"தனது சொந்த மாநிலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட தடிபாரின் சான்றிதழ் எனக்குத் தேவையில்லை.
ஹிஸ்டரிக் சார்ஜ் சீட்டர் உள்துறை அமைச்சராக இருப்பது நாட்டிற்கே அசிங்கம்"
~ ஊழலின் ஊற்றுக்கண் என ஜண்டா தூற்றியதற்கு
செப்பல் சாட் கொடுத்திருக்கிறார் சரத் பவார்
#UnionBudget2024-ல் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை கழகம் இன்று நடத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டப்பணிகளுக்கு - இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட துயர் துடைக்க - தொழில் & நகர்ப்புர வளர்ச்சிக்கு என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியில்லை.
சுருக்கமாக சொன்னால், ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடே இல்லை.
தமிழ் - தமிழ்நாடு என பாசாங்கு செய்த பாசிஸ்ட்டுகளின் முகமூடி தேர்தல் முடிந்ததும் கிழிந்து தொங்குகிறது.
மோடியின் பலவீனமான பதவி நாற்காலியின் கால்களுக்கு வலுவூட்டும் பட்ஜெட்டை விட, அனைத்து தரப்பு மக்களும் எழுந்து நிற்பதற்கு ஊன்றுகோல் தரும் பட்ஜெட் தான் நாட்டுக்குத் தேவை.
நிதி ஒதுக்கீட்டில் இனியும் மாற்றாந்தாய் மனப்பான்மை தொடர்ந்தால், கழகம் நடத்தியுள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், நாளை மக்கள் போராட்டங்களாக மாறிவிடும் என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
#UnfairBudget4TN
சென்னை வருவாய் மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் வீட்டு மனைப் பட்டா கிடைக்காமல் காத்திருந்த பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டு இருந்தார்கள்.
அதன்பேரில், சென்னை மாவட்டத்தில் மட்டும் வருவாய்த்துறை சார்பில் 28,848 பட்டாக்கள் தயார் செய்யப்பட்டன.
மாதவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 2,124 பயனாளிகளுக்கான வீட்டு மனைப் பட்டாக்களை மாதவரம் - சூரப்பட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று வழங்கினோம்.
வீட்டு மனைப் பட்டாக்களை பெற்ற நம் பொதுமக்களை வாழ்த்தியதோடு, பட்டாவுக்காக காத்திருக்கும் பொதுமக்���ளுக்கு நம் திராவிட மாடல் அரசு, படிப்படியாக பட்டா வழங்கும் என்று உரையாற்றினோம்.
@KKSSRR_DMK @Muthusamy_erode @PKSekarbabu @Subramanian_ma @PriyarajanDMK #DarezAhmedIAS #MadhusudhanReddyIAS
வீட்டுமனைப் பட்டாவுக்காக காத்திருந்த பொதுமக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நம் கழக அரசு சார்பில் பட்டாக்களை வழங்கி வருகிறோம்.
மாதவரத்தில் நேற்றைய தினம் 2,124 பட்டாக்களை வழங்கிய நிலையில், சோழிங்கநல்லூரில் இன்று நடை��ெற்ற அரசு நிகழ்ச்சியில் 2,007 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி வாழ்த்தினோம்.
'எல்லோருக்கும் வீடு, வீடுள்ளோருக்குப் பட்டா ' என்பதில் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று உரையாற்றினோம்.
பட்டாப் பெற்ற பொதுமக்கள் வெளிப்படுத்திய அன்பும், மகிழ்ச்சியும் மன நிறைவைத் தந்தன.
@KKSSRR_DMK @Subramanian_ma @PriyarajanDMK #DarezAhmedIAS #MadhusudhanReddyIAS
அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தால் இந்திய அளவில் சிறந்த நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதினை வென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர் வெங்கடேஷ் அவர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.
கால்பந்து விளையாட்டின் நடுவராக தனது பணியை திறம்பட செய்து வரும் சகோதரர் வெங்கடேஷ், மேலும் பல உயரங்களைத் தொட அவரை வாழ்த்தி மகிழ்ந்தோம்.
@SportsTN_@Atulyamisraias #JMeghanathaReddyIAS
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருட்தந்தை ஜோ அருண் அவர்கள் – துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் அப்துல் குத்தூஸ் அவர்கள் மற்றும் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களையும், சிறுபான்மையினர் பொருளாதாரம் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணன் பெர்னாண்டஸ் ரத்னவேல் அவர்களையும் இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
சிறுபான்மையினர் ஆணையம் மற்றும் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் புதிய நிர்வாகிகளின் பணிகள் மென்மேலும் ��ிறக்கட்டும்.
@GingeeMasthan @InigoIrudayaraj
கருஞ்சட்டைகள் மட்டும்தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்கிற நிலை தற்போது மாறி விட்டது!
திமுகவில் உள்ள ஒருவர் பெரியாரிய கொள்கையிலிருந்து சற்று நிலை தடுமாறினாலும் பெரும் எதிர்ப்பு கடவுள் நம்��ிக்கை உள்ளவர்களிடம் இருந்தே வெளிப்படுகிறது!
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆம்!
திமுக என்பது கொள்கையை உயிராக க���ண்ட இயக்கம் என்பதை எதிரிகளும் அங்கீகரித்திருக்கிறார்கள் என்று பொருள்.
அடுத்த தலைமுறைக்கு பெரியாரைக் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பை மக்களே திமுகவின் முதுகில் ஏற்றியிருக்கிறார்கள்.
திமுக என்பது வெறும் வாக்கரசியல் கட்சி அல்ல!
இனத்தின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட திராவிடப் பெரும்படை.
பேரறிஞர் அண்ணாவின் மீது தந்தை பெரியார் கொண்ட நம்பிக்���ை வீன் போகாது; போகவில்லை.
- மு.தமிழ் மறவன்
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது குறித��து மாண்புமிகு ஐக்கிய அமீரகத்தின் வர்த்தகத் துறை அமைச்சர் திரு. அப்துல்லா பின் தெளக் அல்மரி அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் எப்படி கொட்டிக் கிடைக்கின்றன என்பதற்கு இந்த போஸ்டர் ஒரு சாம்பிள்.
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனம். வெளிநாடுகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் கல்வி. இங்கும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி கட்டணமும் மிகக்குறைவு. நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
ஆனாலும் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி மாணவர்களை கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம்.
40 வருடங்கள் பின்னோக்கிச் சென்றால், ஒரு பாலிடெக்னிக் அட்மிஷன் என்பது ஏராள தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு கனவு.
மிக குறைவான பாலிடெக்னிக்களே இருந்தன. அதிலும் குறிப்பாக மதுரை அரசு பாலிடெக்னிக், சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக், பொள்ளாச்சி நாச்சியப்பா பாலிடெக்னிக், கோவையில் இருந்த சில பாலிடெக்னிக் கல்லூரிகள், சென்னை தரமணி பாலிடெக்னிக் இவற்றில் எல்லாம் அட்மிஷன் கிடைத்துவிட்டால் வேலைக்கு கவலையே இல்லை என முட்டி மோதுவார்கள்.
தனியா பாலிடெக்னிக்களில் 40 ஆயிரம் ரூபாய் வரை க���ட (அந்தக் காலத்தில் அது மிகப்பெரிய தொகை) டொனேஷன் கொடுத்து சேர்ந்தார்கள்.
தற்போது அதையெல்லாம் கடந்து விட்டது தமிழ்நாட்டில் கல்வி.