அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதிய உதவி பேராசிரியர்களாக (நவீன கொத்தடிமைகள்) பணியாற்றிய எங்களை கடந்த 31 டிசம்பர் 2025 முதல் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எங்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் என்றும், பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய எங்களை பணி நிரந்தரம் செய்யவும் உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டும் அதை சிறிதும் மதிக்காமல் ஒரு தன்னாட்சி நிறுவனம் போல் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டுள்ளது. இதற்கு காரணம் யார் என்றும் அவர்களிடம் இதற்கான விளக்கம் கேட்க வேண்டும் என்றும் போராடிய எங்களை காவல்துறை மூலம் நேற்று (26.02.2026) இரவு 9:30 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற்றியது. எங்களை பணியில் இருந்து நீக்க யாருக்கு அதிகாரம் அவர்களிடம் நாங்கள் விளக்கம் கேட்க வேண்டும் என்று கேட்பது எந்த விதத்தில் தவறாகும். ஆனால் நிர்வாகம் யாரை கேட்டாலும் எங்களுக்கு இது தெரியாது மேலிடத்து உத்தரவு என்று தட்டிக் கழிக்கின்றனர். எங்களது 15 ஆண்டு கால இளமைக்காலத்தை உறிந்து விட்டு தற்போது தேவையில்லாத காகிதம் போல் தூக்கி எறிந்து விட்டது இந்த அண்ணா பல்கலைக்கழகம். இது எங்கள் 15 ஆண்டுகால உழைப்பு அவ்வளவு சீக்கிரம் இதை நாங்கள் விட்டு விட மாட்டோம். நாங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு போராடத் தெரியாது, மற்றவர்களை ஏமாற்றத் தெரியாது, போலியாக நடிக்க தெரியாது.... ஆனாலும் நாங்கள் போராடுவோம்.....
எல்லா வழிகளும் முடக்கப்பட்ட போது, நீதிமன்றமே எங்களின் கடைசி நம்பிக்கை.
நீதியில் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையுடன், எங்கள் போராட்டம் தொடரும்.
எங்களின் கடைசி நம்பிக்கை — நீதிமன்றம் மட்டுமே.
#நீதி #போராட்டம் #நம்பிக்கை #JusticeForTeachingFellows #AnnaUniversity
@CMOTamilnadu@mkstalin@Udhaystalin@astrokiru@thirumaofficial@tncpim@cpimspeak@ThanthiTV@TThenarasu@aloor_ShaNavas@TVKVijayHQ@SeemanOfficial@EPSTamilNadu@Senthilvel79@U2Brutus_off@Saattaidurai@grok
விசிகவில் உள்ள #திமுக மற்றும் மாற்றுக்கட்சி ஆதரவு கள்ளமவுனிகள் மவுனம் கலைக்க வேண்டிய நேரம்..
கடந்த திமுக ஆட்சியில் கூட்டணி கட்சியாக இருந்தும் அதிகாரம் கையில் இல்லாததால் முடிவெடுக்கும் இடத்தில் #விசிக இல்லை..
தற்போது அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது ஆகையால் அண்ணன் மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்களால் பல முன்னெடுப்புகள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் திமுக எந்த கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டது..?
விசிக மக்கள் பிரச்சனைகளுக்கு எந்த விதத்திலும் சமரசம் செய்யவில்லை ஆனால் #TVK ஆதரவு என்றவுடன் கொள்கை மாறிவிடுமா..
விசிக கொள்கை பிடிப்பு இல்லாத இயக்கமென்று நீங்கள் நினைத்தால் உங்களின் கொள்கை பிடிப்பில்தான் சந்தேகம் எழுகிறது..!!!
@thirumaofficial@vckitwingoffi
மாண்புமிகு சமூகநீதித் துறை அமைச்சர் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்
கூடவே கோவையில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைகளை நிறுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்🙏
@Arappor அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து பேசுங்கள் தோழரே... ஊழல் பெருச்சாளி பதிவாளரை உடனடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விசாரணை செய்ய வேண்டும்
சமத்துவப் பெரியர் முத்தமிழறிஞர் கலைஞர்அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எமது செம்மாந்தவீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
சமூகநீதி மண்ணாய்த் தமிழகத்தைச் சமைத்த மகத்தான கருத்தியல் பேராளுமை கலைஞர். பெரியாரின் கனவை நனவாக்கும் வகையில் சமத்துவபுரம் கண்ட சமூகப்புரட்சியாளர் கலைஞர்.
உயர்கல்வி மேம்பாடு, தகவல் தொழில் நுட்பம், எளியோருக்கான அதிகாரவலிமை போன்றவற்றை நிலைநாட்டி, புதியதொரு தமிழ்நாட்டைச் செதுக்கிய அவரது போற்றுதலுக்குரிய பங்களிப்பை நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்வோம்!
#WATCH | கலைஞர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை!
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 103வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ் மோகன்.
#SunNews | #Kalaignar | #TVK
#ஜூன்_3#செம்மொழிநாள்
மறுமை இல்லை
என மக்களிடையே
பகுத்தறிவு
முழங்கிய முரசு!
மடமை கொடுமை
கண்டு
கொதித்தெழுந்த
கருத்தியல் அரசு!
இளமை வளமை
என அன்னைத்தமிழை
செம்மொழியாக்கிய
தமிழர் பரிசு!
தமிழை இலக்கிய
இனிமையாக்கிய
தொல்காப்பியத்தின்
வாரிசு!
- வன்னி அரசு
அமைச்சர்- சமூகநீதித்துறை
தமிழ்நாடு
#கலைஞர்103
#HBD
ஆ.ராசா கூறுவது போல, “ஜோசப் விஜய்”
என்று சொன்னதை வைத்து யாரும் ஓட்டு போடவில்லை. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று எந்த வித பாரபட்சமும் இன்றி, “என் பிள்ளை விஜய்”நான் விசில் சின்னத்தில் ஓட்டு போடுவேன்’ என்று கூறிய மக்கள் தான் இந்தத் தேர்தலில் த.வெ.க.வை வெற்றி பெற வைத்தார்கள்.