மீண்டும் உன்னிடம் நாடி வந்து நிற்பது
காதலினால் அல்ல.
உன்னிலிருந்து வெளியேறி
முற்றிலுமாய் கடந்துபோக
இந்த மனக்கசப்பு போதவில்லை,
இந்த வலி போதவில்லை,
நான் வந்து நிற்கிறேன்
இன்னும் கொஞ்சம் கசப்பிற்கு
இன்னும் கொஞ்சம் காயத்திற்கு
வேறு வழியில்லை
இது இப்படிதான்
முடிவை எட்டும்.
மன்னித்த தவறொன்றை பிறிதொரு பிணக்கில் சொல்லிக் காட்டத் தோன்றுமாயின் இன்னும் நீ மன்னிக்கவில்லை. நிஜமாய் மனிதர்களுக்கு மன்னிப்பது எளிய காரியமன்று. எல்லாம் அந்நேரத்திற்கு சொல்லிக்கொள்ளும் சமாதானப் பொய்கள்.