ஆனா பாருங்க ஜெய்லர்2 ல ரஜினி ஒரு டான்ஸ் ஸ்டெப் கூட போடல.ஒரு சண்டை கூட போடல.பக்கம் பக்கமா வசனம் பேசல..ஆனாலும் ரஜினிங்கிற முகத்துக்காகவே ஆயிரம் கோடி வசூல் பண்ண போகுது. பெரும் பொருட்செலவு இல்ல. மத்த pan இந்தியா மூவி மாதிரி மெனக்கெடல்கள் இல்லை. சிம்பிள் கதை. ஆனா இப்படி வெறும் ஸ்லோமோஷன் ஷாட் வச்சே படத்துக்கு பில்டப் பண்ணி ஓட வச்சுற முடியும்ன்னு நெல்சன் இந்திய சினிமாவுக்கே க்ளாஸ் எடுத்துருக்கான். Frame paarunga Ji.. ஆனா உன் அலும்ப பாத்தவன் உன் அப்பன் விசில கேட்டவன் பாட்டெழுத்துனவர் தீர்க்கதரிசி..
What an inspiring story of Navi Pillai, daughter of an Indian bus driver, who overcame all odds to become one of the world’s foremost human rights lawyers & activists. She was rightly awarded the Nobel peace prize this year. Had Modi congratulated her?
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
வாக்குரிமையைப் பறிக்கும் SIR வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!
இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள்!
🔴 #SIR-ஐ முழுமையாக இரத்து செய்க!
🔴 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக!
🔴 ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!
🔴 EVM-க்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!
SIR விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, #SIR இரத்து மற்றும் வாக்குச்சீட்டு முறை ஆகிய இரு கோரிக்கைகளை வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள்!
பொதுவா கிராமங்களில் கம்பு திணை கேழ்வரகு தான் உணவாக இருந்தது..
பண்டிகைகள் நல்ல நாட்கள் போது மட்டும் தான் நெல் சோறு..
நித்தம் நித்தம் நெல்லு சோறு என்பது எல்லாம் மக்களுக்கு பெரும் கனவாக இருந்த காலம் ஒன்று இருந்தது.
1965-67 காலம் எல்லாம் பெரும் அரிசி பஞ்சம்.
1967 தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியே ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்பது தான்.
நம் மக்கள் எல்லோரும் நெல்லு சோறு தினமும் சாப்பிடணும் என அதற்கான முயற்சிகள் செய்தது திமுக
நாட்டிலேயே முதல் முறையாக பொது விநியோக திட்டம் கொண்டு வந்து அதற்காக bulk purchase முறையில் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்து அரசே அரிசி ஆலைகள் அமைத்து பொது விநியோக திட்டம் மூலம் எல்லா மக்களுக்கும் அரிசி கொடுத்து பசிப்பிணி போக்கிய பேரியக்கம் திமுக
பின்னர் நாடு முழுதும் அந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது
இலவசமாகவே நெல் கொடுத்து கொண்டு இருக்க முடியாது.. மக்களே தினமும் அரிசி சாதம் சாப்பிடும் அளவுக்கு வளரவேண்டும் என்பதற்காக.. கல்வி வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி என முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது திமுக அரசு
தொழிற்சாலைகள் தொழிற்பேட்டைகள் அமைத்து எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் அவர்களை கல்வியிலும் மெருகேற்றி எளிய மக்களின் பொருளாதார நிலையை மெல்ல மெல்ல உயர்த்த எல்லா முயற்சிகளையும் செய்தது
மற்ற பல மாநிலங்களை விட இன்று தமிழ்நாடு கல்வி & வேலைவாய்ப்பில் முன்னணியில் இருக்க அந்த முயற்சிகள் தான் முக்கிய காரணம்
இன்றைக்கு அரிசி சாப்பாடு என்பது நமக்கெல்லாம் தினசரி வழக்கம் ஆகிவிட்டது
பல மாநில மக்கள் போதுமான உணவு இல்லாமல் தவிக்கும் போது தமிழ்நாடு உணவு தேவையில் தன்னிறைவாக இருந்ததற்கு காரணம் தொலைநோக்கு பார்வையும் மக்களின் வளர்ச்சி பற்றிய அக்கறையும் கொண்ட தலைவர்கள் நமக்கு கிடைத்ததே காரணம்.
இன்று அரிசி சாதாரண விஷயம் ஆகிவிட்டது. ஆனாலும் சில குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்.. வருஷத்தில் நாலு அஞ்சு நாள் மட்டும் நெல்லு சோறு சாப்பிட்டவங்க இப்போ தினமும் மூணு வேளையும் அரிசி சாதம் சாப்பிடுறாங்களே என்பது ஒரு பெரிய உறுத்தலாக இருந்த காலம் எல்லாம் இருந்தது.
அப்படிப்பட்ட மக்களுக்கு அரிசி சரியான விலையில் வழங்க முடியாமல்... "நீங்க எல்லாம் அரிசி சாப்பிடுறீங்க.. அதனால் தான் விலை ஏறுது" என யார் ஆணவமாக சொன்னாலும் அது மக்களின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லாத பேச்சாக தானே இருக்கும்?
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களைத் திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.
எளிமையான கிராமத்துப் பின்னணியில் இருந்து சென்னைக்கு வந்து, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து எத்தனையோ பேருக்கு ஆதர்சமாகத் திகழ்ந்தவர். உச்ச நட்சத்திரங்கள் அனைவரது திரைப்படங்களுக்கும் இசையமைத்து, அவற்றின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.
குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தேவா அவர்கள் இணைந்து பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம் ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் பெருவெற்றியை ஈட்டின. இன்றளவும், தேவா அவர்களின் இசையோடுதான் ரஜினிகாந்த் அவர்களின் பெயர் திரையில் தோன்றுகிறது என்பதில் இருந்தே அதன் வீச்சை உணர்ந்துகொள்ளலாம். நான் ஆட்டோக்காரன் ஒலிக்காத ஆட்டோ ஸ்டாண்டுகளே தமிழ்நாட்டில் இருக்காது. கலைஞானி கமலஹாசன் அவர்களது அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்ற நகைச்சுவைப் படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ரஜினி, கமல் மட்டுமல்லாமல், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட பல வெற்றிப்பாடல்களை தேவா அளித்திருக்கிறார். குறிப்பாக, வாராரு அழகர் வாராரு என்ற தேவாவின் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை மதுரைக்காரர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.
நாயகர்களுக்கான mass பாடல்கள் மட்டுமின்றி, மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களிலும் தேவாவுக்கு நிகர் தேவாதான். ஆசை, காதல் கோட்டை, கண்ணெதிரே தோன்றினாள், காலமெல்லாம் காதல் வாழ்க, ஆஹா என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெல்லிசையை தேவா தந்துள்ளார். தலைவர் கலைஞர் அவர்கள்தான், தேவா அவர்களின் இசையின் இனிமையை மெச்சி 'தேனிசைத் தென்றல்' என்ற பட்டத்தை அவருக்கு வழங்கினார்.
எண்பதுகளில் தனது திரையிசைப் பயணத்தைத் தொடங்கிய அவர் இன்றைய இளைஞர்களான அனிருத் உள்ளிட்டோரின் இசையிலும் எந்தத் தலைக்கனமும் இல்லாமல் நட்புணர்வோடு பாடியுள்ளார். அண்மைக்காலமாக, அவரது இசைக் கச்சேரிகளும் எல்லா ஊர்களிலும் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ் வெகுசன இசை வரலாற்றை தேவா அவர்களை விடுத்துவிட்டு எவராலும் எழுத முடியாது. பல அத்தியாயங்களை அவருக்கென ஒதுக்கியாக வேண்டும்.
ஒருபுறம் இசைஞானி இளையராஜா அவர்களும், மறுபுறம் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களும் கோலோச்சிய காலத்திலும் தேவா தனக்கெனத் தனிப்பாதை அமைத்து வெற்றி கண்டார். இசையில் வல்லவர் என்பதைத் தாண்டி, மிகவும் நல்லவர் என்ற பெயரையும் பழகிய அனைவரிடமும் பெற்றவர்தான் தேவா.
தேவா அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது தேனிசைத் தென்றல் வீசுவது நிற்காது. தேவா அவர்களை இழந்து வாடும் அவரது மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சகோதரர் முரளி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், தேவா அவர்களின் இரசிக நெஞ்சங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
திருமணம்
சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் - காவேரி கலாநிதி ஆகியோர் மகள் காவியா கலாநிதி மாறன், ரவிச்சந்தர் - லட்சுமி ஆகியோரது மகனும், இசை அமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் ஆகியோரது திருமண வரவேற்பு விழா சென்னையில் நவம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை, குடும்பத் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
#SunNews | #KaviyaMaran | #Anirudh | @mkstalin | @anirudhofficial
எல்லாரையும் கவரக்கூடியவை. ரஜினிகாந்த் அவர்களின் திரையுலகப் பயணத்தில் அந்த புகழ்பெற்ற டைட்டில் பிஜிம் மூலம் முழு சூப்பர் ஸ்டார் ஆக மாற்றியவர். ஆன்மா சாந்தி அடையட்டும்.
Miss you Deva sir 🙏
ராஜா ராஜா தான், ஆனா இது தேவா பாட்டு என லப்பர் பந்தில் வரும் வசனம் அவளோ உண்மை..
'Chai with Chitra' போன்ற பேட்டிகளில் அவரது எந்தவித பந்தாவும் இல்லாத எளிய பேச்சு, சக கலைஞர்கள் மீதான மரியாதை, மற்றும் எம்.எஸ்.வி அவர்களின் பாணியிலான அடக்க குணம் ஆகியவை
#BREAKING | தவெக நிர்வாகி வீட்டில் இருந்து 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார்
8 மணி நேர சோதனைக்குப் பிறகு தவெக நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் இருவரும் கைது
#SunNews | #TVK | #DrugsCase | #Nagai
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa?
Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.
The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger.
#GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option.
@cockroachisback@SFI_CEC@AISA_Official_@Aishe_Ghosh@SauravDassss@AshutoshRanka@Dhruv_Rathee #CJP #Delhi
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam