பிடிக்குது பிடிக்கலங்குறது வேற... ஆனா அவர் ஒரு முன்னாள் முதல்வர்.. முன்னாள் எதிர் கட்சி தலைவர்.. And also senior politician.. அவர் வணக்கம் சொல்லும்போது விருப்பு வெறுப்பின்றி வணக்கம் சொல்றதுதான் மனித மான்பு.. பணக்காரத்தன்மையோடு மன்னர் மனநிலையில் இருந்தால் அதற்கு பேரு பாசிசம்.. விருப்பு வெறுப்பின்றி செயல்படுவேன்னு நேத்து வசனம் பேசீட்டு இன்னைக்கு மன்னர் மனநிலையில் இப்படி செயல்படுவது சரியல்ல.. நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்தானே தவிர மன்னர் கிடையாது..
நேற்று (22.03.26) மாலை 4:30க்கு U2 Brutus reads சார்பாக திவிக தலைமை அலுவலகத்தில் "யார் இந்த மணியம்மையார்?" என்கிற தலைப்பில் கருத்தரங்கமும் கலந்துரையாடல் நிகழ்வும் "ராவணலீலா தமிழ்நாட்டின் தேசிய விழா" என்கிற புத்தக அறிமுகமும் நடைபெற்றது.. இது U2 Brutus readsன் 3வது நிகழ்வு..
ஹரினி ராஜா அவர்கள் நிகழ்வை தொகுத்து வழங்க @U2Brutus_off மைனராகிய நான் நோக்கவுரையை வழங்க அடுத்ததாக "ராவணலீலா தமிழ்நாட்டின் தேசிய விழா" நூலை பகுப்பாய்வு செய்து @rowdhira அவர்கள் நூல் அறிமுகம் செய்து பேசினார். அடுத்ததாக Data Tiger @THE_INDRA_KUMAR அவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள் குறித்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் 45 நிமிடம் வரலாற்று சம்பவங்களுடனும், தரவுகளுடனும் மணியம்மையாரைப் பற்றி பலருக்கும் தெரியாத அறிய பல தகவல்களுடனும் மணியம்மையாரின் போர்க்குணம் பற்றியும் உரைவீச்சை நிகழ்த்தினார்.. இறுதியாக நன்றியுரையை @potter_journo அவர்கள் கூறி நிகழ்வை முடித்தார்..
நிகழ்விற்கான அன்பளிப்பு ஓவியங்களை வரைந்து கொடுத்தது அண்ணன் சத்தியசீலன் அவர்கள்..
புத்தகங்களை அன்பளிப்பாக கொடுத்து உதவியது அய்யா லாரண்சு அவர்கள்..
இடம் வழங்கி உதவியது @dvkperiyar@kolathur_mani@viduthalaikr@dvkumapathi தோழர்கள்..
வருகை புரிந்த தோழர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் நன்றியையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்..
#U2Brutus_Reads
ஒரு “மதுர் சத்யா” தவறு செய்தான் என்பதற்காக “தோழர்” என்ற வார்த்தையையே இழிவுபடுத்துவது விமர்சனம் இல்லை…
அது வெறும் வெறுப்பு…வன்மம்!
ஒரு நபரின் தவறு ,அந்த நபருக்கே சொந்தம். அதை வைத்து ஒரு முழு சிந்தனை, ஒரு இயக்கம், ஒரு மரபை
தரக்குறைவாக பேசுவது நியாயமல்ல, நாகரிகமல்ல.
“தோழர்” என்பது ஒரு சாதாரண அழைப்புப் பெயர் அல்ல…
அது சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, போராட்டம்
என்ற மதிப்புகளைக் கொண்ட ஒரு அரசியல்-சமூக அடையாளம்.
இன்று “தோழர்” என்பதை இழிவுபடுத்துபவர்கள்,
நாளை வேறு ஒரு சொல்லையும், வேறு ஒரு சமூகத்தையும்
இதே மாதிரி குறி வைத்து தாக்குவார்கள்.
இது விமர்சன அரசியல் அல்ல …
இது திட்டமிட்ட இழிவு அரசியல்.
நீங்கள் செய்த "களப்பணி" என்ன? என்ற கேள்வி கேட்டால் சில்லறையாம். நீங்கள் முழு நோட்டாகவே இருந்துவிட்டு போங்கள், ஆனால் ஆர். எஸ்.எஸ் நோட்டாக இல்லாமல் கேள்விக்கு பதில் சொன்னால் சரி. (2/2)
நீங்கள் செய்த "களப்பணி" என்ன என்று கேட்டால், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இடைவிடாது "களப்பணி" ஆற்றும் விசிகவை நோக்கி சாதியவாதிகளும், மதவாதிகளும் கக்கும் வாக்கரசியல் "சீட்டு" வன்ம வார்த்தைகளை இவரும் கக்குகிறார் என்றால் இவர் யார்? (1/2)
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு U2 Brutus Reads சார்பாக நேற்று (08.03.26) மாலை 4:30 க்கு திவிக தலைமை அலுவலகத்தில் நடந்த "பெண்களின் பாதுகாவலரா விஜய்?" என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு அரங்கம் நிறைந்த தோழர்களுடன் இனிதே நடந்தேறியது.. நிறைய மக்களின் கேள்விகளுக்கு சரியான பதிலை கொடுத்து வந்திருந்த மக்களுக்கு தெளிவை கொடுத்த சிறப்பு அழைப்பாளர்கள் @THE_INDRA_KUMAR அவர்களுக்கும் தோழர் @CheGuevaraOffi1 அவர்களுக்கும் U2 Brutus Reads சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. நிகழ்வு நடத்த இடம் கொடுத்து உதவிய @dvkperiyar விற்கும் தலைவர் @kolathur_mani அவர்களுக்கும், பொதுச் செயலாளர் @viduthalaikr அவர்களுக்கும், சென்னை மாவட்ட செயலாளர் @dvkumapathi அவர்களும் மற்றும் ஏனைய திவிக தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
நிகழ்ச்சியை @rowdhira தொக்குத்து வழங்க நோக்கவுரையை @U2Brutus_off மைனராகிய நான் பேச, நன்றியுரையை @Kalaiayya அவர்கள் கூறி முடித்து வைத்தார்..
நிகழ்வு அரங்கில் ஏற்பாட்டில் உதவி செய்த தோழர் @isathyatweet அவர்களுக்கும், தோழர் @potter_journo அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
சிறப்பு அழைப்பாளர்களுக்கான வரைபடத்தை வரைந்த அண்ணன் சத்தியசீலன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
#u2brutus_reads
#u2brutus
வரும் ஞாயிறு (01.03.26).. காலை 11 மணிக்கு.. U2 Brutus Reads நடத்தும் "மதநல்லிணக்க ஆவணப்பட திரையிடல்".. இடம் திவிக தலைமையகம், 95, Dr நடேசன் ரோடு, மயிலாப்பூர், சென்னை.. அனைவரும் வருக..
வரும் ஞாயிறு (01.03.26).. காலை 11 மணிக்கு.. U2 Brutus Reads நடத்தும் "மதநல்லிணக்க ஆவணப்பட திரையிடல்".. இடம் திவிக தலைமையகம், 95, Dr நடேசன் ரோடு, மயிலாப்பூர், சென்னை..
@dvkperiyar@dvkumapathi