நான் கேள்வி எழுப்பியதற்கு Who is he னு கேட்க தெரிந்த
பிரவீன் சக்கரவர்த்திக்கு
20நாள் முன்ன அமைச்சர் ராஜேஷ் சொன்னாரே ராகுலை பிரதமராக ஏற்காவிட்டால் கூட்டணியை விட்டு விலகுவோம்னு சொன்னாரே ?
அப்போ வாயில கிளிப் போட்டு இருந்தீங்களா Mr.சக்கரம்
செல்வ பெருந்தகை ரண கொடூர அட்டாக் 😅
இந்த அணில் ரசிகையின் நிலைமை ரொம்ப மோசம்ப்பா😂😂 விஜய்க்கு முட்டு கொடுத்து
ஏய் அணில் புருஷா உனக்கு யோகம் தான் போ பொண்டாட்டியை பதில் பேசா முடியாத படி செஞ்சிட்டா🔥
நான் ஒரு ஒடுக்கபட்ட சமூகத்தில் இருந்து வந்தவன்
என் இனத்திற்காக வாழ்நாளும் முழுவதும் துனை நின்ற திமு கழகம் என் குடும்பம் 🖤❤
திமுக ஒடுக்கபட்ட மக்களுக்காக நிற்கவில்லை என பொய்யாக குற்றம்சாட்டுங்கள் என்று சொல்ல சொன்னார்கள் என் மனம் ஏற்கவில்லை பதவியை ராஜினாமா செய்தேன்
- செல்வ பெருந்தகை
"...ஆக்கிரமிப்பு நிலத்திற்கு பதில் வேறு நிலத்தை ஏன் பெறக்கூடாது .." என பார்ப்பனர்களால் நடத்தப்படும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு நிலம் 55 ஏக்கரை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் உயர்நீதி மன்றம் ஆலோசனை.
இதே உயர்நீதி மன்றம் சென்னை அனகாபுத்தூரில் 50 ஆண்டுகாலம் குடியிருந்த ஏழை மக்களின் வீடுகளை "..இராணுவத்தை வைத்து அகற்றிடஉத்திரவிடுகிறேன்'.." என்று கடந்த ஆண்டு உத்திரவிட்டு, வீடுகளை இடிக்க வைத்தது.
அனகாபுத்தூர் மக்கள் ஆற்று கரைகளை ஆக்கிரமித்தார்கள் என்பதற்கான போதுமான ஆதாரம் இல்லாமலேயே இவ்வாறு உத்திரவிட்டது. ஆனால் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் நன்கு அறிந்தே, 55-ஏக்கர் அரசு நிலத்தை களவாடி ஆக்கிரமித்தது.
இந்த வழக்கை ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது நீதிமன்றம். ஆனால் அனகாபுத்தூர் வழக்கில் விசாரணையை காலையில் தொடங்கி பிற்பகலில் இடிக்க உத்திரவிட்டு மாலையில் 500 வீடுகளை இடித்து முடித்தனர்.
இந்த நாட்டில் 'நீதி' என்பது பணக்காரனுக்கானது, 'அநீதி' என்பது ஏழைக்கானது.
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாகிருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
மோடி அரசே!
எதிர்கால இளைஞர்களுக்கு பச்சைத் துரோகம் செய்யாதே!
BSNL-ஐப் பின்தள்ளி இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தைப் பறிக்காதே!
இந்தியாவின் முதன்மையான பொதுத்துறை நிறுவனமான BSNL-ஐத் திட்டமிட்டுப் பின்தள்ளி, தனியார் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகப் போக்கைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஏன் இந்த அலட்சியம்?
5G அலைக்கற்றை என்பது இன்றைய காலகட்டத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார உரிமை. மாணவர்களின் உயர்கல்வி, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, கிராமப்புறச் சிறுவணிகம் மற்றும் உழவர் பெருமக்களின் அன்றாட அரசு சேவைகளுக்கு அதிவேக இணையம் இன்றியமையாதது.
தனியார் நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலித்துக் கொள்ளையடிக்கும் வேளையில், கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களின் ஒரே புகலிடமாக விளங்கும் BSNL-ன் 5G சேவையைத் திட்டமிட்டே முடக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்?
எப்படிப் பின்தள்ளப்படுகிறது BSNL?
கார்ப்பரேட் நிறுவனங்கள் நாடு முழுவதும் 5G சேவையைத் தடையின்றி விரிவுபடுத்த அனுமதிக்கும் ஒன்றிய அரசு, மக்களின் வரிப்பணத்தில் உருவான பொதுத்துறை நிறுவனத்திற்குத் தேவையான நவீனக் கருவிகள், நிதி ஒதுக்கீடு மற்றும் தொழில்நுட்ப உரிமங்களை உரிய நேரத்தில் வழங்காமல் முட்டுக்கட்டை போடுகிறது.
BSNL நிறுவனத்தை வலுப்படுத்துவதாக வாய்ச் சவலாகக் கூறிக்கொண்டே, சந்தைப் போட்டியில் இருந்து அதை அப்புறப்படுத்த முயல்வது பிரதமர் நரேந்திர மோடி அரசின் பச்சைத் துரோகம்.
தனியார் பெருமுதலாளிகளின் இலாபத்திற்காக BSNL நிறுவனத்தைப் பலவீனப்படுத்தும் சதித்திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
கிராமப்புற மாணவர்களுக்கும் அடித்தட்டு மக்களுக்கும் இழைக்கப்படும் டிஜிட்டல் அநீதிக்கு ஒன்றிய அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
BSNL 5G சேவை தாமதத்திற்கான காரணங்களை ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி, நாடு தழுவிய அளவிலும் குறிப்பாகத் தமிழகக் கிராமப்புறங்களிலும் தரமான அதிவேகச் சேவையைத் தொடங்க உறுதியான காலக்கெடுவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தி.வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#BSNL5Gஉடனேவேண்டும்
#மக்களுரிமைமீட்போம்
#BSNL5GNow
#tamil
#ReviveBSNL