தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சட்டமாக்க பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டுகளாக கட்டி காத்த பேரியக்கம். நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அ��ர்கள் தலைமையில் பீடுநடை போடும் தி.மு.கழகம் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
#முப்பெரும்விழா2025
கரூர் மண்ணில் கழக உடன்பிறப��புகளின் மாபெரும் எழுச்சியுடன் கழக முப்பெரும் விழா - 2025 நிறைவு பெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் ஓரணியில் நின்று தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன் என சூளுரைத்து களப்பணியை தொடர்வோம்!
#முப்பெரும்விழா2025
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3502 கோடி அளவுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று சேலத்தில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் வங்கிக்கடன் இணைப்பு மற்���ும் அடையாள அட்டைகளை வழங்கினோம்.
நம் #திராவிட_மாடல் அரசு சார்பில் இன்றைக்கு வங்கிக்கடன் இணைப்புகளை பெற்றுள்ள 4 லட்சத்துக்கும் அதிகமான சகோதரிகளுக்கும், அடையாள அட்டைகள் பெற்றவர்களுக்கும் என்னுடைய அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் உயர நம் மாநிலம் உயரட்டும்!
@SalemRRajendran @tmselvaganapat @keprakashdmk @arulramadassMLA @SadhasivamMLA @GSBediIAS #SajeevanaIAS
சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.
'மானமும் அறிவும் மனி��ர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!
சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுத���யேற்போம்!
#PeriyarForever #Periyar #SocialJusticeDay #முப்பெரும்விழா2025