திராவிட இயக்கத்தின் தலைமைச் செயலகமாக அரை நூற்றாண்டுக்கும் மேல் தமிழ்நாட்டு அரசியலின் திசையைத் தீர்மானித்த கோபாலபுரம் இல்லத்தில் நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரது பிற���்தநாளான இன்று கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களோடு மலர் தூவி மரியாதை செலுத்தினோம்.
தலைவர்களுக்கெல்லாம் தலைவராக, முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக முன்னின்று ‘ஓய்வறியாச் சூரியனாய்’ அவர் படைத்த சாதனைகள் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்!
#கலைஞர்100
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான கொள்கைக் கூட்டணிக்கு 40/40 தொகுத���யிலும் வெற்றியைத் தேடித் தந்துள்ளனர் வாக்காள பெருமக்கள்.
கழகத்தின் சார்பிலும் #INDIA கூட்டணி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க #INDIA கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வாக்காள பெருமக்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கழக நிர்வாகிகள்-தொண்டர்கள்-கூட்டணி கட்சியினர் ஆகியோருக்கு என் அன்பும் நன்றியும்.
கழகத் தலைவராக, தான் சந்தித்த 8 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வென்று, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கும் வெற்றி நாயகர் @mkstalin அவர்களின் வெற்றியை, நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குச் சமர்ப்பிப்போம்!
#DMKWins
பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து #INDIA கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச் சிறப்புமிக்கது!
அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்கள��ப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான #மக்கள்தீர்ப்பு2024-க்கு நன்றி!
இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
#நாற்பதுக்கு_நாற்பது #ElectionsResults #DMKWins
தோஹாவில் அண்மையில் நடைபெற்ற World Aquatics Masters Championships-ல் பங்கேற்று, இருவேறு நீச்சல் போட்டிப் பிரிவுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி அரவிந்த் நயினாரை இன���று நேரில் வாழ்த்தினோம். அவரின் வெற்றிப்பயணம் தொய்வின்றித் தொடர துணை நிற்போம் என்று கூறி பாராட்டி மகிழ்ந்தோம். @SportsTN_ @Atulyamisraias #JMeghanathaReddyIAS
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே காவிச்சாயம் பூச நினைக்கும் பாசிஸ்ட்��ுகளுக்கு முடிவுகட்டும் உறுதியோடு தி.மு.கழகம் தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
குறிப்பாக கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடைய அறிவுறுத்தலின்படி, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தொகுதிவாரியான நிர்வாகிகள் சந்திப்பினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடத்தி வருகிறோம்.
விவசாயிகளும் - தொழில் நிறு��னத்தாரும் நிறைந்த ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட அமைச்சர்கள் - மாவட்டக் கழக செயலாளர்கள் - சட்டமன்ற உறுப்பினர்கள் - ஒன்றிய நகர - ��குதி - பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், மேயர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.
ஈரோடு தொகுதியில் உள்ள கள நிலவரம் - தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் - அரசுத் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தோம்.
#INDIA-வின் வெற்றிக்கு ஈரோட்டின் வெற்றி மிக மிக அவசியமென எடுத்துரைத்தோம்.
@KN_NEHRU @RSBharathiDMK @evvelu @TThenarasu
@Muthusamy_erode @mp_saminathan @Kayalvizhi_N
@NallasivamDMK
மக்கள் பணியே
மகேசன் பணி.... 👍
அனைவருக்கும் வணக்கம்🙏.
ஒரு மிகப்பெரிய இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வென்று மீண்டு வந்திருக்கிறோம். யாரும் கணிக்க முடியாத ஒன்று இயற்க்கை சிற்றம் . இந்த சீற்றத்தினால் மயிலாப்பூர் தொகுதியில ஒரே நாளில் ஒரு பகுதியை தவிர (சிவசாமி சாலையை சுற்றியுள்ள பகுதிகளை) மற்ற பகுதிகளில் மீண்டு வந்தோம். பி எஸ் சிவசாமி சாலை ஒட்டியுள்ள பகுதிகள் மிகவும் பாதிப்படைந்தது. காரணம் B canal கால்வாயிலே புயல் காரணத்தினால் கடல் சீற்றத்தில் தண்ணீர் உள்வாங்கும் தன்மை குறைந்த காரணத்தினாலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர்வரத்து அதிகரித்ததாலும், மயிலாப்பூர் தொகுதியில் உள்ள சில முக்கியமான பகுதிகளின் நீர் வரத்து அதிகரித்து பள்ளமாக உள்ள பி எஸ் எஸ் சாமி சாலையில் தேங்கி இருந்தது .அதை உள்வாங்கி கால்வாயில் செல்ல வேண்டும் என்று சொன்னால் அந்த கால்வா��ில் உள்ள நீர் மட்டும் குறைந்து இருக்க வேண்டும் .அது குறையாத காரணத்தினால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் அந்த பகுதி மக்கள் மிகப்பெரிய அவதிக்கு உள்ளானார்கள். என்னால் உணர முடிந்தது. இருந்தாலும் நாங்கள் போர்க்கால அடிப்படையில் நானும் அதிகாரிகளும் குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் @mkstalin அவர்கள் இரவு 12 மணியானாலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்வப்போது நிலைமையும் கேட்டறிந்தார் .அந்த உந்துதல் சக்தியோடு நாங்கள் பணியாற்றினோம். இப்பொழுது மயிலாப்பூர் தொகுதி புயல் வெள்ள பாதிப்பிலிருந்து நூறு சதவீதம் மீட்டு எடுத்து இருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த மாநகராட்சி அதிகாரிகள் @chennaicorp மின்சார துறை @TThenarasu அதிகாரிகள், குடிநீர் வாரிய @KN_NEHRU அதிகாரிகள், குறிப்பாக அடிப்படை பணியாளர்கள்,மழையினால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான பொது மக்கள், போற்றியவர்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியினை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். சிவசாமி சாலை பொருத்தமட்டில் நிச்சயமாக இதற்கு ஒரு தீர்வு எட்டும் வகையிலே இந்த மழைக்காலம் முடிந்தவுடன் மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலோடும், அதிகாரிகளின் குழுவினரோடும் ஆய்வு செய்து வருகின்ற காலங்களில் இதுபோன்ற நிலைமைகள் இல்லாத அளவிற்கு முயற்சிகளை மேற்கொண்டு சரி செய்திடுவோம் என்ற உறுதியோடு பயணிப்போம்.
பணி தொடரும்.....
@arivalayam @DMKITwing @DMK_Chennai @dmk_youthwing
நம் பெருமைமிகு @dmk_youthwing-ன் 2ஆவது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கழக முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @KN_NEHRU அவர்கள் தலைமையில், மாநாட்டுக்குழுவின் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம்.
இந்தக்கூட்டத்தின் போது, மாநாட்டின் வரவேற்புக்குழு - மேடை நிர்வாகக்குழு - பேச்சாளர் குழு உட்பட அனைத்துக் குழுக்களின் செயலாளர்கள், மாநாடு தொடர்பான தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தனர். மாநாட்டின் பணிகள் - முன்னேற்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினோம்.
இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாட்டை இந்திய ஒன்றியமே திரும்பி பார்க்கும் வகையில் வெற்றி மாநாடா���்கிடுவோம். #கழக_இளைஞரணி_மாநாடு
நான்கு மண்டலம்
200 இளைஞர்கள்
எட்டு திசைகளிலும் பறக்கிறார்கள்!
தமிழர்களின் தாய்மடியாம் முதல் மாந்தன் பிறந்த குமரி முனையில்
வள்ளுவர் நிழலோடு எங்கள் சின்னவர் தொடங்க நாளை ஆரம்பமாகிறது இருசக்கர வாகன பிரச்சார பயணம்!!
#Udhay4Youth@DmkRiders@Udhaystalin@Anbil_Mahesh#BanNEET
தலைமைக்கழக பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் ந.பரந்தாமன் - திருமதி.உஷாராணி ஆகியோரின் அன்பு மகன் ந.ப.கருணாநிதி மற்றும் திருப்போரூர் பேரூராட்சித் தலைவர் அண்ணன் மு.தேவராஜ் - திருமதி.செல்வி அவர்களின் மகள் மேனகாதேவி இணையரின் திருமணத்தை மாதவரத்தில் இன்று தலைமையேற்று நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கினோம்.
மணமக்கள் இருவரும் கழகமும் - கலைஞரும் போல, தமிழும் - திருக்குறளுமாகப் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@SUDHARSANAM_S@Dayanidhi_Maran@DrKalanidhiV@iparanthamen@JJEbenezer1
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், நடைபயிற்சியை பொதுமக்கள் எந்த தடையும் இன்றி, பசுமையும் - சுகாதாரமும் நிறைந்த சூழலில் மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 8KM நடைபயிற்சி Health Walk என்னும் திட்டத்தை சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை..
சென்னையில் மழை என்ற���ுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. தி.மு க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம்!
தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால் கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும்.
மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க #DravidianModel அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்!
@KN_NEHRU @PKSekarbabu @Subramanian_ma @PriyarajanDMK @RAKRI1
* வருமான வரித்துறை & அமலாக்கத்துறையின் கண்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டும் தெரியும் ரகசியம் என்ன?
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவரவர் அலுவலகங்களை விட்டுக்கூட ��ெளியே வராதது ஏன்?
* அவர்கள் விசாரிக்கும் வழக்குகளில் Conviction Rate 1 விழுக்காடு கூட இல்லையே ஏன்?
- என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து, திருவள்ளூரில் நடைபெற்ற வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் எனது உரை அமைந்தது.