தமிழ்நாடு எதிர்கட்சித் துணைத் தலைவர் 🦅,
கழக முதன்மை செயலாளர் 🦁, டெல்டா மண்டல தீரர்🐯,
மலைக்கோட்டையாரிடம் எனது பிறந்தநாள் ஆசி பெற்றபோது 🙏🖤🌄❤️
#Dmkforever#KNForce
தவெக அரசு Route Mafia வழியாக தனது ஆட்சியின் அவலங்களை மறைத்து, தனது பெருமைகளைத் தம்பட்டம் அடித்து, பொய்களைப் பரப்புவதற்காகத் தனது Paid Influencer-களுக்கு ரீல்ஸ் ஒன்றுக்கு ₹75,000 வரை தந்து, Route Mafia Department என ஒரு துறை ஆரம்பிக்கும் அளவிற்கு மாதம் ₹500 கோடி செலவு செய்யும் போலத் தெரிகிறது.
விலைவாசியை உயர்த்தி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாட வைத்துவிட்டு, மக்கள் வரிப்பணத்தை வதந்திகளைப் பரப்ப வாரி இறைக்கிறது முதலமைச்சரின் ‘வெற்றி Mafia திட்டம்’.
நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால்
i) தமிழ்நாடு செய்தி விளம்பரத்துறை @TNDIPRNEWS மற்றும்
ii) தமிழ் நாடு முதலமைச்சர் அலுவலகம் @CMOTamilnadu மீது உங்கள் எச்சரிக்கை மற்றும் வழக்கு எல்லாம் பதிவு பண்ணிக்கோங்க.
விடுதலைப் போராட்ட வீரர், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினம் இன்று!
தேசப்பற்றையும் ஆன்மீகத்தையும் தன் வாழ்வின் இரு கண்களாகப் பாவித்து, இந்திய விடுதலைக்காகவும் மக்கள் உரிமைக்காகவும் சமரசமின்றிப் போராடிய மாபெரும் தலைவர்.
அய்யா முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவைப் போற்றி, அவரது தியாகத்திற்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்!
#ThevarJayanthi #ThevarGuruPooja #PasumponThevar #பசும்பொன்தேவர் #முத்துராமலிங்கத்தேவர் #குருபூஜை #MKStalin #UdhayanidhiStalin #KNNehru #DMK
சமூக ஊடகங்களில் சில விஷமிகள் பிரேம் என்பவரை நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் என திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர் என @NewsTamilTV24x7 ஊடகம் யாரை எச்சரிக்கிறது.
5 ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்த BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?
தனியார் கூட்டுறவு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி மக்கள் முதலீடு செய்த பணத்தை தன்னுடைய சொந்தக் கணக்கிற்கு வரவு வைத்துக் கொண்டதாக பிரேம்குமார் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த பிரேம்குமார் கடந்த ஜூலை மாதம் தான் இங்கிருக்கும் Dummy CM-ஐ சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும், த.வெ.க-வின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிரேம்குமாருக்கு சொந்தமான பேருந்துகள் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
முக்கியமாக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பிரேம்குமாரின் பேருந்துகளிலேயே அழைத்து வரப்பட்டனர்.
பிரேம்குமாருக்கும் முதலமைச்சருக்கும் இருக்கும் நெருக்கத்தைப் பார்க்கும் போது, அந்த நபருக்கும் - ஆளுங்கட்சிக்கும் இடையே இருக்கும் தொடர்பு என்ன?
அப்படி எந்த “விவகாரமான”தொடர்பும் இல்லை எனில், ஏன் அவசர அவசரமாக, முதலமைச்சரும் - கைது செய்யப்பட்டுள்ள நபரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தமிழ்நாடு காவல்துறை உதவியோடு சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும்?
MLA-க்களை Purchase செய்வது, Sofa அனுப்புவது, இடைத்தேர்தல்களில் வாரி இறைத்தது என்று த.வெ.க.வின் முறைகேடான அரசியல் செயல்பாடுகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா?
இதையெல்லாம் CBI, SFIO, ED போன்ற ஒன்றிய அரசின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்புகள் தலையிட்டு விசாரிக்க வேண்டும் - கைதான பிரேம்குமாருக்கும், த.வெ.க தலைமை முதல் முக்கிய நிர்வாகிகள் வரைக்கும் இருக்கும் தொடர்பை கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு மரியாதை!
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு, கழக முதன்மைச் செயலாளர் திரு @KN_NEHRU அவர்கள் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
உடன் திருச்சி மாநகர மேயர் திரு @Anbutry, கழக நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
#pasumpon #muthuramalingam #memorial #respect #tribute #trichy #DMK #MKStalin #Udhayanidhi #ArunNehru #Perambalur
வரலாறாய் வாழ்ந்து, வீரத்துக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக நிலைத்து நிற்கும் பசும்பொன் திருமகனாரைப் போற்றுகிறேன்!
🔷 விடுதலைப் போரில் நேதாஜியுடன் இணைந்து செயலாற்றிய தீரர்!
🔷 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராளி!
🔷 உழவர்களின் நலனுக்காகவும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் சங்கங்களை நிறுவியவர்; போராடிச் சிறை சென்ற தியாகி!
🔷 சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் மக்களுக்காகக் குரல் கொடுத்த மாண்பாளர்!
“பத்தரை மாற்றுத் தங்கம்! பசும்பொன் சிங்கம்!” என்று மக்களால் போற்றப்பட்ட பசும்பொன் திருமகனாரின் புகழ் வாழ்க!
24 மணி நேரமும் விஜய்க்கு ஜால்ரா அடித்து, இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதற்கு கேவலமாக டான்ஸ் ஆடிக் கொண்டாடிய News தமிழ் 24x7 சேனலின் இயக்குநர் பிரதீப்குமார் உடன் 5000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம் குமார்.
இந்த மோசடி மன்னன் நம் தற்குறி முதலமைச்சரை சில வாரங்களுக்கு முன் சந்தித்துப் பேசினார். அதற்கான காரணம் என்ன?
முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும்.
அயோக்கியர்களின் புகலிடம் தவெக.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இந்நிகழ்வில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.அருண் நேரு அவர்கள், திருச்சி மாநகராட்சி மேயர் திரு.மு.அன்பழகன் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தார்கள்.
தேசமும் தெய்வீகமும் தனது இரு கண்களென வாழ்ந்து மறைந்த பசும்பொன் திருமகனாரின் தியாகத்தையும், தேசபக்தியையும் போற்றி வணங்குவோம்!
#ThevarJayanthi #PasumponMuthuramalingaThevar #MKStalin #UdhayanidhiStalin #KNNehru #ArunNehru #Trichy #DMK