வெள்ளை சர்க்கரை விலை உயர்வின் பாதிப்பைத் தடுக்க
ரேஷன் கடைகளில் 2 கிலோ கூடுதலாக வழங்க வேண்டும்:
கரும்பு கொள்முதல் விலையை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்!
தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இல்��ாத வகையில், சீனி எனப்படும் வெள்ளை சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை அதிகரித்து ரூ.75 முதல் ரூ.80 என்ற அளவை எட்டியுள்ளது. இது அடுத்து வரும் மாதங்களில் மேலும் உயர்ந்து தீப ஒளி திருவிழா காலத்தின் போது ரூ.100 ��ன்ற உச்சத்தை அடையக்கூடும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒருபுறம் கரும்பு விவசாயிகளுக்கு போதிய கொள்முதல் விலை கிடைக்காத நிலையில், இன்னொருபுறம் மக்களை பாதிக்கும் வகையில் சர்க்கரை விலை உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.
எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வகையில், வாகன எரிபொருளில் அதிக அளவில் எத்தனால் கலப்பதை மத்திய அரசு ஊக்குவிப்பதாகவும், அதற்காக சர்க்கரை ஆலைகள் வெள்ளை ���ர்க்கரை உற்பத்தியை விட மொலாசஸ் எனப்படும் கரும்பு வெல்லப்பாகு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் தருவது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை இருப்பதை மறுக்க முடியாது.
ஆனால், இதையும் தாண்டிய முதன்மைக் காரணம், தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கரும்பு சாகுபடி பரப்பு அண்மைக்காலங்களில் மிக வேகமாக குறைந்து வருவது தான். தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டில் 58.85 லட்சம் ஹெ��்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, 2024-ஆம் ஆண்டில் 54.49 லட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது.
தமிழ்நாட்டில் 2020-ஆம் ஆண்டுக்கு முன் 15 லட்சம் ஏக்கராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு 2025-ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் ஏக்கராக குறைந்து விட்டது. அதேபோல், தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டில் 2.8 கோடி டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி 2024-ஆம் ஆண்டில் 1.59 கோடி டன்னாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் கரும்புக்கான உற���பத்திச் செலவு அதிகரித்து விட்டதும், அதற்கு ஏற்ற வகையில் கரும்பின் கொள்முதல் விலை உயர்த்தப்படாததும் தான். இந்த நிலை மாற்றப்பட்டு சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டால் தான் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து விலை குறையும்.
ஒரு டன் கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை, மொலாசஸ், சக்கை உள்ளிட்ட அனைத்து துணைப் பொருள்களின் வாயிலாக சர்க்கரை ஆலைகளுக்கு ரூ,21 ஆயிரத்திற்கும் கூடுதலாக வருமா���ம் கிடைக்கும் நிலையில், சர்க்கரை ஆலைகள் ஒரு டன் கரும்புக்கு ரூ.5000 கூட கொள்முதல் விலையாக வழங்க மறுப்பதும், அதற்கு ஆட்சியாளர்கள் துணை போவதும் அநீதியாகும்.
ஒரு டன் கரும்பில் சராசரியாக ஒரு குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால், ஒரு குவிண்டால் சர்க்கரையின் மொத்த விலை ரூ.7000 ஆக இப்போது உயர்ந்துள்ள நிலையில், அதே விலை ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக வழங்கப்��ட வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் கிடைக்கும் துணை பொருள்கள் மூலம் ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானம் இலாபமாக இருக்கும். ஆனால், இயல்பாக வழங்க வேண்டிய விலையில் பாதிக்கும் குறைவாக ரூ..3383 தான் கொள்முதல் விலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை குறைந்தபட்சம் ரூ.5000 என்ற அளவுக்காவது அதிகரிக்க வேண்டும். அப்போது தான் கரும்பு சாகுபடி பரப்பும், சர்க்கரை உற்பத்தியும் அதிகரிக்கும்.
இவை ஒருபுறமிருக்கு சர்க்கரை விலை உயர்வால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை குறைப்பதற்காக பொங்கல��� திருநாள் வரை நடப்பு மாதம் தொடங்கி 6 மாதங்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு தலா 2 கிலோ கூடுதல் சர்க்கரை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
”நீர���வளம் தான் நமது சொத்து.. அது தான் சாமி நமக்கு”.. இயற்கை கொடுத்த வளத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் - பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி
CMvijay | Vijay Speech | TNAssembly 2026 | TVK | JCDprabhakar
#NewsTamil24x7 #SowmiyaAnbumani
எண்ணூர் கழிமுகம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து கிடப்பது குறித்து
விசாரணை; மீனவர்களுக்கு இழப்பீடு தேவை!
சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பதால் அப்பகுதி மீனவர்கள் பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய்கள் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் அனல் மின்ந��லையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் இருந்து வெளியேற்றப்படும் வேதிக்கழிவுகள் கடலில் கலக்கவிடப்பட்டது தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கழிவுகளை வெளியேற்றிய நிறுவனங்களின் செயல்பாடுகளும், அதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளின் அலட்சியமும் கண்டிக்கத்தக்கவை.
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கும் நிகழ்வுகள் ஏற்கனவே பலமுறை நிகழ்ந்த���ள்ளன. ஆனாலும், இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க அரசும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை மன்னிக்க முடியாது. இதே பகுதியில் உள்ள கன்னிகைப்பேர் பகுதியில் செயல்பட்டு வந்த கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகாவது சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விழித்துக் கொ��்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டிருக்காது.
எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரங்களில் முதன்மையானது கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடிப்பது ஆகும். மீன்கள் செத்து மித��்பதால் அடுத்த சில வாரங்களுக்கு அந்தப் பகுதியில் மீன் பிடிப்பது சாத்தியமல்ல. இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும். இதற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து தண்டத் தொகை வசூலித்து மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றி அப்பகுதி���ில் தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
நெம்மேலியின் கடைசி ஓதம் (Nemmeli’s Last Tide)
பல்லாயிரம் ஆண்டுகால இய���்கைத் தேர்வால் உருவான கோவளம்-நெம்மேலி ஈர நிலம் 237 வகை பறவை இனங்களுக்கும், 233 வகை தாவர இனங்களுக்கும், 16 மீனவக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கும் வாழ்விடமாய் இருக்கிறது. கோவளம் அருகே முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு வரை சுமார் 26 கி.மீ. நீளும் இந்தக் கடலோர ஈரநிலத்தில் கடல் ஓதம் தினமும் இருமுறை நுழைந்து வெளியேறுகிறது. அதுவே இந்த நிலப்பரப்பின் இத��த் துடிப்பு.
ஆனால், இந்த இயற்கையான ஓதச் சுழற்சியையும் (Tidal influence), நன்னீர்-உவர்நீர் சமநிலையையும் சீர்குலைக்கும் வகையில் மாமல்லன் நன்னீர்த் தேக்கத் திட்டம் உள்ளது.
“நெம்மேலியின் கடைசி ஓதம் - Nemmeli's Last Tide" இந்த மண்ணின் குரலையும், அதை நம்பி வாழும் மனிதர்கள், பறவைகள், தாவரங்களின் நிலையையும் பதிவு செய்யும் ஆவணப்படம்.
இந்த ஆவணப்பட வெளியீட்டின் மூலம், நெம்மேலி ஈரநிலத்தை சிதைத்து அமைக்கப்ப��்டு வரும் தவறான 'மாமல்லன் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை' தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல்லுயிர்ப் பெருக்கமும் இயற்கை வளமும் நிறைந்து, ஏராளமான மீனவர்களின் வாழ்வாதாரமாகத் திகழும் இக்கடலோர ஈரநிலத்தை அரசு உடனடியாகப் பாதுகாக்க வேண்டும்.
நெம்மேலியின் ஓதம் தொடரட்டும்... 🌊
#SaveNemmeli #ScrapMamallanReservoir
————-
Nemmeli's Last Tide
Shaped by thousands of years through natural selection, the Kovalam-Nemmeli Coastal wetland complex is home to 237 species of birds, 233 species of plants, and thousands of fishermen from 16 fishing villages. Stretching nearly 26 km from Muttukadu to Kokilamedu, this coastal wetland sees the tide enter and withdraw twice a day, and that is the heartbeat of this ecosystem.
But the Mamallan freshwater reservoir threatens to disrupt this natural tidal cycle and the delicate freshwater-saltwater balance that sustains it.
"Nemmeli's Last Tide" is a documentary that records the voice of this land, and the state of the plants, birds, and people who depend on it.
Through the release of this documentary, we urge the Tamil Nadu government to immediately scrap the flawed Mamallan freshwater reservoir project, which is being built at the cost of destroying the Nemmeli wetland. The government must act now to protect this coastal wetland, rich in biodiversity and natural resources, and the livelihood of countless fishing communities who depend on it.
Let Nemmeli's tide continue... 🌊
#SaveNemmeli #ScrapMamallanReservoir
"ஒண்ணு கட்டணும் இல்ல கட்டக் கூடாது"
மேகேதாட்டு அணை தொடர்பாக நேற்று (07.08.2026) தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் விஜய் மற்றும் பாமக உறுப்பினர் சௌமியா அன்புமணி பேசியது அதிக கவனம் பெற்றது.
#TNAssembly#MekedatuDam#CMVijay
News Update | வ��ழ்த்துகள் சார்
மீண்டும் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி
Anbumani Ramadoss | PMK | Kalaipuli Thanu | 01 AUG 2026
#Producer #KalaipuliThanu #Arulpathi
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க முன்னெடுப்பு.. கையெழுத்து இயக்கத்தை அன்புமணி, எம்எல்ஏ செளமியா தொடக்கி வைப்பு
Chennai | PMK | Sowmiyaanbumani | 19 July 2026
#Newstamil24x7#Anbumaniramadoss
வந்தேமாதரம் பாடல் எந்த மதத்தை குறிக்கின்றது... இதில் எங்கே மதவாதம் உள்ளது.. தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்கள் அனைவரும் இவருக்கு நண்பர்களா??? எதிர்த்து ஒரு குரல் கேட்பதில்லை.. தேசத்தை ஆ��ும் கட்சிக்கு தமிழகத்தில் அரசியல் செய்ய தெரியவில்லை.. வந்தே மாதரம் எங்கள் சுதந்திர முழக்கம்.. வந்தே மாதரம் என்றால் தாய் நாட்டுக்கு வணக்கம் என பொருள்.. இவரின் இ��்த மதவாத பிரிவினை கருத்துக்கு இவரை கைது செய்ய வேண்டும்..
“இங்க போடுற சத்தம் டெல்லிக்கு கேட்கணும், டெல்லி நமக்கு ஆதரவு கொடுக்க மாட்டாங்க, கர்நாடாகவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க.. டெல்லியில் சென்று நாம் போராட வேண்டும்” - மேகதாது அணை திட்டத்தை தடுக்கக் கோரி கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பாமக தலைவர் அன்புமணி பேச்சு
#Kumbakonam | #PMK | #AnbumaniRamadoss | #MekedatuDam | #PolimerNews
"மேகதாது அணை கட்டினால் குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காது"
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி ஆறு தமிழ்நாட்டில் நுழையும் பிலிகுண்டுலுவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்
அரசு கேபிள் சேவையில் பாலிமர், நியூஸ் தமிழ் உள்ளிட்ட செய்தித் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்!
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும் ஒளிபரப்புச் சேவையிலிருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில��� கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல.
பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24x7, தமிழ் ஜனம் ஆகிய செய்தித் தொலைக்காட்சிகள் உள்பட அனைத்து செய்தித் தொலைக்காட்சிகளும் அரசு கேபிள் டிவி மூலம் தடையின்றி ஒளிபரப்பப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
@CMOTamilnadu
பா.ம.க தலைவர் அன்புமணியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த பெண்..!
மக்களுடன் மக்களாக தரையில் அமர்ந்து அந்த 15 லட்சம் ரூபாயை நான் தருகிறேன் என வாக்குறுதி அளித்த அன்புமணி.. கைத்தட்ட��� ஆரவாரம் செய்த மக்கள்..
#Tiruvannamalai | #PMK | #Anbumani | #Woman | #People | #PolimerNews