எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
(விஜய் ரசிகர்கள் நேரே கடைசி வரியைப் படிக்கலாம்.)
முதன்முதலில் நீட்டை காங்கிரஸ் கொண்டு வந்தபோது “இது கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதிக்கும்” என கலைஞர் கண்டித்ததால் “நீட் நடத்துவதும் நடத்தாததும் மாநிலங்களின் உரிமை” என பணிந்து சட்டத்தை மாற்றியது காங்கிரஸ்.
பின்னர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது நீட்டை ஏற்றுக் கையெழுத்திட்டார், அப்போது அதிமுகவில் உளவாளியாக இருந்த RSS கைக்கூலி மாஃபாய் பாண்டியராஜன்,
பிறகு ஜல்லிக்கட்டு போராட்டம் வந்தபோதே நீட் என்பது மாபெரும் அநீதி என போராட்டத்தை ஆரம்பித்தார் MKS. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசைதிருப்ப இப்படிச் செய்கிறார் என வழக்கம்போல் நம்மூர் திருடர்கள் இட்டுக்கட்டினார்கள். மாடு பிடிப்பதில் ஜெயித்துவிட்டு, படிப்பதில் தோற்றோம்.
பிறகு பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக பாஜகவை நீட்டை ஒழிக்கச் சொல்லி நிர்பந்திக்கவே இல்லை. ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. இதனிடையே உச்சநீதிமன்ற தீர்ப்பை வேறு வாங்கியது பாஜக.
பின்னர் திமுக ஆட்சி. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது விஷச்செடியாக இருந்த நீட் இப்போது நன்றாக வேர்விட்டு, பல ஏழை, கிராமப்புற, நடுத்தர வர்க, BC, MBC, SC, ST மாணவர்களின் உயிரைக் குடித்து வளர்ந்து விஷ ஆலமரமாக நின்றிருந்தது. சட்டப்படி அதை முற்றிலும் ஒழிப்பதற்காக ஏ.கே.ராஜன் கமிட்டி அமைத்து அதை ஒழிக்கச் சட்டமும் இயற்றி அனுப்பியது திமுக அரசு. அதுதான் உதயநிதி சொன்ன ரகசியம். அதுதான் மந்திரம். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த ரகசியம் வேலை செய்யும். இந்த மந்திரம் பலிக்கும். ஆனால் பாஜகவின் இந்தியாதான் ஜனநாயகமே இல்லையே! ஜனநாயகத்துக்குப் புறம்பாக கவர்னரையும் ஜனாதிபதியையும் வைத்து இன்றளவும் அதை ஒழிக்கவிடாமல் ஒரு பச்சையான அயோக்கியத்தனத்தைச் செய்துகொண்டிருக்கிறது பாஜக. ஆனால் இப்போதும் பாருங்கள் “நீட்டை ஒழிக்கிறேன்னு திமுக சொல்லுச்சே.. ரகசியம் இருக்குனு உதயநிதி சொன்னாரே... ஒழிச்சுச்சா.. கிகிபிகி” என திமுகவைக் கிண்டல் செய்யும் எவனும், அயோக்கியத்தனமாக சட்டத்தை வளைத்த பாஜகவைக் கேள்வி கேட்க மாட்டான். இதில் நீட்டை ஆதரிப்பவனும் அடக்கம், (திமுகவைச் சேராத) எதிர்ப்பவனும் அடக்கம்! அதுதான் தமிழ்நாட்டின் விசித்திர டிசைன்!
வழக்கம்போல், எப்படி திமுகவின் இந்தித்திணிப்பு எதிர்ப்பை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, எப்படி திமுகவின் இட ஒதுக்கீட்டு ஆதரவை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ, திமுகவின் மாநில உரிமைக்கான குரலை ஏனைய இந்தியா எப்படி லேட்டாகப் புரிந்துகொண்டதோ அதேபோல் திமுகவின் நீட் எதிர்ப்பை இப்போது ஏனைய இந்தியா லேட்டாகப் புரிந்துகொண்டிருக்கிறது. இதோ மாணவர் போராட்டம்.
மாணவர்களை, குறிப்பாகப் பெண்களை அசிங்கமாகத் தொடுவதும், மார்பகங்களைப் பிடிப்பதும், பின்புறம் லத்தியால் அசிங்கமான செய்கைகளைச் செய்வதும் என பாஜக போலீஸ் அயோக்கியத்தனம் செய்துகொண்டிருக்கும்போது, திமுக ஆ.ராசாவை அனுப்பி மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியிருக்கும்போது, உதயநிதி மாணவர்களுக்காக தன் ஆதரவையும் வன்மையான கண்டனங்களையும் தெரிவித்திருக்கும்போது, ஒரு காலத்தில் முதுகெலும்போடு நிமிர்ந்து நின்ற தமிழ்நாட்டு அரசு வாயை மூடிக்கொண்டு டேபிளுக்கு அடியில் ஒளிந்துகொண்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமே எதிர்த்த ஒரு அநீதியை இன்று இந்தியாவே எதிர்க்கும்போது உடன் நிற்க தமிழ்நாட்டுக்கு இன்று தெம்பில்லை. அதன் முதுகெலும்பு சினிமா மோக ஆசிட்டில் கரைந்துவிட்டது. அதன் வீரம் ரீல்ஸ்களின் பொய்களில் செத்துவிட்டது.
விலைபோனவர்களின் வார்த்தைகளுக்கும், ரீல்ஸ்களுக்கும், பொய்க்கும் மூளையை அடகு வைத்தவர்களே... ஏன் திமுக? ஏன் திமுக? ஏன் திமுக? என கேட்டுக்கொண்டே இருப்பீர்களே... இதற்காகத்தான் திமுக! நம்மை மானத்தோடு வைத்திருக்கத்தான் திமுக. தமிழ்நாடுக்கு வந்த ஆபத்தை மட்டுமல்ல, வரப்போகும் ஆபத்தைக் கூட எதிர்க்கத்தான் திமுக. தடுப்பூசியைத் தூக்கி எறிந்துவிட்டு உயிர்க்கொல்லிக் கிருமியிடம் உடலை ஒப்படைத்திருக்கிறீர்களே, உங்களைத் தற்குறி என்றால் சொல்லுவது? தற்கொலைக் காதலர்கள் என்றல்லவா சொல்ல வேண்டும்!
நம்மை நிஜ ஹீரோவாக வைத்திருந்தது திமுக. இதோ உங்கள் நிழல் ஹீரோ நம்மை பரிதாபமான நிஜக் கோமாளியாக்கி இருக்கிறார். வடக்கன், பீகார், பீடா வாயன் என கிண்டல் அடித்துச் சிரிப்போமே. அவனெல்லாம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறான், வாயால் அல்ல! ஏன் என்றால் நாம் செய்திருக்கும் காரியம் அப்படி!
மக்கள் கூட பொய்க்குப் பலியான பலியாடுகள். ஆனால் எல்லாம் தெரிந்தும், எல்லாம் அறிந்தும், தவெக என்பது பாஜகவின் ட்ரோஜன் ஹார்ஸ் என்பது தெரிந்தும் தமிழ்நாட்டின் இந்த வரலாறுகாணா அவமானத்திற்கும், அசிங்கத்திற்கும், வீழ்ச்சிக்கும் துணைநின்று ஒத்து ஊதும் திருமாவளவன், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், காங்கிரஸ்... நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்.
சாத்தான் உங்களுக்கு அதிகாரத்தில் மட்டும் பங்கு தரவில்லை. பாவத்திலும் தந்திருக்கிறான். தமிழ்நாட்டு வரலாறு உங்களுககன சோஃபா செட்டுகளை வட்டியும் முதலுமாய் கொடுக்கும். வட்டியும் முதலுமாய் கொடுக்கும்.
(கடைசி வரி: பதிவு ரொம்ப பெருசா இருந்தா படிக்க மாட்டீங்கள்ல. உங்களுக்குப் புடிச்ச மாதிரி ஷார்ட்டா சொல்றேன். “திமுக தோத்தா திமுக கூப்புக்கு போகாதுடா... நம்மளும் நம்ம வருங்காலமும்தான் கூப்புக்கு போகும். போ... போய் க்யூட் சி.எம்னு கமண்ட் போடு...”
-டான் அசோக்
21-07-2026
@billy_3085 முட்டாள்கள் அதிகமா இருக்கும் ஒரு நாட்டை எப்புடி ஒரு above average அறிவுள்ள ஒருத்தனால ஆள முடியும். அவனுகள முட்டாள்கள் தான் ஆளமுடியும்.
~ @Alien18R
அந்த cycle ப்ரேக் ஆகுற வர வேற வழியில்லை
நீ நடத்து ராஜா நடத்து.. எவன் கேட்பான், எவன் ஆய்வு செய்வான்... விளம்பரம் தானே முக்கியம்..
செய்தி நிறுவனங்களுக்கு : முதலில் இந்த மொத்த முதலீடு என்ன , திட்டம் என்ன , அந்த நிறுவனம் என எதையது படிச்சுட்டு தான் செய்தி போடுகிறீர்களா? இதனால் தான் விஜய் தரப்பு நல்லா பொய் செய்திகளை திரித்து பரப்புகிறார்கள்.
விகரம் சோலார் (போன வருடம் MoU தமிழக அரசோடு செய்த நிறுவனம் தற்போதய திட்டமிடல்)
இதன் முதலீட்டு மதிப்பு
2026 ஆண்டில்: ₹800 crore
2027 ஆண்டில்: ₹1,200 crore
2028 ஆண்டில்: ₹1,300 crore
2029 ஆண்டில்: ₹1,071 crore
4 வருடத்தில் இது ஒவ்வொரு படி நிலையில் சரியாக இருந்தால் அவர்களுக்கு Cash flow இருந்தால் முதலீடு செய்வது என முடிவு..(பங்குசந்தைக்கு இது அவசியம் அவர்களுக்கு என்பது கூடுதல் விசயம்). அதாவது 4 வருட திட்டமாக 4,371 கோடி அதுவும் ஒவ்வொரு திட்ட வெற்றிக்கு பின் சரியாக லாப விவரம் இருந்தால் அடுத்து என திட்டமிட்டபடுகிறது.
இதுவும் 2025ல் கையெழுத்தான MOU ஒரு பகுதி..
இதில் முதல்கட்ட பேச்சுவார்த்தை முடித்து ஒப்பந்தம் சென்ற ஆண்டு செய்தனர் இதே விகரம் சோலார் நிறுவனம்.. அது என்ன நிலையில் இருக்கு என்று சொல்ல சொல்லுங்க...
அடுத்து முக்கிய செய்தி என்ன தெரியுமா : அந்த விகரம் சோலார் நிறுவனத்தின் மார்கெட் கேப் மதிப்பே 7000 கோடி தான்யா... கொஞ்சமாது படிப்பறிவு வேண்டாமா நமக்கு.. அது வந்து 15,037 கோடி முதலீடு செய்ய முடியும்? ?? எப்படினு நீங்கள் செய்தி போடுபவர்கள் தேடி படித்திருந்தால் விசயம் புரியும்...
சும்மாவே நல்லா ஏமாற்றுவது எப்படி என தனி ஆய்வே நடத்தலாம் இந்த TVK விஜய் தரப்பை.. இதில் இது வேறயா...
ஆக ரீல்ஸ் கீர்த்தனா தற்போது இந்த முதலீட்டை எப்படி கொண்டு வந்தார் என்பதை பற்றியும் , அது ஒவ்வொரு ஆண்டுக்குமான திட்டமிடல் பற்றியும் விளக்கமாக மீடியாவை சந்தித்து விளக்குவார் - என்னமா சரி தானே!!
7000 கோடி மொத்த மதிப்பு உள்ள நிறுவனம்... அதில் இரண்டு மடங்கு மேல் 15,000 கோடி முதலீடு பண்றாங்கப்பு என்று செய்தி போடும் அளவுக்கு தற்கூறிகளாக நாம் இருப்பது கவலையே... அது வரை விஜய் தரப்பு நன்கு மக்களை ஏமாற்றலாம்...
நான் சொல்றேன் இது அடுத்த 10 வருடத்திற்கும் சேர்த்து அவர்களின் நீண்டகால திட்டம் என்று உருட்டியுள்ளனர் MOUல்... அதாவது விஜய் பெரிய முதலீடு கொண்டு வந்துவிட்டார் என்று செய்தியில் பரப்புவதற்காகவே இதை செய்துள்ளனர்... இது அடுத்த 3 ஆண்டுகளில் 3000 கோடி கொண்டு வந்தாலே பெரிது... இதில் 5000 பேருக்கு வேலை , 10,000 குடும்பத்தினர் பயன் என்று அளந்துவிட்டுருக்கானுக..
எல்லாம் ஒரு விளம்பரம்...