ஒரு சின்ன டேட்டாவ வாரம் ஒரு நாள் போஸ்ட்டா போட்டு விடலாம்னு ஒரு ப்ளன்..! Social Media Manipulation - How it’s planned and executed..?
இன்னைக்கு வெளியான வீடியோ...! இந்த வீடியோல எதுவோ சரியில்லை என தோன்றியதால் தேடி பாத்ததுல கிடைத்த பல விசயங்களில் ஒரு சிலது மட்டும்..! 1/n
@sekartweets dmk க்கு *விழுந்த ஓட்டுல* ஜெயிச்ச சின்ன கட்சிங்க தான் TVKக்கு ஆதரவு கொடுத்து இருக்கு இதத்தான் DMK தயவால் ன்னு உதயநிதி mean பண்றார் ... அத மொத புரிஞ்சுக்கங்க
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
எல்லாம் நன்மைக்கே அனத்தாம இருங்கையா... இவன் பவுசி வெளிய தெரியாம இவனை உடைக்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம். மக்கள் மூளைக்குள்ள அவ்ளோ ஆழமா இறங்கி இருக்கான்..அவனுக்கு ஓட்டு போட்ட ஆளுங்க கிட்ட ஒரு 10 நிமிஷம் பேசி பாருங்க நம்ம மண்டையை செவுத்துல நம்மலே போய் முட்டிப்போம் அப்படி மூளை கெட்டு சீரழிஞ்சு போய் இருக்காங்க மக்கள்... கொஞ்சம் நாள் இவன் ஆட்சி அமைச்சா தான் அவங்களுள்ள ஏறி இருக்க வெறி அடங்கும்... எல்லாத்துக்கும் நாகரிக அரசியல்னு கடிச்சிட்டு இருக்காதிங்க அடுத்த கட்ட வழியை பாருங்க...