VGP Golden Beach வாசலில் ஒருத்தர் நிற்பார். அவரை யார் என்ன சொன்னாலும் எந்த reaction இல்லாமல் அப்படியே நிற்பார்.
அதுபோல் சட்டசபையில் இன்று இருக்கப் போவது யார்?
குறிப்பு - அவர் மட்டும்தான் ‘கோட்’ போட்டிருப்பார்.
இதை இங்கே குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளேன் . . . சில ஆண்டுகளுக்கு முன்பு வரை . . . ஆளுநரே இந்தக் கொடியை ஏற்றி வந்தார். இந்த நடைமுறையை மாற்றுவதற்காகப் போராடி, அனைத்து முதலமைச்சர்களுக்கும் இந்த உரிமையைப் பெற்றுத் தந்ததற்காக நான் கலைஞர் கருணாநிதியைப் பாராட்ட விரும்புகிறேன்
- எம்.ஜி.ஆர், (1977 சுதந்திர தின உரை)
ஆதாரம் : அண்ணா, ஆகஸ்ட் 16 1977
🔥 10 நிமிடங்களில் 2 நாள் பிரச்சாரம் காலி!
தோழர் @APunnaivalavan
கடந்த இரண்டு நாட்களாக தவெக கட்டியெழுப்பிய Fake Narrative அடிச்சு நொறுக்கியிருக்கார்....
சத்தம் அதிகமாக இருந்ததாலே பொய் உண்மையாகிவிடாது என்பதை, தரவுகளுடனும் அரசியல் உண்மைகளுடனும் நிரூபிக்கும் உரை.
பார்த்துவிட்டு கருத்து சொல்லுங்கள். 🔥
வடசென்னை மக்களின் உணர்வாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் @DrKalanidhiV அவர்களது மகன் V.K.சித்தார்த் - S.ஆஷ்ரயா இணையரின் சுயமரியாதை திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினோம்!
மணமக்களை வாழ்த்திய அதேவேளையில், தந்தை பெரியார் காலம்தொட்டு, சுயமரியாதை திருமண மேடைகளை அரசியல் - பகுத்தறிவூட்டும் மேடைகளாக மாற்றியதுபோல், கழகத்தினருடனான அரசியல் உரையாடல் நிகழ்ந்தேறியது.
இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் பெருகிட வேண்டும்! வீடுதோறும் மீண்டும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும்!
ஏப்பா VRS, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரன் மகனாக இல்லாமல், சாமானியனாக எந்த பின்புலமும் இல்லாமல் வந்திருந்தால் விஜய் இவ்ளோ பெரிய நடிகராக வந்திருப்பாரா? 10 குப்பை பட வாய்ப்புகள் எஸ்ஏசி மகன் என்ற காரணத்திற்கு தானே கிடைத்தது! அது Sonஆதனம் இல்லையா?
அப்புறம் உங்க கூட்டணி தலைவர் @RahulGandhi ஐந்தாம் தலைமுறை வாரிசு! இவர கூட வச்சிக்கிட்டு Sonஆதனத்தை பற்றி நீங்க பேசலாமா?
சாதரண மக்களை சுரண்டி பிழைக்கும் லாட்டரி குடும்ப தயவில் ஆட்சி நடத்திட்டு நீங்க பெரியார், அண்ணா பெயரை சொல்ல தகுதி இருக்கா?
நிர்வாக நடைமுறைகளை எளிதாக்குவது என்ற பெயரில், தனியார் பள்ளிகளுக்கு எளிதாக அனுமதியும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான NOC சான்றிதழும் தாராளமாக வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளி சங்கங்கள் இதைக் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் கல்விக் கட்டணத்தை இஷ்டம் போல உயர்த்தி கொள்ளலாம் என்ற ஒற்றை காரணம் தான்.
2011 ஜெயலலிதா ஈகோ காரணமாக சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்திக் கூடாது ,எல்லாருக்கும் சமமான கல்வி சென்று சேர்ந்துவிட கூடாது என்று வரையறை இல்லாமல் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் கொடுத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார்.
அது மாநிலக் கல்வி முறைக்கு மாற்றாக மத்தியக் கல்வி முறையை நோக்கி நகரும் ஒரு பெரிய சந்தை உத்தியாக மாறியது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் "தமிழ்நாடு எப்போதும் இருமொழிக் கொள்கையில்தான் உறுதியாக இருக்கும் ஒன்றியஅரசின் புதிய கல்விக் கொள்கையை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம்" என்று ஊடகங்களில் பேசி வந்தார்.ஆனால், மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளை விட, சிபிஎஸ்இ (CBSE) பள்ளிகள் நேரடியாக மத்திய அரசின் பாடத்திட்டம் மற்றும் கொள்கைகளின் கீழ் வருகின்றன.
எனவே, மாநில அரசு கொள்கை அளவில் NEP-ஐ எதிர்த்தாலும், மாநிலத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளின் எண்ணிக்கை தாராளமாக அதிகரிக்கும் போது, புதிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் (உதாரணமாக: பொதுத்தேர்வு முறைகள், மும்மொழி்க் கொள்கைக்கான அடித்தளம் போன்றவை) தானாகவே சந்தை தேவையின் மூலம் உள்ளே நுழைந்து விடுகின்றன.
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த Fee Determination Committee உள்ளது. இதன் மூலம் ஒரு வரம்பிற்கு மேல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க சட்டப்பூர்வ வழி உள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகள் தன்னாட்சி பெற்ற மத்திய வாரியத்தின் கீழ் வருவதால், மாநில அரசின் இந்த நேரடிக் கட்டண உச்ச வரம்புக்குள் அவை முழுமையாகக் கட்டுப்படுவதில்லை. உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் என்ற பெயரில் அவர்கள் தன்னிச்சையாகக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய முடிகிறது.
இதனால், மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்தி வரும் பல தனியார் நிறுவனங்கள், மாநில அரசின் கட்டணக் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்கவும், அதிக லாபம் ஈட்டவும் தங்களது பள்ளிகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றவோ அல்லது புதிய சிபிஎஸ்இ கிளைகளைத் தொடங்கவோ ஆர்வம் காட்டுகின்றன. இதற்கு அரசு எளிதாக அனுமதி அளிப்பது அவர்களுக்குக் கூடுதல் சாதகமாக முடிகிறது.
கொள்கை அளவில் காமராசரின் கல்விப் புரட்சியைப் பேசுவதாகக் கூறும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, நடைமுறையில் கட்டணக் கட்டுப்பாடற்ற, மத்திய அரசின் கொள்கைகளுக்கு மறைமுகமாகத் துணை போகிற சிபிஎஸ்இ பள்ளிகளுக்குச் சிவப்புச் கம்பளம் விரிப்பது ஏன்? இது தேர்தல் காலத்து சமூக நீதி முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு, கார்ப்பரேட் கல்வி முதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஒரு மறைமுக அஜெண்டா என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
இந்த நிகழ்வு கல்வி வணிகமயமாதலை சட்டப்பூர்வமாக எளிதாக்குவதிலும், மாநிலத்தின் கல்வி இறையாண்மையை மறைமுகமாகப் பலவீனப்படுத்துவதிலுமே போய் முடிகிறது. எளிய மக்களுக்குக் தரமான கல்வி கிடைக்க அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவதே உண்மையான தீர்வாக இருக்க முடியும்; மாறாக, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்குத் தாராளமாக அனுமதி வழங்குவது சாமானிய பெற்றோர்களின் பொருளாதாரச் சுமையைக் கூட்டவே செய்யும்.
#CBSE
45 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் மாதம் தான் தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டது
அதற்கு சற்றும் குறைவில்லாத நிகழ்வு தான் தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட திராவிட மாடல் அரசின் "நான் முதல்வன்" திட்டத்தின் தகவல் அழிப்பும்
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பல லட்சம் மாணவர்களின் சாதனை வரலாற்று தகவல்களை அழிப்பதன் மூலம் அடுத்த தலைமுறை இதை மறந்து ரசிக வெறியில் சுற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பா?
நம் தலைமுறையின் வளர்ச்சியை பொறுக்காத சனாதன சக்திகளின் எண்ணத்தை இது போன்ற செயல்கள் மூலம் நிறைவேற்றும் முகமாக மாறுகிறதா தவெக அரசு
தூய சக்தி என்று பெருமை பீத்திக்கொண்டு காவி சக்தியின் சேட்டை செய்ய நினைக்கிறதா?
நாளைய தலைமுறையினருக்கு வரலாறாக, முன் உதாரணமாக, சாதித்த தமிழர்களின் ஆவண பதிப்பை அழிக்கும் நாசகார சக்திகளின் வேலையை நிறுத்தி விட்டு, நல்ல ஒரு அரசாக செயல்பட முதல்வர் வழி காட்ட வேண்டும்.
நன்றி.!
இந்த அரசு வாயைத் திறந்தாலே பொய். 280 பக்கங்கள் கொண்ட சிஏஜி அறிக்கையை முழுமையாகப் படித்தார்களா என்பதே சந்தேகம். அதேபோல், இந்த வெள்ளை அறிக்கையைத் தயாரிக்க உதவியதாகக் கூறப்படும் அதிகாரிகளில் எத்தனை பேர் அந்த சிஏஜி அறிக்கையைப் படித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை.
2023-24ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி (CAG) அறிக்கை, மத்திய அரசால் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முக்கிய அறிக்கை. மொத்தம் 280 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், இன்று சிலர் ‘தமிழ்நாட்டில் இது நடக்கவில்லை, அது நடக்கவில்லை’ என்று கூறும் பல அம்சங்கள் உண்மையில் செயல்படுத்தப்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சியில் வருவாய் வசூல், வரி நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.”
@TThenarasu@TRBRajaa@TimonTheFire@RamyaDpalani@arivalayam@Udhaystalin
Fiery Speech ப்ரோ 👌🔥🔥
சகோதரர் @APunnaivalavan avl, பேசிய இந்த 10;30 நிமிட காணொளி மிகவும் முக்கியமானது , தவெக ஆச்சரியக்குறி கும்பல் இந்த இரண்டு நாட்களா பரப்பு வந்த அத்தனை Fake Narrative-ம் உடைச்சு விட்டுட்டார்..!
#TN#TVKVijayFails#TNNews#TamilNadu
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தவெகவின் ஒரு மாத ஆட்சியைப் பார்த்து வியந்து, இன்னும் எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள், அடுத்த சனிக்கிழமை யார் யார் இணைகிறார்கள், எந்தெந்த மாதம் யார் யார் இணைகிறார்கள் என்பதை அறிந்து இடைத்தேர்தலை மொத்தமாக நடத்த முன்வர வேண்டும்.
குதிரைபேர அரசியலில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வாய்ப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தித் தந்த தவெகவை இந்நேரத்தில் நினைவு கூர்வோம்.
"Naan Mudhalvan" renamed as TN Skill Corporation. This is unacceptable & done out of political vendetta by TVK
The most successful scheme of DMK govt which trained 41 lakh students & ensured 70000 job placements till 2024 especially 100 + UPSC jobs till 2025
Will he change the title of "Amma Canteens"?? Can he restore Chennai Central's name?? Can TVK demolish overbridges constructed by DMK across Chennai??
நடிகர் விஜய் @actorvijay மற்றும் மரியவில்சன்கள் மாதிரி திறமையில்லாத தற்குறி கையில் தமிழ்நாடு நிதித்துறை சிக்கி தமிழ்நாடு மோசமாக வீழ்ச்சி அடைந்தாலும் பரவாயில்ல ஆனால் திமுக அதிமுக சேர்ந்து எந்த முடிவும் எடுத்துவிடக்கூடாது என்று பதறும் ஆர்கேராதாகிருஷ்ணன் மற்றும் தமிழர் வெறுப்புள்ள பத்திரிக்கையாளர்களே இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் இவர்கள் கூட்டணி சேர்ந்த போது நீங்கள் எங்கே போயிருந்தீங்க? அப்போ ஏன் பதறல? ஆர்கே சொந்த மாநிலமான கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எதிர்த்து அரசியல் செய்கிறார்கள். தேசிய அளவில் கூட்டணி சேர்ந்த போது இந்த இரட்டை வேடதாரர்கள் வாய் திறக்கவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த ரேவந்த் ரெட்டியை தெலங்கானா முதலமைச்சராக காங்கிரஸ் கொண்டு வந்த போது மாணிக்டாக்கூர் @manickamtagore வாய் திறக்கவில்லையே! எவ்ளோ பெரிய அயோக்கியத்தனம்!
நிதிஷ்குமார் இந்தியா கூட்டணிக்கு வந்தாலும் எதுவும் சொல்லமாட்டார்கள் NDA க்கு போனாலும் எதுவும் சொல்லமாட்டார்கள்!
மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட்களை துடைத்து எறிந்த மம்தாவோடு டெல்லியில் கம்யூனிஸ்ட்காரர்கள் கூட்டணியில் இருப்பார்கள். அதுக்கெல்லாம் நம்ம சண்முகம் @tncpim வாய் திறக்கமாட்டார். அம்பேத்கர் வாரிசு என்று சொல்லும் திருமாவளவன் @thirumaofficial பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா கூட்டணியிலும் ஆதாயம் அடைந்துள்ளார். அப்போதெல்லாம் கொள்கைகளை சேட்டு கடையில அடகு வைத்திருந்தாரா? இன்னைக்கு சோபா வாங்கிட்டு திமுக அதிமுக சேரப்பாக்குதுன்னு பொங்குவது எந்த வகை நியாயம்?
இதுல இன்னொரு முட்டு stealing the mandate @Ahmedshabbir20
118 தாங்க தமிழ்நாடு mandate! 106 mandate இல்ல! இங்க நடப்பது குதிரை பேரம் தமிழ்நாடு மக்கள் அதுக்கா ஓட்டு போட்டாங்க? கேவலமா குதிரை பேரம் நடக்கலாம் ஆனா திமுக அதிமுக சேரக்கூடாது ஏன்னா இவரோட ஓனருக்கு திமுக கலைஞர் என்றால் வன்மம்!
கலைஞர், எம்ஜிஆரை விட நெருங்கிய நண்பர்கள் இந்திய அரசியலில் யாராவது உண்டா? அவர்கள் இருவரை விட மேன்மையானவர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா? அவங்க இரண்டு பேரும் இருக்கும் போது பிஜூபட்நாயக் முயற்சியில் இணைப்பு ஏற்பட வாய்ப்பு இருந்த போது அன்றைய ஆர்கே ராதாகிருஷ்ணன்கள் பார்ப்பன மார்க்சிஸ்ட்கள் பதறிப்போய் தான் கெடுத்துவிட்டிருப்பார்கள்!
தமிழ்நாட்டை வீழ்த்த துடிக்கும் அயோக்கியன்கள் தான் இவர்கள் சேர்ந்துவிடக்கூடாது என்று கூப்பாடு போடுகிறார்கள். மற்றபடி தமிழ்நாடு நலன் என்பது இவர்களின் வெத்து உருட்டு. உங்கள் எண்ணத்தில் நிச்சயம் மண்விழும். திமுக என்கிற மாபெரும் இயக்கத்தை வீழ்த்த அரசியல் செல்வாக்கு உள்ள ஆளுமைகளாலேயே முடியாது இந்த அன்னக்காவடிகள் என்ன செய்வார்கள்?