🔥💃💃💃💃🔥அமெரிக்க பஞ்சாலையில் ஆணுக்கு நிகரான சம ஊதிய கூலி கேட்டு உயிர்நீத்து போராடி சமஊதிய கூலி பெற்ற பெண்களை போற்றும்விதமாக கொண்டாடப்படும் தினமே மார்ச் 8 உலக மகளிர்தினம்💃💃💃
நாம் அனைவரும் சமஊதிய போராளிகள் என்பதில் பெருமை கொள்வோம்🔥
#சமவேலைக்குசமஊதியம்
கல்வி முறையில் உள்ள குறைகளை சுட்டிகாட்டிய ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது - திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.
தமிழக அரசின் கல்வித்துறையில் நிகழும் குறைகளையும் மாணவர்களுக்கு தேவையான கல்வி முறைகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு. உமா மகேஸ்வரி அவர்களை அரசுக்கு எதிராக அவதூறு பதிவிட்டதாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த பதினைந்து நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேச முன்வராத திமுக அரசு, கல்வித்துறையில் நிகழும் குறைகளை சுட்டிக்காட்டிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானதாகும்.
எனவே, ஆசிரியர் திருமதி. உமா மகேஸ்வரி அவர்களின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பள்ளியில் பணியாற்ற அனுமதிப்பதோடு, மாணவர்களின் எதிர்காலத்திற்கு தொடக்கப் புள்ளியான ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் - தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசு கடந்த காலங்களை போல காலம் தாழ்த்தாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம், சமவேலைக்கு சம ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கூட தமிழக அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்குவதோடு, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
19ஆம் நாள் 'சமவேலைக்கு சமஊதியம்' மாநில தலைநகர் சென்னையில் SSTA மாநில பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் அவர்களின் எழுச்சியுரை...
#SSTA#சமவேலைக்குசமஊதியம்
பகுதி 1
நியாயமான ஒற்றை கோரிக்கை #சமவேலைக்கு_ஊதியம் கோரிக்கையை கருணையோடு அணுகி தமிழ்நாடு அரசு தீர்வு தரவேண்டும்
தேர்தல் அறிக்கை 311 ஐ நிறைவேற்றி
இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வில் விளக்கேற்றி வையுங்கள் ஐயா...