நாங்கள் நீதிமன்றத்திற்கு போய் விடுவோம் என்று மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் பயத்தில் ஒப்புதல் அளித்திருக்கலாம்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#DMK4TN#கலைஞர்102
பேனா எனும் வாள் ஏந்தி, அதில் பகுத்தறிவு எனும் மை ஊற்றி, ஆதிக்க சக்திகளிடமிருந்து சமூகநீதியை காத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ் வாழியவே!
#கலைஞர்102
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் ஊராட்சி ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சி லட்சுமிநரசிம்மா நகரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய போது.
எடப்பாடி பிடித்த கால்களும் - தவழ்ந்த பாதைகளும்!
மக்களின் நலனும், தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே முக்கியமென செயலாற்றுவதால் தான், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்கு சென்றாலும் மக்கள் அன்போடு அவரின் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறார்கள். அந்தக் கைதான், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பின்பும் மகத்தான நலத்திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தரப்போகிறது.
ஆனால், போடு தோப்புக்கரணம் என்று அமித்ஷா சொன்னால், ’எண்ணிக்கோங்க..’ என்று சொல்லிக்கொண்டே தோப்புக்கரணம் போடும் அடிமை எடப்பாடியே, நீர் இதுவரை எத்தனை கால்களை பிடித்தீர் என்பதை பார்ப்போமா?
தன் குடும்பத்துக்கும் பங்காளி குடும்பத்துக்குமான வாய்க்கால் வரப்பு பிரச்சனை கொலை வரை நீண்டது, அந்தக் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க தலைமறைவானதும் பின்னர், செங்கோட்டையனின் காலில் விழுந்து அதிமுகவில் இணைந்தவரும் நீர் தானே!
சசிகலா, டிடிவி தினகரன் காலை பிடித்து அரசியலில் முன்னேறினீர்கள், 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிடாஸ் ராவணன் காலைப் பிடித்து சீட்டு வாங்கி வென்றீர்.
அம்மையார் ஜெயலலிதாவின் காலை எப்போதும் பிடித்திருந்தது ஊரறிந்த கதை, அவரின் மறைவுக்கு பின்னர் டேபிளுக்கு கீழே தவழ்ந்து தவழ்ந்து போய் சசிகலாவின் காலைப்பிடித்து முதலமைச்சர் ஆனது நாடறிந்த கதை, பின்னர் துரோகம் செய்ததும், ஊழலில் திளைத்து அள்ளிக் குவித்ததும் உலகம் அறிந்த கதை..
இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், இருண்ட ஆட்சியையும் இரட்டை இலையையும் காப்பாற்றிக்கொள்ள இரண்டு டெல்லி எஜமானர்களின் காலில் மாறி மாறி விழுந்ததும் தொடர்கதை.
அன்றிலிருந்து சமீபத்தில், மூன்று கார்கள் மாறிப்போய் அமித்ஷாவை சந்தித்தது வரை அனைத்துமே காலில் விழத்தான் என்பது வரலாறு.
எனவே, வரும் காலங்களிலும் டெல்லி எஜமானர்களின் அடிமையாக, கால்களை மட்டுமே பிடித்து திரியும் உமக்கு தமிழ்நாட்டு மக்கள் தோல்வியைத்தான் பரிசாக அளிக்கப் போகிறார்கள்.
அதையும் எங்கள் தலைவரின் காலில் விழுந்து நீர் வாங்கத் போகிறீர்!
#AdmkFails
நீட் விவகாரத்தில் தற்குறித்தனமாக பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு!
தன்னுடைய பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள டெல்லி எஜமானர்களின் காலில் விழுந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்ததோடு, உதய் மின்சாரம், நீட் தேர்வு ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கிய அடிமை @EPSTamilNadu நீட் மரணங்களுக்கு தி.மு.கழக அரசுதான் காரணம் என ஆகாசப் புளுகை புளுகி இருக்கிறார்.
அம்மையார் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை கூட தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. இவர் முதலமைச்சரான பின்புதான் தமிழ்நாட்டில் நீட் தேர்வே நடந்தது.
நீட் விவகாரத்தில், “நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்ன பழனிசாமி இன்றைக்கு திடீரென்று ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராளியாக மாறி இருக்கிறார்.
‘நீட்’ தேர்வை தி.மு.க. அரசு நடத்தவில்லை என்று கூட இந்தத் தற்குறி தலைவருக்கு தெரியவில்லை. தற்குறி பழனிசாமிக்கு தைரியமும், முதுகெலும்பும் இருந்தால் ‘நீட்’ தேர்வை நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மீது கோபம் வந்திருக்க வேண்டும். ஆனால் பயந்த பழனிசாமி, தி.மு.க. மீது பாய்கிறார்.
மருத்துவ மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைத்து வரும் நீட் தேர்வை ஒழித்தே ஆக வேண்டும் என்பதில் தி.மு.க. அரசு உறுதியாக இருக்கிறது. நீட்' விலக்கு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது அரசு. மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நாடாளுமன்றம் - நீதிமன்றம் ஆகிய அனைத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான தனது போராட்டத்தை தி.மு.க. அரசு செய்து வருகிறது. இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்து இருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும். ஆனால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது பாஜக அரசுதானே.
மாணவர்களின் கல்வி கனவை சிதைக்கும் பாஜகவை கேள்வி கேட்காமல் இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன என சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?
அடிமை எடப்பாடிக்கு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது நோக்கமாக இருந்தால், ‘நீட் தேர்வை நீக்கினால் தான் பாஜகவுடன் கூட்டணி சேர்வோம்' என அமித்ஷாவிடம் சொல்லத்தயாரா?
அந்த கோரிக்கையை வைக்காமல் கபட நாடகம் ஆடுவது ஏன்?
நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தும், நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர்கள் பறிபோன பின்பும் அராஜகமாக நீட் தேர்வை பாஜக அரசு திணிப்பது ஏன்?
இப்போதும் நீட் தேர்வை நடத்துவது உங்கள் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க தான்; அவர்கள்தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். முதுகெலும்பு என்பது கொஞ்சமேனும் இருந்தால் அமித்ஷாவிடமோ, மோடியிடமோ நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு மட்டுமாவது விலக்கு கேளுங்களேன் அடிமையே.
வாய்க்கு வந்ததை தற்குறித்தனமாகப் பேசுவதாலும், எழுதுவதாலும் எல்லாமும் உண்மையாகிவிடாது அடிமையே!
#AdmkFails
#BanNEET
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!
தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளின் கட்டணம் உயராது. தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும்!
- மாண்புமிகு அமைச்சர் திரு @sivasankar1ss அவர்கள்
#DMK4TN
தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ், அதிக எண்ணிக்கையில் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் மாநிலங்களில், 13.25 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது!
#DMK4TN#TNRising