இன்றைய தினம் 18.04.2026, சனிக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருமங்கலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.மணிமாறன் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
மக்களே நம் பலம்! மாற்றமே நம் இலக்கு!
இன்று 07.04.2026,செவ்வாய்க்கிழமை - @arivalayam மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின், மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin பேராதரவு பெற்ற, நத்தம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகிய நான், நமது நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 45-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தேன்.
செல்லுமிடமெல்லாம் தாய்மார்கள் எடுத்த ஆரத்தி, பெரியவர்களின் ஆசி, இளைஞர்களின் எழுச்சிமிகு வரவேற்பு என நத்தம் தொகுதி முழுவதும் உதயசூரியன் ஒளியால் நிறைந்திருக்கிறது.
"வெற்று வாக்குறுதிகள் அல்ல... உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்கள் முன்னேற்றத்திற்காக உழைக்கக் காத்திருக்கிறேன்!"
மறக்க முடியாத வரவேற்பளித்த எனது இரத்தத்தின் ரத்தமான உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!
நத்தம் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் விடியலுக்காகவும் உங்களின் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் அளித்து பெருவெற்றி பெறச் செய்திட அன்புடன் வேண்டுகிறேன்!....
#வெல்வோம்_ஒன்றாக
இன்றைய தினம் 12.04.2026, ஞாயிற்றுக்கிழமை - @arivalayam மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், உங்கள் வீட்டுப் பிள்ளையாக நத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நான், இன்று நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 70-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் உங்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தேன்.
வெயிலையும் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு கிராமத்திலும் நீங்கள் எனக்கு அளித்த உற்சாகமான வரவேற்பும், காட்டிய பாசமும் நெஞ்சை நெகிழச் செய்கிறது.
தாய்மார்களின் ஆசிர்வாதம், பெரியவர்களின் வழிகாட்டுதல், இளைஞர்களின் எழுச்சி என நத்தம் ஒன்றியம் முழுவதும் ஒரு புதிய விடியலுக்கான அறிகுறி தென்படுகிறது.
உங்கள் கண்களில் தெரியும் அந்த நம்பிக்கை வீண்போகாது!..நத்தம் தொகுதியின் முன்னேற்றத்திற்காகவும்,அடிப்படை வசதிகளின் பூர்த்திக்காகவும்,நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காகவும்,உங்கள் பேராதரவை நாடுகிறேன்.
நமது வெற்றிக் சின்னமாம் "உதயசூரியன்" சின்னத்தில் வாக்களித்து, ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தருமாறு இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.
அன்பால் என்னை நனைத்த சொந்தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
வெற்றி நமதே! விடியல் பிறக்கட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக
இன்றைய தினம் 16.04.2026, வியாழக்கிழமை - @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.காதர்பட்சா (எ) முத்துராமலிங்கம் அவர்களை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தேன்!
வாக்களிப்பீர் உதயசூரியன்!.
#வெல்வோம்_ஒன்றாக
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
மக்களின் செல்வாக்கோடு, நத்தம் மண்ணின் மைந்தராகக் களம் காணும் திரு. கே.செல்வகுமார் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம். ஊழலற்ற நிர்வாகம், உயர்தரக் கல்வி, சிறந்த குடிநீர் வசதி - இவை அனைத்திற்கும் ஒரே தீர்வு உதயசூரியன். 🌄
@KKSelvakumaroff@mkstalin@arivalayam@SemMagi@sunnewstamil
இன்றைய தினம் 05.04.2026,ஞாயிற்றுக்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதி, முளையூர் அருள்மிகு.நல்லவராவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததோடு, நத்தம் தொகுதியில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கினேன்!
நத்தம் தொகுதியில், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி, சனநாயகத்தை வேரூன்ற செய்வோம்!
நத்தத்தில் உதிக்கட்டும் உதயசூரியன்!..
இன்றைய தினம் 05.04.2026, ஞாயிற்றுக்கிழமை- மக்களோடு மக்களாக!...
@arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக, நத்தம் சட்டமன்ற தொகுதி, நத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரப் பயணம், ஒரு மாபெரும் மக்கள் திருவிழாவாக அமைந்தது!
வீதிதோறும் திரண்டு வந்து, மலர் தூவியும், ஆரத்தி எடுத்து வரவேற்ற நத்தம் தொகுதி உறவுகளின் அன்பு என்னை நெகிழச் செய்கிறது. உங்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் தெரியும் அந்தப் புன்னகையும், நம்பிக்கையுமே நமது கூட்டணியின் வெற்றியை இப்போதே பறைசாற்றுகிறது.
நத்தம் தொகுதியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த,விவசாயிகள் மற்றும் சாமானிய மக்களின் குரலாக ஒலிக்க, தலைவர் தளபதியின் மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றி தொடர!
"மக்களுக்காக நான்... உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான்!"
உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள். வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் முத்திரையிட்டு, ஒரு பொற்கால ஆட்சியை நத்தம் தொகுதியில் நிலைநாட்டிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்!
வெற்றி நமதே! விடியல் தொடரட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக
இன்றைய தினம் 29.03.2025, ஞாயிற்றுக்கிழமை - திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதியில், @arivalayam தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நத்தம் மற்றும் சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் சிறப்பாக நடந்து முடிந்தது.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நத்தம் தொகுதி வெற்றி வேட்பாளராக, கூட்டணி கட்சி தோழர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்!
மேலும், மாண்புமிகு தமிழக முதல்வர், @mkstalin அவர்களின் 200 + தொகுதிகள் வெல்லும் கனவு மெய்ப்பட, நத்தம் சட்டமன்ற தொகுதியை வெற்றி தொகுதியாக்கிட, முழு வீச்சில் பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொண்டேன்!
இந்தக் கூட்டத்தில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐயா எம்.ஏ.ஆண்டி அம்பலம், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகப் பொருளாளர் திரு.விஜயன், நத்தம் மத்திய ஒன்றிய செயலாளர் திரு.சேக் சிக்கந்தர் பாட்சா, நத்தம் தெற்கு ஒன்றிய செயலாளர், திரு.ரத்தினகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்!
தலைமை பண்பு என்பது அனைத்து மக்களின் உணர்வுகளை மதிப்பது அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களின் அன்பைப் பெற்றவர் எங்களின் இனமான காவலர் சமநீதி போராளி நத்தம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @KKSelvakumaroff@DMKITwing@mkstalin@Udhaystalin