@ramk8060 ஸ்டிக்கர் நல்லா ஓட்றீங்க டா. அஞ்சு மாசத்துல மொத்த மழை நீர் கட்டமைப்பு நீங்க சரி பண்ணிட்டீங்க. திமுக எதுவுமே பண்ணி வச்சிட்டு போகல. எல்லாமே நீங்க வந்த பிறகு தான் பண்ணுனீங்க
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும்..
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.
அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமல் படுக்கையில் வைப்பதைப் போன்றது.
திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான சாதனையாக மட்டுமின்றி, கோவையின் புதிய அடையாளமாகவும் ஆகியிருக்கின்ற பெரியார் அறிவுலகம் திறப்பு விழா கண்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத் தலைமுறையினரின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு, அந்த அறிவுலகம் அமைப்பதற்கு, திராவிட மாடல் அரசு மேற்கொண்ட பணிகளைக் கழகத் தலைவர் திராவிட நாயகர் அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கண்டு அலறுகிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. கழகத் தலைவர் பொறாமை கொண்டு பேசுவதாக ஆதவ் அர்ஜூனா தனது பேதைமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அ.தி.மு.க ஆட்சியில் திட்டமிடப்பட்ட மருத்துவக் கல்லூரிகளையும் பிற திட்டங்களையும் தி.மு.க ஆட்சியில் திறந்து வைக்கவில்லையா என்று கேட்டிருக்கிறார். முந்தைய ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்வதுதான் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி முதல் திராவிட நாயகர் ஆட்சி வரையிலான கழக அரசின் நிர்வாக இலக்கணம். சத்துணவை முட்டையுடன் கூடிய முழுமையான சத்துணவாகவும், கிருஷ்ணா நதி நீர் சென்னையின் தாகத்தைத் தணிக்கும் வகையிலும், அ.தி.மு.க ஆட்சியில் தீர்மானம் மட்டும நிறைவேற்றப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழத்தை அதே பெயரில் தொடங்கி, அதற்குரிய புதிய கட்டடத்தைக் கட்டியதும், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட முந்தைய ஆட்சியின் திட்டங்கள் மேலும் சிறப்புடன் தொடரவும் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம்.
2011-21 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்ட மருத்துவக்கல்லூரிகள், பேருந்து முனையங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை பல்வேறு காரணங்களால் கால்வாசிகூட நிறைவேறாத நிலையில், மக்கள் பயன்பாட்டினைக் கருதி அவற்றை முழுமையாக நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. அத்தகைய நிர்வாகத் திறன் ஏதுமற்ற த.வெ.க அரசின் முதல் போட்ட அமைச்சர் தி.மு.கவின் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு எந்த யோக்கியதையாவது இருக்கிறதா?
சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணியிலோ, கோவை பெரியார் அறிவுலகம் கட்டடத்திலோ பெயிண்ட் அடிக்கும் வேலையையாவது த.வெ.க அரசு செய்திருக்குமா? முழுமையாகப் பணிகளை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசு. தேர்தல் நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தால் அவற்றை செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் போனது. சினிமா க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் சிரிப்புப் போலீஸ் போல த.வெ.க. ஆட்சியில் இவை திறந்துவைக்கப்பட்டுள்ளன.
மக்கள் பயன்பாட்டுக்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் அறிவாற்றல் வளம் பெறவும் திராவிட மாடல் ஆட்சியில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவற்றைப் புதிய ஆட்சியாளர்கள் திறந்து வைப்பதில் தி.மு.கவுக்கும் எங்கள் தலைவருக்கும் எந்தவிதப் பொறாமையும் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பெருமைப்படுகிறோம். வள்ளுவர்கோட்டம் தொடங்கி, கோயம்பேடு பேருந்து முனையம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதன்மைக் கட்டடம் உள்ளிட்ட பலவும் தி.மு.க ஆட்சியின் விளைவுகள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். மூடர் கூட்டத்தின் முதலமைச்சரும் பிற அமைச்சர்களும்தான் பொறாமைக் குணத்துடன், மக்கள் நலத் திட்டங்களை இழிவுப்படுத்தும் வகையில், “தி.மு.க. காசில் கட்டினார்களா? தி.மு.க தலைவர் சொந்தப் பணத்தில் கட்டினார்களா?” என்று வாய்க்கொழுப்புடன் பேசித் திரிகிறீர்கள்.
தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் விஜய் பணமா? அல்லது அப்பன் வீட்டுப் பணமா? ஆதவ் அர்ஜூனாவின் லாட்டரி மாஃபியா பணமா? அரசாங்கக் கஜானாவிலிருந்து அள்ளித் தெளித்துத்தானே மார்பிலே பெருமை சந்தனம் பூசிக் கொள்கிறீர்கள்?
தி.மு.க.விடம் தமிழ்நாட்டை மக்கள் நம்பிக்கையுடன் ஒப்படைத்தபோது, அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய திட்டங்களைச் சொன்னால் ஆதவ் அர்ஜூனாக்கள் ஏன் அலற வேண்டும்? பெரியார் அறிவுலகத்தில் இருந்த ‘நான் முதல்வன்’ என்ற வார்த்தைகளைக் கண்டு முதலமைச்சர் விஜய்யும் அவருடனான மற்றும் பலரும் ஏன் பதறினார்கள்? தானே முதலமைச்சராக இருக்கும் நிலையிலும், நான் முதல்வன் என்று சொன்னால் அது மக்கள் மனதில் இன்னமும் கம்பீரமாக வீற்றிருக்கும் எங்கள் கழகத் தலைவர் திராவிட நாயகரைக் குறிக்கும் என்கிற அச்சத்தினாலா?
பெரியார் அறிவுலகம் திறக்கப்பட்டதில் தி.மு.க. பெருமைப்படுகிறது. 5 மாதத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறெதுவும் உருப்படியாக செய்யத் திறனற்ற த.வெ.க. வெட்கப்படவேண்டும். முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது.
@Inbhadoss@CTR_Nirmalkumar நிர்வாகத் திறமை இல்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள் அதற்காக இந்த கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லாதீங்க. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ஊழல் செய்தார்கள் ஊழல் செய்தார்கள் என்று சொல்லாதீர்கள் ஊழல் செய்திருந்தால் வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளுங்கள்.
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
திமுகவின் வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல் இருப்பதும் ஆச்சரியமில்லை, பிற கட்சிகளின் வாக்குகள் காற்றடிக்கும் திசையில் பறப்பதிலும் ஆச்சரியமில்லை.
எப்போதும் சொல்வது தான். திமுகவின் ஆதரவாளர்கள் மாநில சராசரிக்கும் அதிகமான அறிவைப் பெற்றவர்கள். சராசரியைவிட அதிகம் சிந்திப்பவர்கள். சராசரியை விட அற உணர்வு மிக்கவர்கள். தமிழ் நாட்டின் உரிமைக்கும், முன்னேற்றத்திற்கும், பகுத்தறிவுக்கும், சமூக நீதிக்கும், நல்லிணக்கத்திற்கும் வேறெவரையும் விட அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.
திமுகவின் தலைவர்களையும் சரி, வேட்பாளர்களையும் சரி, தொண்டர்களையும் சரி, அவ்வளவு சீக்கிரம் மயக்கவும் முடியாது, விலைக்கு வாங்கி விடவும் முடியாது. விலை கொடுத்தாலும் அவர்கள் மக்களுக்குச் சரியானவற்றையே செய்வார்கள்.
இங்கே இருப்பவற்றிலேயே நியாயவான்களின் கட்சி என்றால் அது திமுக தான். நியாயவான்களை மயக்குவது எளிதல்ல. அவர்களின் அறிவு அதனை அனுமதிக்காது. அவர்களின் வாக்குப் பிறழாது.
சராசரிகள், அறிவின் பக்கம், நியாயத்தின் பக்கம் சாயும் அபூர்வ தருணங்களில் திமுக வெற்றியும் பெறும். -Swaminathan Poornachandran
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் ஆங்கில உரை..
இது பற்றி இங்கே நிறைய பதிவுகள்
நிஜமாவே முதல்வரின் உரை அழகா இருந்தது...உச்சரிப்பு எல்லாம் ரொம்ப professional ஆ இருந்தது
அதில் சந்தேகமே இல்லை
ஆனா இது மாதிரி வேறு எந்த அரசியல் தலைவராவது பேசுவார்களா என இங்கே நிறைய பேர் புல்லரித்து போய் கேள்விகளை கேட்டுட்டு இருந்தாங்க.. அது தான் ஆச்சர்யம்
முன்பே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வில் , முன்பே தயாரிக்கப்பட்ட உரையை, ரிகர்சல் செய்து வாசிப்பதை விட கஷ்டமானது நிருபர்களின் கேள்விகளுக்கு அப்பப்போ யோசிக்காமல் பதில் சொல்வது
அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆங்கில பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். கரன் தப்பார், பர்கா தத் போன்றவர்களின் கேள்விகளுக்கே கூட சரளமான ஆங்கிலத்தில் சட் சட்டென்று பதில் கொடுப்பார் அவர். இத்தனைக்கும் அவர் கல்லூரிக்கு கூட போனது இல்லை.
காங்கிரசில் ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் இருக்காங்க
திமுகவில் கனிமொழி அவர்கள், தயாநிதி, ஆ ராசா, என பெரிய லிஸ்ட் இருக்கு. அதிலும் official spokesperson எல்லோரும் national media debate ல எந்த குறிப்பும் இல்லாமல் சரளமாக விவாதிக்கும் அளவுக்கு ஆங்கிலம் பேச கூடியவர்கள் தான்..
சமீபத்தில் கைது செய்யப்பட்டபோது வேனில் இருந்தபடி உதயநிதி கொடுத்த ஆங்கில பேட்டியும் சரளமான ஆங்கில பதிலடிகளும் ரொம்ப பிரபலம்..
அதனால் கல்லூரி சென்ற முதல்வர் - எழுதி கொடுத்த உரையை படிப்பதில் பெரிய விஷயம் இல்லை.. அதை மற்றவர்களோடு ஒப்பிட்டு மகிழும் அளவுக்கு அது பெரிய விஷயமும் அல்ல
ஆங்கிலம் கூட வேண்டாம்.. தமிழிலாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராமல் ஒரு நிருபரிடம் கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் சொல்லும் ஒரு நிகழ்வு நடந்தால்.. அது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்
(ஆனா இதையும் ஸ்கிரிப்ட் பண்ணி செய்வாங்க என்பது தான் எதார்த்தம்) 😜😜
@FriendsOfVck நின்னுட்டு போங்க யாருக்கு நஷ்டம் எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்ல, இடைத்தேர்தலில் நாங்க நிரூபிச்சிட்டோம் கூட்டணிக் கட்சிகளை வைத்து திமுக இல்ல திமுக வ வச்சு தான் கூட்டணி கட்சிகள் அப்படின்னு
@Shibin_twitz வள்ளுவர் கோட்டம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் இது போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியது திமுக ஆனால் அதை திறந்து வைத்தது எம்ஜிஆர், ஜெயலலிதா. அதற்காக அடுத்தடுத்து வந்த எங்களது 1989, 1996, 2006, 2021 ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமலா? இருந்தோம்
@Shibin_twitz மக்கள் நினைத்தால் நீங்களும் ஒரு நாள் ex MLA ஆவீர்கள் மனதில் வைத்து பேசுங்கள். அந்த எக்ஸ் எம்எல்ஏ ஆட்சியில் உருவாக்கின மெட்ரோ ரயில் திட்டத்தை தான் இன்னைக்கு துவங்கி வைக்கிறீங்க. பாப்போம் உங்க அண்ணா ஆட்சியில் நீங்க என்ன பண்றீங்க