To the growing roll call of DMK functionaries - Gnanasekaran, Periyanayagam, Praveen, Ekambaram, Kannan, Kathiresan, Hariharan, Junaid, Kavidasan, Pakkirisamy, Kalliappan, Muthusamy, and many others, now joins another name: Prabhakaran.
Tiruvallur DMK councillor Prabhakaran has been arrested for allegedly sexually harassing an air hostess aboard an IndiGo flight en route to Delhi.
Incidentally, DMK’s election rhetoric is that it will never let Tamil Nadu hang its head down. But their actions are always contradictory!
சோழர் கால கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாகத் திகழும் விழுப்புரம் மாவட்டத்தில் நமது இன்றைய பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்தால் சென்னையைப் போலவே விழுப்புரமும் மழை வெள்ளத்தில் மிதப்பது அம்மாவட்ட மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது என்பதை இன்று என்னால் உணர முடிந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்ட மக்களின் கோபத்தணலில் திமுக அரசு பஸ்பமாகப் போவது உறுதி!
#தமிழகம்_தலைநிமிர_தமிழனின்_பயணம்
தேமுதிக நிறுவனர் தலைவர், பத்மபூஷன், அமரர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பிறந்த தினம் இன்று.
திரையுலகிலும், அரசியல் தளத்திலும், மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் கேப்டன் அவர்கள். நடிகர் சங்கத் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது துணிச்சலான பணிகள் போற்றுதலுக்குரியவை.
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர். அவர் தொடங்கிய ஏழை, எளிய மக்களின் பசியாற்றும் அறப்பணி, இன்றும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் தொடர்வது பாராட்டுக்குரியது.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்.
What connection does Ramayana have to Honour Killing? Have the I.N.D.I. Alliance members lost their senses?
The parties in the I.N.D.I. Alliance have a deep hatred for Sanatana Dharma. Here is a VCK leader (a Member of the I.N.D.I. Alliance) speaking about a piece of fiction, the Uttara Kanda, that was never part of the Valmiki Ramayana. And this Kanda is not included in the Ramayana written by the Tamil Poet Kambar. Yet, such distortions are shamelessly paraded to malign our civilisational ethos.
This is the sick political discourse of DMK & its allies in Tamil Nadu. And let it be said clearly. Sanatana Dharma has withstood countless assaults for millennia and will endure these politically motivated attacks.
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி நகரில் உள்ள அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்த பெண், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக, கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
குற்றம் நடந்து நான்கு நாட்கள் ஆகியும், இது வரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை. சாலையில் பெண்கள் தனியாக நடந்து செல்லவே அச்சப்படும் சூழலில் தமிழகம் தற்போது இருக்கிறது என்பது வெட்கக்கேடு. திமுக அரசு, குற்றம் நடைபெறாமல் தடுப்பதில்லை, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்வதுமில்லை. தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம்.
கொலை செய்யப்பட்ட பெண் வசித்து வந்த அரசு ஓட்டுநர்களுக்கான குடியிருப்புப் பகுதியின் முன்பாக, டாஸ்மாக் மதுபானக்கடை வைத்து, யாருக்கு என்ன நேர்ந்தாலும், சாராய விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமே முக்கியம் என்ற ரீதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது திமுக அரசு. குடியிருப்புப் பகுதிகளின் அருகில் எதற்கு மதுபானக் கடைகளை நடத்துகிறது திமுக அரசு? உங்கள் கட்சிகாரர்களின் வருமானத்துக்குப் பொதுமக்கள் உயிர்பலி கொடுக்க வேண்டுமா?
உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன். மேலும், தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இன்று பிறந்தநாள் விழா காணும் பாரதிய ஜனதா கட்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு. @MSBalajiMSB அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. ! 💐🙏
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. @tiruchisiva அவதூறாக பேசிய போது அதற்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல் மௌனம் காத்து மலினமாக செயல்பட்டது @INCIndia. ஆனால், கர்மவீரர் காமராஜர் அவர்கள் மீது சுமத்தப்படும் அவதூறு பேச்சுகளை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கும் தமிழக பாஜகவால் ஈர்க்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவராக பணியாற்றிய திரு. கோபால் அவர்கள் நமது @BJP4TamilNadu-வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ள திரு. கோபால் அவர்களைத் தாமரை குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்.
இன்று பிறந்தநாள் விழா காணும் பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் & விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர் திரு @VinojBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐🙏