்சரையும் ஆளையே காணோம்….
எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா திரியணும் ன்னு கேட்டதுல சூடு சுரணை வந்து வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சிகிட்டாங்களோ?
எப்பவும் பொய் சொல்றதுக்குன்னே முந்தியடிச்சி வரும் @CTR_Nirmalkumar-ஐ கூட காணோம்!
உங்க கட்சி MLA மேல மூன்று பிரிவுகளில் பாலியல் ரீதியான வழக்கு பதியப்பட்டுள்ளது பற்றி what comments bros @actorvijay@arunraajkg@imrajmohan ?
#TVKAgainstWomen
கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் அருவருக்கத்தக்க முறையில் உண்மையை மறைத்து நாடகமாடிய ஜோசப் விஜய் அரசின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது...
இனியாவது கள்ள மௌனத்தை கலைப்பாரா குதிரைபேர முதலமைச்சர்??
மக்களிடம் மன்னிப்பு கேட்டு வெட்கித் தலைகுனியுங்கள் @CMOTamilnadu
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தானே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
@BharathiVoice இதுவே சோனியா காந்தியா இருந்தா 3000 வருசமாகும்... இந்த திருட்டு கும்பல் கிட்ட இருந்து நாடே தப்பிச்சு இருக்காது... இந்தியா உலக நாடுகள் மத்தியில் இந்த நிலையில் இருக்க பாஜக ஆட்சி தான் காரணம். இவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்யவில்லை ஓட்டு அரசியல் செய்யவில்லை
ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்காததால் குருவை சாகுபடியை இழந்த டெல்டா விவசாயிகள், தற்போது சம்பா சாகுபடிக்கும் உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகுவதைக் கண்டு கண்ணீருடன் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
“அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறக்க வேண்டும்” என்று மேடையில் பஞ்ச் டயலாக் பேசிய @CMOTamilNadu இந்த ஜென்மத்தில் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினையான தண்ணீரைக்கூட பெற்றுத்தர முடியாமல் முதலமைச்சர் பொறுப்பில் இருந்து என்ன பயன்?
அலங்கோலமான ஆறு மாத கால தவெக ஆட்சிக்கு, டெல்டா விவசாயிகளின் கண்ணீரே சாட்சியாக அமைந்துள்ளது!
@KCPalanisamy1 நீங்கள் கூறுவது சரிதான் ஆனால் எடப்பாடியார் அவர்கள் ஸ்டாலின் உடன் இருக்கும் புகைப்படத்திற்கும் வேலுமணி அவர்கள் விஜய் உடன் இருக்கும் புகைப்படங்களும் ஒன்றா சற்று நிதானமாக யோசித்து பாருங்கள். உண்மையில் நீங்கள் உண்மாயான தொண்டர் அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் நீங்கள் உதாரணம் கூறுவது?
நாங்க கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு பதில் கூறவும்...
யார் யார் @AmmavinVazhi & @TTVDhinakaran அவர்களை அஇஅதிமுக கட்சியில் இருந்து நீக்க சொன்னார்கள்????
இதற்கு @CVShanmugamofl மற்றும் தலைமை கழக நிர்வாகிகளாக இருந்த அனைவரும் பதில் கூறவும்...
பொதுக்குழு கூட்டத்தில் முன்மொழிந்து யார்??