திருச்சி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த போது, திருச்சி தெற்கு மாவட்டக்கழகம் சார்பில் பால்பண்ணை - அரியமங்கலம் பகுதியில் உற்சாக வரவேற்பை அளித்த கழக நிர்வாகிகள் - இளைஞரணியினர் - மகளிர் - கழக தொண்டர்கள் - பொதுமக்கள் அனைவருக்கும் என் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வரவேற்பில் மகிழ்ந்தேன் - உள்ளம் நெகிழ்ந்தேன்!
@KN_NEHRU@Anbil_Mahesh
தஞ்சை மாவட்டத்தில் நாளை நடைபெறும் திருமணம் உள்ளிட்ட கழக நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்தபோது, தஞ்சை மத்திய மாவட்டக் கழகம் சார்பில் அளிக்கப்பட்ட எழுச்சி மிக்க வரவேற்பை ஏற்று மகிழ்ந்தோம். வழிநெடுகிலும் என்னை அன்போடு வரவேற்ற கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள், இளைஞரணியினர், மகளிர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அன்பும் நன்றியும்.
@Govichezhian #DuraiChandrasekaran @sunramanathan_@NeelamegamTkg
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கலைஞானி என போற்றப்பட்ட திரையுலகின் பேராளுமை.
கழகத்தலைவர் அவர்களின் அன்பு நண்பராக – கழகத்தோடு கரம் கோத்து ஓரணியாய் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முற்போக்கு முகம்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் உலகநாயகன் @ikamalhaasan சாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதவாத - பிளவுவாத அரசியலை சரியான தளத்தில் நின்று எதிர்த்து வரும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்!
#HBDKamalSir @maiamofficial
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாரத சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி திருச்சியில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்புக்குரிய நிகழ்வின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு சாரணியர்களுடன் தஞ்சையில் இன்று கலந்துரையாடினோம்.
மேலும், தமிழ்நாடு பாரத சாரணியர் பெருந்திரளணி மலர் - சின்னம் ஆகியவற்றை வெளியிட்டு, இந்த சிறப்புக்குரிய விழா நிகழ்வுகளை தொடங்கி வைத்து மகிழ்ந்தோம்.
@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian@MurasoliThanjai
நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ‘முரசொலி’ செல்வம் மாமாவின் திருவுருவப்படத்தை தஞ்சை மத்திய மாவட்டக்கழக அலுவலகமான தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இன்று திறந்து வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினோம்.
சொல்லாகவும் - எழுத்தாகவும் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் செல்வம் மாமாவின் புகழ் ஓங்கட்டும்!
@SSP_MANICKAM@sivasankar1ss@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian #DuraiChandrasekaran @NeelamegamTkg@Murasoli_tnj #AKSVijayan @sunramanathan_
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் கழக நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் ச.முரசொலி அவர்களின் மக்களவை உறுப்பினர் அலுவலகத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் தஞ்சாவூரில் இன்று திறந்து வைத்தோம்.
மேலும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-ல் தஞ்சாவூர் மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனையருக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினோம்.
தஞ்சை மக்களவை உறுப்பினர் அலுவலகத்தின் வாயிலாக பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை - தேவைகளை தெரிவித்து, அவற்றை நிறைவேற்றிக் கொள்ள என் அன்பும், வாழ்த்தும்!
@SSP_MANICKAM@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian@SKDMKTJ
#DuraiChandrasekaran @Murasoli_tnj@sunramanathan_
‘கல்லணை காத்தான் - கழகத்தை காத்தான்’ என கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட கழக வீரர் அண்ணன் கல்லணை காத்தானின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று, தஞ்சை மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் அண்ணன் கல்லணை செல்லக்கண்ணு அவர்களின் மகள் மருத்துவர் காவ்யா - தம்பி திலீபன் இணையரின் திருமணத்தை தஞ்சையில் இன்று நடத்தி வைத்தோம்.
மணமக்கள் இருவரும் தமிழ்நாடும் - சமூகநீதியும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
@SSP_MANICKAM@sivasankar1ss@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian #DuraiChandrasekaran @SKDMKTJ@Murasoli_tnj@sunramanathan_
பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டு, நம் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin தலைமையில் இந்திய ஒன்றியமே போற்றுகிற வகையில் உயர்ந்து நிற்கின்ற தி.மு.கழகத்தின் கருப்பு - சிவப்புக் கொடியை தஞ்சை மத்திய மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதி, கண்டியூரில் இன்று ஏற்றி வைத்தோம்.
நம் கழகக் கொடி பறக்கும் வரை, கழக உடன்பிறப்புகள் இருக்கும் வரை தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும், எவராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது!
@SSP_MANICKAM@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian #DuraiChandrasekaran @kalaivanandmk@Murasoli_tnj
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் மத்திய மாவட்டம், திருவையாறு தெற்கு ஒன்றியம், கோனேரிராஜபுரம் - கருப்பூரில் கழகத்தின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்து, பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவுருவச்சிலைகளை இன்று திறந்து வைத்தோம்.
மேலும், நம் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், @dmk_youthwing சார்பில், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கான கலைஞர் நூலகத்தையும் அங்கு திறந்து வைத்து, அங்கு திரண்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களிடையே உரையாற்றினோம்.
2026-ல் மீண்டும் கழக அரசை அமைத்திட உறுதியேற்ற அப்பகுதி மக்களுக்கு என் அன்பும், நன்றியும்.
@SSP_MANICKAM@Anbil_Mahesh@TRBRajaa@Govichezhian #DuraiChandrasekaran @Murasoli_tnj@ilaiyadmk #Mugilvendhan
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.44 கோடி மதிப்பில் முடிவுற்றுள்ள 127 திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ.28.26 கோடி மதிப்பிலான புதிய கட்டடப் பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினோம்.
மேலும், கிட்டத்தட்ட 14,525 பயனாளிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களின் கீழ் 154 கோடி ரூபாய் அளவுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 9,984 சகோதரிகளுக்கு ரூ.67 கோடியே 19 லட்சம் அளவுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினோம்.’
நலத்திட்ட உதவிகளை பெற்ற அத்தனை பயனாளிகளையும் வாழ்த்தி உரையாற்றினோம்.
@Govichezhian@TRBRajaa #DuraiChandrasekaran #AnnaduraiMLA #AshokkumarMLA @NeelamegamTkg@Murasoli_tnj@jawahirullah_MH@sunramanathan_
மக்களின் கருத்துக்களைப் பெற்று அவற்றின் அடிப்படையில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிற வகையில், #மக்கள்_மன்றம் எனும் திட்டத்தை நம்முடைய #ChepaukTriplicane தொகுதியின் சிந்தாதிரிப்பேட்டை பம்பிங் ஸ்டேஷன் பகுதியில் செயல்படுத்தினோம்.
நம்முடைய முன்னெடுப்பில், @chennaicorp-ன் ‘நமக்கு நாமே திட்டம்’ - @LeapGreen CSR திட்டம் ஆகியவற்றின் கீழ் @RecycleBinTVM அமைப்பின் வழியாகச் செயல்படுத்தப்பட்ட ‘மக்கள் மன்றம்’ முன்னெடுப்பிற்கு , ஒன்றிய அரசின் “Best Practice to Improve the Living Environment Award” - "வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிமுறை” எனும் விருது வழங்கப்பட்டுள்ளது.
இதற்காகத் தொண்டாற்றிய நல் உள்ளங்களுக்கும் – நம் தொகுதி மக்களுக்கும் என்னுடைய அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். @Dayanidhi_Maran@nchitrarasu #CheerNGO
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சார்பிலான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை மூன்றாம் கட்டமாக தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.
தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான இலக்குகளை நோக்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை பற்றி இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசித்தோம்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியை எட்டுவதற்கான திட்டங்கள், சிறப்பு மற்றும் புதுமையான திட்டங்களை பல்வேறு அரசுத் துறைகளின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்ற வழிமுறைகள் - எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முயற்சிகள் உள்ளிட்டவைக் குறித்து இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுகிற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகச் செல்லும் வழியில், விழுப்புரம் வடக்கு மாவட்டக்கழகம் சார்பில் திண்டிவனம் இருதயபுரம் மற்றும் செஞ்சியில் இன்று மாலை திரளாகக் கூடி நின்று என்னை அன்போடு வரவேற்ற கழக உடன்பிறப்புகள் - இளைஞர் அணியினர் - மகளிர் மற்றும் பொதுமக்களுக்கு என் அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். #DrSenthil @GingeeMasthan
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று வருகை தந்தபோது, திருவண்ணாமலை அருகேயுள்ள கடம்பையில் திருவண்ணாமலை - கள்ளக்குறிச்சி - திருப்பத்தூர் மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த கழக முன்னணியினரும், உடன்பிறப்புகளும், தொ.மு.சவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு அன்பும் நன்றியும். @evvelu@PitchandiK #Dharanivendhan @CNAnnaduraiMP
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, திருவண்ணாமலை திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, கிரிவலப் பாதையில் பக்தர்கள் வசதிக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை இன்று ஆய்வு செய்தோம்.
கிரிவலப்பாதையில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு, பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையத்தில் ஆய்வு மேற்கொண்டோம். மேலும், அங்கு ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 6 RO குடிநீர் வசதி மையங்களுக்கானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினோம்.
அங்கு, மேம்படுத்தப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்துக்கானப் பணிகள் - பக்தர்கள் தங்கும் இடம், பேவர் ப்ளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அவை குறித்து அதிகாரிகள் - பணியாளர்களிடம் கேட்டறிந்தோம்.
@evvelu@PKSekarbabu
கழகத்தின் முதன்மை அணியாம் நம் @dmk_youthwing-ன் மாவட்ட- மாநகர- மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு ஓராண்டைக் கடந்த நிலையில், அண்மையில் அவர்களின் செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தோம்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த ஓராண்டு காலத்தில் 'இல்லந்தோறும் இளைஞர் அணி' உறுப்பினர் சேர்க்கை, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு 'கலைஞர் நூலகம்' அமைப்பது, இளம் பேச்சாளர்களைத் தேர்வு செய்யும் வகையில், #என்_உயிரினும்_மேலான..!" பேச்சுப் போட்டியை நடத்தி வருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நிலையில் வரும்காலத்தில் இளைஞர் அணி மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு பணிகள் குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளோம்.
மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட- மாநகர- மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
#கழக_இளைஞர்_அணி @Joel_Dmk @YGFHDqykgm4VBP9 @ilaiyadmk@AbdulmalikDmk@keprakashdmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆய்வு செய்தோம்.
திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவுக்கு சுமார் 45 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் – நெரிசலை சமாளிப்பதற்கானப் பணிகள் – தங்குமிடம் - குடிநீர் – கழிப்பிட வசதிகள் அமைக்கப்பட்டு வரும் விதம் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கேட்டறிந்தோம்.
மேலும், பக்தர்கள் வசதிக்காக தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தினோம். தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிரிவலப்பாதைக்கு வருகிற பயணிகள் சிரமத்தை எதிர்கொள்ளாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழாவிற்கு பக்தர்கள் பாதுகாப்போடு வந்து செல்வதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் – காவல்துறை – சுகாதாரத்துறை என சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட ஆலோசனைகளை வழங்கினோம்.
@evvelu@PKSekarbabu #DarezAhmedIAS