மக்கள் நல கூட்டணியில் இருந்த போது கருணாநிதியை "கட்டுவிரியன்" பாம்பு என்று பொதுவில் சொல்லியவர் திருமா. சில வருடங்களுக்கு முன்பு "ஸ்டாலின் அவர்கள் சொல்லித்தான் மக்கள் நல கூட்டணிக்கு சென்றோம்,அது ஒரு அரசியல் கணக்கு" என்றார் .
அரசியலுக்கு வந்த புதிதில் தலித் சமூகத்திற்காக உழைத்த தலைவர் இளைய பெருமாளை அவமானப் படுத்தினார் .
இப்படி பட்டியலிட்டு கொண்டே போகலாம் .
ஆகவே திமுகவில் இருந்து வெளியேறினால் மட்டும் விசிக பரிசுத்த கட்சி ஆகி விடுமா ? அப்படி ஒரு மாயயை யார் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ?
நேர்மை இல்லாதவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் அவர்களால் எந்த பயனும் மக்களுக்கு இல்லை என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
பிரியங்கா அன்பும் உணர்வும் நிறைந்தவர். தனது தந்தையை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் நளினியை சந்தித்து விட்டு வந்து நளினி மீது பரிதாப பட்டு மனம் வருந்தி பேசினார் என் தங்கை பிரியங்கா. இத்தனை வருடம் எனக்காக, அப்பாவுக்காக, அம்மாவுக்காக, யார் யாருக்காகவோ பிரச்சாரம் செய்திருக்கிறார். ஒரு நாளும் தான் தேர்தலில் நின்றதில்லை. இப்போது தான் தேர்தலில் முதன் முதலில் நிற்கிறார். அவருக்காக பிரச்சாரம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
- ராகுல் காந்தி
“எல்லோருக்கும் எல்லாம்” என்று பேச்சளவில் கூறிவிட்டு.. “கார்பரேட்டுக்கு தான் எல்லாம்” என்கிற ரீதியில் @CMOTamilnadu கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை போராடும் #சாம்சங் தொழிலாளர்களை தீவிரவாதிகளைப் போல் நடத்துவது கண்டனத்துக்குரியது.. #SamsungProtest@tncpim
சாம்சங் போராட்டத்தில் மூன்று அமைச்சர்களை அனுப்பி ஐம்பது பேர் கூட இல்லாத தொழிலாளர்களோடு பேச்சு நடத்தி போராட்டம் முடிவுக்கு வந்தது என்று ஊடகங்களை சந்தித்து அமைச்சர்களே பொய் செய்தியை பரப்பினர். முதலவர் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் என்று குறிப்பிட்டு பேசினார்கள்.
நேற்று சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசினார் டிஆர்பி.ராஜா. பின் போராட்டத்திற்கு ஆதரவான தொழிலாளர்களை கண்காணிக்க பேருந்துகளில் புகுந்து அராஜகம் செய்தனர் காவல்துறை.
நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து தொழிலாளர்களை கைது செய்திருப்பதாக செய்திகள் வருகிறது.
ஆதவ் அர்ஜூனா பேட்டிக்கு மூன்று நாள் தொடர்ந்து ப்ரைம் நேரத்தில் இடம் கொடுத்த ஊடகங்கள் இன்று வரை மௌனம். கடந்த மூன்று வருடமாக தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் தமிழ் ஊடகங்கள்.
Threat to Constitution in Tamil Nadu. Body of Dalit women 'NOT PERMITTED ' to taken in common way in Thiruvannamalai. Initiate action against District Collector & SP in SC/ST Attrocities ACT @mkstalin@tnpoliceoffl
Mrs. Armstrong, BA, BL.,
@Mayawati@AnandAkash_BSP
கற்பனை செய்யுங்கள்,
சொர்க்கம் என்று ஒன்று இல்லை என,
கொஞ்சம் முயன்றால் கற்பனை எளிதுதான்.
கீழே நரகம் என்று எதுவுமில்லை.
மேலே வெறும் வானம்தான்.
கற்பனை செய்யுங்கள்,
அனைத்து மக்களும் இன்றுக்காகவே வாழ்வது போல.
கற்பனை செய்யுங்கள்,
தேசங்கள் என எதுவுமில்லை என.
எதற்காகவும் கொல்ல வேண்டியதில்லை;
எதற்காகவும் சாக வேண்டியதுமில்லை.
மதங்கள் என்றும் எதுவுமில்லை என.
கற்பனை செய்யுங்கள்,
உங்கள் வாழ்வை அமைதியாக வாழ்வது போல.
என்னைக் கனவு காண்கிறேன் எனலாம் நீங்கள்.
ஆனால் நான் மட்டும் தனித்தில்லை;
விரைவில் என்னுடன் நீங்கள் இணைவீர்கள்.
உலகம் ஒன்றாகும்.
- ஜான் லெனன், Imagine
(மொழிபெயர்ப்பு: ஸ்ரீதர் சுப்ரமணியம்)
(சொர்க்கம், நரகம், மதங்கள், கடவுளர்கள், தேசங்கள் அற்ற ஒரு உலகை கற்பனை செய்த ஜான் லெனன் பிறந்த நாளான அக்டோபர் 9ம் தேதி 'கடவுள் எனும் ஸ்பைடர்மேன் தொடர் துவங்கும்.)
கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் வெள்ளைச் சர்க்கரை ( சில பழுப்பு சர்க்கரை) சில சுத்திகரிப்பாளர்களால் எலும்புக் கரியைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படுகிறது. [2] இந்த காரணத்திற்காக கரும்பிலிருந்து வரும் வெள்ளை சர்க்கரை சைவமாகக் கருதப்படுவதில்லை.
https://t.co/omjBNx0V4l
திருப்பதி லட்டு விவகாரத்தில், அனைத்து ஊடகங்களும் மாட்டுக் கொழுப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதன் பெயர் மாட்டுக் கொழுப்பு அல்ல. அதன் பெயர் முதனை. மாட்டுக் கொழுப்பு என்பது இறைச்சி.
இந்த நெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக்கொள்வார்கள். இந்த நெய் ஆறினால் கெட்டியாகி விடும். பிறகு, இந்த முதனையை தேவை என்கிறபோது, சிறிது அளவு எடுத்து காய்ச்சி சோறு குழம்புடன் பிசைந்து சாப்பிட்டால், பசு நெய் தோற்றுப்போகும்.
4 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் எழுதிய, பெரிய விவாதத்தை ஏற்படுத்திய கட்டுரை. மறுநாளே ஆ.ராசாவுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி கிடைத்தது. ஆனாலும் அவர் என்னை திட்டி அறிக்கை விட்டார். இன்றும் திமுகவின் ஆட்சியிலும் கட்சியிலும் பட்டியலினத்தவர் புறக்கணிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது.
“ அறிவியலால் மட்டுமே முடியும்”
- ரவிக்குமார்
அரசுப் பள்ளியில் ‘ஊக்கப் பேச்சாளர்’ என சொல்லிக்கொள்ளும் ஒருவரை அழைத்துப் பேச வைத்ததும், அவர் பாவ- புண்ணியம், முற்பிறவி என மூடக் கருத்துகளை மாணவர்களிடையே பேசியதும் இப்போது விவாதப் பொருள் ஆகியிருக்கின்றன.
அறிவியல் சிந்தனைக்கு எதிரானவர்கள் ஆதிக்கம் செலுத்தும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இந்த இக்கட்டான காலத்தில், அறிவியல் அணுகுமுறையைப் பரவலாக்குவதும் காப்பாற்றுவதும் மிக மிக அவசியம். அதில் ஆசிரியர்களின் பங்கேற்பு முக்கியமானது. அறிவியலின் ஆற்றல் குறித்து உலகப்புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் க்ளோத் லெவிஸ்த்ராஸ் கூறிய பின்வரும் கருத்துகள் எப்போதும் நாம் நினைவில் கொள்ளக்கூடியவையாகும்:
“ நவீன அறிவியலானது அதனுடைய சொந்தப் பாதையில், அதாவது குறுகலான அதன் பாதையில் உந்தி உந்தி முன்னேறுவது மட்டுமின்றி அந்தப் பாதையை அதே வேளையில் அகலப்படுத்தியும், முன்னர் விடை காணாமல் விடப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டும் வருகிறது.
இப்படிச் சொல்வதால், அறிவியல் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் எனக் கண்மூடித்தனமாக நம்புகின்ற ஒருவனாக நான் குறிக்கப்படலாம். நல்லது, நான் அப்படியான நம்பிக்கை கொண்டவனல்ல. ஏனெனில், அறிவியல் முழுமையடைந்து எல்லா சிக்கல்களையும் தீர்த்துவிடும் நாள் ஒன்று வரும் என நான் நம்பவில்லை. எப்போதுமே, புதிய பிரச்சனைகள் எழும், அதே வேளையில் ஒரு டஜன் வருடங்களுக்கு முன்போ அல்லது ஒரு நூற்றாண்டுக்கு முன்போ தீர்க்கமுடியாது என நம்பப்பட்ட பிரச்சனைகளை அறிவியல் தீர்த்துவைக்கும்.
புதிய பிரச்சனைகள், அதுவரையிலும் பிரச்சனை என நினைக்கப்படாத பிரச்சனைகள் எழும். அறிவியல் நமக்குத் தருகின்ற விடைகளுக்கும் அந்த விடைகள் புதிதாக எழுப்புகின்ற கேள்விகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி எப்போதுமே இருந்துவரும். எனவே இந்தவிதத்தில் நான் "அறிவியல்வாதி" அல்ல.
அறிவியல் நமக்கு எந்தக்காலத்திலும் எல்லா விடைகளையும் தந்துவிடாது. நாம் செய்ய முயற்சிப்பது என்னவெனில், நாம் தருகின்ற விடைகளின் எண்ணிக்கையையும், தரத்தையும் மிக மெதுவாக உயர்த்தும் வேலையைத்தான். நான் நினைக்கிறேன், அந்த வேலையை அறிவியலின் மூலமாக மட்டும்தான் நாம் செய்ய முடியும்.”
இன்றைய மாணவர்களுக்கு வலுவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டிய செய்தி இதுதான் : “ உலகின் சிக்கல்களுக்கு அறிவியல் மூலமாகத்தான் விடை காண முடியுமே தவிர, ஆன்மீகத்தின் மூலம் அல்ல”
கொல்கத்தா வன்புணர்வு குறித்து நாம் பேச துவங்கிய சில தினங்களில் தமிழகத்தில் உள்ள ஓரத்தநாடு பகுதியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருப்பதை குறித்து இங்கே யாருக்கும் பெரிதாக தெரியாமல் போனது .
சென்னையில் பணி செய்து கொண்டிருந்த 23 வயது பெண் தஞ்சாவூர் ஒரத்தநாடு கிராமத்திற்கு தன்னுடைய கல்லூரி சான்றிதழை பெற சென்ற நேரத்தில்,அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் அவரை பகல் நேரத்தில் ,அதுவும் அந்த பெண்ணின் வீட்டின் அருகே உள்ள கொட்டாயில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து ,சாவகாசமாக பைக்கில் வெளியேறிய காட்சி ,CCTV இல் பதிந்து இருக்கிறது .
இரண்டு மைனர்களை காவலுக்கு வைத்து கொண்டு நான்கு ஆண்கள் அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளனர்.
மேலும் அந்தப் பெண்ணை பீர் பாட்டில் கொண்டு சாரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
அந்தப் பெண் அதீத காயங்களோடு தன்னுடைய வீட்டுக்கு வந்து நடந்த விஷயத்தை தன் உறவினர்களிடம் சொல்லி, உடனடியாக அவர்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பாப்பாநாடு காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார். அவருக்கு அங்கு எந்த விதமான ஆறுதலும் கிடைக்கவில்லை. அங்கே இருந்த பெண் போலீஸ் சூர்யா அவரை மோசமாக நடத்தி, கம்ப்ளைன்ட்டை பாதிக்கப்பட்டவர் கையாலேயே எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். மேலும் அந்தப் பெண்ணிற்கு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை.
அங்கே அவமதிப்பிற்கு உள்ளான அந்தப் பெண்ணும் குடும்பத்தினரும் அங்கிருந்து 14 கிலோமீட்டர் தள்ளி உள்ள All Womens போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். அங்கே அந்தப் பெண்ணை மெடிக்கல் எக்ஸாமினேஷன் எதுவும் செய்யாமல், கம்ப்ளைன்ட் வாங்காமல், அவரை ஆஸ்பத்திரிக்கு சென்று சீட்டு வாங்கி வர சொல்லி இருக்கிறார்கள். அந்த பெண்ணோடு போலீஸ் செல்லவில்லை.
அங்கிருந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற அந்தப் பெண் தான் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயத்தை சொல்லியும் கூட அங்கே அவருக்கு மருத்துவ உதவி கிடைக்கவில்லை. பல மணி நேரம் அவர் புறநயாளிகள் சிகிச்சை பிரிவில் உட்கார வைக்கப்பட்டு ,அங்கேயே மயங்கி விழுந்து இருக்கிறார்.
பின்பு வந்த மருத்துவ அதிகாரி, அவருக்கு சிகிச்சை வழங்காமல் நீங்கள் முதலில் வழக்கு பதிவு செய்து வாருங்கள் பின்பு பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறார். அங்கிருந்து 28 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரத்தநாடு காவல் நிலையம் சென்று வழக்கு பதிவு செய்த பின்பு அந்தப் பெண் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட சம்பவம் நடந்து 15 மணி நேரம் கழித்து எஃப் ஐ ஆர் பதிவு செய்தது காவல்துறை. கிட்டத்தட்ட பத்து மணி நேரங்கள் கழித்து அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி கிடைத்தது.
பாலியல் பலாத்காரம் நடக்கும் பொழுது அதை வெளியில் செல்லாமல் மறைக்க வேண்டும் என்று நினைக்கும் பொது சமூகத்தில் தைரியமாக வெளியே சொல்லி காவல்துறை வரை சென்ற அந்த பெண்ணுக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். ஒரு பக்கம் வன்புணர்வு இன்னொரு பக்கம் காவல்துறை மற்றும் மருத்துவத்துறையால் நடந்த அவலம்.
இதில் பார்த்தீர்கள் ஆனால் காவல்துறையிலும் சரி, மருத்துவமனையிலும் சரி, கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை மிக மோசமாக நடத்தியதும் பெண்கள்தான்.
இந்த நிலையில் அந்தப் பெண் இரண்டு நாட்கள் கழித்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட போது, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளி அந்த பெண்ணை நோக்கி வந்து பேசி இருக்கிறான். அதுவும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தபோது.
இத்தனை அட்டூழியங்களும் தமிழகத்தில் நடந்து கொண்டிருந்த போது தான் நாம் விளையாட்டு விஷயங்களை பேசிக்கொண்டு மார்தட்டி கொண்டு இருந்திருக்கிறோம்.
ஒரு பெண் இங்கு தன்னுடைய வீட்டின் அருகிலேயே பாதுகாப்பாக இருக்க முடியவில்லை, அதற்கு மேல் துணிந்து வெளியே செல்லும் பொழுது காவல்துறையும் மருத்துவத்துறையும் அவரை பாதுகாக்காமல் விட்டுவிட்ட கேடுகெட்ட சூழல் தான் இங்கு நிலவி வருகிறது.
இந்த செய்தி வெளியில் பரவலாக பேசப்படவும் இல்லை, அரசு அதிகாரிகளும் அந்த பெண்ணை சென்று சந்திக்கவில்லை.
குறிப்பாக அந்த ஊர் எம் எல் ஏ அன்பில் மகேஷ் . தமிழக பெண்கள் நல வாரிய தலைவர் குமாரி எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் தான் தமிழகத்தில் பெண்கள் இருக்கிறார்கள். கனிமொழிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது குறித்து இந்த செய்தியை கவர் செய்த ரிப்போர்ட்டர் என்னிடம் தெரிவித்தார். ஆனால் கனிமொழி இதுகுறித்து எதுவும் பேசவில்லை என்பதும் சொன்னார். டிஜிபி மற்றும் தமிழக தலைமைச் செயலருக்கும் இது குறித்து அவர் எழுதியிருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. Outlook செய்தி லிங்க் கீழே.
உச்சநீதிமன்றத்தின் உள் ஒதுக்கீடு தீர்ப்பும் இட ஒதுக்கீட்டின் மீதான தாக்குதலும்
ரவிக்குமார்
இன்றைய வெளியீடு
30/- ரூபாய் விலையுள்ள இந்தச் சிறு நூல் 25 பிரதிகளுக்கு மேல் வாங்குவோருக்கு 20/- ரூபாய்க்கு தரப்படும். தொடர்புக்கு : 6382794478