வீட்டு Wi-Fi list-ல ஒரே பெயர்ல ரெண்டு network தெரியுதா? "Home_WiFi"ம், "Home_WiFi_5G"ம்.
இரட்டைப் பிள்ளைங்க மாதிரி. பேரு ஒண்ணு, குணம் வேற வேற. எதுல connect பண்றதுன்னு தெரியாம, நாம எப்பவும் கண்ணை மூடிக்கிட்டு முதல்ல தெரியுறதை அழுத்திடுறோம்.
முதல்ல ஒரு உண்மை:
இந்த "5G" Wi-Fi-க்கும் Jio, Airtel 5G-க்கும் எந்த சொந்தமும் இல்ல. ரெண்டும் ஒரே இனிஷியல் வச்ச வேற வேற குடும்பம். இங்க 5G-ன்னா 5 GHz.
2.4 GHz = கோயில் திருவிழா ஒலிபெருக்கி
1. ரொம்ப தூரம் போகும். சுவர், கதவு, மாடி எதுவும் தடுக்காது. அடுத்த தெரு வரைக்கும் கேக்கும்.
2. ஆனா வேகம் இல்ல. பாட்டு நிதானமா, ஆற அமரத்தான் வரும்.
5 GHz = Bullet train
1. செம வேகம். கண் மூடித் திறக்குறதுக்குள்ள வந்து சேரும்.
2. ஆனா தண்டவாளம் இருக்கிற வரைக்கும்தான். ஒரு கனமான சுவர் குறுக்கே வந்தா, அங்கேயே "அடுத்த ஸ்டேஷன் இல்லை"ன்னு நின்னுடும்.
இன்னொரு சுவாரஸ்யம்:
உங்க வீட்டு microwave oven-ம் கிட்டத்தட்ட 2.4 GHz-லதான் வேலை செய்யுது. அதனால சில வீடுக���்ல, அம்மா பால் சூடு பண்ணும்போது பையனோட online game lag ஆகும்.
பையன்: "Network சரியில்ல!"
அம்மா: "பால் சூடாகுற வரைக்கும் பொறு."
யாருக்கும் தெரியாது, ரெண்டு பேரும் ஒரே ரோட்டுல சண்டை போடுறாங்கன்னு.
பக்கத்து வீட்டு Wi-Fi, Bluetooth headset எல்லாம் கூட அதே 2.4 ரோட்டுலதான். அது நம்ம ஊர் பஸ் ஸ்டாண்ட் மாதிரி, எப்பவும் கூட்டம்.
அப்போ எதுல connect பண்ணலாம்?
1. Router இருக்கிற ரூம்லயோ பக்கத்து ரூம்லயோ இருந்தா: 5 GHz. Video call-ல உங்க முகம் "freeze" ���காம, முழுசா தெரியும்.
2. மாடி, balcony, தூரத்து ரூம்னா: 2.4 GHz. Phone-ஐ தூக்கிக்கிட்டு ஆண்டெனா மாதிரி கையை உயர்த்தி நிக்க வேண்டாம்.
3. Smart bulb, CCTV, smart plug மாதிரி பொருட்கள் பெரும்பாலும் 2.4 GHz-ல மட்டும்தான் connect ஆகும். "_5G"ல connect ஆகலைன்னா கடைக்காரனைத் திட்டாதீங்க, அது அவரோட தப்பு இல்ல.
சுருக்கமா:
Router ��க்கத்துல இருந்தா 5 GHz.
Router-ஐ விட்டுத் தூரமா போனா 2.4 GHz.
Router-ஐயே பார்க்க முடியலைன்னா, அதை வீட்டு நடுவுல கொண்டு வந்து வைங்க. அலமாரிக்குள்ள ஒளிச்சு வச்சா அதுக்கும் மூச்சு முட்டும்.
உங்க வீட்டுல Wi-Fi signal எந்த மூலையில காணாம போகுது?
#WiFiTips #அறிவோம்உலகம் #TechTips
ஒடிசா பால்டா மலையில் பழங்குடியினர் நில உரிம��ப் போராட்டம்!
சுரங்கத் திட்டங்களுக்கு எதிராகத் தங்கள் நிலம், காடு, வழிபாட்டுத் தலங்களைக் காக்கப் போராடும் பழங்குடி மக்களின் குரல் ஒலிக்கட்டும்!
மனிதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அவனுட���ய செயல்களை மட்டும் பார்க்காதீர்கள்;
அவனுடைய மனதிற்குள் நடக்கும் போராட்டத்தையும் பாருங்கள்
-தஸ்தாயெவ்ஸ்கி
பிரிந்திருந்தாலாவது
கொஞ்சம் அன்பு கூடுமென
நினைத்து பிரிந்திருந்தேன்.
இரண்டு நாளில் பிரிவு
பழகிவிட்டது.
நான் இருந்ததே மறந்துவிட்டது.
அப்படிய���ரு காலமிது.
~ மனுஷ் ~
என்ன எழவு அரசியல்டா பேசுற தலைமை தற்குறி @actorvijay
ஒரு அரசியல் கட்சியில் மூன்றாம் தர பேச்சாளர் பேசுவதை எல்லாம் ஒரு கட்சி தலைமை பேசுவது எல்லாம் தற்குறித்தனம்.
பாஜக வை எதிர்த்து பேச ஒரு துப்பு இல்ல... அரசியலே இல்லாம அரசியல் பேசிட்டு இருக்க... #சினிமா_பைத்தியம்#சோப்ளாங்கி
முன்னூறு வகையான கேமரா கோணங்கள், திரை கலை விதிகளை மிக சிறப்பான App ஆக இலவசமாக கொடுக்கிறார்கள்..
விடியோ உதாரணங்களையும் பாக்கலாம், Prompt Copy செய்து கொள்ளலாம்.
திரைத்துறை மற்றும், குறிப்பாக AI Content உருவாக்குபவர்களுக்கு மிக சிறந்த resources.
https://t.co/JLFvxxsVI3
திமுகவில் இருந்த ஜாபர்சாதிக் என்ற ஒருவன் மெத்த பெட்டமைன் போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டான். அவன் ஒரு பொது இடத்தில் ( கவனிக்க.. என் வீடோ அல்லது அவன் வீடோ அல்லது என் அலுவலகத்திலோ அல்லது அவன் அலுவலகத்திலோ அல்ல! பொது இடம்) வைத்து எனக்கு சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்து ( கவனிக்க.. ஒரே ஒரு ஃபோட்டோ.. இரண்டாவது ஃபோட்டோவே அவனுக்கும் எனக்கும் இருக்காது, கிடைக்காது. காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பும் அவனை நான் பார்த்ததில்லை அந்த நிகழ்ச்சிக்கு பின்பும் அவனை நான் பார்த்ததில்லை) பொது இடத்தில் வைத்து சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்துக் கொண்டு அவனோடு சேர்ந்து நானும் போதைப் பொருட்கள் கடத்திவதாகவும் அவனோடு சேர்ந்து கென்யா போன்ற நாடுகளுக்கு நான் சென்றதாகவும் ஒரு அப்பட்டமான பச்சை பொய்யான செய்தியை புரோக்கர் சவுக்கு சங்கர் துவங்கி கிசுகிசு பாணியில் ஜூனியர் விகடன் வரை எழுதினார்கள். பிஜேபி அண்ணாமலையின் வார்ரூம் அடியாட்களும் விஜயின் ரூட்மாஃபியா கோஷ்டியும் இணையம் முழுவதும் அதை பரப்பினர்.. கால���் பதில் சொல்லும் என்று நான் அமைதியாகக் கடந்து விட்டேன். இப்போது தவெகவை சேர்ந்த பூபாலன் என்பவன் அதே மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்தி உள்ளான். முதல��� அமைச்சர் விஜயோடேயே “நெருங்கிய” தொடர்புடையவன் என்பது இந்த ஃபோட்டோ மூலம் தெரிகிறது? அது மட்டுமின்றி விஜயின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கிரிக்கெட் கிரவுண்டில் “ஏதோ ஒரு” மாத்திரையை நசுக்கும் காணொளியே வந்தது!!
“இதன் மூலம் விஜய் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாரா? அவர்களோடு இணைந்து அவரும் அந்தத் தொழிலை செய்கிறாரா? அந்தத் தொழிலில் ஈட��டிய பெரும் பணத்தால் தான் அவர் கட்சி துவங்கினாரா? அவர் வெளிநாடு சென்று வந்ததெல்லாம் இந்த தொழில் நிமித்தம்தான?” என்றெல்லாம் கேட்டு இப்போது புரோக்கர்கள் சவுக்கு சங்கர் , ஃபெலில்ஸ், தமிழா தமிழா பாண்டியன் போன்றோர்கள் விவாதித்து காணொளி வெளியிடுவார்களா? அவர்கள் உருவாக்கும் இந்த செய்தியை ரூட்மாஃபியாகள் இணையவெளி எங்கும் பரப்புவார்களா!!!?
வாருங்கள் உண்மைக்காக காத்திருப்போம்
மிருதுளா
எங்களது குட்டிப் பெண்
19 வயது
பத்தொன்பதே வயதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்.
ஒன்று தெரியுமா?
63 வயதான என்னை வழிநடத்தும் சகலமும் கொண்ட ஞானச்சுட்டி
பட்டைய கிளப்பு சாமி.
12.10.2026
#மிருதுளாedn
இடைத்தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகளை தொ���ர்ந்து சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதான வெறுப்பு, எதிர்ப்பு, ஒவ்வாமை, நட்பு, நலன் என பல விதங்களிலும் கருத்துக்களும், அறிவுரைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கம்யூனிஸ்ட் ��யக்கங்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்போம்.
கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களது எதிரிகளை அதற்குரிய முறையில் எதிர்கொள்வோம். கம்யூனிசத்திற்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்றும் அழிவில்லை. அழிக்கவும் முடியாது.