🪔 Remembering 1956 – Sri Lanka’s first Anti-Tamil pogrom
This week marks 70 years since Sri Lanka’s first anti-Tamil pogroms, when government backed Sinhala mobs murdered more than 150 Tamils across the island – the first of many massacres that were to take place in the decades to come.
Violence first flared as Tamil politicians protested peacefully outside the Sri Lankan parliament in Colombo, condemning the Sri Lankan Freedom Party’s (SLFP) efforts to pass the Sinhala Only Act on June 5, 1956.
As hundreds of Tamils, led by the Federal Party’s SJV Chelvanayakam, staged a satyagraha - peaceful sit-in protest - on Galle Face Green, they were set upon by a Sinhala mob.
In June 1956, Prabhakaran was just a one-year-old.
The same year Sinhala mobs set upon Tamils in the shadow of parliament. Ears were bitten off. Protestors were thrown into a lake.
It was the first, but not last, anti-Tamil pogrom.
The state had already chosen its path.
இன்றோடு 70வது வருடகால இரத்த சாசனம்
ஈழத் தமிழருக்கு எதிரான முதல் இனப்படுகொலை அம்பாறை "இங்கினியாகலை இனப்படுகொலை"
05.06.1956-11.06.1956
1940 களில் அக்கால கட்டத்தில் விவசாய அமைச்சராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா அம்பறை மாவட்டத்தில் அரச நிதியுதவியுடன் பல சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நிறுவினார் இதன் பின்னர் அரச உதவியோடு அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத்த�� திட்டம் திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றத் திட்டம் அ��்லைக் குடியேற்றத் திட்டம் போன்ற குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு சிங்கள மக்கள் வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள் அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு காவல்துறை இராணுவம் பாதுகாப்பும் வழங்கப்பட்டது அத்துடன் விகாரைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டது பௌத்த விகாரைகளில் பெரிய காண்டாமணி பொருத்தப்பட்டு மணியோசை கேட்கும் தூரம் மட்டும் சிங்கள பௌத்தர்களுக்குரிய பிரதேசமாக உத்தியோகப் பற்றற்ற வகையில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலங்கள் சூறையாடப்பட்டன
1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காலஞ் சென்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமரானார் அவரது தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றான சிங்களம் மட்டும் சட்டத்தை 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார் இதற்கு எதிராக அக்கால கட்டத்தில் அகி�� இலங்கை தமிழரசுக் கட்சி தனது எதிர்ப்பை தெரிவித்து நேரடி நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்தது இதன் விளைவாக அகில இலங்கை தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 05 ஆம் திகதி கொழும்பிலுள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன்னால் காலி முகத்திடலில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடாத்தியது இதில் தமிழ்த் தலைவர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் கலந்து கொண்டார்கள் அக்கால கட்டத்தில் புகழ் பெற்றிருந்த தமிழ் கல்விமான் வணபிதா தனிநாயம் அடிகளும் இந்தச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார் அன்றைய தினம் சத்தியாக்கிரகிகள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டதுட���் சிங்களவர்களால் தமிழர்கள் மீதான இனக்கொலை தூண்டி விடப்பட்டது தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் பல தமிழ் மக்கள் மோசமான வகையிலும் கோரமாகவும் கொல்லப்பட்டதுடன் கொழும்பிலுள்ள தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் கொள்ளையடிக்கபட்ட பின் தீவைத்து கொளுத்தப்பட்டன இலங்கைத்தீவு முழுவதும் தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வு மேலோங்கி காணப்பட்டது
அம்பாறை மாவட்டத்தில் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்கள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டார்கள் இதில் இங்கினியாகலை என்ற இடத்திலிருந்த கல்லோயா ஆற்றுப் பள்ளத்தாக்கு அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான கரும்புத் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 150 தமிழ்த் தொழிலாளர்கள் அதே தொழிற்சாலையில் வேலை செய்த சிங்களத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டார்கள் பலர் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் அ��ைகுறை உயிருடன் இருந்தவர்களும் இறந்தவர்களும் எரியும் தீயில் தூக்கி வீசப்பட்டார்கள் இங்கு நடைபெற்ற இனப்படுகொலையே இங்கினியாகலை இனப்படுகொலையென வர்ணிக்கப்படுகிறது இதுவே இலங்கை வரலாற்றில் முதன் முதலில் பெருந்தொகையாகத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவமாகும்
இப்படுகொலைகளில் ஏறக்குறைய 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக "Emergency 58" என்ற நூல் தகவல் வெளியிட்டுள்ளது
The Sri Lankan racist state must immediately release singer Sangeethsan who has been arrested under the Prevention of Terrorism Act!
Senthamilan SEEMAN
Chief Coordinator, Naam Tamilar Katchi
The Sri Lankan racist state must immediately release singer Sangeethsan who has been arrested under the Prevention of Terrorism Act!
The arrest of our beloved brother, Hip Hop Sangeethsan, by the Sri Lankan racist state under the Prevention of Terrorism Act — for expressing through his songs the Tamil Eelam homeland, the glorious history of its liberation struggle, the martyrs who sacrificed their lives for the homeland’s freedom, and the cultural greatness of the Tamil people — is strongly condemnable.
The Sri Lankan government, which arrogantly boasted that it had completely eradicated terrorism, is now terrified of a single individual’s song even years after the armed struggle has fallen silent. If singing a song in a temple is considered deadly terrorism, how can Tamils live in peace under the Sri Lankan state?
Is honouring the valour of our departed ancestors and remembering their sacrifices considered terrorism? Is this what Marx and Engels taught the Janatha Vimukthi Peramuna (JVP) government, which calls itself a communist government under Anura Kumara’s leadership? Is this the path shown to them by Che Guevara, Fidel Castro, Lenin, and Ho Chi Minh?If Tamils remembering their liberation struggle ancestors is terrorism, then is the JVP remembering its own leaders who were hunted down and massacred by previous Sri Lankan governments also terrorism? Or not?Is this the ethnic harmony and national unity practised by the JVP government, which claims to follow leftist ideology? The arrest of Thambi Sangeethsan has torn off the mask of the JVP party, which has been practising racism for decades under a leftist guise. This arrest once again reveals to the world that the events conducted by the JVP government — such as permitting remembrance on Maaveerar Naal (Martyrs’ Day) — were all mere dramas, and that no matter which government comes to power in Sri Lanka, it will not deviate even an atom from Sinhalese racist policy.
What answer will the international countries, which once destroyed the armed Tamil liberation struggle claiming it was an obstacle to peace, give now? Is this degraded condition of the Tamil people the “peace” that the world countries desired? If even singing a song is treated as an act of terrorism under the Prevention of Terrorism Act, how can Tamils ever live together with Sinhalese? The United Nations and the international community must now recognise the racist, monstrous face of Sri Lanka and stand in support of the Tamil people’s liberation.
Tamil Members of Parliament in the Sri Lankan Parliament must raise their voices demanding the release of Thambi Sangeethsan.There is no greater racist atrocity than preventing people from honouring their own ancestors. There is no worse form of slavery than denying permission for arts, including songs, by labelling them as terrorism.Therefore, I strongly demand that the Sri Lankan racist state immediately release Thambi Sangeethsan, who has been arrested under the Prevention of Terrorism Act.
🚨 'If a song is terrorism, how can Tamils live in peace?' Seeman demands release of detained Eelam rapper
Naam Tamilar Katchi (NTK) leader Seeman has called for the immediate release of Tamil rapper Hip Hop Sangeeth, condemning his arrest under Sri Lanka's Prevention of Terrorism Act (PTA) and questioning how a song could be treated as a security threat more than seventeen years after the end of the armed conflict.
In a statement issued on 5 June, Seeman said Sangeeth's music reflected the Tamil homeland, the history of the Tamil liberation struggle, those who lost their lives during the struggle, and Tamil culture.
The rapper, whose real name is Sangeethsan Ganeskumar, was arrested earlier this week and remanded under the PTA after Sri Lankan authorities alleged that material he shared on social media promoted the Liberation Tigers of Tamil Eelam (LTTE).
His detention has sparked criticism from Tamil political leaders, civil society organisations, artists and lawyers, with many arguing that the case represents a further attempt to criminalise Tamil cultural and artistic expression.
Questioning the rationale behind the arrest, Seeman noted that successive Sri Lankan governments have repeatedly claimed that the armed conflict ended in 2009 and that the LTTE was militarily defeated.
"If singing a song in a temple is considered deadly terrorism, how can Tamils live in peace under the Sri Lankan state?"
குமரி உரிமை மீட்புப் போராளிகள் தேம்பனூர் பொன்னையன், மேக்கன்கரை ராமையன், மணலி பாலையன், தொடுவெட்டி பப்பு பணிக்கர், புதுக்கடை அருளப்பன், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமாரன், புதுக்கடை செல்லப்ப பிள்ளை, தேங்காய்ப்பட்டணம் பீர்முகம்மது என மொத்தம் 9 பேரை துப்பாக்கியால் சுட்டு இனப்படுகொலை செய்த கேரள காங்கிரசின் பட்டம் தாணு பிள்ளை ஆட்சியை கவிழ்த்து, ஒட்டு மொத்த இந்தியாவையும் திருவிதாங்கூர் நோக்கி திரும்பச் செய்து, வேறு வழியின்றி குமரி மண்ணை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டிய நெருக்கடியை பிரதமர் நேருவுக்கு ஏற்படுத்திய இனமானக் காவலர்..!
திருவிதாங்கூர் சமஸ்தான நீதிமன்றங்களில் குறிப்பிட்ட சாதி���ினர் மட்டுமே நாற்காலியில் அமர வேண்டும், குறிப்பிட்ட சாதியினர் தண்ணீர் குடிக்க தனித்தனிப் பானைகள் என்றிருந்த தீண்டாமை இழிவுகளை தம் கால்களால் எட்டி உதைத்து உடைத்தெறிந்து வரலாற்றை மாற்றிய புரட்சியாளர்...!
திருவிதாங்கூர் திருமூலம் சட்டசபையில் வரி கட்டுவோருக்கு மட்டுமே இருந்த ஓட்டுரிமையை மாற்றி, எல்லோருக்கும் ஓட்டுரிமை வேண்டுமென்று போர்க்குரல் எழுப்பிப் போராடிப் பெற்றுத் தந்த பெருந்தகை..!
உதட்டளவில் மட்டும் இனப்பற்றும், மொழிப்பற்றும் பேசிப்பேசி, ‘நெல்லை நம்முடைய எல்லை, குமரி நமக்கு தொல்லை’ என்று அடுக்கு மொழி வசனம் பேசி, திராவிடத் திருவாளர்கள் குமரி எல்லை காவு போவதை கைகட்டி வேடிக்கை பார்த்தபோது, தீரத்துடன் போராடி குமரி மண்ணை மீட்டுத் தந்த தெற்கெல்லை காவலர்..!
குமரி மண் தமிழ்நாட்டோடு இணைய எதிர்ப்பு தெரிவித்த கேரள காங்கிரசிற்கு எதிராக ‘திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை’ தொடங்கி தனித்துப் போட்டியிட்டு நாகர்கோயில் நாடாளுமன்றத் த���குதியையும், 12 சட்டசபை இடங்களையும் வென்று அகில இந்திய காங்கிரசை அதிரச்செய்த பெருந்தமிழர்..!
இடுக்கி, நெல்லூர் மாவட்டங்கள் தமிழருக்கே சொந்தம்’ என 1955ஆம் ஆண்டு டிசம்ப��் மாதம் 15ஆம் நாள் நாடாளுமன்றத்தில் வரலாற்றுப் பேருரை நிகழ்த்திய வீரமறவர்.. நாகர்கோவில் நகரசபை தலைவர், திருவிதாங்கூர் சட்டசபை, கல்குளம், விளவங்கோடு தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர், நாகர்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் என பொது வாழ்வில் தான் ஏற்றப்பொறுப்புகள் அனைத்திலும் மக்கள் வாழ்வு ஏற்றம் பெற வழிவகுத்த தூயவர்...
தெற்கெல்லை காத்த தீரர், நேர்மைமிகு வழக்கறிஞர், ஆகச்சிறந்த பேச்சாளர், தொலைநோக்கு சிந்தனை கொண்ட மக்கள் தலைவர், பொது வாழ்வில் உறுதியும், தூய்மையும் காத்த இலட்சியவாதி, தமிழ் மண்ணையும், மக்களையும் உயிரென நேசித்த போற்றுதற்குரிய பெருந்தமிழர் நம்முடைய தாத்தா ‘குமரித்தந்தை’ மார்ஷல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் ஐயாவின் பெரும்புகழ் போற்றுவோம்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Let Chennai Live b4 asking 2 Fly
Development is NOT purely measured by offering connectivity for a few people going to the airport once or twice a year, Chennai needs better daily connectivity for crores of people who travel every day to work, schools and hospitals!
Chennai region’s GDP is around $102B(31% of TN GDP), Bangalore is $120B(41% of KA GDP) and Hyderabad is around $80B(51% of Telengana GDP)
False narrative claiming that new airport means automatic economic growth!
A city is not truly developed because it has another airport or runway. A city is developed when people have free quality drinking water, flood-safe homes, functioning drains, congestion free traffic and dignified housing!
திருச்செந்தூரில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மேற்கொண்ட ஆய்வில்..
திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. அதிரடி
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் | VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடி���ம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எச்சரித்து
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
இடும்பாவனம் கார்த்திக்,
���ாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
🪔 JNU vigil honours victims of Tamil genocide
Students and activists at Jawaharlal Nehru University (JNU) in New Delhi observed Tamil Genocide Remembrance Day on 18 May, joining Tamils across the world in remembering the tens of thousands massacred by the Sri Lankan state.
Participants lit candles in remembrance during a vigil, as attendees gathered in tribute to the victims of the Mullivaikkal genocide.
Posters, memorial messages and candles were part of the observances, with participants paying homage to those killed by the Sri Lankan military offensive supported by several nations including India.
🚨 BREAKING: Human Rights Concerns Rise in Sri Lanka’s Tea Sector
New reports highlight the urgent need to protect Malaiyaha Tamil workers from exploitative conditions and forced labor on private tea estates in the southern region.
🎙️ Did Mullivaikkal End History?
The full text of a speech delivered by Father Jeewantha Peiris on May 16, 2026, at the SEDEC Caritas Hall, at an event organised by the Movement for Equal Rights.
_____
I think it is very important that in this evening’s discussion we ask the question of whether Mullivaikkal marks the end of history, because what we are still reading is history written by someone. Most of the time, we are compelled to read the history shaped by elite Sinhala nationalist narratives. But I believe it is necessary to question what the real history is, as read through a subaltern, non-elite, genuine political analysis - especially at a moment like today, in an evening like this, and as citizens living in the year 2026.
We know we are talking about a genocide.
"உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!" என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டாற்றுவதையே தனது வாழ்நாள் கடமையாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த பெருந்தமிழர்..!
அளவற்ற மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்டு தமிழர் ஓர்மைக்கு அரசியல் இயக்கம் கண்ட தமிழ்த்தேசியர்..!
‘தினத்தந்தி’ நாளிதழைத் தொடங்கி பாமரரும் உலகியலை அறியும் வகையில் எளிமையான உரைநடையில் செய்திகளை வழங்கி வாசிப்புத்திறனை வளர்த்தெடுத்த பெருமகன்..!
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் உச்சத்தில் இருந்த காலத்தில் எதற்கும் அஞ்சா நெஞ்சுரத்தோடு விடுதலைச் செய்திகளை வெளியிட்டு உண்மைகளை உலகறியச் செய்த தீரர்..!
இந்தித்திணிப்பு எதிர்ப்புப்போரில் பங்குகொண்டு சிறைப்பட்ட மொழிப்போர் வீரர்..!
தமிழீழ விடுதலையை முழுமையாக ஆதரித்து தமிழ்நாட்டிலிருந்து முதன்மை குரல் கொடுத்த தனிப்பெருந்தலைவர்..!
கபடி, சிலம்பம் உள்ளிட்ட தமிழர்களின் தொன்ம விளையாட்டுகள் அழிந்துவிடாது காத்து அடுத்தத் தலைமுறைக்குக் கட��்தும் அரும்பணியாற்றிய பெருந்தகை..!
பரந்து விரிந்த இப்பூமிப்பந்தில் தமிழர்க்கென்று ஒரு தேசம் வேண்டுமென்ற உன்னத கனவைச் சுமந்து,
சாதி- மத சகதியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்டெடுத்து ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பேரியக்கத்தைக் கட்டியெழுப்பிய எங்களின் முன்னத்தி ஏர்..!
காலச்சூழலில் அவ்வியக்கத்தைத் தொடரமுடியாது போனபோது, ‘வழிவழியே வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் ‘நாம் தமிழர���’ இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்!’ என்று தன்னுடைய ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த இலட்சியத் தாகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பேரறிவிப்பு செய்து வழிகாட்டிய காலஞானி..!
நாம் தமிழர் கட்சியின் நிறுவனர்!
தமிழர் தந்தை ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெரும்புகழ் போற்றுகிற இந்நாளில், இன விடுதலை எனும் உயரிய இலக்கை அடைய இடையறாது பாடுபடுவோம் என உறுதியேற்போம்!
நாம் தமிழர்!
வைகாசி 10 | 24-05-2026
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா?
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டுக்கு எந்த உரிமையும் இல்லை எனப் பேசியிருக்கும் கர்நாடகத் துணை முதல்வர் டி.கே.சிவ��்குமாரின் பேச்சு அடாவடித்தனத்தின் உச்சம்; காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தங்களுக்கென சொந்தமாக்கத் துடிக்கும் மோசடித்தனத்தின் வெளிப்பாடு.
க��்னடம் எனும் மொழி பிறப்பதற்கும், கர்நாடகா எனும் மாநிலம் பிறப்பதற்கும் முன்பிருந்தே, காவிரிக்கும், தமிழ்நாட்டுக்கும் வரலாற்றுவழி உயிர்த்தொடர்பு இருக்கிறது. அதனை முற்றாக அறுத்து, உலக நதிநீர் பங்கீட்டு விதிகளுக்கு நேர்மாறாக, காவிரி நதிநீர் உரிமையை கர்நாடகத்துக்கு மட்டுமானதாக உரிமை கொண்டாடத் துடிக்கும் சூழ்ச்சியின் வெளிப்பாடே மேகதாதுவில் அணைகட்டும் வஞ்சகச்செயல். அதனை தமிழ��்கள் நாங்கள் தட்டிக் கேட்காது, வேறு யார் கேட்பார்? காவிரியில் தமிழர்கள் எங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்கு இருக்கிறது?
காவிரி நதிநீர் உரிமை என்ன கர்நாடகத்துக்கு மட்டுமான சொத்தா? ஒரு ஆற்றின் தலைப்பகுதியில் வாழ்பவர்களைவிட கடைமடைப் பகுதியில் வாழ்பவர்களுக்கே ஆற்றின் மீது அதிக உரிமை எனும் நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, காவிரியின் மீது கர்நாடகத்தைவிட தமிழ்நாட்டுக்குத்தான��� அதிக உரிமை இருக்கிறது. அப்படியிருக்கையில், டி.கே.சிவக்குமாரின் பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு. அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆகவே, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் ஆணவப்பேச்சை முதல்வர் விஜய் அவர்கள் கண்டித்து, மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழ்நாட்டு அரசின் சார்பாக எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தல��மை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@CMOTamilnadu@TVKVijayHQ
புதுக்கோட்டை மாவட்டம் தொண்டைமாநல்லூரைச் சேர்ந்த விவசாயிகளான சேட்டு – கலைச்செல்வி இணையரின�� அன்புமகள் சீதாலட்சுமி அரசு மருத்துவமனையின் தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக உயிரிழந்த துயரநிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. செவிலியர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவந்த அன்புமகளை இழந்து வாடும் பெற்றோருக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புமகள் சீதாலட்சுமி மூ��்கில் வளர்ந்த சதையை அகற்றுவதற்காக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து அளித்து மாணவி உயிரிழக்க காரணமாகியுள்ள மருத்துவர்களின் அலட்சிய செயல்பாடு வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.
உயிர்காக்கும் மருத்துவம் என்பது தனியார் முதலாளிகள் இலாபமீட்டும் பெரும் விற்பனை சந்தையாகிவிட்ட தற்கால��் சூழலில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளையே முற்றுமுழுதாக நம்பி மருத்துவம் மேற்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. கோடிக்கணக்கான ஏழை மக்களின் உயிர் காக்கும் பெரும்பொறுப்பைச் சுமந்து நிற்கும் அரசு மருத்துவமனைகள் பெரும் தொண்டுள்ளத்தோடும், கவனத்தோடும் மருத்துவச்சேவை புரிய வேண்டியது இன்றியமையாததாகும். ஆனால், நடைமுறையில் அவ்வாறு செயல்படுவதில்லை என்பது மிகுந்த வேதனைக்குரியது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை அவமானப்படுத்துவதும், படிக்காத பாமர மக்கள்தானே என்ற அலட்சியத்தோடு மருத்துவம் அளிப்பதுமே தொடர் உயிரிழப்புகளுக்கு ��டிப்படை காரணமாகும்.
தமிழ்நாடு அரசும், அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகையையும், மருந்துகள் மற்றும் மருத்துவக் கருவிகளின் இருப்பையும், அளிக்கப்படும் மருத்துவத்தின் தரத்தையும் உறுதிசெய்ய, தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை முறையாகச் செய்யத் தவறுவதாலேயே தற்போது அநியாயமாக ஓர் உயிர் பறிபோயுள்ளது. கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப்பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடர்வதை தவெக அரசு வேடிக்கை பார்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் பெருந்துரோகமாகும்.
ஆகவே, அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்க���் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அன்புமகள் சீதாலட்சுமி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி