இந்தக் கல்வி ஆண்டிற்கான முதல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பள்ளியின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடினோம்.
அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் என்பதில் பெருமிதம் கொள்வோம், அரசுப் பள்ளிகளை அழிவிலிருந்து பாதுகாப்போம்.
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
தலைவர்- பள்ளி மேலாண்மைக்குழு,
அரசு நடுநிலைப்பள்ளி கஞ்சிக்குழி.
( மாவட்டத்தின் முதல் ஐஎஸ்ஓ 9001: 2015 சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி )
பொலிவியா, அர்ஜென்டினாவில் நீர்வளத்தைச் ச��றையாடி, அம்மக்களின் போராட்டத்தால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு சேலம் மாநகராட்சியின் தண்ணீர் விநியோகத்தைத் தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
சேலம் மாநகராட்சியின் குடிநீர் வியோகத்தை 25 ஆண்டுகளுக்கு சூயஸ் எனும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனத்திற்குத் தாரைவார்த்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறத��. அர்ஜென்டினா மற்றும் பொலிவியா நாடுகளுக்குள் குடிநீர் விநியோகம் செய்வதாய் உள்நுழைந்து, தண்ணீரை விற்பனைப் பண்டமாக்கி, அம்மண்ணின் நீர்வளத்தைச் சூறையாடி, அந்நாட்டு மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு, சேலம் மாநகரத்தின் நீர் விநியோகத்தை வழங்கியிருக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; அது புல், பூண்டு, பூச்சி, ஆடு, மாடு, கரடி, மான், புலி, சிங்கம் என உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்குமான உயிருடைமை. அத���ை மனிதர்களுக்கு மட்டுமானதாக்கி, விற்பனைப்பண்டமாக மாற்றி, சந்தைப்படுத்திப் பொருளீட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. நீரை விற்பனை செய்யும் மானுடகுலத்தின் செயல் உலக உயிர்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். புட்டிகளிலும், போத்தல்களிலும் அடைக்கப்பட்டுள்ள நீரை மனிதர்கள் விலைகொடுத்து வாங்கிப் பருகிவிட முடியும். காக்கையும், குருவியும், மைனாவும், சிட்டும் தனது தாகத்திற்கு என���ன செய்யும்? எனும் கேள்வியை உளச்சான்றோடு ஒவ்வொரு குடிமகனும் எழுப்ப வேண்டும். தண்ணீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதும், குடிநீரை சந்தைப்பொருள் ஆக்குவதும் ஏற்கவே முடியாத சனநாயகத் துரோகம். வரிசெலுத்தி, வாக்குச் செலுத்தி ஓர் அரசை நிர்மாணிக்கும் குடிமக்களுக்கு தூய குடிநீரைத் தங்குதடையின்றித் தர வேண்டியது ஒரு அரசின் தலையாயப் பொறுப்பும், முதன்மைக் கடமையுமாகும்.
கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிடப்பட்டு, அதற்கெதிராகப் பரப்புரையும், போராட்டமும் செய்து வரும் நிலையில், தற்போது சேலம் மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அதே சூயஸ் நிறுவனத்திடம் தவெக அரசு கையளித்திருப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய் அவர்கள் குடிநீர் வழங்குவதைத் தனியாருக்குத் தாரைவார்க்க உத்தரவிட்டது ஏன்? பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தா��் குடிநீர் விநியோகத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும்; இவ்வளவு பெரிய நிர்வாகக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு அரசு இயந்திரத்தால் செய்ய முடியாதா? பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் இலாபத் தேவைக்குத்தான் வேலைசெய்வார்களே ஒழிய, மக்கள் சேவைக்கு ஒருநாளும் வேலை செய்ய மாட்டார்கள் எனும் அடிப்படைப் புரியாதா? நீர்வளத்தையும், நீராதாரங்களையும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையளித்தால், நீர் இறையாண்மை முழுக்க முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அவர்கள் சொல்கிற விலைக்குக் குடிநீரை மக்கள் வாங்க வேண்டியப் பேராபத்துமிக்க சூழல் நாளை உருவாகும். இது வருங்காலத் தலைமுறையின் நலவாழ்வினைப் பன்னாட்டு நிறுவனத்திடம் அட��ானம் வைக்கும் பேரபாயம். அர்ஜென்டினாவிலும், பொலிவியாவிலும் சூயஸ் நிறுவனம் செய்த மானுடகுலக் கொடுமைகள் வரலாறாக விரிகையில், கண்முன்னே சாட்சியாக இருக்கையில், அந்நிறுவனத்திடமே சேலம் மாநகரத்தின் நீர்விநியோகத்தை வழங்குவது மக்கள் விரோதப்போக்கின் உச்சமாகும்.
ஆகவே, சேலம் மாநகராட்சியின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்று, மாநில அரசே தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தவெக அரசு தாரைவார்த்திருக்கும் IREL விரிவாக்கத்திற்கான கால நீட்டிப்பு அனுமதி, அதனால் குமரிக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள், இந்த புதிய அரசின் தரமற்ற செயல்பாடுகள் பற்றிய என் கருத்துகளை @thedebatetamil வலையொளியில் பகிர்ந்திருக்கிறேன்.
காணொளி இணைப்பு👇🏻
https://t.co/ITtHNUgWu5
தமிழை வெறும் மொழியாய் அல்ல, உ��ிர் மூச்சாய் அடுத்த தலைமுறைக்கு கடத்த பாலமாக விளங்கும் கருங்கல் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.
"தமிழை வாழவைப்போம், தமிழரை ஆள வைப்போம்."
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனட���யாக ரத்து செய்க!
@CMOTamilnadu @drtkprabhu_TVK @CTR_Nirmalkumar @moefcc @byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்��ோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட���டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆ��்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், ���ிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்ட��்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனை���்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்ற��ல், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பணம் படைத்தவர்கள் எல்லாம் சேவை செய்திட முடியாது, நல்ல மனம் படைத்தவர்கள் மட்டும்தான் சேவை செய்திட முடியும் என்பதற்கு இலக்கணமாக வாழும் #AVAR Foundation தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் அன்புத் தம்பி #ஆசிர்விஜய் (8098316502) அவர்களின் நீண்ட நாள் கனவான ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
கோடி கோடியாக மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்து மன நிம்மதி இன்றி வாழும் மாந்தர்கள் நடுவில், இயலாதவர்களுக்கு, இயன்றதை செய்து மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் வாழ்வோம்.
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA
#ancyshobarani
#ஆன்சிசோபாராணி
3.25 லட்சம் ரூபாய் செலவில் நாம் மேம்படுத்தி, #தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற #ஓலவிளை#குழந்தைகள்மையம் , தரச் ச��ன்றிதழ் நீட்டிப்புக்கான முதலாம் ஆண்டு தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி, அங்கன்வாடி, தேசிய தரச் சான்றிதழ் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம், அதிக கண்காணிப்பு கருவிகள் உள்ள கிராமம், குமரி மாவட்டத்திலேயே அதிக சதவீத மக்கள் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் கிராமம், எச்சரிக்கை வண��ணம் பூசப்பட்ட 100% மின்கம்பங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய மண் சாலை, சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய காங்கிரிட் சாலை, சட்டவிரோத கல்குவாரி அடைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் & மேம்பாடு, இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என நான்காண்டுகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராக நமது ஊரை மாற்றும் நோக்கத்தோடு எண்ணற்ற சாதனைகள் புரிய வாய்ப்பு தந்த இறைவனுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA,
#கப்பியறை பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
#ntk
Resembling a fancy dress competition where a naive participant recites under the topic,If I would be an Industries & Commerce minister.
People of TN need meaningful jobs,
Sustainable economic policies,
Transparency in execution.
Simply…
Modern,by thoughts.
Not by attire.
இயற்கை வளங்கள் சுரண்ட முடிவு பண்ணியாச்சு 😢
ஆலங்க���ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை மலை கிராமங்கள் (HACA) பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் மரங்கள் அகற்றுவது, குவாரி அமைப்பது போன்ற பணிகள் செய்ய தடை இருக்காது.
HACA தான் மலைகளில் உள்ள ரிசர்வ்ட் காடுகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படுவதற்காக அனுமதி தருகிறது. HACA அனுமதி பெறாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஈஷா யோகா வெள்ளையங்கிரி மலையில் இப்படி அனுமதியின்றி கட்டடங்கள் கட்டியது சர்ச்சைக்குள்ளானது.
மலைகளின் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் HACA உருவாக்கப்பட்டது.
இந்த HACA வில் இருந்து ஆலங்குளம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என த.வெ.க மாவட்டச் செயலாளர் மனு அளிக்கிறார் என்றால், அப்பகுதியின் சுற்றுச் சூழலை சீர்குலைக்க இவர் திட்டம் தீட்டுகிறார் என்று பொருள்.
எச்சரிக்கை!
இயற்கை வளங்கள் சுரண்ட முடிவு பண்ணியாச்சு 😢
ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை மலை கிராமங்கள் (HACA) பட்ட���யலில் இருந்து நீக்கிவிட்டால் மரங்கள் அகற்றுவது, குவாரி அமைப்பது போன்ற பணிகள் செய்ய தடை இருக்காது.
HACA தான் மலைகளில் உள்ள ரிசர்வ்ட் காடுகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் கட்டடங்கள் கட்டப்படுவதற்காக அனுமதி தருகிறது. HACA அனுமதி பெறாமல் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல பகுதிகளில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. ஈஷா யோகா வெள்ளையங்கிரி மலையில் இப்படி அனுமத���யின்றி கட்டடங்கள் கட்டியது சர்ச்சைக்குள்ளானது.
மலைகளின் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் HACA உருவாக்கப்பட்டது.
இந்த HACA வில் இருந்து ஆலங்குளம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என த.வெ.க மாவட்டச் செயலாளர் மனு அளிக்கிறார் என்றால், அப்பகுதியின் சுற்றுச் சூழலை சீர்குலைக்க இவர் திட்டம் தீட்டுகிறார் என்று பொருள்.
எச்சரிக்கை!