சட்ட ஒழுங்கு குறித்து பொது மக்களின் தகவல் அறியும் உரிமையை பறித்து விஜய் அரசு அரசாணை வெளியிட்ட நாள் - 21/09/2026
அந்த அரசாணையை DIPR மூலம் அதிகாரப்பூர்வமாக அரசு பொதுவில் வெளியிடவில்லை, ரகசியமாகவே வைத்திருந்தது.
கண்ணன் ஜீவானந்தம் என்கிற பத்திரிக்கையாளரின் முயற்சியில், இது அம்பலப்பட்ட பிறகு U Turn அடித்து பின்வாங்குகிறது.
1) இந்த சர்வாதிகார அரசாணை யாருடைய ஒப்புதலின் பெயரில் போடப்பட்டது.
2) அரசு இதனை பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடாதது ஏன்.
3) முதலமைச்சர் தான் இந்த அரசாணையை வெளியிட சொன்னாரா ? அல்லது அவரை மீறிய power center - ஆ ?
இந்த plan எல்லாம் அதிமுக approval கொடுத்தது, அப்போதே கட்டுமானப் பணிகளும் தொடங்கி விட்டது.
2020 ஆம் ஆண்டு satellite view இதோ..
எதுவும் தெரியாம எவன, எப்போ கடிக்கலாம் என இருக்கக்கூடாது!
As the women's Kabaddi team sought my blessings, I felt immense pride for each one of them. Being a woman, I could relate to the hardships & struggles they had been through to break barriers. My best wishes are with you always. Keep reaching for the stars!
#JeetHamariHai
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன், ஜப்பானில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போல்வால்ட் மகளிர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை!
கால் முறிவு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்த பின்னர், விடாமுயற்சியுடன் தனது மகள் பயிற்சி செய்து சாதனை படைத்துள்ளதாகத் தந்தை பெருமிதம்.
BaranikaElangovan | PoleVault | Asian Cup
#BronzeMedal #Athletics #Mayiladuthurai #Newstamil24x7
1. Designed by Chennai's top Architect CRN mylapore.
2. It was a feasible and space utilisation plan.
3. Approved by ADMK govt and work started.
4. 2021 May new govt DMK formed that time almost 30% of civil work was completed .
எதையும் தெரிஞ்சிக்கக் கூட முயற்சி பண்றதில்லை.
தலைவர்களுக்கெல்லாம் சோபா, சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் பெட்டி கொடுத்து வாங்கிட்டு இருக்காங்க .
மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#VoteForDMK
Mighty Madurantakam வாக்காளர்களே! 🦇🖤❤️
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் களம் காணும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் @iparanthamen அவர்களை ஆதரித்து, கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
#DMK4TN #Vote4DMK #Madurantakam
Dummy ஆட்சியாளர்களின் குதிரை பேர அரசியலால் தாராபுரம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் நத்தம்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk
வாக்களித்த மை காய்வதற்குள் வேறு கட்சியில் நின்று வென்றவர்களை வளைத்து ஆட்சி அமைத்து, அதைத் தக்க வைக்க மக்கள் மீது இடைத்தேர்தலை திணித்துள்ள Sofa Model ஆட்சியாளர்களின் அதிகார வெறியை முறியடிக்க, ‘ஆதரிப்பீர் உதயசூரியன்’ என்று தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக கொளத்துப்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk
#BREAKING | மதுரை அரசு சட்டக் கல்லூரியில் மின்சாரத்துறை அமைச்சர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்டது குறித்து முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு
#SunNews | #TNEB | #EBIssue | #DMK
ஜெம் வீரமணி வழக்கை முடித்துவைக்க வாதாடியது நீங்கள்தான்!
தி.மு.க ஆட்சியில் ஜெம் வீரமணி வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக, இன்றைய பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார். அது முற்றிலும் தவறானது. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர, கடந்த ஆக்ஸ்ட்19 அன்று வாதாடியது விஜய் தலைமையிலான அரசின் பிரதிநிதிதான். ஆனால், அவரது வாதத்தை ஏற்காமல் போக்சோ நீதிமன்றம்தான் அடுத்தக்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
- தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் ஆதாரங்களுடன் பதிலடி!
#PWilson #DMK #GemVeeramani #TVKFails #TVKVijayFails #POCSOவீரமணி #KalaignarSeithigal
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான்,இந்திய தேர்தல் ஆணையர்கள் மூவரும் முடிவெடுக்க வேண்டும்;
இதற்கு சாத்தியப்படாத சூழல் நிலவுமானால்
பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவுகள் அமைய வேண்டும் என்பதுதான் தேர்தல் ஆணைய விதி.
ஆனால்,
தலைமைத்
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரோ, மற்ற தேர்தல் ஆணையர்கள் இருவரின் ஒப்புதல் இல்லாமல் தன்னந்தனியாக, ரகசியமாக செயல்பட்டு வந்துள்ளார் என்பதை நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் (டெல்லி பதிப்பு) அம்பலப்படுத்தி இருக்கிறது.
எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஆளும் கட்சியினரின் ஆலோசனையின் பேரில் கொண்டுவரப்பட்ட சூழ்ச்சி.எனவே எஸ் ஐ ஆர் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கிடையே நாடு முழுவதும் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில்,
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக
தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர்,
எஸ்ஐஆர் குறித்து தங்களுக்கு தெரியாமல் பல முடிவுகளை எடுத்தார் என்று ஒன்றிய கேபினட் செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
அதில் ,கடந்த 10 மாதங்களில் மட்டும், இரு தேர்தல் ஆணையர்களும் 14 முறை இதற்கான எதிர்ப்பை பதிவு செய்ததாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இதனால் சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையோடும் – அரசியல் குறுக்கீடுகள் இல்லாமலும் செயல்பட வேண்டிய உச்ச அமைப்பான தேர்தல் ஆணையத்தின் மீது மிகப் பெரும் களங்கம் படிந்துள்ளது. அதன் நம்பகத் தன்மையும் தகர்ந்துள்ளது
அதுமட்டுமல்ல; வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் கூட தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை;
புதிய வாக்காளர்கள் சேர்க்கை தன்னிச்சையாக எடுக்கப்பட்டவை என குற்றம் சாட்டியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட `தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி’ நடவடிக்கைகளில் தங்களுக்கு தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், ஒரு சில பணிகளில் தங்கள் ஆலோசனைகளை மீறி சட்டவிரோதமான நடைமுறைகள் புகுத்தப்பட்டதாகவும் இருவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒட்டு மொத்த பணியும்
மூன்று ஆணையர்களின் மேற்பார்வையில் நடப்பதாக வெளியே காட்டப்பட்டாலும், ஆணையத்தின் உள்ளே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருந்துள்ளது.
எஸ்ஐஆர் விவகாரத்தில், அவரை ஒரு `சக்தி’ இயக்கியுள்ளது.
இதனால் தான், மற்ற இருவரும் புறம் தள்ளப்பட்டுள்ளனர். இரு ஆணையர்களின் எச்சரிக்கையையும் மீறி, அப்பட்டமான விதிமீறல்கள் பல முறை நடந்துள்ளன.
ஆனால், எதுவுமே கண்டுகொள்ளப்படவில்லை. முற்றிலுமாக அலட்சியம் செய்யப்பட்டிருக்கிறது
ஜனநாயகத்தை உறுதி செய்ய வேண்டிய தேர்தல் ஆணையத்தை யாரோ ஒருவருக்கு சாதகமாக பயன்படுத்தினார் என்று சக தேர்தல் ஆணையர்களாலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ள தலைமை ஆணையாளர் ஞானேஷ்குமாரை இயக்கிய அந்த பெரும் சக்தி எது?
அது இன்னமும் வெளிச்சத்துக்கு வரவில்லை.
இந்தச் செய்தி வெளியாகி 24 மணி நேரம் முழுதாக முடிந்து விட்டது. ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் இதுவரை பதில் சொல்லவில்லை. மறுப்பும் தெரிவிக்கவில்லை.
தேர்தல் ஆணையத்தின் கனத்த மவுனமும், தேர்தல் ஆணையர்களின் இந்த குற்றச்சாட்டுகளும், இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளது.
.பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அறிக்கை மூலம் வலியுறுத்தி இருக்கிறார்.
நீதிமன்றம் தானாக முன்வந்து ஞானேஷ் குமார் மீது வழக்கு தொடர வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியும்,
தலைமை தேர்தல் ஆணையர் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார் .
தலைமை தேர்தல் ஆணையர் கைது செய்யப்பட வேண்டும் என்பதோடு எஸ்ஐஆர்.க்கு பின்னர் நடத்தப்பட்ட தேர்தல்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களுக்கு எதிரான ஒரு சதி அரங்கேற்றப்பட்டு இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையர்களின் கடிதங்கள் உறுதி செய்கின்றன. அந்த சதிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் கிளம்பி இருக்கின்றது
அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.