இந்திய இசையின் இனிமையான குரலாக, பல தலைமுறைகளைக் கடந்து, கோடிக்கணக்கான இதயங்களை வசீகரித்த பின்னணிப் பாடகி, எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவு, இந்திய இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
இசையை உயிராக நேசித்த அந்த மாபெரும் கலைஞருக்கு, எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
கரூர் மாவட்டத்தில் 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள விவகாரத்தில் உண்மை நிலையை, சட்டரீதியாகப் புரிந்துகொள்வது அவசியம்.
இங்கு பேசுபொருளாகியிருக்கும் அனைத்து நிலங்களும் "திருக்கோவில் சொத்துகள்" என்றல்ல; பெரும்பாலானவை இனாம் நிலங்கள் தொடர்பானவை. ஆலயங்களில் பணியாற்றிய அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு விஜயநகரப் பேரரசு மற்றும் பிற ஆட்சியாளர்களால் மானியமாக வழங்கப்பட்ட இனாம் நிலங்கள், பின்னர் தமிழ்நாடு இனாம் (ரத்து மற்றும் ரயத்வாரியாக மாற்றுதல்) சட்டம், 1963 (Act 30 of 1963)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு ரயத்வாரி பட்டாக்கள் வழங்கப்பட்டன.
இந்த பட்டாக்களை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல தசாப்தங்களாக நிலங்களை சாகுபடி செய்து, பராமரித்து, சட்டப்பூர்வமாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், கடந்த திமுக ஆட்சியில், இந்த பட்டா பெற்ற இனாம் நிலங்களும் கோயில் நிலங்களுடன் சேர்த்து பூஜ்ஜிய மதிப்பில் வகைப்படுத்தப்பட்டதால், அவற்றைப் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கடன் பெறுதல், சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
தற்போதைய தவெக அரசின் நடவடிக்கை, சட்டப்படி ஏற்கனவே ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் மீதான பதிவுத் தடையை நீக்கி, அந்த விவசாயிகளின் சட்டப்பூர்வ உரிமையை மீட்டெடுப்பதற்கானதாக இருந்தால், அதனை வரவேற்க வேண்டியதே தவிர, அதை கோவில் நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கும் நடவடிக்கையாக சித்தரிப்பது தவறான புரிதலை ஏற்படுத்தும்.
அதே நேரத்தில், உண்மையான திருக்கோவில் சொத்துகள் எதுவும், சட்டவிரோதமாக தனியாருக்கு மாற்றப்படக் கூடாது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. கோவில் சொத்துகளை பாதுகாப்பதும், சட்டப்படி உரிமை பெற்ற விவசாயிகளின் உரிமையை பாதுகாப்பதும் இரண்டுமே அரசின் பொறுப்பாகும்.
எனவே, சட்டப்பூர்வமாக ரயத்வாரி பட்டா பெற்ற இனாம் நிலங்களின் உரிமையை உறுதி செய்யும் தமிழக அரசின் நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல ஆண்டுகளாக நிலவி வந்த பதிவுச் சிக்கல்களையும் தீர்க்கும் ஒரு முக்கியமான நடவடிக்கை.
இன்றைய தினம், 2026–27 விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாமில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பத்திரிகைத் துறையின் அடிப்படைக் கடமைகள், சமூகப் பொறுப்பு மற்றும் ஜனநாயக விழிப்புணர்வை, இளம் தலைமுறையினரிடம் வளர்க்கும் விகடன் குழுமத்தின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சி முகாம் வாயிலாக, பத்திரிகைத் துறை மட்டுமின்றி, கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல சாதனையாளர்கள் உருவாகியிருப்பது விகடன் குழுமத்தின் சாதனை.
நூற்றாண்டு காலமாக தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையையும், விழிப்புணர்வையும், புத்தகங்கள் படிக்கும் கலாச்சாரத்தையும் வளப்படுத்தி வரும் விகடன் குழுமத்திற்கும், அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பா. சீனிவாசன் அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். சமூக அக்கறையுடன் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் விகடனின் பணி தொடர்ந்து சிறக்கட்டும்.
@JuniorVikatan@vikatan (1/2)
நாளை, ஜூலை 12, மாலை 4 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெறும் போதை இல்லா தமிழ்நாடு மாநாட்டில் உங்களை அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வாருங்கள்… வரலாற்றை ஒன்றாக உருவாக்குவோம்!
பொள்ளாச்சியில் சந்திப்போம்! 🙏
@annamalai_k@Senthil_KPND@vasanthrajan_k@WTLFoundation
#DrugFreeTamilNadu #Pollachi #WeTheLeaders #Annamalai
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து போரிட்ட மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
விடுதலை வேள்வியில் தன்னுயிரையே தியாகம் செய்த மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும்.
The opponents of this #TVK Government need someone more charismatic than #CMVijay to dethrone him..
Even that is possible after a minimum of one complete term or even more..
As of now,there is no one to do it in TN political arena
His movie stardom combined with his dramatic cinema style speeches is connecting very well with the people
They are enjoying it
Right or Wrong is a different perspective
But this is the hard reality
Regular Political replies aren't going to affect him a tiny bit...
🤷♂️🤷♂️
திஜகவை சார்ந்தவர்களுக்கு வெட்கமே இல்லை.
கோவை பாஜக Spiritual அணியை சேர்ந்த பாபு என்பவர் அண்ணாமலை மணல் திருடியதாகவும் அதனால் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஆபத்து என்றும் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரை விசாரித்த குழு அண்ணாமலை மீது எந்த தவறும் இல்லை
அவர் தனது வயலுக்கும் நொய்யல் ஆற்றிற்கும் இடைப்பட்ட இடத்தில் மண் அரிப்பை தடுக்கவும் & மரம் நடவும் ₹10,000 முன்பணம் செலுத்தி அரசிடம் உரிய அனுமதி வாங்கியே அந்த வேலைகளை நிறைவேற்றியுள்ளார்.
என ரிப்போர்ட் அளித்து செருப்பால் அடித்துள்ளது
தமிழகம் முழுவதும், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட வலியுறுத்துவோம்.
சென்னை நகரின் சில பகுதிகளில் நாம் மேற்கொண்ட கள ஆய்வின்படி, பல டாஸ்மாக் மதுக்கடைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாகவே இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், இது போல, பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ளாக இயங்கும் டாஸ்மாக் கடைகளை மூட, மக்கள் நேரடியாகவோ, அல்லது நமது We the Leaders அமைப்பின் மூலமாகவோ, மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுப்போம். மது அரக்கனை ஒழிக்க ஒன்றிணைவோம். தமிழ்நாட்டைக் காப்போம்.
மாறுவோம், மாற்றுவோம்!
#WTL_WhiteBandMonth