தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு மலர் வெளியீட்டு விழாவை வகுப்பறையாக மாற்றி, தமிழ்த்தேசியம் குறித்து வகுப்பெடுத்துள்ளார் #பேராசான் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள்.
தவற விடக்கூடாத வரலாற்று சிறப்பு வாய்ந்த உரை!
@thirumaofficial
“ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்கிற விடுதலைச் சிறுத்தைகளின் முழக்கத்தை முதன்முதலில் அங்கீகரித்து ஊக்கப்படுத்திய மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மேன்மைமிகு அண்ணன் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் சார்பில் அய்யா ஜி.கே.மூப்பனார் நினைவிடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் அண்ணன் ஜி.கே.வாசன் @GK__Vasan அவர்கள் முன்னிலையில் விடுதலைச் சிறுத்தைகள் @VCK_in மலர் தூவி செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தினோம். @Vidiyalsekar@TMC_Moopanar
இன்று (30.08.26) எமது திண்டிவனம் தொகுதியில் நடைபெற்ற திருமண விழா, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்றோம். சித்தாமூர் செல்லும் வழியில் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த மக்கள் நிறுத்தி, தங்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தோம்.
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு மலர் வெளியீட்டு விழா இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. மாநாட்டு மலரை நான் (தொல்காப்பியன் திருமாவளவன்) வெளியிட உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். விசிக பொதுச்செயலாளர்கள் சிந்தனைசெல்வன், ரவிக்குமார், திரைப்பட இயக்குநர்கள் இரா.பார்த்திபன், மாரி செல்வராஜ், மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
'தமிழ்த்தேசிய செயல்வடிவம் திருமா ' என்னும் தலைப்பில் கவியரங்கம் புரட்சிக்கனல் இளையகம்பன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.
பாவலர் தமிழமுதன், பாவலர் அருண்பாரதி, பாவலர் தமிழ்த்தம்பி, பாவலர் லாவரதன் ஆகியோர் கவிப்பாடினர்.
இசையரசு கலைக்குழுவின் இசைப்பொழிவு நடைபெற்றது .
பஞ்ச பூதங்களில் நீருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சக்தி? - விஞ்ஞான பூர்வமான
உண்மை
நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களில் நீர் தான் மிகவும் சாந்தமானது போல் தெரியும். ஆனால் உண்மையில் அதுதான் மிகவும் ஆக்ரோஷம் வாய்ந்தது. இதற்கு விஞ்ஞான காரணங்கள் உண்டு.
முதல் காரணம்.
பிரிக்க முடியாத பிணைப்பு - Hydrogen Bonding
நீரின் மூலக்கூறு H2O. அதாவது ஒரு ஆக்ஸிஜன், இரண்டு ஹைட்ரஜன். இவை ஒன்றோடு ஒன்று மிக வலுவாக கைகோர்த்துக் கொண்டு, ஹைட்ரஜன் பாண்டிங் எனும் பிரிக்க முடியாத பிணைப்பால் இணைந்திருக்கும்.
அவற்றை பிரிப்பது அவ்வளவு எளிதல்ல. வெள்ளத்தின் போது பெரிய பெரிய பாறைகளையும், வீடுகளையும் கூட பஞ்சு மிட்டாய் போல தூக்கிச் செல்லும் வலிமை கிடைப்பதற்கு காரணம் இந்த பிணைப்பு தான்.
இரண்டாவது
நெருப்பை
அணைக்கும் வல்லமை.
நெருப்பு எரிய வெப்பம், எரிபொருள், ஆக்ஸிஜன் மூன்றும் வேண்டும்.
நீரை எரியும் நெருப்பில் ஊற்றும் போது அது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளை செய்கிறது:
நீர் நெருப்பில் தெளிக்கப்பட்டதும் அது நீராவியாக மாற நிறைய வெப்பத்தை உறிஞ்சி விடுகிறது. அந்த நீராவி ஒரு போர்வை போல நெருப்புக்கும் காற்றுக்கும் இடையில் புகுந்து ஆக்ஸிஜனை தடுத்து விடுகிறது. அதனால் தான் நெருப்பு உடனே அணைகிறது.
மூன்றாவது
எல்லாவற்றையும் கரைக்கும் தன்மை நீருக்கு உண்டு என்பதாலேயே அதற்கு Universal Solvent என்று பெயர்.
எவ்வளவு கடினமான பொருட்களாக இருந்தாலும், அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து, அரித்து, தன்னோடு எடுத்துச் சென்று விடும். நூறு வருடத்தில் ஒரு பெரிய மலையையே கரைத்து பள்ளத்தாக்கை உருவாக்கும் வலிமை நீருக்கு உண்டு.
பி.கு
சுருக்கமாக சொன்னால்,
நிலம் தாங்கும்,
காற்று தொடும்,
நெருப்பு எரிக்கும்,
ஆகாயம் தன் எல்லையை விரிவாக்கிக் கொண்டே இருக்கும். ஆனால் நீர் மட்டும் தான் எல்லாவற்றையும் தொட்டு, அழித்து, மீண்டும் உருவாக்கும்.
அதனால் தான் நம் முன்னோர்கள் பஞ்ச பூதத்தில் நீரை உயிருக்கு சமமாக வைத்தார்கள்.
வள்ளுவர் கூட இதைத்தான்
"நீரின்றி அமையாது உலகு என்று சொன்னார்.
நீர் ஒன்றுதான் நம்மை தண்டிக்கவும் செய்யும். மன்னிக்கவும் செய்யும்.
சமூக நீதித்துறையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து இன்று சட்டப்பேரவையில் எனது உரையில், பல காலமாக போராட்டக் களத்திலும், தேர்தல் களத்திலும் உடன் பயணித்து உற்ற துணையாய் இருந்த கட்சி தோழர்கள், நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை குறிப்பிடும்போது, நேரமின்மை காரணமாகவும், மறதியின் காரணமாகவும் சிலரது பெயர் விடுபட்டு போனது குறித்து எனது வருத்தத்தை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
எப்போதும் நம் நலனில் அக்கறை கொண்ட மாலைமுரசு செய்திகள் தொலைக்காட்சி ஆசிரியர் திரு. தம்பி தமிழரசன், புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் திரு. திருப்பதி, திமுகவின் மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் திரு. ரவிச்சந்திரன், உடனிருந்து சட்டப்பணிகளை மேற்கொண்ட வழக்கறிஞர் சாரநாத், வழக்கறிஞர் அன்புச்செல்வன், வழக்கறிஞர் கார்மேகம், சமூக ஊடக பணிகளை ஒருங்கிணைத்த வெளிச்சம் பிரவின், பல்லாவரம் சந்துரு, ஜான், தேர்தல் சமயத்தில் முக வாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் தினமும் என்னுடன் இருந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்த தம்பிகள் ரகு, தேவா, எனது இணையருடன் தொடர் பரப்புரையில் ஈடுபட்ட தங்கைகள் சரளா, பிரபாவதி, உடுமலைப்பேட்டை கவுசல்யா சங்கர், வழக்கறிஞர் பிருந்தா, சேலம் ஐஸ்வர்யா, பல்வேறு மாவட்டங்களிலிருந்து திண்டிவனம் வந்து பணியாற்றிய தம்பிகள் திருப்பெரும்பத்தூர் தியாகு, பெசண்ட் நகர் அந்தோணி, மயிலை சந்துரு, மதுரை செல்வக்குமார், மதுரை சரவணன், அயன்ரெட்டியப்பட்டி தம்பிகள் செல்வம், முதல்வன், பல்லாவரம் செல்வமணி, சீர்காழி பார்த்திபன், ஆரணி பரத், கடலூர் ரகோத்தம்மன், கடலூர் சூர்யா, குடியாத்தம் விக்ரம், போரூர் குட்டி, திண்டிவனத்தில் தேர்தல் பணிமனைக்கு இடம் தந்து உதவிய காங்கிரஸ் கட்சியின் திரு. டில்லிபாபு, தங்குவதற்கு வீடு தந்து உதவிய வழக்கறிஞர் செம்மலர், வழக்கறிஞர் கரண், கலைக்குழுவாக தேர்தல் பரப்புரை செய்த தம்பி சித்தன் குணா...
இந்த உறவுகள்
பங்களிப்பு இல்லை என்றால்,
சட்டமன்றத்திற்குள் நுழைவது சாத்தியமாகி இருக்காது என்பதை நன்றிப்பெருக்குடன் குறிப்பிட விரும்புகிறேன்.
மீண்டும் சொல்லுகிறேன்
Sorry பொருத்தருள்க!
- வன்னி அரசு
28.08.26
நேபாளத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய பனிப்பாறை உடைந்த இடத்திற்குச் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்துள்ளார்கள்.,
பனிப்பாறைகளால் இயற்கையாகத் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏரியின் அணை போன்ற பனிச்சுவர் திடீரென உடைந்து வெளியேறும் பெருவெள்ளமே GLOF என அழைக்கப்படுகிறது.
சட்டப்பேரவையில் தனது பதிலுரையின்போது, தனது தேர்தல் வெற்றிக்குத் துணைநின்ற மரியாதைக்குரிய திமுக தலைவர், சட்டமன்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழகத்தின் அனைத்து முன்னணியினரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த, மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் தம்பி திரு. @VanniTamizhVCK அவர்கள், மறைந்த என் தந்தையார் திரு. வே. தங்கப்பாண்டியன் அவர்களின் சமூகநீதிப் பணிகளையும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் முன்னெடுத்த உறுதியான போராட்டங்களையும் பேரவையில் பதிவு செய்ததற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@arivalayam
தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை
மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்
===
இந்தப் பிரச்சினையை எழுப்பிய மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினருக்குப் பாராட்டுகள்.
நாடாளுமன்றத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடும் முறை இருந்தபோது அதில் ப்ராக்கெட்டில் ரிசர்வ்டு எனக் குறிக்கப்பட்டிருந்தது. அதை நீக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தேன் அதன் பின்னர் அது நீக்கப்பட்டது.
எம்.பியோ எம்.எல்.ஏ வோ ரிசர்வ்டு தொகுதி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே குறிக்கப்பட வேண்டியுள்ளது. மற்ற நேரங்களில் அதைக் குறிக்க வேண்டிய தேவை இல்லை. எனவே எல்லா தொகுதிகளையும்போல அதையும் பெயரை மட்டும் குறிப்பிட வேண்டும். எல்லா நேரத்திலும் அந்தத் தொகுதியின் பெயரோடு ப்ராக்கெட்டில் எதையும் குறிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அல்லாத நேரங்களில் ஒருவர் பொதுத் தொகுதியின் பிரதிநிதியா அல்லது தனித் தொகுதியின் பிரதிநிதியா என்பதை அடையாளப்படுத்த வேண்டும் என்ற தேவை கிடையாது. எனவே ப்ராக்கெட்டில் எதையும் குறிப்பிடாமல் இருப்பதே சரி. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் @CMOTamilnadu இதைப் பரிசீலித்து தொகுதியின் பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும் ப்ராக்கெட்டில் வேறு எதையும் குறிப்பிட வேண்டாம் என உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
- ரவிக்குமார் எம்.பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Well spoken Gudiyatham MLA Sindhu.,👏
These are the types of suggestions , discussions and #rationalistic forward thinking that is needed for the society.
Well articulated by this first time legislator in the Assembly.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையம் திருவண்ணாமலைக்கு மாற்றப்படுவதாக வெளியான செய்தியையொட்டி, இன்று (28.08.26) மாண்புமிகு எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்களை சந்தித்து, நுகர்வோர் குறைதீர் ஆணையம் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலேயே செயல்படுவதை உறுதி செய்யும்படி கோரினோம். மாண்புமிகு அமைச்சர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
@CTR_Nirmalkumar
இன்று (27.08.26) சமூக நீதித்துறையின் 2026-2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மற்றும் துறை சார்ந்த அறிவிப்புகளை சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு சமூக நிதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் வெளியிட்டதை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இச்சந்திப்பின் போது, சமூக நீதித்துறை அரசு செயலாளர் டாக்டர். ந. சுப்பையன், இ.ஆ.ப. ஆதிதிராவிடர் நல இயக்குநர் டாக்டர் கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திரு. க.சு. கந்தசாமி, இ.ஆ. ப. மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர் திரு. எஸ். அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
@VanniTamizhVCK@CMOTamilnadu@ADWDtamilnadu@TN_Tribal_WD@tahdco@TNDIPRNEWS