தொல்காப்பியன் திருமாவளவன் தன்னுடைய கட்சி சார்பில் யார் போட்டியிட வேண்டும் என்பதை அறிவிப்பதை கூட தங்களிடம் கேட்டுத்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று நினைப்பதுதான் திராவிட பண்ணையார்தனம்!
விழுப்புரம் மாவட்டம்
#திண்டிவனம் தொகுதியில்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்
சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட
வாய்ப்பு வழங்கிய
எமது மகத்தான தலைவர்
எழுச்சித்தமிழர்
@thirumaofficial#தொல்காப்பியன்_திருமாவளவன் அவர்களுக்கு நன்றி.
கடந்த 2021 ஆம் ஆண்டு
இதே விழுப்புரம் மாவட்டம்
#வானூர் தொகுதியில்
போட்டியிட வாய்ப்பு வழங்கினார்
எமது தலைவர்.
ஆனால்,எழுச்சித்தமிழரின்
அந்த வெற்றி கனவை
நிறைவேற்ற முடியவில்லை
என்னும்
வலி,
கடந்த ஐந்தாண்டுகளாகவே
இருந்தது.ஆனாலும்,
எமது தலைவரின் மன உணர்வை
புரிந்து கொண்டு
கட்சிக்கான களப்பணிகளை
தொய்வில்லாமல் செய்தேன்.
சோர்வோ அதிருப்தியோ இல்லாமல்
தலைவர் இட்ட ஆணையை ஓரளவுக்கு நிறைவேற்றியிருக்கிறேன் என நம்புகிறேன்.
இச்சூழலில்,மீண்டும் #திண்டிவனம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து மீண்டும்
வாய்ப்பு வழங்கியிருக்கும்
தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்லும் நேரத்தில்,
இன்னொரு கூடுதல் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார்.
என்ன வாய்ப்பு என்றால்,
எமது தலைவரின் கரங்களை பிடித்தே
சட்டப்பேரவைக்கு போவது தான்.
2026- சட்டப்பேரவையை
கலக்கப்போவது எழுச்சித்தமிழர் தான்-
விடுதலைச் சிறுத்தைகள் தான்
என்பதை தமிழ்நாடு காணப்போகிறது.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
29.3.2026
சிந்தனை, பேச்சு, கொள்கைன்னு எவ்வளோ புரிதல் உள்ளவர் திருமா. கூட்டணி சீட் பகிர்வில் மற்றும் அதில் இருந்த சிக்கல்களை பற்றி எல்லாம் எப்படி முதிர்ச்சியோடுஅணுகியது மட்டும் இல்லாம எல்லாருக்கும் புரியும் வகையில் எவ்வளோ தெளிவா பேட்டியும் கொடுத்தார். 8 சீட்டு வாங்கிக்கிட்டு துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு இங்க எம்.எல்.ஏவுக்கு நிக்கிறாருன்னு சொல்கிறவர்கள் திருமாவை பற்றி அவ்வளோதான் புரிஞ்சி வெச்சிருக்காங்க.
தொங்கு சட்டமன்றம் அமைந்தால் தோழர் திருமாவளவன் அவர்கள் துணை முதலமைச்சர் பதவி கேட்பாரோ என்ற பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
"ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு"
விசிக தோழர்கள் அமைதி காக்கவும் . உறுதியாக அண்ணன் ஆளூர் ஷா நவாஸ் தேசிய அரசியலில் நுழைகிறார்..! எந்த வருத்தமும் பட வேண்டாம் தயவு செய்து அமைதி காக்கவும் 🙏🙏
@itwingvck@Sivaa_Comrade@vckuthaya
ஜனநாயகத்தை காக்கவும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் அண்ணன் தொல். திருமாவளவன் (@thirumaofficial) அவர்கள் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டு களம் காணவிருக்கும் அனைவரும் சட்டமன்றத்தில் அண்ணன் அவர்களது தலைமையில் வலுவான குரலாக ஒலித்திட வாழ்த்துகள், மகிழ்ச்சி! - நீலம் பண்பாட்டு மையம் நிறுவனத் தலைவர் அண்ணன் பா.இரஞ்சித் (@beemji) அவர்கள்.