உன்னோடு வாழ்ந்திட
ஓர் நாள் கேட்டேன்...
ஒரு நாள் போதுமா
வாழ்நாள் முழுவதும் தருகிறேன் என்றாய்...
வாழ்ந்துக்கொண்டுதான்
இருக்கிறேன்...
ஒவ்வொரு நாளும் நீ தந்து சென்ற நினைவுகளோடு...🌹
#கள்வன்
ஸ்மார்த்த சங்கராச்சாரியை கும்பகோணம் கோயிலுக்குள் வரைந்துள்ளீர்கள். இது எந்த ஆகமத்தின் கீழ் வரும் ?
ஆகமம் கற்ற, பூஜைகளை கற்ற, கடவுள் நம்பிக்கையுடைய அனைத்து ஜாதி இந்துக்களை அர்ச்சகர் ஆக்கினால் அது ஆகமத்திற்கு எதிரானது என்கிறீர்கள்
என்ன பித்தலாட்டம் இது …
மாநிலங்களைவையில் அண்ணாவின் முதல் முழக்கத்திலிருந்து ....
#அறிஞர்_அண்ணா
" தென்னகத்திலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், ஆங்கிலம் தெரிந்த உறுப்பினர்கள் இந்தியில் பேசுவதும் கேள்வி கேட்பதும் பதில் பெறுவதையும் பார்க்கிறோம்.
அப்படிப் பேசும்போது அவர்கள் கண்கள் ஜொலிப்பதைப் பார்க்கிறேன். அதன் பொருள் என்ன? நீங்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் இங்கு பேசாமல் இருங்கள் என்பதுதானே? இதுதான் தேசீய ஒருமைப்பாட்டிற்கான வழியா?
தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக வாசகம் என்றுதான் கூறுகிறேன்.
ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம்தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உரு���ாகி இருந்தால் ஒருமைப்பாட்டிற்கு இப்போது என்ன அவசியம் வந்தது.
கால வெள்ளத்தில் மறைந்து போய்விட்ட தத்துவங்களின் வறுமைதான் தேசிய ஒற்றுமை.
எனவே, நாம் இதுபற்றி மறுபடியும் எண்ணுவோம். நமக்கென்று அரசியலமைப்பு இருக்கிறது. பெரிய திறமைசாலிகள் தான் அரசியல் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். எனினும் நாடு என்ன என்பதை மறுபடியும் எண்ணிப் பார்க்க வேண்டிய புனராலோசனை செய்ய வேண்டிய புது விளக்கம் அளிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இப்போது இந்தியாவின் ஒருபகுதியாக இருக்கிற நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன். அதில் வேறுபட்ட இன மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்குப் பகையாளிகள் அல்ல.
நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் நான் என்னைத் திராவிடன் என்று அழைத்துக்கொள்ளப் பெருமைப்படுகிறேன்.
இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ ��திர்ப்பானவன் அல்ல.
ராபர்ட் பர்ன்ஸ் சொன்னது போல, மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன் தான்.
நான் என்னைத் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும் போது திராவிடனிடம் இந்த உலகத்திற்கு வழங்க திட்டவட்டமான தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று கருதுகிறேன். அதனால் எங்களுக்குச் சுயநிர்ணய உரிமை தேவை என்று விரும்புகிறோம். "
#அண்ணா
#Anna
கடந்த வாரத்தில் ���ட்டும் தமிழ்நாட்டில் இரண்டு பெரிய சாலை விபத்துக்கள் நடந்துள்ளன.
இறப்பு என்பதே துயரமானது. அதிலும் இதுபோல விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் பெருந்துயர்.
புள்ளி விபரங்களின்படி இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடப்பது தமிழ்நாட்டில் தான். அதிக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், அதற்கான சரக்கு கையாளுதல்,அதிக கல்லூரிகள்,வியாபாரம், விவசாயம் என அதிக சாலைப்போக்குவரத்தை தமிழ்நாட்டில் மக்கள் மேற்கொள்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வாகனங்களின் எண்ணிக்கையும் தினசரி புதிதாக பதிவு செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாய் கொண்டே வருகிறது.
ஏராளமான வாகனங்கள், நல்ல சாலைகளில் விரைவாக செல்லும்பொழுது, ஒரு சிறு கவனக்குறைவாவ் கூட இது போன்ற பெரும் துயரங்கள் நிகழ்ந்து விடுகின்றன.
ஆண்டுக்கு சராசரியாக தமிழ்நாட்டு சாலை விபத்துகளில் 15,000 பேர் உயிரிழக்கிறார்கள் 50,000 பேர் பலத்த காயமடைகிறார்கள். இவர்களின் வாழ்வும், குடும்பத்தினர் எதிர்காலமும் முடங்கிப் போய் நொறுங்கிவிடும்.
இருசக்கர வாகனங்களி��் வேகமாக சென்று மற்ற வாகனங்களில் மோதி ஏராளமான இளைஞர்கள் தங்கள் வாழ்வை இழக்கிறார்கள். இதனால் ஏராளமான குடும்பங்கள் தங்கள் பிற���கால வாழ்வை கடுமையான மனச் சுமையுடன் கடக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் நிகழும் இந்த கொடுந்துயர் சமூகத்தில் பேசுபொருளாக மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்பது தெரியவில்லை.
ஆனால் அரசும், பொது சமூகமும் இதுகுறித்து தீவிரமாக பேச வேண்டும்.
இதுபோன்று சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கும் காயம் அடைபவர்களுக்கும் அரசால் வழங்கப்படும் நிவாரண நிதியில் இருக்கும் முரண்பாடு மிகுந்த கவலை��ை ஏற்படுத்துகிறது.
நேற்றைய சிவகங்கையில்நடந்த விபத்தில் மாண்புமிகு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலம் 3 லட்சமும் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுபோன்ற சாலை விபத்துகளில் அது ஊடகங்களில் செய்தியாக வந்து பரவலான கவனத்தை பெறும் போது மட்டும்தான் முதலமைச்சரின் மூன்று லட்ச ரூபாய் நிவாரண நிதியும் ஒன்றிய அரசின் பிர��மரின் நிவாரண நிதியும் கிடைக்கிறது.
சோகம் என்னவென்றால் ஒன்று இரண்டு நபர்கள் உயிரிழக்கும் தினசரி விபத்துகளில் இது போன்ற முதலமைச்சரின் நிவாரண நிதியும் பிரதமரின் நிவாரண நிதியும் கிடைக்கப் பெறுவதில்லை
தற்போது அமலில் உள்ள விதிமுறைகளின்படி சாலை விபத்துகளில் உயிரிழந்தால் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் அனைத்து விசாரணையும் நிறைவு அடைந்து வரிசை முன்னுரிமை படி கிடைக்கிறது. இந்த ஒரு லட்ச ரூபாயை வழங்குவதற்கும் பெறுவதற்கும் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகிறது
அதுபோன்ற விபத்துகளில் தங்கள் குடும்பத்தாரை பறிகொடுத்து எதிர்கால வாழ்வாதாரம் முடங்கிப் போய் இருக்கும் ஏராளமான குடும்பங்கள் உண்டு.
எனவே அனைத்து விபத்துகளுக்கும் இதை ஒருங்கிணைத்து எந்த சால��� விபத்தில் உயிர் இழந்தாலும், காயம் அடைந்தாலும் அந்த குடும்பத்தினருக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் கிடைப்பதையும் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரண உதவி கிடைப்பதையும் அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
@senbalan இரண்டிலும் புரதம்தானே இருக்குது டாக்டர். அப்புறமும் ஏன் இந்த நாட்டுக்கோழி இறைச்சி ,முட்டைன்னு கூடுதல் விலையுள்ள பொருட்களுக்கே போறாங்க. இது ஒரு எலைட்���னம் போல இருக்கு. ஆர்கானிக் , நாட்டு மாட்டு பால் வரிசையில் நாட்டுக்கோழி. ஆடு என்ன பாவம் பண்ணிச்சு. அங்க இன்னும் கை வைக்கலை போல.