முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரும் தூய்மை அருணை அமைப்பாளருமான மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டுகளில் தூய்மை அருணை சார்பில் நடைபெற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
உழைப்பை அள்ளிக்கொடுங்கள்! உதயசூரியன் உதிக்கட்டும்!
☀️ வீடுதோறும் சென்றடைந்துள்ள #DravidianModel-இன் சாதனைகள்!
🌟 இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றும் தொலைநோக்குத் திட்டங்கள்!
💪 அரணென அனைவருக்குமான தமிழ்நாட்டைக் காக்கும் கொள்கை உறுதி! துணிச்சல்!
இதுதான் தி.மு.க.🖤♥️
ஏப்ரல் 23 அன்று, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்திலும் - நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரின் சின்னங்களிலும் அளிக்க அயராது பாடுபடுவோம்! #DravidianModel 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை!
#VoteForDMK
Hearty congratulations to Team India for the thumping victory in the final match against New Zealand to lift the T20 World Cup 2026.
The whole country is celebrating this proud moment as the Men in Blue delivered a commanding performance and clinched the title in style.
A truly memorable triumph that will inspire young sportspersons across the nation.
#IndiaVsNewZealand #T20WorldCup2026final
எங்க வண்ணம் கருப்பு சிகப்பு சார் 🖤 ❤️
அகரம் முதலும் தொட்டு..
தாடி கிழவன் Blood 🔥
அறிஞர் அண்ணா Blood 🔥
தலைவர் கலைஞர் Blood 🔥
இது தலைவர் தளபதி Blood 🔥
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள், பெருங்கடலென திரண்டு இருக்கும் கழக உடன்பிறப்புகளின் நடுவே..
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#WestZone4DMK2026
தமிழ்நாட்டு அரசியலின் முதுபெரும் ஆளுமை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா.நல்லகண்ணு மறைந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைவாசத்தை அனுபவித்தார். அவரது மீசைமுடிகள் காவல்துறையால் சுட்டுப் பொசுக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். என்றபோதும் பிரிட்டிஷ் ஏகாபத்திய எதிர்ப்புப் போரில் உறுதியாக நின்றார்.
விடுதலைக்குப் பின்பு விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக களத்தில் நின்றார். தென்மாவட்ட சாதிக்கலவரத்தில் தன் மாமனார் கொல்லப்பட்டபோதும் நல்லிணக்கப்பணிகளில் கவனம் செலுத்தினார். தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்.
அவரது 60 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையை சிறப்பு செய்யும் வகையில், பாராட்டு விழா நடத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி ரூபாயை அவருக்கு வழங்கியது. அதை அப்படியே கட்சி நிதிக்கு திருப்பித் தந்தார்.
பொதுவுடைமை இயக்கப் போராளியான தோழர் நல்லகண்ணு தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள்மீது பெரும் மதிப்பு கொண்டவர். முத்தமிழறிஞர் கலைஞருடன் ஆழமான நட்பு கொண்டவர். “எனக்கு ஒரு கண்ணில் சரிவரப் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணு” என்று கலைஞரால் பாராட்டப்பட்டு, அம்பேத்கர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
கழகத்தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தோழர் நல்லகண்ணுவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கி சிறப்பித்தார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட 10 லட்சத்துடன் தன் சொந்தப் பணமான ஐயாயிரம் ரூபாயையும் சேர்த்து, பத்து லட்சத்து ஐயாயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
பொதுவாழ்க்கையில் எளிமையும் போராட்டக் குணமுமே தோழர் நல்லகண்ணுவின் அடையாளங்கள். மக்களுக்காக உழைத்த மகத்தான தலைவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
#VBGRAMG-யால் 125 நாட்கள் வேலை கிடைக்கப் போகிறதா? அதைப் பாராட்ட எங்களுக்கு மனமில்லையா?
#MGNREGA திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி.
ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை என்பது சட்டமாக இருந்தபோதே அதை நிறைவேற்றாமல், சம்பளமும் வழங்காமல் அலைக்கழித்த பா.ஜ.க. அரசு இப்போது 1008 நிபந்தனைகளுடன் நிறைவேற்றும் புதிய திட்டத்தில் 125 நாட்கள் வேலை தரப்போகிறதா?
உண்மையைச் சொன்னால், ஒருநாள் வேலைக்குக் கூட இனி ஒன்றிய அரசு உத்தரவாதம் கொடுக்காமல் கடமையைக் கைகழுவியுள்ளது.
மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது என்று உங்கள் ஓனருக்கு வலிக்காமல் அழுத்தம் கொடுத்தீர்களே... என்ன ஆனது? உங்களை ஒரு பொருட்டாகவே டெல்லி மதிக்கவில்லையே.
மாநில அரசின் மீது 40% நிதிச்சுமையை ஏற்றும் எதேச்சாதிகாரமும் கைவிடப்படவில்லையே?
டெல்லியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவு உங்களுக்கு இருக்குமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முட்டுகளையாவது தவிர்க்கலாம்.
வறுமையை ஒழித்து, மக்களின் மாண்பை உயர்த்திய UPA அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பா.ஜ.க. அரசால் குழிதோண்டி புதைக்கப்படுவதற்கு வக்காலத்து வாங்கி, உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் என்பதை மட்டும் நினைவூட்டுகிறேன்.
இயக்கத்தின் இதயமாம் நம் இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு , மிக பிரமாண்டமான முறையில் வருகிற டிசம்பர்-14 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பிற்கான அழைப்பிதழை, கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் இன்று வழங்கினோம்.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க, ஆதிக்கவாதிகளையும் அவர்களின் அடிமைகளையும் வீழ்த்த வேண்டும் என்ற கொள்கை உறுதியுடன், 2026-சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் கழகம் ஆட்சி அமைக்க, இளைஞர் அணியின் இந்த சந்திப்பு அடித்தளம் அமைக்கும்!
#கழக_இளைஞர்_அணி @dmk_youthwing@evvelu@Prabhugajendran
@dmk_youthwing
திருவண்ணாமலை தேர் திருவிழாவில் ஆன்மீக பெருமக்களுக்கு
துணை முதல்வர் அண்ணன் @Udhaystalin அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாதாம் பால், பிஸ்கட், வாட்டர் பாட்டில் வழங்கினேன்.
#Blast
துணை முதல்வர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எனது ஏற்பாட்டில் திருவண்ணாமலை தீபம் திரு நாட்களில் மாடவீதி செல்லும் பொதுமக்களுக்கு பாதாம்பால் வழங்கிய போது...
நிகழ்வில் மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் கண்ணதாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்கள் சந்தித்து, 2011ஆம் ஆண்டிற்கு முன்பு பணிநியமனம் பெற்று தற்போது ஆசிரியராக பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது குறித்தும், ஆசிரியர்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வினை போக்கும் வகையில் நேற்று தனது தலைமையில் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது குறித்தும், அக்கூட்டத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்து எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை பெற்றார்.
அப்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என்றும் உறுதியளித்தார்.
மகளிர் சுய உதவி குழுக்களை மேலும் வலிமையாக்கிட குழு சகோதரிகளுக்கு பிரத்யேக ID Cards-ஐ நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்க உத்தரவிட்டார்கள்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் குழுக்களுக்கான ஐடி கார்டுகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1000 குழு சகோதரிகளுக்கு அடையாள அட்டைகளை தமுக்கம் மைதானத்தில் இன்று வழங்கினோம்.
அவற்றைப் பெற்ற சகோதரிகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்!
@pmoorthy21@ptrmadurai@g_thalapathimla
உழைப்பும் உறுதியும் மிக்க மீனவத் தோழர்கள் அனைவருக்கும் #உலக_மீனவர்_நாள் வாழ்த்துகள்!
மீனவர் நல மாநாடு, மீன்பிடித் தடைக்கால நிவாரணம் உயர்வு, மானிய டீசல் அளவு உயர்வு, கடனுதவிகள், மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், தூண்டில் வளைவுகள் என உங்கள் கோரிக்கைகள் அத்தனையையும் நிறைவேற்றும் மீனவ நண்பனாக என்றும் நமது #DravidianModel அரசு தொடரும்!
#WorldFisheriesDay
திராவிட இயக்கத்தின் வருகைக்குப் பிறகுதான் பகுத்தறிவு, சீர்திருத்தம் ஆகியவை கலை, இலக்கியங்களில் தோன்றின. சமஸ்கிருதச் சொற்களுக்குப் பதிலாக தமிழ்ச் சொற்கள் உருவாகின.
சிறுகதை- நாடகம்- திரைப்படம் போன்ற கலை இலக்கியத் தளங்களில் திராவிட இயக்கம் நிகழ்த்திய சீர்திருத்தங்கள் பற்றிய அமர்வு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் , நாடாளுமன்ற குழுத் தலைவர் அத்தை @KanimozhiDMK அவர்கள் தலைமையில் #திமுக75_அறிவுத்திருவிழா-வின் 'இருவண்ணக்கொடிக்கு வயது 75' கருத்தரங்கத்தின் இரண்டாம் நாளின் மூன்றாவது அமர்வாக நடைபெற்றது.
இந்த அமர்வில், திராவிட இயக்க இலக்கியங்கள் குறித்து, எழுத்தாளர் அண்ணன் @writerimayam அவர்களும், நாடகக் கலையை நவீனப்படுத்திய திராவிட இயக்க நாடகங்கள் குறித்து, ஐயா பேராசிரியர் மு. இராமசுவாமி அவர்களும், அரசியல் செயற்பாடுகளுக்கு இணையாக பண்பாட்டுச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கழகத்தின் தனித்துவம் பற்றி, சகோதரர் @sugunadiwakar அவர்களும் உரை நிகழ்த்தினர்.
அரசியலைப் போலவே எப்போதும் அறிவுச்செயற்பாட்டை முதன்மைப்படுத்தும், கழக இளைஞர் அணியின் பணி தொடரும்.
#DMK75
75 ஆண்டுக்கால அரசியல் பயணத்தில், கொள்கை-கோட்பாடு-கொடி-தேர்தல் சின்னம் என அனைத்தையும் உறுதியுடன் தக்க வைத்திருக்கும் இயக்கம் நம் @arivalayam. அத்தகைய வரலாற்றுக்குரிய பேரியக்கத்தின் பெருமைமிகு வரலாற்றை, நாம் #திமுக75_அறிவுத்திருவிழா- வாக கொண்டாடி வருகிறோம்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்றுவரும், ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ இருநாள் கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வு 4-இல் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் @EzhilarasanCvmp தலைமையில் நடைபெற்றது.
இதில் பகுத்தறிவு நெறியுடன் பயணிப்பதன் அவசியம் குறித்து, சகோதரர் @Dr_Ezhilan அவர்களும், எவ்வித ஆதிக்கத்திற்கும் அடிபணியாமல் உறுதியுடன் நிற்கும் இயக்கம் தி.மு.க. என்று அண்ணன் @mathimaran அவர்களும் உரையாற்றினர்.
பகுத்தறிவும் சுய மரியாதையுமே நம் கொள்கை அடித்தளங்கள் என்பதை, அனைத்துத் தரப்புக்கும் இந்த அமர்வு கொண்டு சேர்த்தது.
#DMK75
பகுத்தறிவு நோக்கிய நம் பயணத்தை தொடங்கி வைத்தவர் தந்தை பெரியார், #திமுக75_அறிவுத்திருவிழா-வின் முக்கியமான நிகழ்வாக 44 பேச்சாளர்களைக் கொண்டு நடைபெற்ற ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தில் இறுதி அமர்வு பெரியாரியத்தை மையப்படுத்தி, அய்யா புலவர் செந்தலை கௌதமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த அமர்வில், கொள்கை பாதையில் நம் உடன் நிற்கும் அண்ணன் கொளத்தூர் மணி, அவர்கள், அண்ணன் திரு. வாலாசா வல்லவன், சகோதரர் சீனி.விடுதலை அரசு ஆகியோர் பங்கேற்று, ஆழமான கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
பெரியாரின் வழி நின்று பகுத்தறிவுப் பணி தொடர்வோம்!
#DMK75 #Periyar
Another remarkable milestone in Tamil Nadu’s dynamic sports trajectory!
Under the visionary leadership of our Hon’ble Chief Minister Thiru @mkstalin avargal, the Chennai E-Sports Global Championship (CeGC) 2025 is being held at the Jawaharlal Nehru Indoor Stadium, Chennai.
I was delighted to present the trophies to the Winners of the Counter-Strike 2 event which saw participation of 600 players from 30 countries.
We are looking forward to #BGMI at the same venue from 14th to 16th November. The Government of Tamil Nadu takes pride in being the forerunner state in promotion and development of #ESports.
@SportsTN_@iparanthamen@Atulyamisraias #JMeghanathaReddyIAS