Being shaped simultaneously by the Books and by the Society..... Basically Dravidian.... The Hunter, the Gatherer and the Civilized...
Educate and be Educated
'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
அரசுப் பள்ளி மாணவியின் ஆங்கிலப் பேச்சுத் திறனைப் பொதுவெளியில் சோதித்து, ‘கடைசி பெஞ்சு’ மாணவர்களை மட்டம்தட்டி ரீல்ஸ் எடுத்துத் தன் கீர்த்தியை வளர்த்துக்கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு, தமிழ் மீடியத்தில் படித்து ஆங்கிலம் பயின்று இந்திய அயலுறவுப் பணியில் சேர்ந்து உலகம் சுற்றி சீனம் உட்படச் சில மொழிகள் கற்ற அனுபவத்திலிருந்து சில விஷயங்கள்:
- உலகளாவிய கல்வி முறைகள் அனைத்தும் தாய்மொழி வழிக் கல்விக்கும், பயமற்ற கற்றல் சூழலுக்குமே முக்கியத்துவம் தருகின்றன. அதற்கு மாறாக மாணவர்களிடம் அவமானத்தையும் பயத்தையும் விதைப்பது நவீன கற்கும் அணுகுமுறைக்கே எதிரானது.
- “இந்த மொழி கடினமானதா?” என்னும் கேள்விக்குச் சரியான பதில்: “யாருக்கு என்பதைப் பொறுத்தது.” சீனர்களுக்கு, தமிழ் கடினம்.
- மாணவர்களைக் கேமராவுக்கு முன்னிறுத்திச் சோதிப்பது குறுநோக்கில் அவர்களின் வெளிப்பாட்டைப் பாதிக்கும் (spot-light effect).
- நெடுநோக்கில், கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான பயணம். அதில் உள்ள தற்காலிகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி குழந்தைகளைப் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவது அவர்களின் கற்கும் ஆர்வத்தை மொத்தமாக முடக்கிவிடும். “ஊரே என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, இனி மேல் என்ன?” என்று அந்தப் பிஞ்சு உள்ளங்கள் துவண்டுபோகும்.
- கடைசி பெஞ்ச் மாணவர்களைக் கேலி செய்யும் கீழ் மனநிலை மிக ஆபத்தானது.
- விஷய அறிவு என்பது சட்டியில் உள்ள உணவுப் பொருள். மொழி என்பது அகப்பை. அகப்பை சரியாக இல்லை என்றால் சட்டி காலி என்று புரிந்துகொள்பவர்களின் சட்டி தான் நிஜத்தில் காலியாக இருக்கிறது.
- கற்கும் சூழலில் ஒரு குழந்தை தவறு செய்ய முழு உரிமை உண்டு. தவறுகளின் மூலமாகத்தான் குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்கிறார்கள் என்பதே கற்றலின் அடிப்படை உளவியல்.
- தனியார்ப் பள்ளி மாணவர்களிடம் இது போன்ற சோதனைகளைச் செய்யத் துணியாதவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களை மட்டும் எளிய இலக்காக மாற்றுவது அவர்களின் மனக் கோணல் அணுகுமுறையைக் காட்டுகிறது.
- சோசியல் மீடியா ரீல்ஸுக்காகவும் விளம்பரத்திற்காகவும் அரசுப் பள்ளி மாணவர்களைப் பப்ளிசிட்டி பொருளாகப் பயன்படுத்தும் போக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- எல்லா மொழியின் அடிமுட்டாள்களும் அந்தந்த மொழியில்தான் சரளமாக உளறிக்கொண்டிருக்கிறார்கள்.
#பயணிதரன்
#அறிவுக்கருவிகள்
#வாழ்வெனும்பயணம்
1949 முதல் திமுகவை மட்டுமே குறிவைத்து சுவைத்து கொண்டிருக்கும் வினோத முற்போக்காளர்கள், நவீன புரட்சியாளர்கள் மற்றும் மாற்றம் தேடும் இன்ன பிற நல்ல உள்ளங்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்!
IG: kakashihatakewsr
பெரியார் பற்றிய இரண்டு மதிப்பீடுகள் எனக்கு மிகவும் நெருக்கமானவை.
ஒன்று தொ.ப அவர்கள் கூறியது இன்னொன்று பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் கூறியது.
தொ. ப அவர்கள் " பெரியாரும் ஒரு தமிழர் தொன்மம்" என்றார். இன்று வரை கீழடி சங்க இலக்கியம் நடுகற்கள் பாறை கல்வெட்டுகள் என்ற தமிழர் தொன்மங்கள் தான் நாம் சனாதன சங்கிகளை எதிர்த்து நிற்க நமக்கு துணையாக இருக்கிறது. அதனால் தான் அவை அனைத்தையும் அழிக்க தொடர்ந்து சங்கி கூட்டம் முயல்கிறது. ஆக அந்த வரிசையில் " பெரியாரும் ஒரு தமிழர் தொன்மம்" தான்.
க.நெடுஞ்செழியன் அவர்கள் "பெரியாரும் ஊரை காக்கும் ஒரு ஐயனார்தான்" என்றார். ஒவ்வொரு ஊரும் தங்களுக்காக காவல் தெய்வம் கொண்டிருந்தது. இந்த காவல் தெய்வம் எல்லாம் உழைக்கும் வர்க்க ஆட்கள் போலவே மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து மக்களின் நம்பிக்கையாக இருந்தன. அந்த மாதிரி ஒரு நம்பிக்கையாக தான் பெரியார் இந்த சங்கிகள் எதிரான போரில் இருக்கிறார்.
தமிழர் தொன்மங்கள் அனைத்தும் சங்கிகளின் கனவுகளுக்கு எதிரானவை.
If not for a Govt with Dravidian Ideology,
If not for a Govt moulded in Periyarian Smithery,
Sanghis would have gone terrifically wild....
Sanghis and Sanatanis do stay away...
This is TamilNadu...!!!
#Thiruparankundram#StandWithMKSSaveTN#StandWithStalinSaveTN#Madurai
அடேய் Kongaans, 'வேர் கிழங்கு சேகரித்து அதையும் மீனையும் சேர்த்து உண்ணும் இனக்குழுவைச் சேர்ந்த வள்ளியும், வேட்டையாடி புலால் உண்ணும் இனக்குழுவைச் சேர்ந்த முருகனும், காட்டுல சந்திச்சி பழகி Love Marriage தானடா பண்ணிக்கிட்டாங்க.'
கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை இரண்டு ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு பிறகு அந்த அறிக்கையை திருத்தி எழுதித்
தருமாறு ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது.
அதில் திருத்துவதற்கு எதுவும் இல்லை என்று ஆய்வாளர் மறுத்துவிட்டார்.
இப்போது அந்த அறிக்கை போதுமானது அல்ல மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது, என்று ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் சேக்வாத் சென்னையில் பேட்டியளித்து இருக்கிறார்.
ஆய்வாளர் அமர்நாத் பாஜக விரும்புகிறபடி அறிக்கையை திருத்தி அனுப்பி இருந்தால் அதை வெளியிட்டு இருப்பார்கள்.
இப்போது ஆர்எஸ்எஸ் ரசாயன பரிசோதனை ஆலைக்கு அனுப்பி சோதனை செய்த பிறகு அதை அங்கீகரிப்பார்கள் போலும்.
வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி என்ற ஆறு எங்கே இருக்கிறது, என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
இதைக் கண்டுபிடிப்பதற்காகவே 30,000 கோடி ரூபாய் பணத்தை ஒதுக்கி இன்னமும் ஆண்டு கணக்கில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
தேடிக் கொண்டிருக்கின்ற ஒரு ஆற்றின் நாகரீகத்தை ஏற்கனவே நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இதுதான் எங்கள் நாகரீகம்: சரஸ்வதி நாகரீகம் என்று கூறிவிட்டார்.
இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் தான் ராமர் கோயில் இருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக் கூறி நம்பிக்கையின் அடிப்படையில் தான் கோயிலை கட்டுவதற்கு அனுமதி அளித்தது.
இதற்கெல்லாம் அவர்களுக்கு ஆதாரம் தேவையில்லை.
ஆனால் 5 ஆயிரத்து 350 ஆண்டுகளுக்கு முன்பு மதம் இல்லாத ஒரு வாழ்க்கையை தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், என்ற ஆய்வை உலக அறிவியல் ஆய்வுகள் ஏற்றுக் கொண்டாலும் வெளியிட மாட்டார்கள்.
அவர்களுக்கு அகழ்வாராய்ச்சி அறிக்கையை விட மேலும் ஆதாரங்கள் தேவைப்படுகிறது.
பாஜக அணிக்குள் பதுங்கி நிற்கின்றவர்கள் இது பற்றி எல்லாம் வாய் திறக்க மாட்டார்கள்.
எடப்பாடியைக் கேட்டால் இவையெல்லாம் அறிஞர்களுடைய பிரச்சனை என்று ஒதுங்கிவிடுவார்.
தமிழ்நாடு பாஜகவோ நாங்கள் எல்லாம் "பாரதியர்கள் "ஆகிவிட்டோம்; தமிழர்கள் என்பது பிரிவினை மனப்பான்மை என்று தேசபக்தியுடன்பதில் சொல்லுவார்கள்.
விடுதலை இராசேந்திரன்
11.06.25
On Reading Point No. 4 & 5... Visualization was like... "அத்தனையும் நடிப்பா லதா? ".... ~ "இல்லை கோபால்....!!! இல்லை... " Really Lol... Thank you @swathikasarah#மதம்_கொண்ட_மனிதன்
Such a clarity from a young boy…
"Everyone has the right to live. Why should I say that people of another country should die?"
#RightToLive#Peace
🕊️❤️👦