வேண்டா வெறுப்பாய் வாழ்வதை போல் வாழ்கிறேன்
வேதனைகளை அனைத்தையும் மறைத்துவைத்து நோகிறேன்
வெறுமையானவனாய் உணர்கிறேன்
வெறும் மனிதனாய் உலா வருகிறேன்
வேதனைகளை அதிகமாய் வெளிக்காட்ட கூடாது என சொல்கிறார்கள்
வேதனைகளை வெளிக்காட்டாது வாழ்வதே பெரிய வேதனை என்று சொல்கிறேன் நான்
#அரைகுறைகவிஞன்சிவா
"தயக்கம்" தான் உன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையே...
எந்த ஒரு முயற்சியிலும் "தயங்கி" மட்டும் நிற்காதே...
"தயங்காமல்" இறங்கு முயற்சியில் தாரளமாக கிடைக்கும் "வெற்றி" உனக்கு...!✍️
#இனிய_காலை_வணக்கம்
சந்தோஷத்தை மற்றவர்களிடமிருந்து கிடைக்குமென நினைத்து காத்திருப்பதை விட...
நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது எவ்வளவோ மேல்...
கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களை அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள்...!✍️
#இனிய_காலை_வணக்கம்
ரயிலில் முன் பக்க இருக்கையில்
யாரோ யாரிடமோ
தொலைபேசியில்
மிகவும் மெல்லிய குரலில்
சொல்லிக்கொண்டிருந்தாள்:
" நான் மனதறிந்து
யாருக்கும் எந்தத் துரோகமும்
செய்ததில்லை;
என் கணவனைத் தவிர"
மனுஷ்ய புத்திரன்