தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை சட்டமாக்க பேரறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கிய இயக்கம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரை நூற்றாண்டுகளாக கட்டி காத்த பேரியக்கம். நம் மாநிலத்தின் மண் - மொழி - மானம் காக்க திராவிட நாயகர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பீடுநடை போடும் தி.மு.கழகம் 76வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!
#முப்பெரும்விழா2025
கரூர் மண்ணில் கழக உடன்பிறப்புகளின் மாபெரும் எழுச்சியுடன் கழக முப்பெரும் விழா - 2025 நிறைவு பெற்றது. மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் ஓரணியில் நின்று தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன் என சூளுரைத்து களப்பணியை தொடர்வோம்!
#முப்பெரும்விழா2025
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3502 கோடி அளவுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று சேலத்தில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினோம்.
நம் #திராவிட_மாடல் அரசு சார்பில் இன்றைக்கு வங்கிக்கடன் இணைப்புகளை பெற்றுள்ள 4 லட்சத்துக்கும் அதிகமான சகோதரிகளுக்கும், அடையாள அட்டைகள் பெற்றவர்களுக்கும் என்னுடைய அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் உயர நம் மாநிலம் உயரட்டும்!
@SalemRRajendran@tmselvaganapat@keprakashdmk@arulramadassMLA@SadhasivamMLA@GSBediIAS #SajeevanaIAS
சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் முழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!
சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்!
#PeriyarForever #Periyar #SocialJusticeDay #முப்பெரும்விழா2025