இந்தி தேசிய மொழி, கண்டிப்பாக கற்க வேண்டும்
என விமான பயணிகளை கட்டாயப்படுத்துவதா?
அத்துமீறும் படையினர் மீது நடவடிக்கை வேண்டும்!
சென்னைக்கு பயணிப்பதற்காக கோவா விமான நிலையத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் இந்தி தெரியுமா? என்று கே��்டு அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர். ‘ நான் தமிழ்நாட்டுப் பெண். எனக்கு இந்தி தெரியாது” என்று பெண் பொறியாளர் கூறியதை மதிக்காத மத்தியப் படை வீரர்,’’ தமிழ்நாடு இந்தியாவில் தானே இருக்கிறது. இந்தி தேசிய மொழி. வேண்டுமானால் கூகுள் செய்து பாருங்கள். இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி கற்க வேண்டும்” என்று உரத்தக் குரலில் கூறி தமிழ் பொறியாளரை அவமதித்திருக்கிறார். மத்திய பாதுகாப்புப் படை வீரரின் செயல் கண்டிக்கத்தக்கது.
விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரில் பலர், தங்களின் பணி என்ன? என்பதை மறந்து விட்டு, இந்தி தேசிய மொழி, அதைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பயணிகளை அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் அரசியல் கட்சியினர், சட்டமன���ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட அவர்கள் பலமுறை அத்துமீறியிருக்கின்றனர். இந்தி மொழி இந்தியாவின் அலுவல் மொழி மட்டுமே, தேசிய மொழி அல்ல என்ற அடிப்படைக் கூட தெரியாத அவர்களுக்கு மக்கள் பிரதிநிதிகளிடமும், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களிடமும் இதுகுறித்து அறிவுரை கூற என்ன தகுதி இருக்கிறது?
இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்ற பொய்யை காலம் காலமாக சில மத்திய அமைச்சர்களும், மத்திய அரசு அதிகாரிகளும் மீண்டும், மீண்டும் கூறி வருவதன் காரணமாகவே உண்மை தெரியாத மத்திய தொழில் பாதுகாப்பு��் படையினர் இத்தகைய அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பணி வரம்பு என்ன? என்பதையும், இந்தி நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான் என்பதையும் அவர்களுக்கு அவர்களின் உயரதிகாரிகள் புரிய வைக்க வேண்டும்.
கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறிய பாதுகாப்புப் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டு விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
@HMOIndia @CISFHQrs
@aaigoaairport @AAI_Official
@JM_Scindia @MoCA_GoI
#StopHindiImposition
அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்காக தமிழைத் தேடி தமிழினப்போராளி மருத்துவர் அய்யா அவர்கள் மாபெரும் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டார்.
#DrRamadossAyya85#மருத்துவர்அய்யா85#PasumaiThaayagam
பல யுகபுருஷர்களை, வரலாற்று நாயகர்களை நாம் வரலாற்று நூல்களில் படித்துள்ளோம்.
ஆனால், இப்போது நாமே மருத்துவர் அய்யா @drramadoss எனும் ஒரு வரலாற்று நாயகரின் காலத்தில் வாழ்கிறோம்.
இதுவே நாம் பெற்ற பெரும் பேராகும்.
#DrRamadossAyya85#மருத்துவர்அய்யா85#PasumaiThaayagam
அன்று பெரும்பாலோனோர் ஈழத்தமிழர் மீது வெறுப்பை கக்கினர், உலகமே அஞ்சிய அந்த நேரத்தில், ஈழத்தமிழர்களின் போராட்டத்தை ஆதரித்த��ர். டெல்லி வரை சென்று தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்திக் காட்டியவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
#DrRamadossAyya85
#மருத்துவர்அய்யா85
#PasumaiThaayagam
"ஜூலை மாதம்: பிறந்தநாள் என��பது கொண்டாட்டங்களுக்கான காலம் என்பதை விட, கடந்த ஓராண்டில் என்னென்ன சாதனைகளை படைத்தோம், என்னென்ன வாய்ப்புகளை எல்லாம் தவற விட்டோம் என்பதை மதிப்பிடுவதற்கான நாள் ஆகும்."
- மருத்துவர் இராமதாசு அய்யா
#DrRamadossAyya85 #மருத்துவர்அய்யா85 #PasumaiThaayagam
No NLC jobs are given to local people. Not even given to people in Tamil Nadu. Around 299 engineers were recently appointed to NLC through GATE examination. Not a single Tamilian were included in engineers selection.
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
தமிழர்களுக்கு என்.எல்.சியில் வேலை இல்லை.
#NLC இந்தியா நிறுவனத்தி���் எந்தவொரு வேலையும் தமிழ்நாட்டு மக்களுக்கும் கொடுக்கப்படுவது இல்லை. அனைத்து வேலைகளும் வட இந்தியர்களுக்கே கொடுக்கப்படுகிறது.
#என்எல்சியே_வெளியேறு
#PMKAgainstNLCLandGrab
கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்தின் முயற்சியை முறியடிப்போம்.
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab
கடலூர் மாவட்டத்தை பாழாக்கும், வாழ்வாதாரங்களை சிதைக்கும், புவிவெப்பமயமாதலை ஊக்குவிக்கும், தமிழர்களுக்கு வேலை கொடுக்காத #NLC நிறுவனம் வெளியேற வேண்டும்.
25000 ஏக்கர் விவசாய நிலங்களை பறிக்கும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சியை முறியடிப்போம்
#என்எல்சியே_வெளியேறு#PMKAgainstNLCLandGrab