பேரன்பு படத்தில்
ஒரு காட்சியில்,
சமூகத்தால் Pro/stitute என்று முத்திரை குத்தப்பட்ட சக பெண் மீரா,
அமுதவனை பார்த்து,
"எனக்கு இங்க எந்த Client யும் Workout ஆகல..என்ன கொஞ்சம் ECR ல விட்றீங்களா என்று கேட்பாள்..
அவன்..ஏறுங்க..என்று தன் காரில் ஏற்றிக் கொள்வான்..
அவள் ஏறியவுடன் சன்னல் கண்ணாடியை இறக்கி விடுவாள்..
அமுதவன்,
" ஏன்மா..AC போட்ருக்கேன்..ஏன் ஜன்னல திறக்குற?" என்று கேட்டு முடிப்பதற்குள்,
" எப்போதும் Customer கூட பூட்ன கார்ல தான்போவென்..இன்னிக்காவது கொஞ்சம் காத்து பட போணும் போல இருக்கு..நீங்க என் Customer இல்ல ல..!"
என்று சிரித்து கொண்டே தன் ஆசையை சொல்வாள் மீரா..
அமுதவன் மறு மொழி கூறாமல் ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாய் உதிர்ப்பான்..
மீரா சன்னலின் வெளியே வானத்து நிலவை ஒரு சிறு குழந்தை போல எட்டிப் பார்ப்பாள்..
மற்றொரு காட்சியில்,
அமுதவன் மீராவின் வீட்டிற்குச் சென்று "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..
நான் கீழே ஆட்டோல வெயிட் பண்றேன்" என்று சொல்லிவிட்டு காத்துக் கொண்டிருக்கும் பொழுது,
மீரா கேரளப் புடவை கட்டிக்கொண்டு வருவாள்.. "இந்த சேலைய எங்க நாட்டுல ஓணம் விஷு போல நல்ல நாளுக்கு மட்டும் தான் கட்டுவோம்.. சென்னை வந்து இன்னைக்கு தான் இந்த புடவையை கட்டுறேன்..புடிச்சிருக்கா சார்!"
என்று கேட்பாள்..
மீராவிடம் எதையும் எதிர்பாராமல் அன்பை மட்டுமே பொழியும்
மீராவை சக மனுசியாக பார்க்கும் ஒரே ஆண் அமுதவன் மட்டுமே..
அதனால்தான் மீரா சென்னைக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகியிருந்தாலும் அவனைச் சந்திக்கும் நாள் மட்டுமே மீராவிற்கு நல்ல நாள்!
இறுதிக் காட்சியில்,
கடலுக்குள் மூழ்கப் போகும் பாப்பாவையும் அமுதவனையும் காப்பாற்றும் மீரா..
பாப்பாவை பார்த்துக் கொள்ளும் அம்மாவாகவும் அமுதவனுக்கு மனைவியாகவும் ஆகிறாள்!
"ஒரு கடலுக்குள்ள இறங்கி திரும்பி ஏறி வந்ததுக்கு அப்புறம் தான் பேரன்பு ன்னு ஒண்ணு இருக்குது ன்றதே நான் புரிஞ்சுக்கிட்டேன்..
அப்டின்னு எனக்கு புரிய வெச்சது என்னுடைய மனைவி மீரா"
என்று அமுதவன் புன்னகைக்கும்
காட்சி கவிதை!
ஒரு நேர்காணலில் ராம் Sir..
"மனிதர்களை Judge பண்ணக் கூடாது..
ஆனால், புரிந்து கொள்ளுங்கள்..!"
என்று சொல்லி இருப்பார்!
அமுதவனையும் பாப்பாவையும் புரிந்து கொண்டு பாப்பாவை தன் மகளாக ஏற்றுக்கொண்ட மீரா தேவதை ஆனாள்..
மீராவின் வாழ்க்கையை புரிந்து கொண்டு இருளில் இருந்து மீட்க வந்த அமுதவன் தேவ தூதன் ஆனான்..!
பேரன்பில் விழியில் மனிதர்கள் தேவதைகளாகவும்
தேவதூதர்களாகவும் உருமாற்றம் கொள்கின்றனர்!
நன்றி
இயக்குனர் ராம் அவர்களுக்கு