அறிவியல் மருத்துவ முறையில் முதலிலேயே ஓரளவுக்குப் பிழைக்கும் வாய்ப்பு குறித்துச் சொல்லிவிடுவார்கள்..
ஆனால் கடவுள் வேண்டுதலில் பிழைப்பது ஒத்தையா ரெட்டையா மாதிரிதான்..பிழைத்தால் கடவுளருள்..போயிட்டால் கர்மா..எது என்பது நிகழ்வுக்குப் பிறகுதான்..
தொடர் மழை - அளவுக்கதிகமான நீர்வரத்து காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது துயர்துடைக்கப் பணியாற்றும் காவல்துறையினர், மின்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மருத்துவத்துறையினர் உள்ளிட்ட நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரது சேவைக்கும் தலைவணங்குகிறேன்.
பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞர் அவர்களை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்.
சக மனிதன் மீதான அன்பும், அடுத்தவருக்கு செய்யும் உதவியும் தான் இன்றைய நம் உலகின் இயங்கு சக்தி. இந்த ஈகைத் திருநாளில், உதவும் உள்ளங்களின் அன்பு அனைவருக்கும் கிடைத்து, மகிழ்வுடன் கூடி வாழும் ஒரு நாடாவோம். இந்தியர் என இணைவோம்.
அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
ஆண்களெனும் சுயநலவாதிகள்
தன் சுகதுக்கம் பாராது
குடும்பத்திற்காய் தம்மை உருக்குவதால்...
பச்சோந்திகள்
தன்மட்கள் வாழ பல நிறங்காட்டி அடிபணிந்து உழைப்பதனால்...
சில்லறைகள்
தம்தளிர்கள் உண்ட மீதி உணவை உண்பதனால்
ஆதிக்கசக்திகள்
தம் குலம்வாழ பிள்ளைகளில்
ஆதிக்கம் செலுத்துவதால்...
‘’8 அடியாக இருந்த சுவரை, 25 அடிக்கு அஸ்திவாரம் எதுவும் இல்லாமல், கட்டியதற்கு காரணம், அவரின் வீட்டிலிருந்து பார்த்தால் எங்களின் குடிசையும், இந்த மக்களும் தெரிந்துவிடுவதால் தான்’’ #தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி
https://t.co/3lUp90egBb
அடுத்தவங்களுக்காக பார்த்து பார்த்து வாழ்ந்தா மட்டும் என்ன அவார்டா குடுக்க போறீங்க. அப்பவும் ஏதாவது நொட்டை சொல்லீட்டு தான் இருப்பீங்க.
நான் எனக்காகவே வாழ்ந்துட்டு போறேன் போங்கடா. 🚶🚶