திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பலமுறை நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும், பலகட்ட பக்தர்களின் போராட்டங்களுக்கு பிறகும் தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக முருக பக்தர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் 'Venmani Creations' தயாரித்துள்ள 'சுடும் குருதி கொடுத்தேனும்' என்ற பாடலை நேற்று மாலை 05.00 மணியளவில் கமலாலயத்தில் வைத்து வெளியிட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
மிக ஆழமாக மக்கள் மனதில் நிற்கும் வகையில் தயாராகியுள்ள இந்த பாடலின் வரிகளை எழுதி பாடியுள்ளார் சகோதரர் @Vignesh260386. திரு Santhoshன் இசையிலும், N.Rathaan ன் இயக்கத்திலும் வடிவம் பெற்றுள்ள இப்பாடலை தமிழகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த பாடலின் link - https://t.co/FZ09f2waO3
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. வீரவேல் முருகனுக்கு அரோகரா..
#சுடும்_குருதி_கொடுத்தேனும்
#Sudum_kuruthi_koduthenum
#thiruparankundram_deepam
#திருப்பரங்குன்றம்_தீபம்
#திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் முருக பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பும் விதமாக, Venba creations சார்பில் சகோதரர் திரு.@vignesh260386 தயாரித்துள்ள பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நமது பாரம்பரியத்தையும் உரிமையையும் மீட்டெடுக்க, இந்தப் பாடலை உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு முருக பக்தர்களிடமும் கொண்டு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பாடல் இணைப்பு: https://t.co/cz3s31F67T
வெற்றிவேல்... வீரவேல்...
#சுடும்_குருதி_கொடுத்தேனும் #Sudum_kuruthi_koduthenum #thiruparankundram_deepam
#திருப்பரங்குன்றம்_தீபம்
#Thiruparankundram
திருப்பரங்குன்றத்தில் பலமுறை நீதிமன்றம் வலியுறுத்தியும் தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக முருக பக்தர்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் 'Venmani Creations' தயாரித்து விரைவில் வெளியாகவுள்ள 'சுடும் குருதி கொடுத்தேனும்' என்ற பாடலின் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
சகோதரர் திரு.MS Vignesh எழுதி பாடிய இந்த பாடலுக்கு திரு.சந்தோஷ் இசையமைத்துள்ளார் மற்றும் இப்பாடலை திரு.N Rathaan இயக்கியுள்ளார்.
மிக அருமையாகவும், ஆழமாகவும், கேட்போர் இதயத்தை தொடும் வகையிலும் வடிவம் பெற்றுள்ள இப்பாடலை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அனைத்து முருக பக்தர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
#சுடும்_குருதி_கொடுத்தேனும்
#Sudum_kuruthi_koduthenum
#thiruparankundram_deepam
#திருப்பரங்குன்றம்_தீபம்
மனு அளிக்க வந்த பெண்ணிடம் அடாவடி செய்து செல்போனை பிடிங்கி உடைத்த விடியா திமுக அரசின் கீழ் வேலை செய்யும் ஊழல் கரை படிந்த துணை தாசில்தார்!!
இடம்📍 அரியலூர்
இந்தியாவில் மாவட்டத்திற்கு ஓர் மருத்துவ கல்லூரி கொள்கை மூலம் தமிழ்நாட்டில் தான் அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. விதை கலைஞர் போட்டது என்று முன்னாள் MP @DrSenthil_MDRD தனது X வலைதள கணக்கில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார்.
பதிவின் உண்மைத்தன்மையை, நமது Facts and Perspectives சார்பாக ஆராய்ந்த போது, முன்னாள் முதல்வர் திரு.கருணாநிதி அவர்கள் இதுவரை 1969–1971, 1971 - 1976, 1989–1991,1996–2001, 2006–2011 என 5 முறை ஆட்சி பொறுப்பில் முதலமைச்சராக இருந்துள்ளார். இதில், மொத்தமுள்ள 38 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 மட்டுமே திரு. கருணாநிதி அவர்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதாகும். அவை,
KAP Viswanatham Govt Medical College and Hospital, Trichy - 1998,
Government Thoothukudi Medical College and Hospital - 2000,
Government Dharmapuri Medical College and Hospital - 2008
Government Thiruvarur Govt. Medical College and Hospital - 2010,
Government Villupuram Govt. Medical College and Hospital - 2010
ஆகியன மட்டுமே அவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவையாகும். மேலும், நடைமுறையில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளை கட்டும் இந்த திட்டமானது “One District One Medical College ” என்ற மத்திய அரசின் திட்டம் மூலம் மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான 60% நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டு செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும். இதுவரை இத்திட்டத்தின் கீழ் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எனவே, “விதை கலைஞர் போட்டது” என்ற @DrSenthil_MDRD அவர்களின் இந்தப் பதிவு ஒரு தவறான தகவலாகும்.
Source : https://t.co/eZkxuTTfwN
"ஒரு வகுப்பறையில் 150 பேர்.. இந்த வகுப்புல பாடம் எடுத்தா அடுத்த வகுப்புல கேட்கும்.. கொஞ்சம் கூட இடமே இல்ல இந்த பள்ளியில".. அரசு மேல்நிலைப்பள்ளியில் மொட்டை மாடி, கலை அரங்கப் பகுதிகளில் கல்வி பயிலும் மாணவர்கள்.. ஆசிரியர்கள் சொல்லும் பதில்கள்
#Tiruppur | #GovtSchool | #Students | #Teachers | #PolimerNews
இடம் :- மதுரை
ஜெய்ஹிந்த்புரம் அருகே கஞ்சா விற்பனை குறித்து புகார் கொடுத்த தந்தை மகனுக்கு அரிவாள் வெட்டு தமிழகத்தில் சட்டம் உனக்கு சந்தி சிரிக்கும் அவலம்.
இதுலயும் திருட்டுதானமா?
கும்பாபிசேகம் முடிந்ததும் அபிஷேக தீர்த்தம் தெளிக்கப்படும் என எதிர்பார்த்த மக்களுக்கு சாதாரண கேன் தண்ணீரை கேன் மூலம் தெளித்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள், முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருக்கின்றன. மாணவர் விடுதிகளில், தரமான உணவு, சுத்தமான குடிநீர் வழங்கப்படுவதில்லை என, மாணவர்கள் பலமுறை புகார்கள் தெரிவித்துள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் 1,331 மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருவதாகவும், இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் திமுக அரசு தெரிவித்திருந்தது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், ஒரு மாணவருக்கு தினம் ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 உணவுப் படி வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு ரூ. 50 உணவுப் படி என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும், முதலமைச்சர் திரு @mkstalin கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும், ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
கடந்த ஆண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து, ஐந்து மாணவிகள் காயமடைந்தனர். தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் இத்தனை அவலநிலையில் இருக்க, தனது விளம்பர ஆசைக்காக, விடுதிகளின் பெயரை மாற்றி விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 - 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 - 25 ஆண்டு விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. இந்த பெயர் மாற்ற விளம்பரத்துக்கு இன்னும் சில கோடிகள் கணக்கு காட்டலாமே தவிர, இதனால் மாணவ, மாணவியருக்கு எந்தப் பயனும் இல்லை.
அஜித் வழக்கில் திமுக தன் நிர்வாகி சேங்கை மாறனை காப்பாற்ற சதி செய்கிறது ? கேள்வி என்னனா
10 பவுன் ஜெயின் காணமா போனதற்கு தனி ஸ்பெசல் டீம் போட்ட முதல் அரசு திமுக அரசு தான் - ஆன அந்த தனி டீம் போட உத்தரவிட்டது யார்? DSP இல்ல SP? அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்தது யாரு? மந்திரியா இல்ல திமுக மாவட்ட செயலாளாரா? இதுக்கு திமுக அரசு பதில் என்ன தெரியுமா :
நாங்களா online பார்த்தோம் வந்தோம்!
இப்படி ஒரு பதிலில் தெரிகிறது திமுக யாரையோ காப்பாற்ற முயற்சிப்பது!
சரி இறந்தது எப்படி FIR கேட்டா அதில் என்ன தெரியுமா சொல்லிருக்கு இந்த திமுக அரசு
"அஜித் திருடிட்டான் ஒத்துக்கிட்டான் , ஆனா நகை இருக்குற இடத்த சரியா சொல்லல. ஆனா தப்பிக்கிறது இரவு முயற்சித்தான் அப்படி ஓடும் போது வழிக்கி விழுந்து வலிப்பு வந்து இறந்துவிட்டார்"
என்னாமா கதை எழுதுறெங்க - நீங்க அடிச்ச வீடியோ வெளியாகியுள்ளது.. ஆனா FIR அடிச்சதா ஒரு வரி கூட இல்ல எப்படி? பகல் முழுவதும் வச்சு அடிக்கும் போது ஓடாதவன் , நீங்க விசாரனை செய்ய கூப்பிட்ட போது ஓடாதவன் ஒத்துக்கிட்டு ஓட பார்த்தன் சொல்றது கேவலமான பொய்யா தெரியல?
திமுக நிர்வாகி சேங்கை மாறனை பெயர் அடிபடுகிறது. அவரை காப்பாற்ற தன் கட்சி பெயர் வரகூடாது என்பதற்காக இவ்வளவு பித்தலாட்ட வேலையையும் பார்க்கிறது திமுக அரசு?