பவளவிழாப் பாப்பாவின், “சமூகநீதி” முகமூடியைக் காணோம்!
“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற சட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என பெருமைக்கு எருமை மேய்க்கும் பவளவிழாப் பாப்பாவிடம், “எத்தனை ஒடுக்கப்பட்டவர்களை அர்ச்சகர்களாக அமர்த்தினீர்கள்?” என்ற கேள்விக்கு பதிலே இல்லை.
“ஒடுக்கப்பட்ட மக்களை நாங்களும் அமைச்சராக்கியிருக்கிறோம்” என்று கதறும் தீயசக்தியிடம், அது கொள்கையா? பச்சாதாபமா? என்று கேட்டால், பதில் கூச்சல் கூப்பாடுதான்!
மேடையில் சமூகநீதி, சமத்துவம் என முழங்கி, கூட்டணிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்துவிட்டு, அவர்களுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தரமாட்டோம் என்ற சில்லறை அரசியலைத்தான் 75 ஆண்டுகளாக தீயசக்தி செய்து வருகிறது.
இதுமட்டுமா?
“நாங்கள் போட்ட பிச்சையில்தான் படித்தீர்கள்” என்று ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்திய அரசியல் கேவலத்தையும் அரங்கேற்றியது தனி வரலாறு!
ஆனால்...
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கோட்பாட்டில் உறுதியாக நிற்கும் தவெக, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த 8 பேரை அமைச்சர்களாக்கி, கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கியுள்ளது.
வார்த்தைகளில் சமூகநீதி பேசுவது எளிது.
அதை அதிகாரத்தில் நடைமுறைப்படுத்துவதுதான் உண்மையான சமூகநீதி!
வாய்ச்சவடால் அல்ல; செயல்பாட்டில் கொள்கையை நிரூபிக்கிறது,
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் தலைமையிலான தவெக அரசு!
🚨 Best suited to be next PM of India?
Narendra Modi - 49%
Rahul Gandhi - 27%
Joseph Vijay - 9%
Abhijit Dipke - 1%
Arvind Kejriwal - 1%
(Mood of the nation poll by India Today)