கல்லூரி காலத்திலிருந்தே ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட விஞ்ஞானி. ஸ்காட்லாந்து பேராசிரியர்.
கடல் கடந்து வென்றாலும், தான் படித்த பள்ளிக்கும் பள்ளி மாணவர்களுக்கும் துணையாய் நிற்கும் பண்பாளர் சுதாகர் பிச்சைமுத்து.
#VoteForDMK
2025 நோபல் பொருளாதார விருது -
உலகை மாற்றிய தொழில்நுட்ப வளர்ச்சி: நிலைத்த வளர்ச்சியின் ரகசியம்
------------------------------------------------------------
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பொருளாதார விருது (The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2025) மூன்று முக்கிய பொருளாதார அறிஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது: ஜோயல் மோக்கியர் (Joel Mokyr), பிலிப் அகியோன் (Philippe Aghion) மற்றும் பீட்டர் ஹோவிட் (Peter Howitt).
ஜோயல் மோக்கியர்
Northwestern University, Evanston, IL, USA“for having identified the prerequisites for sustained growth through technological progress”
பிலிப் அகியோன்
Collège de France and INSEAD, Paris, France, The London School of Economics and Political Science, UK
பீட்டர் ஹோவிட்
Brown University, Providence, RI, USA
“for the theory of sustained growth through creative destruction”
இந்த மூவரும் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு தற்காலிக முன்னேற்றத்திலிருந்து நிலைத்த வளர்ச்சியாக மாறியது என்பதை வெவ்வேறு கோணங்களில் விளக்கியுள்ளனர்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், கடந்த இருநூறு ஆண்டுகளில் உலகளவில் தொழில்நுட்ப முன்னேற்றம் வழியாக நிலைத்த பொருளாதார வளர்ச்சி எவ்வாறு சாத்தியமானது என்பதை இந்த ஆண்டின் நோபல் பொருளாதாரப் பரிசு பெற்ற அறிஞர்கள் கணித மாதிரிகள் மற்றும் வரலாற்றுப் பகுப்பாய்வுகள் மூலம் விளக்கி நிரூபித்துள்ளனர்.
இதற்கான முக்கிய காரணம் - ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமூகங்கள் புதிய தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, பழையவற்றை மாற்றியமைத்த திறன் கொண்டிருந்ததே ஆகும்.
உதாரணத்திற்கு, கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொலைபேசியில் (Telephone) இருந்து அலைபேசி (Mobile phone) வரை ஏற்பட்ட மாற்றங்களையும் நாம் விரைவாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் ஓர் பகுதியாக மாற்றிக் கொண்டோம்.
இவ்வாறான தொடர்ச்சியான புதுமை ஏற்றுக்கொள்ளுதல் தான் வளர்ச்சியின் அடிப்படை என கூறலாம்.
இப்போது நமக்கு முன் நிற்கும் இரண்டு முக்கியமான கேள்விகள்:
1. புதுமை வழியிலான பொருளாதார வளர்ச்சி எதனால் நிலைத்ததாக மாறியது?
2. புதிய தொழில்நுட்பங்கள் பழையவற்றை மாற்றியபோது ஏற்பட்ட முரண்பட்ட நலன்களை வளர்ச்சி எவ்வாறு சமாளித்தது?
ஜோயல் மோக்கியர், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள் எவ்வாறு ஒருவரையொருவர் ஊக்குவித்து “சுயமாகத் தொடரும் வளர்ச்சியை” உருவாக்கும் செயல்முறையை விளக்கினார்.
அவர் கூறுவது, சமூகங்கள் புதுமைகளை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனப்பாங்குடன் இருந்தால் மட்டுமே அறிவியல் முன்னேற்றம் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதாகும்.
பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் இணைந்து 1992 ஆம் ஆண்டில் உருவாக்கிய ஆக்கப்பூர்வமான அழிவு (Creative Destruction) முறைமையில், நிறுவனங்கள் புதுமைகளை உருவாக்கி, பழைய தொழில்கள் மற்றும் பொருட்களை மாற்றியமைத்து, பொருளாதார வளர்ச்சியை முன்னெடுக்கின்றன என விளக்கினர். இது “படைப்பு” என்பதால் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது; அதேவேளை “அழிவு” என்பதால் பழைய தொழில்நுட்பங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
இம்மூவரின் ஆராய்ச்சிகள் பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு இயற்கையான நிகழ்வு அல்ல; மாறாக அது அறிவு (knowledge), புதுமை (innovation), தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் சமூக திறந்த மனப்பாங்கு ஆகியவற்றால் கட்டமைக்கப்படும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்பதை நமக்கு அவர்களது ஆய்வின் மூலம் நிரூபணம் செய்து காட்டியுள்ளனர்.
2025 நோபல் பொருளாதார விருது, உலகளாவிய பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை காரணம் புதுமைதான் (Innovative) என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது — “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் வழி நிலைத்த வளர்ச்சி” என்பது இவ்விருதின் மையக் கருத்தாகும்.
இன்று விருது அறிவிக்கப்பட்டதையடுத்து, நோபல் குழுவினர் விருதாளர்களில் ஒருவரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் அகியோன் (Paris School of Economics) அவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடினர்.
அந்த நேரத்தில் நிருபர்கள் கேட்ட முக்கியமான கேள்வி — “நீங்கள் பெற்றிருக்கும் நோபல் பரிசுத் தொகையை எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?”
அதற்கு பிலிப் அகியோன் மகிழ்ச்சியுடன், தனது விருது தொகையை பாரிஸ் பொருளாதாரப் பள்ளியில் (Paris School of Economics) உள்ள இளம் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முயற்சிகளுக்காக ஒதுக்கப் போவதாக தெரிவித்தார்.
மேலும், “செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தின் உதவியுடன் எவ்வாறு நமது பொருளாதார ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி, எதிர்காலப் போக்குகளை ஆராயலாம் என்பதையே கவனமாகப் ஆராய்ச்சி செய்ய விரும்புகிறேன்,” என்று கூறினார்.
அவர் மேலும், தற்போதைய முக்கிய சவால்களில் ஒன்றான தொழிற்சாலை கார்பன் உமிழ்வு (Industrial carbon Emission) குறித்து — “கார்பன் வரி, குறை கார்பன் உமிழ்வு தொழில்நுட்பங்கள் போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட முடியும்” என்பதையும் ஆராயப்போவதாக தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு நுட்பம் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகளை குறைக்குமா?, அல்லது புதிய தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்குமா? என்ற நம் கேள்விகளுக்கான பதில்களை நோபல் பரிசு பெற்ற இவ்வாய்வுகள் வழங்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
“புதுமை வழியிலான தொழில்நுட்ப முன்னேற்றமே எதிர்கால உலகின் திசையை நிர்ணயிக்கும்” என்பதே எனது உறுதியான நம்பிக்கை.
மேலும், தரவு சார்ந்த முடிவெடுப்புகள் (Data-driven decisions) இனி ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய முதலீட்டு கருவியாக உருவெடுக்கும். எதிர்கால முன்னேற்றங்களும், கொள்கை வடிவமைப்புகளும், ஆராய்ச்சி முடிவுகளும் அனைத்தும் தரவின் ஆதாரத்தில் நிலைநிறுத்தப்படும் என்கிற திசையில் புதிய யுகம் துவங்கியுள்ளது.
- பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து PhD, FRSC
கெரியட்-வாட் பல்கலைக் கழகம்
ஸ்காட்லாந்து, பிரிட்டன்
Picture Courtesy: The Royal Swedish Academy of Sciences & Nobel Foundation
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா!
1925-ல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு நூறாண்டுகளை நிறைவு செய்கிறது!
இதனைக் கொண்டாடும் வகையில், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி (St Antony’s College, University of Oxford) மற்றும் பலியோல் கல்லூரி (Balliol College, University of Oxford) இணைந்து, "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப்டம்பர் 4-5, 2025 அன்று சர்வதேச கருத்தரங்கை நடத்தின.
ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஆசிய ஆய்வு மையத்தின் (Asian Centre for Research) ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் ஜிம் மாலின்சன் (Jim Mallinson, University of Oxford),மற்றும் பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி (Faisal Devji (St Antony's College)) ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் (22 speakers) இந்நிகழ்வில் கலந்துகொண்டு, பின்வரும் தலைப்புகளில் ஆய்வு விவாதங்களை முன்வைத்தனர்:
• பெரியார் மற்றும் திராவிட இயக்கம்
• பெண்ணியம், திருமணம் மற்றும் கண்ணியம்
• சாதி மற்றும் சமூக நீதி
• அறிவு, நினைவு மற்றும் சட்டம்
• உலகளாவிய மற்றும் பிராந்திய மரபுகள்
• அரசியல் மற்றும் பண்பாட்டு அங்கீகாரம்
முதல்வரின் சிறப்புரை!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
1983 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழக தலைவர் மானமிகு ஆசிரியர் திரு கி வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதை முதல்வர் அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
அவரது உரையில், தந்தை பெரியார் உலகளவில் மானுட நீதிக்காக ஆற்றிய பணிகளையும், அவரது பேரனாக இந்நிகழ்வில் பங்கேற்றதையும் உணர்ச்சிபூர்வமாகப் பகிர்ந்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திரு கலைஞர் அவர்கள் சுயமரியாதை இயக்கம் குறித்து அவர் பேசிய "ஆண்டவன் பெயரால், மதம், சாதி, இதிகாச புராணங்களின் பெயரால் தாழ்த்தப்பட்டுகிடந்த மக்களை பீடுநடை போடச் செய்த சிறப்புகுரிய இயக்கமாக சுயமரியாதை இயக்கம் திகழ்ந்தது" குறிப்பினை மேற்கோள் காட்டினார்.
தந்தை பெரியாரின் திருவுருவப்படம் திறப்பு!
இந்நிகழ்வில், தந்தை பெரியாரின் திருவுருவப்படம் முதலமைச்சரால் திறக்கப்பட்டது. இந்தப் படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற திரைப்படக் கலைஞர் திரு. தோட்டா தரணி அவர்கள் நேர்த்தியாக வரைந்துள்ளார். இப்படம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி வளாகத்தில் (St Antony’s College, University of Oxford) நிரந்தரமாகப் பொருத்தப்பட உள்ளது.
உலகமயமாகும் பெரியார்!
சுயமரியாதை இயக்கம் மூடநம்பிக்கைகளை உடைத்து, பெண் விடுதலை, ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைப் பெற்றுத் தந்தது. இன்று, பெரியாரின் பங்களிப்பு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவரது மரபு விவாதிக்கப்படுவது நமக்குப் பெருமை!
அனைவருக்கும் அழைப்பு!
பிரிட்டனுக்கு வரும் நண்பர்கள், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (St Antony’s College, University of Oxford) தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தைப் பார்வையிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த வரலாற்றுப் பெருமைமிகு நிகழ்வை சாத்தியமாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர், ஆராய்ச்சியாளர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு உளமார்ந்த நன்றி!
இப்பெருமைமிகு விழாவில் எனது நண்பர்களுடன் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா - தமிழர்களின் பெருமிதம்!
-பேராசிரியர் சுதாகர் பிச்சைமுத்து, PhD, FRSC
ஸ்காட்லாந்து, செப்டம்பர் 5, 2025
@mkstalin@TRBRajaa
#Periyar100 #SelfRespectMovement #OxfordUniversity
On behalf of Briton Tamil Diaspora, We are honoured to welcome the Hon’ble Chief Minister of Tamil Nadu, @mkstalin, to deliver the commemorative speech at the Self-Respect Movement and its Legacies Conference at University of Oxford University, UK, on 4 September, 2025.
🌍📖 #SelfRespectMovement #Oxford
திராவிட மாடலின் மையம் "எல்லோருக்கும் எல்லாம்".
அதாவது, சாதி, மத, பேதங்களை தாண்டி, அனைத்து சமூகப் பிரிவினருக்கும் சம உரிமைகள் மற்றும் அரசியல், கல்வி, வேலை வாய்ப்புகள் ஆகியவையில் சம பங்களிப்பு கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடலின் அடித்தளம்.
அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில், அரசின் அதிகாரபூர்வமான பதவிகளில், எளிய பின்னணியில் இருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளை நியமிப்பது மிகவும் முக்கியமானது. இது சமூக நீதி மற்றும் நியாயத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
இந்த பணியில் மிகுந்த சவால்கள் இருந்தாலும், மனித வள மேம்பாட்டுக்கான திறன் பயிற்சியை இலக்குகளுடன் திட்டமிட்டு, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முதலீட்டை சரியான நேரத்தில், சரியான நபர்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியமான பணியாகிறது.
இதை தெளிவாகக் கணித்த தமிழ்நாடு அரசு, “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு மாதந்தோறும் Rs 7,500 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது.
இந்த உதவித் தொகை, மாணவர்கள் தேர்வில் முழு கவனம் செலுத்த, அவர்களுக்கு ஒரு உறுதியான ஊன்றுகோலாக இருந்தது.
இன்று யூ.பி.எஸ்.சி. (UPSC) தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று, உதவித் தொகை பெற்ற 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக தேர்ச்சி பெற்ற 1009 பேரில், 4.95% பேர் தமிழ்நாட்டிலிருந்து, இந்தத் திட்டத்தின் பயனாளிகளே என்பதுவே மிகப் பெருமிதமான செய்தியாகும்.
இந்தப் பெரிய வெற்றிக்கான முதல் படியை, “நான் முதல்வன்” திட்டம் மூலம் தமிழக அரசு வெற்றிகரமாக அமைத்திருக்கிறது.
@naan_mudhalvan
இத்திட்டத்தை உருவாக்கி, சமூகத்தின் அடித்தளத்தை உயர்த்தும் இந்த நெறியில் செயல்பட்டு சாதனை படைத்த தமிழ்நாடு முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
-முனைவர் சுதாகர் பிச்சைமுத்து
22/04/2025
தமிழ்நாட்டில் மும்மொழி விவகாரம்: தமிழ், ஆங்கிலம் படித்து முன்னேறியவர்கள் கூறுவது என்ன? - BBC News
தமிழ்தமிழ்நாட்டில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வரும் "இரு மொழிக் கொள்கையே" (bilingual policy) போதுமானது.
மேலும் ஆங்கிலத்தை இன்னும் திறன்பட பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. இதை விடுத்து மூன்றாவது மொழியை கற்றல் என்பது குழந்தைகளுக்கு கூடுதல் சுமை என்பதோடு, அது பெரிய அளவில் பலனும் அளிக்காது.
இது குறித்து எனது கருத்தை பிபிசி தமிழ் நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டேன்.
பிபிசி தமிழ் நிறுவனம் இன்று பிரசுரம் செய்துள்ள "இருமொழிக் கொள்கையால் தடைகள் இருந்ததா? தமிழ், ஆங்கிலம் மட்டும் படித்து வாழ்வில் முன்னேறியவர்கள் கூறுவது என்ன?" என்ற கட்டுரையில் எனது கருத்தை வாசிக்கலாம்.
கட்டுரைக்கான லிங்
https://t.co/WqGsSdemIG
ஜப்பானில் வசித்தாலும், தொடர்ந்து தமிழ்நாட்டில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவித் தொகை, அரசுப் பள்ளிகளுக்கு உட்கட்டமைபினை மேம்படுத்த நன்கொடை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கல்வி அறப்பணிகளில் உங்களின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக, வட சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீங்கள் உதவி வருவது தனிப்பட்ட வகையில் பாராட்டுகுரியது.
மேலும் தோக்கியோ நகரில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் மொழி பயிற்றுவிக்கும் பணியில் தங்களின் முன்னெடுப்பிற்கு பாராட்டுகள் அண்ணா.
ஜப்பானிய மண்ணில் தமிழ் இலக்கியம் சார்ந்து தாங்கள் தொடர்ச்சியாக எடுத்து வரும் முன்னெடுப்புகள், நம் இலக்கியத்தை ஜப்பானியர்களிடம் கொண்டு சேர்த்தது. இப்படி, தாங்கள் செய்த உதவிகளை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.
திராவிட வரலாறு குறித்து தொடர்ச்சியாக பேசியும் எழுதியும் வரும் உங்களை "திராவிடத்தால் நான்" வரிசையில் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் அறப்பணி தொடரட்டும்.
சிறுவயதிலேயே கலைஞரின் பேச்சால் திராவிட அரசியலின் அவசியத்தை புரிந்து கொண்ட செந்தில்குமார், ஜப்பானில் தமிழ் மாணவர்களுக்கான உதவி, மக்கள் நலப் பணிகள் என ஆர்வமாக ஈடுபட்டு வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel