நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் வாகன பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் 30 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
நிச்சயமாக அதிக லஞ்ச பணம் புரளும் ஒரு துறைகளில் ஒன்று இதுதான்.
காலேஜ் படிக்கும் பொழுது ��ிரைவிங் லைசன்ஸ் எடுக்க போயிருந்தேன். பக்கத்து வீட்டு அண்ணாவின் பைக்கை ஓட்டி நன்றாக பயிற்சியும் எடுத்திருந்தேன். என்னிடம் பைக் கிடையாது அவர்கள் கொடுத்த பைக்கை பயன்படுத்தினேன். Gear எல்லாம் மாற்றவே வேண்டாம் அது பாட்டுக்கு ஓடும். சரியாக எட்டும் போட்டிருந்தேன். ஆனாலும் அதிகாரி எனது விண்ணப்பத்தை ஓரமாக வைத்து விட்டார்
எதுவுமே சொல்லவுமில்லை என்னை போலவே இன்னும் சிலரும் காத்துக் க��ண்டிருந்தோம்.
திடீரென ஒருவர் வந்து உங்களுக்கு லைசென்ஸ் இப்போதைக்கு கிடைக்காது நீங்க எல்லாம் போயிட்டு மறுபடியும் அப்ளை பண்ணுங்க என்றார்.
ஏன் எதற்கு என கேட்டபோது சரியாக எட்டு போடவில்லை எட்டை பெரியதாக போட்டீர்கள் சிறிதாக போட்டீர்கள் என ஏதேதோ காரணம் சொன்னார்.
வேண்டுமென்றால் தலைக்கு 300 ரூபாய் என கொடுங்கள் நான் வேண்டுமானாலும் ��ோய் பேசி பார்க்கிறேன் என்றார். அவர் யார் என்ன என எதுவும் தெரியாது!
சிலர் கொடுத்தார்கள் என்னிடம் காசு இல்லை. அப்பொழுது படித்துக்கொண்டே நிறைய வேலைகளுக்கும் சென்று கொண்டிருந்ததால் லைசன்ஸ் தேவைப்பட்டது. நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராக பணம் கொடுத்தார்கள் இல்லையென்றால் வீட்டுக்கு போனார்கள் ஆனால் எனக்கு லைசென்ஸ் கண்டிப்பாக வேண்டும் ஒரு கட்டத்திற்கு மேல் அழுகை வருவது மாதிரி ஆகிவ���ட்டது.
இப்பொழுது அதிகாரியை நேரடியாக வந்தார் என்னப்பா நீ போகலையா என்றார்.
எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன். விசும்பல் மட்டும் வந்து கொண்டே இருந்தது. போய்விட்டார். மாலை 4 மணி வரை காத்திருந்தேன். பிறகு ஒருவர் வந்து ஐயா கூப்பிடுகிறார் என சொன்னார்.
போனேன். இன்னைக்கு வழக்கத்தை விட அதிகமாவே வந்துருச்சு அதனால நீ தப்பிச்ச என சொல்லி கையெழுத்து போட்ட ஆவணத்தை தூக்கி வீசினர்.
நன்றாக நினைவிருக்கிறது ஒரு ஒரிஜினல் அத்துடன் மூன்று டூப்ளிகேட் என எனது லைசென்ஸை எடுத்துக்கொண்டு அப்பாடா தப்பிச்சோம் என புறப்பட்டேன்.
அந்த லேமினேஷன் செய்யப்பட்ட லைசென்ஸ் இப்பொழுது தொடும்பொழுதும் அந்த 8 மணி நேர அவஸ்தை ஏதாவது ஒரு ஓரத்தில் நினைவுகளில் வந்து செல்லும்!
தோழர். பெ.சண்முகம் இன்று தீக்கதிரில் 'புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும்' என்கிற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ஒரு வ���ி முக்கியமானது.
"இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும் திமுக - அதிமுக இதே நிலைபாட்டை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை"
கிட்டத்தட்ட இதே பொருள்படும்படியான தலையங்கம் நீலம் இதழில் அக்டோபர் 2023 ஆம் ஆண்டு எழுதப்பட்டு இருந்தது.
இடதுசாரி, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற இடது முற்போக்கு கட்சிகள் தனித்து ஆட்சிக்கு வரும் இலக்கு ஒரு புறமிருக்கட்டும், அதற்கான மு��ற்சியை கூட இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்கள் கட்டுக்குள் இருக்கும் வரை தான் புகழ்வார்கள். இந்தச் சூழலில் தமிழக வெற்றிக் கழகம் என்பது XYZ , அந்த இடத்தில் யார் வந்தாலும் திமுக அவர்களை இப்படித்தான் எதிர்கொள்ளும்.
இன்றையச் சூழலில் மிக முக்கியான கட்டுரை.
I still remember my tamil teacher's comment about this movie,
he said
அம்மணமா நடந்தா national award கொடுத்துடுவாங்க
That means, If an actress walks naked, she will be given national award.
He was misogyny.
ஏன் சார் கைது செய்யரதோட நிறுத்திடரீங்க... ஆகாஷை போல அவனது பெற்றோரையும் அடித்து துவைத்தால் தானே உங்கள் காவல்துறைக்கு பெருமை. பல பதக்கம் வாங்கலாம், ஸ்டெர்லைட்டில் ஸ்னோலினை கொலை செய்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்ததை போல உங்களுக்கும் பதவிஉயர்வு கிடைக்கலாம். அப்பாவிகளக் கொலை செய்தால் உங்களை காப்பாற்ற அதிகாரமிக்க கட்சிகளும், முன்னாள் இன்னாள் முதல்வர்கள் உள்ளார்கள். அவர்களது கட்சிகள் உள்ளன. கலெக்டர் இருக்கிறார், உயர் அதிகாரிகள் உள்ளனர்.
இருக்கவே இருக்கிறது நீதிமன்றமும், நீதியரசர்களும்.
இத்தனை பேர் உங்களை காப்பாற்றுவதே தமது தலையாய கடமையாக வைத்திருக்கும் போது எத்தனைபேர�� வேண்டுமானாலும் காவலர்கள் அடித்துக்கொல்லலாம் தானே. இதுதானே இந்திய சனநாயகம்?
நீதிமன்றம் 100 நாட்களாக மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததே, எதனால் என சிலர் கேட்கலாம்..
"தீபப்பிரச்சனையை விடவா ஆகாஷ் படுகொலை முக்கியமானது" என மதுரை நீதிமன்றம் நினைப்பது அவர்களுக்கு தெரியாது போல...
'திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாமல் போனால், மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடும்' என்பதால் தானே நீதியரசர் அந்த மலைமீதேறி ஆய்வு செய்து தீர்ப்பு கொடுத்து, இன்றளவும் அதற்காக போராடுகிறார். மூன்றாம் உலகப்போரை நிறுத்தும் பணியிலிருக்கும் நீதிமன்றம் ஆகாஷுக்காக ஏன் வேலை செய்யவேண்டுமென கேட்பார்கள் அல்லவா... இதுவும் நியாயம் தானே.. ஆகாஷ்க்கு நீதி கொடுத்தால் தீபப்பிரச்சனை தீர்ந்துவிடுமா?.. எது முக்கியமென கணம் கோர்ட்டார் அவர்களுக்கு தெரியாதா?
இந்த லட்சணத்தில் ஆட்சி, அதிகாரம், நீதிமன்றங்கள் இருக்கின்றன.
இவர்களும், இவர்களது வெங்காய சனநாயகமும். இந்த நபர்களுக்காக நாம் வரி கட்டி, சம்பளம் கொடுத்து வேலைக்கு வைக்க வேண்டி இருக்கிறது.
��ினைவில் கொள்ளுங்கள்:
ஸ்னோலினை காவல்துறை சுட்டுப் படுகொலை செய்ததை ஜெயக்குமார்-பென்னிக்ஸ் அறிந்திருக்கலாம். இந்த இருவரும் காவலர்களால் படுகொலை செய்யபப்ட்டதை
அஜித்குமார் அறிந்திருக்கலாம். காவலர்களால் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதை ஆகாஷ் அறிந்திருக்கலாம். ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். இவர்களுக்கு அடுத்து நம்மில் யார் என்பது மட்டும் தான் நாம் அ���ியாதது.
இது அடுத்தவீட்டில் நடப்பதால் நாளை நமக்கும் நடக்காது என்பது அர்த்தமல்ல.
ராகுல் காந்தி நேற்று நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்து Gen Z கூட்டத்தில் பகிர்ந்த மிக முக்கியமான தரவுகள்:
* 3000 பேரில் 1 பேர் மட்டுமே UPSC தேர்வில் வெற்றி பெறுகிறார்.
* 3000 பேரில் 30 பேர் மட்டுமே IIT-யில் சேர்கிறார்கள்.
* 3000 பேரில் 180 பேர் மட்டுமே NEET தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்.
NEET மாணவர்கள் மட்டும் பயிற்சி மற்றும் தேர்வு தயாரிப்��ிற்காக ₹1.32 லட்சம் கோடி செலவிடுகின்றனர். ஆனால், மோடி அரசின் மொத்த கல்வி பட்ஜெட் ₹1.4 லட்சம் கோடி மட்டுமே.
இந்த தரவுகள், மாணவர்கள் மீது சுமத்தப்படும் மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தையும், கல்வி அமைப்பில் நிலவும் சமத்துவமின்மையையும் தெளிவாகக் காட்டுகின்றன.
Naidu ji, let’s try a thought experiment. Say your salary is 2 lakhs and your driver’s is 20,000. You announce a 50% increase for everybody. Your salary is now 3 lakhs and your driver’s is 30,000. The percentage or proportional increase is the same — but aren’t you much better off than your driver, than you used to be?
That’s what your fellow Southern CMs are concerned about. You don’t think there’s any difference between UP’s 80 MPs today versus Kerala’s 20 MPs, if it tomorrow becomes 120 vs 30? Some proportionate difference, huge difference in political weight — with 90 more UP MPs against 10 more Kerala MPs. Is that of no concern to you at all?
@ncbn@vdsatheesan@INCKerala
அதைச் செய்ய தவறிய தவெக @TVKVijayHQ
தலைமையிலான அரசு @CMOTamilnadu பாதிக்கப்பட்ட பெற்றோரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடு��்துகிறேன் என்கிற பேரில் காவல்துறையினரின் அராஜகப் போக்கு கண்டிக்கத்தக்கது.
நீதிமன்றம் விதித்த கெடுவைக் காரணம் காட்டி,(4/
Exactly, தலைவர் திருமாவளவன் should not had given such an explanation to these sold out journalist.
Another thing to notice is the comments tvk supporters towards thirumas explanation on tvk alliance. Both displays the caste vulgarity of tamil people.
1996 தேர்தலில் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து காங்கிரஸிலிருந்து விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி திமுகவுடன் கூட்டணி அமைத்தார் மூப்பனார். ஆனால் அவர் வெளியேறக் காரணமான அதே அரசியல் சூழலைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், ஆட்சிக் காலம் முடிவதற்குள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தார் கலைஞர் கருணாநிதி. எந்த அதிமுக கூட்டணியை எதிர்த்து மூப்பனார் தனிக்கட்சி தொடங்கினாரோ, அதே அதிமுகவுடன் மீண்டும் இணைய வேண்டிய நிலைக்கும் அவர் தள்ளப்பட்டார்.
தமிழ்நாட்டு அரசியலில் இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஆனால் அவற்றிற்கெல்லாம் நீண்ட நேர விளக்கங்களை சம்பந்தப்பட்ட தலைவர்கள் அளித்ததில்லை.
அண்மையில் புதிய தலைமுறையின் Open Talk நிகழ்வில், த.வெ.க-வை ஆதரித்ததற்கும் அமைச்சரவையில் இணைந்ததற்கும் இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்றரை மணி நேரம் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. அங்கு கேட்கப்பட்ட சில கேள்விகளும், தொடர்ந்து முன்வைக்கப்பட்ட எதிர்வினைகளும், விளக்கத்தைப் பெறுவதை விட அவர்களது முடிவை குற்றத் தன்மைக்குள் தள���ளும் வேகமே இருந்தது. அங்கிருந்த தலைவர்கள் அளித்த விளக்கங்களிலும் சில பத்திரிகையாளர்களுக்கு திருப்தி இல்லாதது வெளிப்படையாகத் தெரிந்தது.
அண்மைக் காலங்களில் வேறு எந்த அரசியல் தலைவர்களை நோக்கி இவர்கள் இதுபோன்ற கேள்விகளை எழுப்பியிருக்கிறார்களா? முன்னேற்பாடு இல்லாத, விமர்சனபூர்வமான கேள்விகளுடன் இதேபோன்ற ஒரு நேர்காணலை மற்ற முக்கிய அரசியல் தலைவர்களிடம் நடத்த முடியுமா?
அரசியலில் சரியோ தவறோ, தனித்த அரசியல் முடிவுகளை எடுக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த உரிமை எல்லோருக்கும் சமமாக அங்கீகரிக்கப்படாமல், சிலரிடம் மட்டும் தொடர்ந்து விளக்கம் கோரப்படும் போது, அது ஜனநாயக உரையாடலைத் தாண்டிய ஒரு அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக தலைவர் திருமாவளவன் போன்ற ஒருவரை எப்போதும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டிய இடத்தில் நிறுத்துவது மேலாதிக்க மனநிலை அன்றி வேறில்லை.
���னநாயகத்தில் விமர்சனமும் கேள்விகளும் அவசியமானவை. ஆனால் அவை அனைவரிடமும் ஒரே அளவுகோலுடன் முன்வைக்கப்பட வேண்டும். இல்லையெனில் அது ஊடக நடுநிலையாக அல்ல, அரசியல் முன்முடிவுகளின் வெளிப்பாடாகவே புரிந்துகொள்ளப்படும்.
மற்றவர்களுக்கு எப்படியோ, தலித்துகள் இதிலிருந்து உடைத்து வெளியேற வேண்டும். தங்களது அரசியல் தேர்வுகளையும் முடிவுகளையும் தொடர்ந்து பிறரிடம் நியாயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய நிலையிலிருந்து விடுபட வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழகத்தின் மிக முக்���ிய பத்திரிகையாளர்கள் வளைத்து வளைத்து, மடக்கி மடக்கி கேள்வி கேட்கிறார்கள் அதற்கு @Shanmugamcpim @thirumaofficial #வீரபாண்டியன் போன்றவர்கள் பொறுமையாகவும் காட்டமாகவும் பதில் சொல்ல கொண்டு இருக்கின்றனர்.
இந்த மாதிரி ஆளும் கட்சி தலைவரும் எதிர் கட்சி தலைவரும் ஒரு பிரஸ் மீட் அல்லது இந்த மாதிரி பத்திரிகையாள்கர் சந்தித்து பேச தைரியம் இருக்கா...
இரண்டு சினிமா நட்சத்திரங்களும் திரையில் மட்டும் தான் வாய் கிழிய பேசுவார்கள் போல...
@VinodhRavi4 The failure to recognize that one has performed poorly will instead
leave one to assume that one has performed well. As a result, the
incompetent will tend to grossly overestimate their skills and
abilities.