🎓 உங்கள் பிள்ளைகளோ, இளம் நண்பர்களோ இந்த ஆபத்தான 3 தவறுகளைச் செய்கிறார்களா?
ஒரு சுமாரான மாணவனாக இருந்த நான், கற்றலில் செய்துகொண்டிருந்த 3 பெரிய தவறுகளைத் திருத்திய பிறகுதான், ஒரு IFS அதிகாரியாக உயர முடிந்தது. என் வாழ்க்கையை மாற்றிய அந்த அறிவியல் உண்மைகளை இந்த வீடியோவில் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வீடியோவை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பதோடு, மாணவர்கள், இளைஞர்களுடன் பகிர வேண்டும்.
அவர்கள் இந்தத் தவறுகளைச் செய்கிறார்களா என்று பாருங்கள்:
- 'புத்திசாலி மூளை', 'சுமாரான மூளை' போன்ற விஷயங்களை நம்புவது.
- Highlight செய்வது, மீண்டும் மீண்டும் வாசிப்பது போன்ற பயனற்ற முறைகளைப் பின்பற்றுவது.
- தொடர்ந்து அதிக நேரம் படிப்பது வெற்றி தரும் என்று நினைப்பது.
இந்தத் தவறுகளைத் திருத்துவது எப்படி? முழு வீடியோவையும் பாருங்கள்.
நான் சரியான முறையில் கற்கும்போது, என் மூளைக்கு உதவுகிறேன்; நான் தவறான முறையில் கற்க முயலும்போது, என் மூளையைக் குழப்புகிறேன். இதுதான் என் கற்றல் அணுகுமுறை: நான் ஒரு மூளைப் பயிற்சியாளன்.
இந்த எளிய அணுகுமுறை, உங்கள் அன்புக்குரியவர்களின் கற்றல் முறையை மாற்றி, அவர்களின் இலக்குகளை அடைய உதவும். இந்த வீடியோவை அவர்களுடன் பகிர்ந்து உதவுங்கள். ✨
#HowToLearn #StudyTips #ForStudents #ShareWithStudents
#பயணிதரன்
#வாழ்வெனும்பயணம்
#தன்மேம்பாடு #சமூகமேம்பாடு #அறிவியல்சிந்தனை