17 டிசம்பர் 2024 அன்று, என்னை கைது செய்தபோது என்னிடம் இருந்து, தேனாம்பேட்டை உதவி ஆணையர் Apple airpod பறிமுதல் செய்தார்.
அதை பறிமுதல் செய்ததற்கான ஒப்புகையும் கொடுக்கவில்லை. அதை திருப்பியும் தரவில்லை என்பதால், என்னிடம் இருந்து Apple airpod ஐ திருடிய தேனாம்பெட்டை காவல் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்து, அதை மீட்டுத் தரும்படி, சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
@chennaipolice_
இந்த generationல எத்தனை பேர்க்கு இந்த வீடியோ connect ஆகும்னு தெரியல.. mostly அப்பாக்கள் friendlyஆ இருக்காங்க
ஆனா.. பசங்ககிட்ட கடும் கண்டிப்போட இருந்துட்டு, அவங்க தோளுக்கு மேல வளர்ந்த பின்னால எப்டி handle பண்றதுனு தெரியாத 80ஸ் & 90ஸ் கிட்ஸ் அப்பாக்களை செமயா காட்டியிருக்காங்க 😂😂
சவுக்கு சங்கர் அவர்களின் வழக்கறிஞர் S.கோபாலகிருஷ்ணன் அவர்கள் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற எண்4ளில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று நீதிபதி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் சவுக்குசங்கருக்கு கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்கள்
அரை பவுன் மோதிரத்துக்கு குனிந்து ஆகாசத்துக்கு ஆசன வாயை காட்டும் ரவீந்திரன் துரைசாமியை எல்லாம் 'மூத்த பத்திரிகையாளர்' என முத்திரை குத்தும் mainstream media சவுக்கு சங்கரை 'Youtuber' என சொல்லி அரிப்பைத் தீர்த்துக் கொள்வதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
பெண் காவலர்களை குறித்து இழிவாகப் பேசியது தான் @SavukkuOfficial கைதுக்கு உண்மையான காரணம் என்றால் அதை கண்டிக்க தேவையும் இல்லை..!
ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியில் லாக்கப் டெத், டாஸ்மாக் scam, மணல் மாஃபியா, கஞ்சா புழக்கம், அதிகாரிகளின் மெத்தனம் என ஒன்றையாவது இந்த so called mainstream media-க்கள் விவாதித்தது உண்டா?
அதிமுக ஆட்சியில் எது நடந்தாலும் புரட்சியாய் வெடித்த so called சமூக போராளிகள் இந்த மூன்றாண்டுகளில் நடந்த அவலங்களுக்கு குறைந்தபட்சம் சமூக வலைதளத்திலாவது கண்டனத்தை பதிவு செய்ததுண்டா?
சவுக்கு சங்கர் 'Youtuber' எனில் யார் தான் பத்திரிகையாளர்?
இப்போது முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்!
#SavukkuShankarArrest
#SavukkuShankar
யூடியூபர் சவுக்கு சங்கர் கைதாகி இருக்கிறார். காவல்துறையில் பணி புரியும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கைதாகி கொண்டு போகும் வழியில் அவர் போன போலீஸ் ஜீப் சிறிய விபத்துக்கும் உள்ளாகி காயமுற்றிருப்பதாகவும் தெரிகிறது.
லோக்கல் ஆட்களை போலீஸ் கைது செய்து லாக்கப்பில் நையப் புடைத்து விடுவார்கள். நீதிமன்றத்தில் கேட்டால் 'பாத்ரூமில் வழுக்கி விழுந்து' விட்டதாக சொல்லச் சொல்வார்கள். இதுவும் அந்த மாதிரியான ஒரு 'விபத்தா' என்று தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும், கைது தேவைப்படும் அளவுக்கான குற்றமா இது என்பது கேள்விக்குரிய ஒன்று. ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்கப்படும் குற்றப் பிரிவுகளில் வழக்குப் பதிவானால் மட்டும்தான் முன் கூட்டிய கைது தேவைப்படும் என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் உறுதி செய்திருக்கிறது.++ சவுக்கு சங்கர் மீது பதிவாகிய வழக்குகள் அனைத்துமே ஏழு ஆண்டுகளுக்குக் கீழானவை.
அவரைக் கைது செய்தது போதாது என்று அவரது டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரையும் கைது செய்திருக்கிறார்கள். குற்றம்: அவர்கள் கஞ்சா வைத்திருந்தார்களாம்!
சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டியின் சிறிய காணொளித்துணுக்கு பார்த்தேன். அதில் அவர் பெண் கான்ஸ்டபிள்களை அவமானப்படுத்தியதாக தெரியவில்லை. ஆண் காவல் துறை அதிகாரிகளைத்தான் சாடி இருக்கிறார். பாலியல் தொல்லை கொடுப்பதாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக மாநில அளவிலான விசாரணை தேவைப்படும் கொடுங்குற்றம் என்பது தெளிவு.
ஆனால் அப்படி ஒரு புகாரை முன்வைத்ததுதான் இங்கே குற்றமாக பார்க்கப்படுகிறது. மிகவும் அவலமான அணுகுமுறை இது. நீதிமன்றத்தின் குறுக்கீட்டில் சவுக்கு சங்கர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என்பது நமக்குத் தெரிந்தது போல காவல் துறைக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்குள் கிடைக்கும் ஒரு சில நாட்களாவது அவரை உள்ளே வைத்திருக்கலாமே என்று ஆசைப்பட்டார்களா என்பது தெரியவில்லை. அந்த அளவுக்கு அவர்களுக்குக் கோபம் வந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.
ஊடக சுதந்திரம் குறித்த ஒரு பன்னாட்டு ஆய்வில் இந்தியாவின் மதிப்பீடு பல தரவரிசைகள் கீழே இறங்கி இருப்பது குறித்த ஒரு அறிக்கை சமீபத்தில்தான் வெளியானது. அதை முதல்வர் ஸ்டாலின் மேற்கோள் காட்டி மோடி அரசை விமர்சனம் வேறு செய்திருந்தார். ஆனால் தனது சொந்த மாநிலத்திலேயே ஊடக சுதந்திரம் ஏறக்குறைய அதே லட்சணத்தில்தான் இருக்கிறது என்பதை அவருக்கு யாராவது சொன்னால் உபயோகமாக இருக்கும்.
தமிழ் நாட்டு காவல் துறைக்கு கண்டனங்கள்.
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
Periyar is not just a human being or an icon who can never be erased. He is an ideology himself which has benefitted generations of the past and will benefit generation to come. Even his criticizers have only benefitted from his movement.
ஆதித்த கரிகாலனைக் கொன்ற முன்குடுமிகளின் வாரிசுகள்தான் தற்போதைய சிதம்பரம் தீட்சிதர் கும்பல்.
சைவத் திருமுறைகளைக் கரையான் அரிக்க விட்டவர்களும் இவர்களே.
இவர்களிடமிருந்தே இராஜராஜசோழன் திருமுறைகளை மீட்டார்.
இந்த முன்குடுமிகளின் முன்னோர்களைத்தான், தான் ஆட்சிக்கு வந்தவுடன் "காந்தளூர் சாலை கலமறுத்து" பந்தாடினான் இராஜராஜன்.
சரி... எப்படி இங்கே வந்தனர் இந்த முன்குடுமிகள்?
தில்லைவாழ் தமிழ் அந்தணர்கள் மூன்றாயிரம் பேர் சிதம்பரத்தில் வாழ்ந்தனர்.
இவர்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் மலைநாடுகளுக்கு இப்போதைய கோயம்புத்தூர் - பேரூர் வழியாக 3 ஆயிரம் பேரும் சென்றுவிட கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்ததுபோல சிதம்பரத்தை ஆக்கிரமித்தவர்கள் இந்த முன்குடுமிகள்.
பாபாஜி நாகராஜ் ஐயாவின் தந்தையார் பரங்கிப்பேட்டை முத்துக்குமார சுவாமிகள் கோவிலின் அர்ச்சகராக இருந்தவர்.
இவரை நம்பூதிரி என்றார்கள். அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றபோதும் நம்பூதிரிக்கு முத்துக்குமார சுவாமி கோவிலில் என்ன வேலை என்று ஆராய்ந்தபோது , - முன்குடுமி - இராஜராஜன் தொடர்புகள் கிடைக்கின்றன.
ஆக ஒரு பெரிய முன்குடுமிக் கும்பல் சோழர் காலத்தில் இருந்து இங்கே வந்து ஆட்டம் போட்டிருக்கிறது.
காந்தளூர் சாலை கலமறுத்ததை இன்றைய தமிழர்கள் அறியாதிருக்கலாம் முன்குடுமிகள் மறந்திருக்கலாம்.
ஆதித்த கரிகாலன் அதன் பின்னர் சித்தப்பா ஆட்சிவரை பொறுமை காத்திருந்து ஆட்சிக்கு வந்ததும் முதல் அடியே காந்தளூர் மீதுதான் இராஜராஜன் அடித்தார் என்றால் தமிழர்கள் பொறுமைசாலிகள் என்பதைத் தொடர்புடையவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
- வளர்மெய்யறிவான்