சென்னை கோயம்பேடு பகுதியில் மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது உடன் இருந்த 17 வயது சிறுமியும் உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன.
“டாஸ்மாக் மூடிவிட்டேன்” என ஒரு பச்சைப் பொய்யை திருச்சியில் கத்திய இன்றைய முதலமைச்சர், இந்த மன்னிக்க முடியாத கொடூரத்திற்கு என்ன பதில் வைத்துள்ளார்?
21 வயது நிரம்பாதவருக்கு எப்படி மதுபான பாரில் அனுமதி வழங்கப்பட்டது? பெண்கள் மீது கார் ஏற்றி கொலை செய்யும் அளவிற்கு சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை எப்போது தான் இன்றைய முதல்வர் சீர் செய்வார் என எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
மதுரை கீழமாத்தூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகே 17 வயது சிறுவன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேலும், தாம்பரம் அருகே கல்லூரி மாணவியை தவறான முறையில் பார்த்த த.வெ.க நிர்வாகி கைது செய்யப்படுள்ளதாகவும், திருவொற்றியூரில் நள்ளிரவில் மின்துறை உதவிப் பொறியாளர் வீட்டின் கதவைத் தட்டி அச்சுறுத்தி ஆளும் த.வெ.க.வினர் மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
மேலும் சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று மழை பெய்த நிலையில் பல இடங்களில் மழைநீர் சூழ்ந்திருந்தது. இன்று காலை ஓமலூரில் உள்ள இரயில்வே சுரங்கப் பாதையை காரில் கடக்க முயன்ற கணவன் மனைவி இருவரும் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய மழைநீரை இந்த அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நாம் இரண்டு விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம்.
சிறப்பான ஆட்சியை தருவேன், மாற்றம் கொண்டு வருவேன் என்று முதல்வர் வசனம் பேசினார். ஆனால் ஒவ்வொரு நாளும் விலை மதிப்பற்ற உயிர்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியிலும் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு மதுரை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வருகின்றன.
அதுபோக, ஆளுங்கட்சியினரின் மிரட்டல் அராஜகங்கள், குறிப்பாக அரசு ஊழியர்களை அச்சுறுத்தும் போக்கு என்பது தொடர்கிறது.
முந்தைய ஆட்சிபோல் தமிழகத்தில் இந்த ஆட்சி பொறுப்பேற்றது முதல் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல், செய்தியாளர் சந்திப்பு நடத்த முடியாத முதல்வர் தான் இப்போதும் வாய்த்துள்ளார். ட்விட்டர் மடைமாற்று அரசியலில் திமுக ஈடுபட்டது என்றால், இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று அரசியலில் இன்றைய ஆளுங்கட்சி ஈடுபடுகிறது. அவ்வளவு தான்!
“முதல்வர் கோட்டைக்கு வருகிறார்! கேரியரில் மதிய உணவு சாப்பிடுகிறார்! ஆஹா என்ன ஒரு மாற்றம் ?” என்று ஒரு தனி உலகத்தை இவர்கள் கட்டமைக்கும் வேளையில், தமிழ்நாடு ரத்தக்காடாக மாறி வருவது பற்றியும், தங்கள் கட்சியினர் பொறுப்புணர்வின்றி போடும் அதிகார வெறியாட்டம் பற்றியும் ஒருவார்த்தையாவது பேசுவார்களா?
உங்களுக்கு வாக்களித்த தமிழக மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை இருந்தால், அவர்களை காப்பாற்ற சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள் என்று இந்த முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
எந்த அதிகாரமும் இல்லாத உள்ளூர் மேனேஜருக்கு ஜால்ரா தூக்க 4 இணைய கைக்கூலி வெச்சிட்டு, ஆட்சியைப் பிடிப்போம்ன்னு மணல் கோட்டை கட்டிட்டு இருக்காணுங்க!
போய் டெல்லியில கைகட்டி நின்னு லேகியம் விக்கிற வேலையைப் பாரு டா @annamalai_k#அரவக்குறிச்சி_அரவேக்காடு#ADMK_KPM
என்ன செய்தார் மோடி !!
இன்றைக்கு பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறது/ ஏலம்விடப்படுகிறது குறிப்பாக, துறைமுகங்கள், விமானநிலையங்கள், இது அத்தனையும் இன்னிக்கு யாரு வாங்கறா ??
-அண்ணன் @CVShanmugamofl 🔥🔥
#அதிமுக ஒதுக்கீடு செய்த இடங்களையும் ஜெயிக்க வக்கிலாமல் இழந்து விட்டு தன்னுடைய வாய் கொழுப்பால் தலைமை பண்பை மீறி கூட்டணி கட்சிகளையே விமர்சனம் செய்பவரை நாங்கள் #அரவக்குறிச்சி_அரவேக்காடு என்றுதான் கூறுவோம்...
#அண்ணாமலை
ஒரு வார்டில், அல்லது கிளையில் கூட "நிற்க வக்கில்லாத" வெற்று வாயில் வடை சுடும் அண்ணாமலை,
முதலில் எந்த தொகுதியில் நின்று லேகியம் விற்கப் போகிறார் என்பதை திராணியிருந்தால் கூறட்டும்.
பிறகு மாநிலம் முழுக்க லேகியம் விற்பதை பார்க்கலாம். #அரவக்குறிச்சி_அரவேக்காடு#ADMK_MDU@satyenaiadmk