காவல்துறையின் அட்டகாசங்களை முடிவுக்கு கொண்டு வராமல் மக்கள் இந்த காக்கிச்சட்டையின் மீது கொண்டுள்ள வெறுப்பை சரி செய்ய முடியாது
ஒரு பெண்ணை நடத்தும் விதமா இது ?
அடுத்த தலைமுறை வேற மாதிரி இருக்கானுங்க பெரிய பேரிடர் நடக்குறதுக்குள்ள மாத்திக்கிட்டா நல்லது
@CMOTamilnadu
அமெரிக்காவில் ஒருவரை காவல் துறை கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கும் போது,
மூச்சு விட முடியவில்லை..
I can't breathe என்றார்
அவர் அப்படி கொலை செய்யப்பட்டார். உலகமே பொங்கியது.. ஆனால் இந்திய மனித உரிமைகள் ஆணையம்?
நேற்று காவலரை தாக்கிய நபர் என்று செய்தி வெளியிட்டு, அவர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது தவெக அரசு... அந்த நிகழ்வின் முக்கியமான வீடியோ இது..
விசிக கட்சி ஆட்கள் சாலைகளை மறைத்துக் கொண்டு வழிவிடாமல் நிற்கிறார்கள் .. பைக்கில் வந்த நபர் வழி விட கேட்க அவரை மிரட்டுகிறார்கள் விசிக ஆட்கள். " அந்த பக்கம் போ இத பக்கம் போ என்று"... அதில் அவர் மட்டும் அல்ல அவருக்கு பின்னாலும் ஒருவர் பைக்கில் நிற்கிறார் அவரும் சேர்ந்து தான் வழிவிட கேட்கிறார்.. இதில் வழி விட மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , காவலர்கள் அந்த பைக்கில் இருக்கும் நபரை அடிப்பேன் என கை ஓங்குகிறார்..
மக்களிடம் கை ஓங்கினால் மக்கள் என்ன அடிவாங்க வேண்டுமா என்ன? அந்த அதிகாரம் எங்கே இருந்து காவல்துறைக்கு எந்த சட்டம் கொடுத்தது?
அங்கே வழிவிட மறுக்கும் விசிக நபர்களை கை ஓங்க துப்பு இல்லை... கடந்து செல்ல காத்திருக்கும் நபர் மீது கை ஓங்கினால் திருப்பி அடிக்காமல் என்ன செய்வான் ஒரு மனிதன்? எனவே காவல்துறை செயல் தான் கண்டிக்கதக்கது... அடித்தால் அடி வாங்கி கொண்டு செல்ல வேண்டிய அவசியம் எந்த குடிமகனுக்கும் இல்லை..
அப்பாவி இளைஞர் ஆகாஷ் விடுதலை செய் Tvk தமிழக அரசு
26 வயது ஆகாஷ் மீது 6
பிரிவுகளில் வழக்கு ஏன் போடப்பட்டது
ஆகாஷ் எந்த தவறும் இல்லை. தவறு செய்தவர் காவல் ஆய்வாளர்
அனுமதியின்றி வழி விடாமல் மறியல் செய்த விசிக நபர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை
கூட்டணி கட்சிக்கு விசுவாசமாக வேலை செய்கிறீர்களா
@TVKVijayHQ
விஜய் அரசு காவல்துறைக்கு கடிவாளம் இல்லாத, இஷ்டத்திற்கு ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதனால் தான் அப்பட்டமாக தஞ்சாவூர் போலீஸ் தவறு என்று தெரிகிறது இருந்தும் இந்த 23 வயது ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்கு அவர் வாழ்வை நாசம் செய்ய துடிக்கிறது காவல்துறை..
இவர்கள் அடித்தால் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா ???
இந்த நபர் மீது எந்த தவறும் இல்லை. தவறு முதலில் அடித்த காவலர் மீதும் , வழி விடாமல் மறியல் செய்த விசிக மீதும் தான்! உடனடியாக ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைவரும் குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக மீது நமக்கு மாற்று கருத்து உண்டு ஆனால் இந்த விடயத்தில் அஸ்வதாமன் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👌👌👌
அந்த இளைஞனை வேனில் ஏற்றும் போதே வெறியோடு காவல்துறை செயல்படுவதை நம்மால் உணர முடிகின்றது.
அந்த இளைஞனை சட்டப்படி தண்டிப்பதே சரி.
காலம் மாறிவிட்டது சில காவல்துறை நண்பர்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்கள்
காவல்துறை ஊழியர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் இன்று ஒரு தவறை நாம் செய்தால் அது ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று .
அது மட்டுமல்ல முள் வந்து இலை மேல் விழுந்தாலும் இலை வந்து முள் மேல் விழுந்தாலும் இலைதான் நாசமாக போகும்
அப்படித்தான் காவல்துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாழ்க்கை இருக்கிறது அதை சிந்தித்தாவது இனிமேல் இதுபோல் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்களையும் நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது
இன்று குற்றவாளிகளை காவல்துறை தண்டிப்பது கிடையாது அப்பாவிகள் மீதுதான் குதிரை ஓட்டுகிறார்கள் அதுதான் தவறு.
ஆம்பூரில் எங்கே போனது உங்கள் வீரம்...???
.
காவல் அதிகாரி செய்ததுதான் முதல் தவறு...!!!
.
தஞ்சாவூரில் திடீரென்று காலை வேளையில் தங்கள் பேனர்களை கிழித்து விட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் மக்கள் அதிகம் செல்லும் பாதையில் சாலை மறியல் செய்கிறார்கள்...
மக்கள் செல்லும் பாதையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சாலை மறியல் போராட்டம் செய்தவர்களை எதுவும் செய்யாமல்...
அவசரமாக தன் சொந்த வேலைக்காக போன ஒரு அப்பாவி இளைஞனை ஒரு காவல்துறை அதிகாரி கைநீட்டி அடித்தது தவறு...
அதே வேளையில் அந்த இளைஞன் அந்தக் காவல்துறை அதிகாரியை திருப்பி அடித்தது தவறுதான் அதை நான் மறுக்கவில்லை...
தான் எந்த ஒரு தவறும் செய்யாமல் சாலையில் அவசரமாக செல்லும் பொழுது கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அரசியல் கட்சியினர் இவ்வாறு செய்கிறார்களே என்று அந்த கோபக்கார இளைஞன் கோபப்பட்டதில் நியாயம் இருக்கிறது...
அந்த இளைஞனை அத்தனை பேர் மத்தியில் அடித்த காவல்துறை அதிகாரி செய்ததுதான் மிகப்பெரிய தவறாக சொல்வேன்...
பொதுமக்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் அவசரங்கள் இருக்கும். இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசியல் கட்சியினர் திடீர் திடீரென்று போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம்?
போராட்டம் நடத்தியவர்களை இதுபோன்ற கை வைத்து அடிக்கும் தைரியம் காவல்துறைக்கு இருக்கிறதா என அறிய விரும்புகிறேன்...?
தவறு செய்தவனை அவன் அரசியல் கட்சி சேர்ந்தவன் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு...
அப்பாவி இளைஞனை அடித்து அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாது அந்த இளைஞனை ஜீப்புக்குள் ஏற்றுவதற்குள் அத்தனை முறை அவன் கையை திருப்புகிறார்கள் இடுப்பில் குத்துகிறார்கள்...
இப்பொழுது ஆறு பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து அந்த அப்பாவி இளைஞனை சிறையிலும் அடைத்து விட்டார்கள்...
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அந்த இளைஞனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ...
கோபத்தில் என்ன நடக்கிறது என்பதை புரியாமல் தன் மீது நியாயம் இருப்பதை காவல்துறை புரிந்து கொள்ள மறுக்கிறதே என்ற ஆவேசத்தில் அவன் அதுபோன்று நடந்து கொண்டிருக்கிறான்...
ஆகவே அந்த இளைஞனுக்கு தகுந்த புத்திமதி சொல்லி எச்சரிக்கை விடுத்து காவல்துறை அந்த இடத்திலேயே பிரச்சனையை முடித்திருக்க வேண்டும்...
ஆம்பூரில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் எத்தனை காவல்துறை அதிகாரிகளில் தொடைகள் பிளக்கப்பட்டது தலைகள் உடைக்கப்பட்டது என்பதெல்லாம் இன்னமும் செய்தி பதிவுகளில் ஆதாரமாக இருக்கிறது...
அந்த இடங்களில் போலீசார் இது போன்று திருப்பித் தாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் உண்மையிலேயே போலீசுக்கு பாராட்டுகளை தெரிவிக்கலாம்...
ஆனால் அங்கெல்லாம் அடியை வாங்கிக் கொண்டு, ஒரு அப்பாவி இளைஞனை அடித்ததோடு மட்டுமல்லாது அவனை பல பிரிவுகளின் கீழ் கைது செய்து இருக்கிறார்கள் இதை தேசிய சிந்தனை பேரவை சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்...
இப்போ இந்த நபர் என்ன குற்றம் செய்தார் என்று கழுத்தில் கயிறை அழைத்து செல்கிறார்கள் #police
நான் போகவேண்டும் வழி விடுங்கள் என்று தான் அவர் கேட்டார் அவரை அனுமதித்து இருந்தால் அவர் சென்று இருப்பார்
#police அதிகார திமிரில் அவனை அறைந்தால் அவன் திரும்ப அறைந்துவிட்டான்
விடுதலை செய்யுங்கள் @CMOTamilnadu
मोदी ही नहीं चाहिए ये clear हो गया है.. मोदीजी आप क्यों ज़बरदस्ती लोगों के मम्मी पापा मसीहा बने हो, लोग नहीं चाहते है आपको.. इतना मौज काट लिया है झूठ फरेब करके, अब देश को बख्स दो न प्लीज
ஆச்சரியமாக இருக்கிறது, இல்லையா?
1.) தலைக்கவசம் அணியாவிட்டால்... அபராதம் ₹1,000/-
2.) வாகனங்களை நிறுத்தக்கூடாத இடத்தில் (No-parking zone) நிறுத்தினால்... அபராதம் ₹3,000/-
3.) காப்பீடு (Insurance) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,000/-
4.) மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால்... அபராதம் ₹10,000/-
5.) நுழையக்கூடாத பாதையில் (No-entry zone) சென்றால்... அபராதம் ₹5,000/-
6.) வாகனம் ஓட்டும்போது அலைபேசியில் பேசினால்... அபராதம் ₹2,000/-
6.) மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (Pollution Certificate) இல்லாவிட்டால்... அபராதம் ₹1,100/-
7.) இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால்... அபராதம் ₹2,000/-
ஆனால்:
1.) பழுதான போக்குவரத்து சிக்னல்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
2.) சாலையில் உள்ள பள்ளங்கள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
3.) ஆக்கிரமிக்கப்பட்ட நடைபாதைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
4.) தெரு விளக்குகள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
5.) சாலை முழுவதும் பரவியிருக்கும் குப்பைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
6.) சாலைகளில் தெருவிளக்குக் கம்பங்கள் இல்லாமை... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
7.) தோண்டப்பட்டுச் சரி செய்யப்படாமல் விடப்பட்ட சாலைகள்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
8.) பள்ளத்தில் விழுந்து காயமடைந்தால்... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
9.) தெரு மாடுகள் அல்லது விலங்குகள் வாகனத்தின் மீது மோதினாலோ அல்லது நாய் கடித்தாலோ... அதற்கு யாரும் பொறுப்பல்ல!
10.) சாலை முழுவதும் வழிந்தோடும் கழிவுநீர்... இதற்கு யாரும் பொறுப்பல்ல!
பொதுமக்கள் மட்டுமே குற்றவாளிகள் என்றும், அபராதம் செலுத்துவதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பு என்றும் தோன்றும் நிலை இது. நிர்வாகம், நகராட்சி மற்றும் அரசு — இவர்களில் யாருமே ஒருபோதும் பொறுப்பேற்பதில்லை.
அவர்களுக்கு எந்த விதிகளும் பொருந்தாது. எந்தவொரு அலட்சியத்திற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்படுவதில்லை.
அவர்களும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டாமா???
குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், இன்னல்களைச் சகித்துக்கொள்ள வேண்டும், வரிகளைச் செலுத்த வேண்டும், அபராதங்களைச் செலுத்த வேண்டும், அரசு கஜானாவை நிரப்ப வேண்டும்; அதன் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்கள்.