எறும்பு உணவை சேமிப்பது போல பேருழைப்பால் சேர்த்த வாக்குகளில் பாதி குறைந்துவிட்டது. வழக்கமான அவச்சொற்களுக்கும் எந்த குறைவுமில்லை. தன்னுடன் இருந்த சிலரே தனக்கெதிராக வசைக் கருவியை ஏந்தியிருக்கிறார்கள்.
நம்பிக்கைச் சிதையச் செய்யும் தந்திர அம்புகள் இடைவிடாமல் நெஞ்சில் பாய்கிறதுதான்.
ஆனாலும் களத்தில் நிற்கிறார்.
இந்த தீரம் தமிழக அரசியல் வரலாற்றில் எந்த தலைவனுக்கும் இருந்ததில்லை. எத்தனை ஆக்கிரமிப்புகளை நிறுவினாலும் நீர் தன் வழித்தடத்தை மறப்பதில்லை. என்றேனும் ஒருநாள் பெருமழை பொழியும். அன்று அத்தனை தடைகளும் தண்ணீரில் மிதக்கும்.
#சீமான்
#Seeman
அண்ணன் அருகில் நின்று புகைப்படம் கூட எடுத்ததில்லை. இருப்பினும் NTK விட்டு விலகவோ தவறாக எழுதவோ கூட மனம் வருவதில்லை . கூடவே இருந்துட்டு எப்படி இவர்களால் துரோகம் இழைக்க முடிகிறது . @Seeman4TN bro வெற்றியோ தோல்வியோ பிறகு பார்த்துக்கொள்வோம் . இன்னும் எத்தனை பேர் இருந்தாலும் அடிச்சு விரட்டுங்க பார்த்துக்கலாம்.
உன்னை நன்கு புரிந்து உணர்ந்தவர்களிற்கு தெரியும் அண்ணா நீ சொக்கத்தங்கம் என்று 💯
என்ன நடந்தாலும் என்றும் உன்னோடுதான் என் அரசியல் பயணம் 💯✊🏽
@Seeman4TN 🫶🏼🥰✊🏽💯
மனிதன் #கடிகாரத்தை கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே #திசை காட்டும் கருவியை கண்டுபிடித்துவிட்டான்..
காரணம்..
அவனுக்கு நேரத்தை விட சரியான திசையில் பயணிப்பது முக்கியமாக இருந்தது..
இது தமிழ்தேசிய அரசியலுக்கும் பொருந்தும்..
வழி தவறாமல் சரியான திசையில் தொடர்ந்து பயணிப்போம்.. உறுதியாக வெற்றி கிடைக்கும்..
அன்பிற்கினிய #நாம்தமிழர் சொந்தங்களுக்கு...
“ஒரு இடத்தில்கூட ஜெயிக்கவில்லை” — இந்த ஒற்றை விமர்சனத்தை வைத்துக்கொண்டு, இத்தனை ஆண்டுகளாக நாம் செய்த ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளையும், நாம் முன்வைத்த கொள்கைகளையும் மலிவாகப் பேசும் சமூக வலைதளப் பதிவுகள் ஒவ்வொன்றுக்கும் நாம் பதிலளிக்க வேண்டிய எந்தக் கட்டாயமும் கிடையாது.
அவர்களிடம் சென்று சண்டையிடுவதோ, நாம் செய்தவற்றைப் பட்டியலிட்டுப் புரிய வைப்பதோ, நமது கொள்கையை மீண்டும் மீண்டும் விளக்கிக் கொண்டிருப்பதோ தேவையற்றது.
சவுக்கு சங்கரும், சவுக்கு மீடியாவில் இருப்பவர்களும் எத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தி நம்மை விமர்சித்தாலும், காயப்படுத்தினாலும், அந்த மலிவான வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காமல் நமது பயணத்தை நாம் தொடர வேண்டும்.
சவுக்கு சங்கரின் காணொளிகளை ஒரு சினிமாவைப் பார்ப்பதுபோலப் பாருங்கள். 20 நிமிடம், 30 நிமிடம் — சில சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கும்; சில ஒருதலைப்பட்சமான கருத்துகள் இருக்கும்; சில அவரது சொந்த அனுமானங்களாக இருக்கும். நகைச்சுவையாகவும் ஆவேசமாகவும் பேசுவார்.
அவ்வளவுதான். படம் முடிந்த உடன் சுமாராக இருந்தாலும் பரவில்லை என்று சொல்லி வெளியே போவதில்லையா.. அதே போல் அவரின் காணொளி முடிந்தவுடன் அதையும் அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்துவிடுங்கள்.
ஒரு மோசமான சினிமாவைக்கூட பாப்கார்னுடன் மூன்று மணி நேரம் சுவாரஸ்யமாகப் பார்த்துவிட்டு வெளியே வந்து, “படம் நல்லாவே இல்ல மச்சா!” என்று சொல்லிவிட்டுப் போகிறோம் அல்லவா? அதே அளவில்தான் இவர்களது காணொளிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஏனென்றால் காலம் மாறும்.
இன்று நம்மை விமர்சிக்கும் அதே குரல், நாளை அரசியல் சூழல் மாறும்போது நமக்குச் சாதகமாகவும் பேசலாம். ஏனென்றால் இவர்களை போல வாயை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கும் கூடம் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
சீமான் அண்ணன் நமக்கு காட்டியிருக்கும் பாதை குறுகிய பாதையல்ல. அது நீண்ட நெடிய அரசியல் பயணம். இலக்கு வெகுதூரத்தில் இருக்கலாம். ஆனால் அதற்காக ஒவ்வொரு கல்லிடமும் நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தால் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாது.
காலச்சக்கரம் ஒரே இடத்தில் நிற்பதில்லை.
மேலே இருப்பது கீழே வரும்; கீழே இருப்பது மேலே செல்லும்.
அதுதான் வரலாறு.
இன்றைய வரலாற்றில் நமது பெயர் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் நாளை எழுதப்படப்போகும் வரலாற்றில் நமது பெயர் இருக்க வேண்டும். அதற்கான வேலையை இன்றில் இருந்து செய்வோம், செய்துகொண்டே இருப்போம்.
தேவையற்ற சண்டைகளைப் புறக்கணிப்போம்.
கொள்கையைப் பேசுவோம்.
களத்தில் நிற்போம்.
பயணத்தைத் தொடர்வோம்.
ஒருநாள் இந்தத் தேசத்தில் நமது குரலும் வலிமையாக ஒலிக்கும்.
நாம் தமிழர்! @Seeman4TN@_ITWingNTK
வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என நினைத்துக்கொண்டிருந்தது திமுக - அதிமுக.
ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் செய்தால் போதும், பொய்யை பரப்பினால் போதும், அடுத்தவர்கள் மீது அவதூறு பரப்பி, தனது இயலாமையை, கயமையை மறைத்தால் போதும் என நினைக்கிறது தவெக.
கிட்டதட்ட இரண்டுமே ஒரே ரக ஏமாற்றுதான். ஒரே ரக ஆட்சிதான். ஒரே ரக ஆட்கள்தான்.
எல்லாம் எங்கள் நேரக் கூந்தல்தான்..
IPS பதவியை விட்டு ஒரு
மண்ணுக்கும் பயனில்லாத BJP தலைவர் ஆக வந்து நடித்த அண்ணாமலை ஆடு மேய்த்தால் புரட்சி என்பாய்
நடிப்பை பார்த்து புரட்சி செய்ய வந்தவர் விஜய்
என்று நம்புவாய்
ஆனா, மண்டபத்தில் திமுக தலைவர்களை கண்டதால்
15 ஆண்டு போராட்டம்லாம்
நடிப்பு என்பவன் மூடனே..!